பாபரி மஸ்ஜித் தீர்ப்பு குறித்து சட்ட வல்லுநர்களின் ஆதங்கமும், மறுபரிசீலனை கோரிக்கையும்!
o முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி அசோக் குமார் கங்கூலி!
o தமிழகத்தைச்சார்ந்த வழக்கறிஞர் ஆ.நந்தினி B.A.B.L
o அதிருப்தி தெரிவிக்கும் லிபரன் கமிஷன் முன்னால் வழக்கறிஞர் அனுபம் குப்தா
அயோத்தி பாபரி மஸ்ஜித் தீர்ப்பு: அரசியலமைப்பின் மாணவராக தீர்ப்பை ஏற்றுக் கொள்வது எனக்கு கொஞ்சம் கடினமாக உள்ளது!- முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி அசோக் குமார் கங்கூலி!
ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி நீதிபதி அசோக் குமார் கங்குலி, அயோத்தி தீர்ப்பு அவரது மனதில் ஒரு சந்தேகத்தை உருவாக்கியுள்ளது என்றும் அவர் “மிகவும் குழம்பிப்போய் உள்ளதாகவும்” தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது:
அங்கு ஒரு மஸ்ஜித் இருந்ததை சிறுபான்மையினர் பல தலைமுறைகளாகக் கண்டு வருகிறார்கள். அது இடிக்கப்பட்டுள்ளது. அதன் மீது, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி, ஒரு கோயில் கட்டப்பட இருக்கிறது. இது என் மனதில் ஒரு சந்தேகத்தை எழுப்பியுள்ளதுஸ. அரசியலமைப்பின் மாணவராக, அதை ஏற்றுக்கொள்வது எனக்கு கொஞ்சம் கடினமாகும்.
1856-57 இல் இல்லையென்றாலும், நிச்சயமாக 1949 முதல், அங்கு தொழுகை நடத்தப்பட்டு வந்துள்ளது., அது ஆவணங்களில் உள்ளது. எனவே, நமது அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்தபோதும், தொழுகை அங்கு நடத்தப்பட்டு வந்துள்ளது. தொழுகை நடத்தப்பட்ட அந்த இடம், ஒரு மஸ்ஜித் என்று அங்கீகரிக்கப்பட்டால், சிறுபான்மை சமூகத்திற்கு அவர்களின் மத சுதந்திரத்தை பாதுகாக்கும் உரிமை உண்டு -அது அரசியலமைப்பால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட ஒரு அடிப்படை உரிமை.
ஒரு முஸ்லீம் இன்று என்ன பார்ப்பார்? ஒரு மஸ்ஜித் பல ஆண்டுகளாக இருந்தது, அது இடிக்கப்பட்டது. இப்போது அந்த இடம் ராம் லல்லாவுக்கு சொந்தமானது என்று கூறி, அந்த இடத்தில் ஒரு கட்டிடம் வர நீதிமன்றம் அனுமதிக்கிறது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இருந்த நில உடைமை குறித்து உச்ச நீதிமன்றம் முடிவு செய்யுமா? அரசியலமைப்பு வந்தபோது அங்கு ஒரு மஸ்ஜித் இருந்தது என்பதை உச்ச நீதிமன்றம் மறக்குமா? ”அரசியலமைப்பு மற்றும் அதன் விதிகள் மூலம், அதைப் பாதுகாப்பது உச்சநீதிமன்றத்தின் பொறுப்பாகும். ”
அரசியலமைப்பு சட்டம் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு முன்பு இருந்தவை உச்சநீதிமன்றத்தின் பொறுப்பில் வராது. அதற்கு முன்பு இந்திய ஜனநாயக குடியரசு என்று எதுவும் இருக்கவில்லை.
பின்னர்
ஒரு மஸ்ஜித் இருந்த இடத்தில், ஒரு பெளத்த ஸ்தூபம் இருந்த இடத்தில், ஒரு தேவாலயம் இருந்த இடத்தில்ஸ இதுபோன்ற தீர்ப்புகளை நாம் வழங்க ஆரம்பித்தால், நிறைய கோயில்கள் மற்றும் மஸ்ஜிதுகள் மற்றும் பிற கட்டமைப்புகள் இடிக்கப்பட வேண்டியிருக்கும். நாம் புராண ‘உண்மைகளுக்கு’ செல்ல முடியாது. ராம் யார்? வரலாற்று ரீதியாக நிரூபிக்கப்பட்ட சூழ்நிலை ஏதேனும் உள்ளதா? இது நம்பிக்கை சார்ந்த விஷயம்.
விசுவாசத்தின் அடிப்படையில், நீங்கள் எந்த முன்னுரிமையையும் பெற முடியாது என்று உச்ச நீதிமன்றம் இந்த முறை கூறியது. மஸ்ஜிதின் கீழ், கட்டமைப்புகள் இருந்தன என்று அவர்கள் சொல்கிறார்கள். ஆனால் அந்த கட்டமைப்பு ஒரு கோயில் அல்ல. ஒரு கோவிலை இடித்ததன் மூலம் மஸ்ஜித் கட்டப்பட்டது என்று யாரும் சொல்ல முடியாது. இப்போது ஒரு மஸ்ஜிதை இடிப்பதன் மூலம், ஒரு கோயில் கட்டப்படுகிறதா?
500 ஆண்டுகளுக்கு முன்பு நிலத்தை யார் வைத்திருந்தார்கள், யாருக்கும் தெரியுமா? நாம் வரலாற்றை மீண்டும் உருவாக்க முடியாது. எது இருந்ததோ அதைப் பாதுகாப்பதே நீதிமன்றத்தின் பொறுப்பு. எதுவாக இருந்தாலும் உரிமைகளைப் பாதுகாக்கவேண்டும். வரலாற்றை மீண்டும் உருவாக்க நீதிமன்றத்திற்கு எந்த கடமையும் இல்லை. ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன்பு என்ன இருந்தது, என்பதை நீதிமன்றம் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை. மஸ்ஜித் இருந்தது என்றுதான் நீதிமன்றம் சொல்ல வேண்டும் – அது ஒரு உண்மை.
ஒரு வரலாற்று உண்மை மட்டுமல்ல, (ஆனால்) எல்லோரும் பார்த்த ஒரு உண்மை. அதன் இடிப்பு அனைவராலும் பார்க்கப்பட்டது. அதை மீட்டெடுக்க வேண்டும். அவர்களுக்கு(முஸ்லிம்களுக்கு) ஒரு மஸ்ஜிதை வைத்திருக்க உரிமை இல்லை என்றால், ஒரு மஸ்ஜிதை கட்ட ஐந்து ஏக்கர் நிலத்தை வழங்குமாறு அரசாங்கத்தை எவ்வாறு வழிநடத்துகிறீர்கள்? ஏன்? மஸ்ஜித் இடிக்கப்பட்டது முறையானது அல்ல என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்கள்.
நானாக இருந்தால் ஒன்று அந்த பகுதியில் மஸ்ஜிதை மீண்டும் கட்டியிருக்க சொல்லியிருப்பேன். அல்லது அது சர்ச்சைக்குரியதாக இருந்தால், அந்த பகுதி, ‘மஸ்ஜிதும் இல்லை, அந்த பகுதியில் கோயிலும் இல்லை’ என்று சொல்லியிருப்பேன்.
நீங்கள் ஒரு மருத்துவமனையையோ அல்லது பள்ளிக்கூடத்தையோ, அல்லது கல்லூரியை உருவாக்கலாம் என்று கூறியிருப்பேன். வெவ்வேறு பகுதிகளில் ஒரு மஸ்ஜித அல்லது கோவில் கட்டவும் கூறியிருப்பேன். அதை இந்துக்களுக்கு கொடுக்க முடியாது. இது விஸ்வ இந்து பரிஷத் அல்லது பஜ்ரங் தளத்தின் கோரிக்கை. அவர்கள் எந்த மஸ்ஜிதையும் – – இன்றோ, பின்னரோ இடிக்க முடியும். அவர்கள் அரசாங்கத்தின் ஆதரவைப் பெற்றுள்ளனர்; இப்போது அவர்கள் நீதித்துறையின் ஆதரவையும் பெறுகிறார்கள். நான் மிகவும் கலக்கம் அடைகிறேன். பெரும்பாலோர் இதை தெளிவாக சொல்லப்போவதில்லை, ”
Source: telegraph
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக் கோரி தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்-க்கு கடிதம்
அனுப்புநர்
ஆ.நந்தினி BABL,
36, பாண்டியன் நகர்,
காந்திபுரம்,K.புதூர்,
மதுரை-7.
பெறுநர்
நீதிபதி ரஞ்சன் கோகாய் அவர்கள்,
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி,
புதிடெல்லி.
[ supremecourt@nic.in என்ற மின்னஞ்சலுக்கு இக்கடிதத்தை அனுப்பியுள்ளோம் ]
ஐயா,
அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் உங்கள் தலைமையிலான உச்சநீதிமன்ற அரசியல்சாசன அமர்வு அளித்துள்ள தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது.
இந்த தீர்ப்பில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் இருந்ததாகவோ அக்கோவிலை இடித்து மசூதி கட்டப்பட்டதாகவோ இந்திய தொல்லியல் துறை எந்த ஆதாரத்தையும் அளிக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளீர்கள்.
மேலும் 1992-ஆம் ஆண்டு அயோத்தியில் இருந்த பாபர் மசூதியை இடித்தது கிரிமினல் குற்றம் என்றும் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளீர்கள்.
ஆனால் அதே நேரத்தில் இந்துக்களின் மத நம்பிக்கையில் தலையிட முடியாது என்று சொல்லி மசூதி இடிக்கப்பட்ட 2.77ஏக்கர் நிலத்தில் ராமர் கோவில் கட்டிக்கொள்ள அனுமதி வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
மேலும் அயோத்தியில் வேறு இடத்தில் மசூதி கட்டிக்கொள்ள 5 ஏக்கர் நிலத்தை அரசு ஒதுக்க வேண்டும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
சர்ச்சைக்குரிய இடத்தில் 5 நூற்றாண்டுகளுக்கு முன்பாக மசூதி கட்டுவதற்கு முன் அந்த இடத்தில் ராமர் கோவில் இருந்ததாக எவ்வித ஆதாரத்தையும் இந்திய தொல்லியல் துறை சமர்ப்பிக்கவில்லை என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஒரு தரப்பினரின் நம்பிக்கையின் அடிப்படையில் சர்ச்சைக்குரிய இடத்தில் கோவில் கட்டிக் கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்திருப்பது இந்திய அரசியல் சாசனத்துக்கும், குற்றவியல், நிலம் மற்றும் சொத்துரிமை சட்டங்களுக்கும் எதிரானதாகும்.
இந்திய அரசியல் சாசனம் பிரிவு 25-ன் படி “எவ்வித கட்டுப்பாடும் இன்றி எந்த சமயத்தையும் பின்பற்றவும் பரப்பவும் அனைத்து மக்களுக்கும் அடிப்படை உரிமை உண்டு.”
அரசியல் சாசன பிரிவு 26-ன் படி “எல்லா சமயத்தவருக்கும் பிரிவினருக்கும் சமயம் சம்பந்தப்பட்ட அமைப்புகளை ஏற்படுத்தி தாமே பராமரிக்கவும் சொத்துக்களை வாங்கி நிர்வகிக்கவும் அடிப்படை உரிமை உண்டு.”
சர்ச்சைக்குள்ளான இடத்தில் இருந்த பாபர் மசூதி 1527-28 காலகட்டங்களில் கட்டப்பட்டு இஸ்லாமியர்களின் வழிபாட்டுத்தலமாக இருந்து வந்துள்ளது.
பிரிட்டிஷ் ஆட்சிகாலத்தில் 1793-இல் காரன்வாலிஸ் நிர்வாகத்தில் இந்தியாவில் நில நிரந்தர ஒப்பந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதைதொடர்ந்து 1882 சொத்துரிமை மாற்றுச்சட்டம் மற்றும் 1894-இல் நிலம் கையகப்படுத்துவதற்கான சட்டம் போன்ற நில சட்டங்கள் நடைமுறைக்கு வந்தன.
இந்த சட்டங்களின் படி ஒரு குறிப்பிட்ட நிலத்தை நீண்ட காலமாக அனுபவத்தில் வைத்திருந்தாலோ, அரசுக்கு நிலவரி செலுத்தி வந்தாலோ, அந்த நிலத்தை முறைப்படி பதிவு செய்திருந்தாலோ அச்சொத்து அவருக்கே சொந்தமாகும்.
இந்த அடிப்படையில் நீண்ட காலமாக இஸ்லாமியர்களின் வழிபாட்டுத்தலமாக இருந்து வந்த பாபர் மசூதி மற்றும் அந்த சர்ச்சைக்குள்ள நிலம் அவர்களுக்கே சொந்தமானதாகும்.
பிறருக்கு சொந்தமான நிலத்தில் நுழைந்து அதை சேதப்படுத்துவது கிரிமினல் குற்றமாகும்.
1949- டிசம்பர் 22 நள்ளிரவில் பாபர் மசூதிக்குள் அத்துமீறி நுழைந்து ராமர் சிலையை உள்ளே வைத்ததும், 1992-டிசம்பர் 6-இல் அத்துமீறி உள்ளே நுழைந்து கும்பல் வன்முறை மூலம் அதை தகர்த்ததும் கீழ்க்கண்ட சட்டப்பிரிவுகளின் படி கிரிமினல் குற்றமாகும்.
1) இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 295- ஒரு வகுப்பினரின் மதத்தை நிந்திக்கும் உட்கருத்துடன் வழிபாட்டு தலத்தை சிதைத்தல் அல்லது தீட்டுப்படுத்துதல்.
2) இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 447-பிறரது சொத்துக்க்குள் அத்துமீறி நுழைதல்.
3) இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 461- பிறரது சொத்தை நேர்மையற்ற முறையில் உடைத்து திறப்பது.
4)இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 436- தீ அல்லது வெடிபொருளால் பிறரது சொத்தை அழித்தல்.
5)இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 440- பிறருக்கு மரணம் அல்லது காயம் விளைவிக்க முன்னேற்பாடு செய்து பிறகு அழிம்பு செய்தல்.
6) இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 386,387-உட்கருத்து கொண்டு அச்சத்தை உண்டாக்கி சொத்தை பறிக்க முயல்தல்.
7) இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 321, 327, 329- சொத்தை அச்சுறுத்தி பறிப்பதற்கு காயம், கொடுங்காயம் விளைவித்தல்.
8) இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 302- கொலை செய்தல்.
நாட்டில் மக்களிடையே மதரீதியான பிளவை உண்டாக்கி அரசியல் அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் அகில இந்திய தலைவரான L.K அத்வானி மற்றும் அவரைச் சார்ந்தோரால் இக்குற்றச்செயல் நடைபெற்றுள்ளது.
தற்போது இக்கட்சி மத்திய ஆட்சிப்பொறுப்பில் உள்ளது. இச்சூழ்நிலையில் சட்டவிரோதமாக பாபர் மசூதியை இடித்துத் தகர்த்த குற்றவாளிகளிடமே சர்ச்சைக்குரிய நிலத்தை ஒப்படைத்து அந்த இடத்தில் ராமருக்கு கோவில் கட்ட வேண்டும் உத்தரவிட்டிருப்பது கும்பல் வன்முறைக்கு நாட்டின் சட்டம் அடிபணிந்து செல்வது போல் உள்ளது.
இது நாட்டில் மிக தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்திவிடும். எதிர்காலத்தில் யார் வேண்டுமானாலும் பிறரது சொத்தை கும்பலாக சேர்ந்து வன்முறை மூலம் அபகரிக்கலாம் என்பதற்கு தூண்டுதலாக இத்தீர்ப்பு உள்ளது.
இத்தீர்ப்பின் மூலம் மதம், சமயம் இவற்றைத் தாண்டி தனி நபரின் சட்டப்படியான உரிமைகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதை உச்சநீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு வருகிறோம்.
மேலும் கீழ்க்கண்ட கோரிக்கைகளை பரிசீலிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்..
சட்டவிரோதமான வன்முறை மூலம் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் மீண்டும் மசூதியை கட்டிக்கொள்ள உரியவர்களிடம் நிலத்தை ஒப்படைப்பதே நியாயமானதாக இருக்கும்.
1) ஆனால் சர்ச்சைக்குள்ளான இடத்தில் மீண்டும் மசூதியை கட்டுவது நாட்டில் மதரீதியான பதற்றத்தை ஏற்படுத்த வழிவகுக்கும் என்று உச்சநீதிமன்றம் கருதினால் அந்த இடத்தை அரசின் பொது பயன்பாட்டுக்கு கொண்டுவருவதே சரியான தீர்வாக இருக்கும். அதை விடுத்து அந்த இடத்தில் ராமர் கோவில் கட்டிக்கொடுக்க உத்தரவிட்டிருப்பது சட்டவிரோதமாகும்.
2) அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி அனைத்து மக்களுக்கும் சமமான சமய உரிமை இருக்கிறது. சர்ச்சைக்குள்ளான இடத்தை ஒரு சாராரின் வழிபாட்டுத்தலமாக மாற்றுவது மற்ற தரப்பினரின் அரசியல் சாசன உரிமையை பறிப்பதாகும்.
3) அயோத்தியில் சர்ச்சைக்குள்ளான இடத்தில் இருந்த மசூதியை வேறு இடத்தில் கட்டிக்கொள்ள நிலம் வழங்க உத்தரவிட்டிருப்பதைப் போல மதரீதியான பதற்றத்தைத் தடுக்க வேறு இடத்தில் கோவில் கட்டிக்கொள்வதற்கு இடம் வழங்க உத்தரவிடுவதே சரியானதாகும்.
எனவே இப்பிரச்சனை தொடர்பாக 9.11.19 ஆம் தேதி பிறப்பித்த உத்தரவை நிறுத்தி வைக்குமாறும் இப்பிரச்சனை தொடர்பாக மறுபரிசீலணை செய்து சட்டப்படி சரியான தீர்ப்பு வழங்குமாறும் உச்சநீதிமன்றத்தை கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு,
ஆ.நந்தினி
11.11.2019
source: https://www.facebook.com/permalink.php?story_fbid=1214409215434306&id=100005957165418
அயோத்தி தீர்ப்பு: அதிருப்தி தெரிவிக்கும் லிபரன் கமிஷன் முன்னால் வழக்கறிஞர் அனுபம் குப்தா
பாபர் மசூதி இடிப்புக்குக் காரணமான அரசியல் தலைவர்கள் எல்.கே. அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, உமா பாரதி, கல்யாண் சிங் ஆகியோரையும், பி.வி. நரசிம்ம ராவையும் புதுடெல்லியில் விக்யான் பவனில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக அடுக்கடுக்கான கேள்விகளுக்கு ஆளாக்கியவர் சண்டிகரைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் அனுபம் குப்தா.
1992ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டது குறித்து விசாரித்த நீதிபதி எம்.எஸ். லிபரான் கமிஷன் வழக்கறிஞராக இந்த வாய்ப்புகள் அவருக்குக் கிடைத்தன. கமிஷனுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், 2009ல் அதன் இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டபோது குப்தா அதை குறைகூறினார்.
இப்போது அயோத்தி தீர்ப்பு வெளியான நிலையில் பிபிசிக்கு தொலைபேசி மூலம் பேட்டி அளித்த அனுபம் குப்தா, அதுகுறித்து கடும் அதிருப்தியைத் தெரிவித்தார்.
அயோத்தி தீர்ப்பு குறித்த அனுபம் குப்தாவின் விமர்சனம் பின்வரும் அம்சங்களின் அடிப்படையில் அமைந்துள்ளன .
1) சர்ச்சைக்குரிய நிலம் முழுவதையும், வழக்கின் ஒரு தரப்பிற்கு (இந்துக்களுக்கு) வழங்கியது.
2) 1528க்கும் 1857 க்கும் இடைப்பட்ட காலத்தில் மசூதிக்குள் வழிபாடு நடந்ததற்கான ஆதாரம் பற்றி கேள்வி எழுப்பியது மற்றும்.
3) சட்ட விரோதமாக, 1949 டிசம்பரில் மசூதிக்குள் சிலைகள் வைத்தது மற்றும் 1992 டிசம்பரில் மசூதியை முழுவதுமாக இடித்துத் தள்ளியது.
பேட்டியின் முக்கிய அம்சங்கள்:
தீர்ப்பை நீங்கள் எந்த அளவுக்கு ஏற்றுக் கொள்கிறீர்கள்?
இந்து சிலைக்கு சட்டபூர்வ அதிகார அந்தஸ்து உள்ளது என்பதை இந்தத் தீர்ப்பு உறுதி செய்திருக்கிறது. நான் அதை ஏற்றுக் கொள்கிறேன். எனவே, ராம் லாலா விரஜ்மன் (குழந்தை ராமர்) – மைனர் என்ற வகையில் சட்ட விதிகளில் உள்ள தளர்வுகள் குறித்து கேள்வி எழாது”
தீர்ப்பில் உங்களுடைய அதிருப்திக்கான முக்கிய அம்சம் என்ன?
படத்தின் காப்புரிமைபா. காயத்திரி அகல்யா
சர்ச்சைக்குரிய நிலம் – உள்பகுதி மற்றும் வெளிப்பகுதி – முழுவதையுமே இந்துக்களுக்கு ஒதுக்கியதில் எனக்கு தீவிர அதிருப்தி உள்ளது.
ஆவணங்கள் இல்லாத நிலையில் சொத்தின் உரிமையை முடிவு செய்த நடைமுறையில் எனக்கு அதிருப்தி உள்ளது.
வெளிப்புறப் பகுதியில் அவர்கள் (இந்துக்கள்) நீண்டகாலமாக எந்தவித இடைவெளியும் இல்லாமல் தொடர்ந்து வழிபாடு செய்து வந்திருக்கிறார்கள் என்று நில உரிமை முடிவு செய்யப்பட்டிருப்பது சரியானது என்று ஏற்றுக் கொள்ளக் கூடியதே என்றாலும், இறுதித் தீர்ப்பில், கட்டடத்தின் உள்பகுதியில் அதே அணுகுமுறை கையாளப்படவில்லை.
“அயோத்தி வழக்கில் ஆதாரங்களுக்கு மாற்றாக தொன்மங்கள் அடிப்படையில் தீர்ப்பு”
அயோத்தி வழக்கு இவ்வளவு ஆண்டுகளாக உயிர்ப்புடன் இருந்தது எப்படி?
கட்டடத்திற்குள் இருக்கும் பகுதியின் அனுபவ பாத்யதை மற்றும் வழிபாடு சர்ச்சைக்குரியதாகவே இருக்கிறது என்று, திரும்பத் திரும்ப, பல இடங்களில் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
இது சரியான காரணங்களின் அடிப்படையிலானது என்று எடுத்துக் கொண்டால், வெளிப்புறப் பகுதியை இந்துக்களுக்கு அளிப்பதாக இறுதித் தீர்ப்பு இருக்க வேண்டும்தான். உள் பகுதியை எப்படி இந்துக்களுக்குத் தந்துவிட முடியும்?
உள்புறம் மற்றும் வெளிப்புறம் என இரு பகுதிகளையுமே இந்துக்களுக்கு அளிப்பதாக எடுக்கப்பட்ட முக்கியமான முடிவு, வெளிப்புற பகுதி மட்டுமே இந்துக்களின் பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது என்று நீதிமன்றம் கூறியதிலிருந்து அடிப்படையில் முரண்பட்டுள்ளது.
1528க்கும் 1857க்கும் இடைப்பட்ட காலத்தில் சர்ச்சைக்குரிய இடத்தில் வழிபாடு நடந்ததற்கான ஆதாரங்கள் இல்லை என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. அது குறித்து உங்களுடைய கருத்து…
நீதிமன்றம் இந்த அடிப்படையான விஷயத்தைக் குறிப்பிட்டுள்ளது. இது விநோதமாக எனக்குத் தோன்றுகிறது. 1528க்கும் 1857க்கும் இடைப்பட்ட காலத்தில், அந்த இடத்தை முஸ்லிம்கள் பயன்படுத்தி வந்தார்கள் என்பதற்கு, முஸ்லிம்கள் தரப்பில் எந்த ஆதாரங்களும் தரப்படவில்லை என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்பீலில் விசாரிக்கப்படும் வழக்கில் ஆதாரங்கள் விடுபடும் காலக்கட்டம் இருந்தாலும், 1528ல் மசூதி கட்டப்பட்டு, 1992ல் இடிக்கப்பட்டது என்ற உண்மை – சந்தேகத்துக்கு இடமில்லாமல் இருக்கிறது.
அயோத்தியில் மதத்தின் பெயரால் கெடுபிடி: பிபிசி குழுவின் நேரடி அனுபவம்
அயோத்தி தீர்ப்பு: ராமருக்கு வெற்றி தேடித் தந்த “கடவுளின் நண்பர்”
முகலாயர் ஆட்சிக் காலத்தில் எங்காவது ஒரு கிறிஸ்தவ தேவாலயம், குருத்வாரா அல்லது ஒரு கோவில் கட்டப்பட்டதாக வைத்துக் கொள்வோம். அங்கு பல நூறு ஆண்டுகள் நீங்கள் வழிபாடு செய்து வந்திருக்கிறீர்கள் என்பதை நிரூபிக்க வேண்டும் என அந்த சமுதாயத்தினரை கேட்க முடியுமா. 1528க்கும் 1857க்கும் இடைப்பட்ட காலத்தில் அங்கு இந்துக்கள் வழிபாடு செய்தனர் என்பதற்கு இந்துக்களிடம் கூட ஆதாரங்கள் கிடையாது. அது ராமரின் பிறந்த இடம் என்று அவர்கள் (இந்துக்கள்) நியாயமான நம்பிக்கை கொண்டிருந்தால், அந்த இடத்தில் வழிபாடு செய்திருப்பார்கள்.
ஆனால் 1528ல் கட்டப்பட்ட அந்த மசூதி 1857 வரையில் முஸ்லிம்களால் பயன்படுத்தப்படவில்லை என்று நீதித் துறை கூறியுள்ளது. எதன் அடிப்படையில் மாண்புமிகு நீதிமன்றம் இந்த அனுமானத்திற்கு வந்துள்ளது?
1949 டிசம்பர் மற்றும் 1992 டிசம்பர் சம்பவங்களை தீர்ப்பு கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளதா?
மசூதியின் மையப் பகுதியில் குழந்தை ராமரின் சிலைகளை 1949 டிசம்பர் 22 ஆம் தேதி நிறுவியது – மசூதியை இடித்ததாக அவர்கள் கூறுவது, சட்டவிரோதம் என்று இந்தத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால் சொத்து ஆர்ஜிதம் செய்யப்பட்டது. 1949 டிசம்பர் 22 ஆம் தேதிக்கு முன் சிலைகள் எதுவும் இல்லை என்று நீதிமன்றம் சரியான விஷயத்தைக் கூறியுள்ளது. இருந்தாலும், நீதிமன்றத்தின் முடிவு, ஆய்வு மற்றும் மதிப்பீடுகளில் அது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
இந்த நிலத்தில் இந்துக்களுக்கு உரிமையுள்ளதாக கூறுவது, மசூதியை இடித்ததை நியாயப்படுத்துவதாக உள்ளது, அதாவது சட்டத்தை மீறியதாக அர்த்தமாகிறது.
அயோத்தி வழக்கில் ராமருக்காக வாதாடிய 93 வயது தமிழர் கே.பராசரன்
1992 டிசம்பரில் நடந்த மசூதி இடிப்பு சம்பவம், சட்டத்தை மீறியது, நீதிமன்ற உத்தரவுகளை மீறிய செயல் என்று நீதிமன்றம் கூறினாலும், அந்த சம்பவம் நீதிமன்றத்தை உணர்வு ரீதியிலோ, நெறி அடிப்படையிலோ, தர்க்க ரீதியிலோ பாதிப்பை ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை. நீதிமன்றத்தின் மீது மிகுந்த மரியாதை கொண்டிருக்கும் நிலையில், இதை என்னால் நியாயப்படுத்த முடியவில்லை. இந்த அடிப்படையான விஷயங்களை ஒதுக்கித் தள்ளிவிட முடியாது, இவை கவலை தருகின்றன.
1949ல் சிலைகளை நிறுவியது, 1992ல் முழு கட்டடத்தையும் இடித்துத் தள்ளியது ஆகிய – சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட குற்றத்துக்கு ஆளாகியுள்ள தரப்பினரான இந்துக்களுக்கு முழு இடத்தையும் ஒதுக்கியிருப்பது – என்னைப் பொருத்தவரை குற்றவாளிகளுக்கு பாராட்டு அளிப்பதைப் போன்றதாகக் கருதுகிறேன்.
வெளிப்புற மற்றும் உள்புறப் பகுதிகளை இந்துக்களுக்கு அளிப்பதற்கு நீதிமன்றம் கூறும் காரணங்கள் என்ன?
முழு கட்டுமானமும் ஒரே முழுமையான பகுதி என்பது தான் நீதிமன்றம் கூறியுள்ள ஒரே காரணம்.
பிரிக்க முடியாத அளவுக்கு ஒரே பகுதியாக அது கருதப்படுமானால், அதற்கான அனுபவ உரிமை எந்தத் தரப்பாருக்கும் முழுமையாக வழங்கப்பட்டிருக்கக் கூடாது.
கண்டிப்பு, உண்மை நிலை மற்றும் சமன்பாடான நிலை ஆகியவை இதுபோன்ற முக்கியமான வழக்குகளில் தேவைப்படக் கூடிய, எதிர்பார்ப்புகளாக உள்ளன. உச்ச நீதிமன்றத்தின் மீது பெரிய மதிப்புகள் கொண்டுள்ள நிலையில், இந்த எதிர்பார்ப்புகள் இந்த தீர்ப்பில் பூர்த்தி செய்யப்படவில்லை என்பது எனக்கு வருத்தம் தருவதாக உள்ளது. இந்தப் பிரச்சினை மீதான ஒட்டுமொத்த அணுகுமுறையிலும், மதச்சார்பின்மை என்ற அடிப்படை லட்சியங்கள் மற்றும் அடிப்படைக் கோட்பாடுகளில் இருந்து உச்ச நீதிமன்றம் பின்வாங்கியுள்ளது என்று கருதுகிறேன்.
source: https://www.facebook.com/photo.php?fbid=2407668159550843&set=a.1450987015218967&type=3&theater