Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

பயன்தராத தொழுகை

Posted on December 5, 2019 by admin

Related image

பயன்தராத தொழுகை

      S. முஹம்மது சலீம், ஈரோடு       

ஈமானுக்கு ஒளியாக விளங்கும் தொழுகையை அதற்குரிய நேரத்தில் நிறைவேற்றுவதற்காக நேரத்தை ஒதுக்கி பல்வேறு பணிகளுக்கிடையே அல்லாஹ்வின் உதவியால் நாம் தொழுது வருகிறோம்.

இந்த தொழுகை எந்த முறையில் இருக்க வேண்டும் என்பதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மிகத் தெளிவாக கூறியுள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதரின் வழிகாட்டுதல்களை கண்டு கொள்ளாமல் தொழுதால் அந்த தொழுகையை அல்லாஹ் ஏற்றுக் கொள்ள மாட்டான்.

இது குறித்து ஒவ்வொரு தொழுகையாளியும் விழிப்புணர்வுடன் இருந்து தமது தொழுகைகளை சரி செய்து கொள்ள வேண்டும் என்பதற்காக நபிமொழிகளின் வாயிலாக சில விஷயங்களை அறிந்து கொள்வோம்.

ஒப்புக்கொள்ளப்படாத தொழுகை :

அபூஹூரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது:

 

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பள்ளிவாசலுக்கு வந்தார்கள். அப்போது ஒருவர் (பள்ளிவாசலுக்கு) வந்து (அவசர அவசரமாகத்) தொழுதார். (தொழுது முடிந்ததும்) அவர் வந்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஸலாம் சொன்னார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவருக்கு பதில் கூறிவிட்டு   ”நீர் திரும்பிச் சென்று தொழுவீராக! ஏனெனில் நீர் தொழவேயில்லை”  என்று சொன்னார்கள்.

அந்த மனிதர் திரும்பிச் சென்று முன்பு தொழுததைப் போன்று (அவசர அவசர மாக) மீண்டும் தொழுதுவிட்டு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து ஸலாம் சொன்னார். அப்போதும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பதில் ஸலாம் கூறிவிட்டு, நீர் திரும்பிச் சென்று தொழுவீராக நீர் தொழவேயில்லை என்று கூறினார்கள்.

இவ்வாறு மூன்று தடவை நடைபெற்றது.  பின்னர் அந்த மனிதர் ”உண்மையைக் கொண்டு உங்களை அனுப்பியவன் மீது சத்தியமாக இதைவிட சிறந்த முறையில் எனக்கு தொழத் தெரியாது எனவே   எனக்கு (தொழுகை முறையை) கற்றுத் தாருங்கள்”   என்று கேட்டார்

(அதற்கு) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்

“நீர் தொழுகைக்கு நின்றதும் தக்பீர் கூறுவீராக.

பின்னர் குர்ஆனில் உமக்கு தெரிந்திருப்பதை (நிதானமாக) ஓதிக் கொள்வீராக,

பின்னர் ருகூவு செய்வீராக, அதில் தாமதித்து இருப்பீராக,

பின்னர் (சற்று நேரம்) நேராக நிற்பீராக, பின்னர் ஸஜ்தா செய்வீராக, அதில் நிலைத் திருப்பீராக,

பின்னர் தலையை உயர்த்தி நன்றாக அமர்வீராக, பின்னர்

இதே முறையை உமது தொழுகை முழுவதிலும் கடைபிடிப் பீராக” என்று சொன்னார்கள். (நூற்கள் : புகாரீ 757, திர்மிதீ 279, நஸாயீ 874)

அபூ அப்தில்லாஹ் அல்அஷ்அரீ ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது :
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களது தோழர்களுக்குத் தொழ வைத்தப் பிறகு அவர்களில் சிலருடன் அமர்ந்திருந்தார்கள். அப்போது ஒருவர் பள்ளிக்குள் வந்து தொழுதார். அவர் பறவைகள் தானியங்களைக் கொத்துவது போன்று ருகூவு, ஸஜ்தாவைச் செய்தார் இதைக் கண்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “”இவரைப் பார்த்தீர்களா (முறையாக தொழாத) இதே நிலையில் அவர் மரணித்தால் முஹம் மதின் மார்க்கம் அல்லாததில் மரணிக்கிறார். இவர், காகம் ரத்தத்தைக் கொத்தித் தின்பதை போன்று தொழுகையை கொத்துகிறார். தொழுகையில் பறவைகள் கொத்து வதைப் போன்று ஸஜ்தா செய்பவர் கடும் பசியில் ஒன்று அல்லது இரண்டு பேரீச்சம் பழங்களை உண்பவரைப் போன்றாவார். அது அவருடைய பசியை எவ்வாறு போக்கும்” என்று கூறினார்கள். நூல்: இப்னு குஸைமா.

அபூ வாயில் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறியதாவது :

“தமது (தொழுகையில்) ருகூவையும், ஸஜ்தாவையும் முழுமையாகச் செய்யாத ஒருவரை கண்ட ஹுதைஃபா பின் அல்ய மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், அவர் தொழுது முடித்தபோது நீர் தொழவில்லை” என்று கூறினார்கள். மேலும் அவர்கள் “”(இதே நிலையில்) நீர் இறந்து விட்டால் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறைக்கு மாற்றம் செய்தவராகவே இறப்பீர்” என்றும் சொன்னார்கள். (நூல் : புகாரீ 389)

ஒருவர் முறையாக தொழவில்லையயன் றால் அவரது தொழுகையை அல்லாஹ் ஏற்றுக் கொள்ளமாட்டான் என்று மேற்கண்ட நபிமொழிகளில் மிகத் தெளிவாக கூறப்பட்டுள்ளது இப்போது ஒவ்வொரு தொழுகை யாளியும் தனது தொழுகை அல்லாஹ் ஏற்றுக் கொள்ளும் தரத்தில் உள்ளதா? அல்லது நிராகரிக்கும் தரத்தில் உள்ளதா என்பதை சுய பரிசோதனை செய்து பார்ப்போம். இன்றுள்ள தொழுகையாளிகளில் மிகமிக அதிக மானவர்கள் இரண்டு ரக்அத் தொழு கையை இரண்டு முதல் இரண்டரை நிமிடங்களில் முடித்து விடுகிறார்கள்.

இன்னும் சிலரோ இரண்டு ரக்அத் தொழுகையை இரண்டு நிமிடங்களுக்குள் நிறைவு செய்வதையும் பார்க்க முடிகிறது.

ஒருவர் குர்ஆனில் உள்ள மிகச் சிறிய சூராக் களை ஓதி முறைப்படி ருகூவு, ஸஜ்தா செய்து இரண்டு ரக்அத் தொழுவதற்கு குறைந்தபட்சம் நான்கு நிமிடங்களுக்கு மேல் ஆகிறது. அப்படியயன்றால் வேகமாக தொழுபவர்கள் எந்தெந்த இடங்களில் தவறிழைக்கிறார்கள் என்பதை பாருங்கள்.

“குர்ஆனை நிதானமாக ஓதுவீராக” (குர்ஆன் 73:4)   என்று அல்லாஹ் கூறியிருப்பதற்கு மாற்றமாகவும்,

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “”தொழுகையில் சூராக்களை ஓதினால் நிறுத்தி நிதானமாக ஓதுவார்கள்” (திர்மிதி 340) என்ற நபிவழிக்கு மாற்றமாக,

படு வேகமாக குர்ஆனை ஓதுவது ருகூவு மற்றும் ஸஜ்தாவில் தமது முதுகை நேராக வைக்கா(மல் அவசர அவசரமாக தொழு)தவரின் தொழுகை நிறைவேறாது” (திர்மிதி 245) என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மிகத் தெளிவாக கூறியிருந்தும், அதற்கு மாற்றமாக ருகூவு மற்றும் ஸஜ்தாவில் குனிந்தவுடன் அவசர அவசரமாக அதுவும் குறைந்தபட்ச அளவான மூன்று முறை மட்டும் தஸ்பீஹ் கூறுவது,

இரண்டு ஸஜ்தாக்களுக்கிடையில் உள்ள சிறு அமர்வில் “”அல்லாஹும்மக் ஃபிர்லீ வர்ஹம்னீ வ ஆஃபினீ வஹ்தினி வர்லீக்னீ (அபூதாவூத் 724) என்ற ஆழமான அர்த்தங்களை உள்ளடக்கிய இந்த துஆவை ஓதாமல் வேகமாக இரண்டாவது ஸஜ்தா செய்வது,

இன்னும் அத்தஹிய்யாத்தில் ஓத வேண்டிய துஆக்களை வேகமாக ஓதுவது இதுபோன்ற காரணத்தினால்தான் இரண்டு ரக்அத்தை இரண்டு நிமிடங்களுக்குள் முடிக்க முடிகிறது.

மார்க்கத்தை சரியாக விளங்காதவர்கள் தான் இவ்வாறு முறையற்று தொழுகிறார்கள் என்றால், மக்களுக்கு தலைமை தாங்கி தொழ வைக்கும்போது சில இமாம்களும் இவ்வாறே வேகமாக தொழுகையை முடிப்பது கண்டிக்கத்தக்க விஷயமாகும். மக்களுக்கு நபிவழியில் தொழ வேண்டிய முறையை கற்றுக் கொடுக்கும் பொறுப்பில் உள்ள இமாம்களே தன்னை சீர்படுத்திக் கொள்ளாமல் முறையற்ற முறையில் தொழு தால் மற்ற மக்கள் எவ்வாறு திருந்துவார்கள்.

தீமைகள் விலகவில்லை :

தொழுகையை நிலைநாட்டுவீராக! நிச்சயமாக தொழுகை வெட்கக்கேடான காரியங்களை விட்டும், தீமைகளை விட்டும் மனிதர்களை தடுக்கும். (குர்ஆன் 29:45)

தொழுகையின் மூலமாக என்ன பயன் ஏற்படும் என்பதை குறித்து அல்லாஹ் மேற் கண்ட ஆயத்தில் கூறியுள்ளான். ஆனால் இன்றுள்ள தொழுகையாளிகளில் மிக அதிக மானோர் முறையற்ற முறையில் தொழுவ தால் பாவங்கள் செய்வதிலிருந்து அவர் களது தொழுகை தடுக்கவில்லை மாறாக தொழுகையில்லாதவர்கள் செய்யும் அனைத்து பாவங்களையும் தொழுகை யாளிகளும் செய்து வருவதை பார்க்கிறோம்.

“”உறவை முறித்து வாழ்பவன் சொர்க்கத் தில் நுழையமாட்டான்” (நூல் : முஸ்லிம் 4997) என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியிருந்தும் தங்களது தனிப்பட்ட விஷயங்களுக்காக உறவினர்களுடன் பிரச்சனை ஏற்படும் போது,

உறவை முறித்து வாழ்வது,

நண்பர்களிடத்தில், சகோதர, சகோதரிகளிடத்தில் உலகியல் ரீதியாக சண்டையிட்டுக் கொண்டு வருட கணக்கில் பேசாமலிருப்பது,

மேலும் பொய் பேசுவது, புறம் பேசுவது, கோள் சொல்வது, பொறாமை கொள்வது,

பிறரது சொத்தை அபகரிப்பது, மோசடி செய்வது, அவதூறு பேசுவது,

வாக்குறுதி மீறுவது, பெருமையடிப்பது, பிறரை கேலி செய்வது,

பொய் சத்தியம் செய்து வியாபாரம் செய்வது,

பிள்ளைகளுக்கிடையே பாரபட்சம் காட்டுவது, கஞ்சத் தனம் செய்வது,

தாடியை சிரைப்பது, பிறருக்கு செய்த உதவியை சொல்லிக் காட்டுவது,

திருப்பிக் கொடுக்கும் எண்ணமின்றி பிறரிடம் கடன் வாங்குவது,

அண்டை வீட்டாருக்குத் தொல்லைத் தருவது, புகை பிடிப்பது,

புகையிலை சார்ந்த இன்னபிற பொருட்களை பயன்படுத்துவது,

லஞ்சம் கொடுப்பது, வட்டி வாங்குவது கொடுப்பது,

அதற்கு சாட்சியாக இருப்பது, சகுனம் பார்ப்பது,

அல்லாஹ் அல்லாதவற்றின் மீது சத்தியம் செய்வது,

பிறரை சிரிக்க வைக்க விளையாட்டிற்காக பொய் சொல்வது,

இரட்டை வேடம் போடுவது, பொய் சாட்சி சொல்வது,

பொழுதுபோக்கு என்ற பெயரால் சினிமாவிலும், இன்னபிற கேளிக்கை விளையாட்டுகளிலும் நேரத்தை வீணடிப்பது,

பள்ளிவாசலில் பொருட்களை விற்பது வாங்குவது,

வரதட்சணை வாங்குவது, பிறந்தநாள் கொண்டாடுவது, திருமண நாள் கொண்டாடுவது,

சினிமா பாடல்களை “”ரிங்டோனாக” வைப்பது, கெட்ட வார்த்தை பேசுவது,

இன்னும் அல்லாஹ்வும் அவனது தூதரும் தடை செய்துள்ள இதுபோன்ற தீமைகளில் ஏதேனும் சிலவற்றை தொழுகையாளிகளில் ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் சர்வ சாதாரணமாக செய்து வருகிறார்கள்.

தொழுகையாளிகளிடம் தீமைகள் விலகவில்லையயன்றால் அவர் அல்லாஹ்வின் திருப்தியை நாடி முறையான வகையில் தொழவில்லை ஆகவே தான் தொழுகை தீமைகளை விட்டும் தடுக்கும் என்று அல்லாஹ் உத்திரவாதம் கொடுத்திருந்தும் அவரது வாழ்க்கையில் தீமைகளை விட்டும் தடுக்கும் கேடயமாக தொழுகை மாறவில்லை என்பதை உணர வேண்டும் தொழுகை என்பது வெறும் சடங்கு அல்ல. நமது வாழ்க்கையின் நல்ல மாற்றத்திற்கான பாதை என்பதை முஸ்லிம்கள் புரிந்து முறைப்படி தொழ ஆர்வம் காட்ட வேண்டும்.

நன்மைகள் செய்தும் பயனில்லை :

அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது:

(ஒருமுறை) அல்லாஹ்வின் தூதர் அவர்கள் (மக்களிடம்) “”திவாலாகிப் போனவன் என்றால் யார் என்று உங்களுக்கு தெரியுமா?” என்று கேட்டார்கள். மக்கள் “”யாரி டம் வெள்ளிக்காசோ (திர்ஹம்) பொருட் களோ இல்லையோ அவர்தான் எங்களைப் பொறுத்தவரை திவாலானவர்” என்று பதிலளித்தார்கள். (அதற்கு) அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “”என் சமுதாயத்தாரில் ஒருவராவார். அவர் மறுமை நாளில் தொழுகை, நோன்பு, ஜகாத் ஆகியவற்றுடன் வருவார் (அதே நேரத்தில்) அவர் ஒருவரைத் திட்டியிருப்பார். ஒருவர் மீது அவதூறு சொல்லியிருப்பார். ஒருவரது பொருளை (முறை கேடாகப்) புசித்திருப்பார். ஒருவரது இரத் தத்தைச் சிந்தியிருப்பார். ஒருவரை அடித்திருப்பார் ஆகவே அவருடைய நன்மைகளிலிருந்து சில இவருக்கும் கொடுக்கப்படும். இன்னும் சில அவருக்குக் கொடுக்கப்படும், அவருடைய நன்மைகளிலிருந்து எடுத்துக் கொடுப்பதற்கு முன் நன்மைகள் தீர்ந்துவிட் டால் (அவரால் பாதிக்கப்பட்ட) மக்களின் பாவங்களிலிருந்து சில எடுக்கப்பட்டு,இவர் மீது போடப்படும். பிறகு அவர் நரக நெருப் பில் தூக்கியயறியப்படுவார் (இவரே திவாலாகிப் போனவர்) என்று கூறினார்கள். (நூல்: முஸ்லிம் 5037)

தொழுகை, நோன்பு, ஜகாத் போன்ற ஏராளமான நல்லறங்கள் செய்தும் மற்ற மனிதர்களிடம் அநியாயமாக நடந்து கொண்டதின் காரணமாக ஒருவர் நரகில் நுழைவார் என்று ஹதீஃதில் கூறப்பட்டுள்ள தைப் போன்று மறுமையில் நமது நிலை ஆகிவிடக் கூடாது என்பதை உணர்ந்து ஒவ்வொரு தொழுகையாளியும் தம்மிடம் நற்குணங்கள் வரவேண்டும் என்பதற்காக அல்லாஹ்விடம் அதிகமதிகம் துஆ செய்ய வேண்டும்.

நற்குணங்களை நாம் கடைபிடித்தால் தான் நாம் தொழும் தொழுகையின் மூல மாக நமக்கும் நம்மை சார்ந்து இருப்போருக் கும் நன்மை ஏற்படும். இதை விடுத்து சமுதா யத்தில் நானும் ஒரு தொழுகையாளி என்று காட்டுவதற்காக தொழுவதை போன்று நடித்துக் கொண்டிருந்தால் எந்த ஒரு பிர யோஜனமும் ஏற்படபோவதில்லை. மாறாக மறுமையில் தண்டனைக்கு ஆளாக நேரிடும் என்பதை அஞ்சி இனிவரும் காலங் களில் நபி(ஸல்) அவர்கள் காட்டி தந்த வழி முறைப்படி தொழுது, தொழுகையின் மூலமாக கிடைக்கக்கூடிய நற்பயன்கள் அனைத்தையும் பெறுவதற்கு முயற்சி செய்வோமாக! அல்லாஹ் அதற்கு உதவி செய்வானாக.

source:   http://www.annajaath.com/2018/02/01

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

+ 51 = 52

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb