அனைத்துத் துறையிலும் உலகம் அழியும் வரை வழிகாட்டியவர்!
M.A.முஹம்மது ஸலாஹுத்தீன், நீடூர்.
அனைத்து துறையிலும் உலகம் அழியும் வரை அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வழிகாட்டி விட்டனர்.
நாளை ஒருவர் ஒரு கருத்தை புதிதாக இருப்பதை போல் சொல்வார். நன்கு ஆராய்ந்தால் அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஏற்கனவே நேரிடையாகவோ மறைமுகமாகவோ அதை சொல்லியோ செய்தோ இருப்பார்கள்.
அப்படிப்பட்ட ஒரு அடிப்படை இல்லை என்றால் அந்த புதுக்கருத்து வெளிரங்கத்தில் எப்படி இருப்பினும் மனிதனுக்கு நன்மை தராது.
மண்ணுலக வாழ்வில் ஒருவர் இயேசு நாதரைப் போல் பிரம்மச்சாரியாக வாழ்ந்து இருந்தால் கிறித்துவமே பரவி இருக்குமா?
மனைவி பிள்ளைகளை விட்டுவிட்டு வெளியேறிய புத்தரின் உதாரணத்தை எத்தனை புத்த சமயத்தினர் பின்பற்ற முடியும்?
இராமரைப் போன்று எத்தனை இந்துக்கள் மார்பு திறந்த ஆடை அணிய முடியும்?. எப்படி இருப்பினும் குளிர் பிரதேசத்தில் யாராலும் அதை கடை பிடிக்க முடியாது.
இயேசு நாதருக்கு சீடர்கள். அவர்களில் ஒருவன் வீணாமல் போய் விட்டான். அவன் ஜுதா என்பதை நம்மில் தெரியாதவர் குறைவு. ஆனால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு எத்தனை சீடர்கள் என்றால் பலருக்குத் தெரியாது. முஸ்லிம்களில் சிலருக்கும் தெரியாது.
பத்தல்ல பத்தாயிரம் அல்ல, ஒரு இலட்சத்து இருபத்தி நாலாயிரம் சீடர்களை உடையவர்கள் நபிகள் பெருமகனார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் .
தமது சீடர்களை தோழர்களாக அன்புடன் அழைத்தவைர்கள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.
ஒன்றை தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு சமயத் தலைவர் அந்தந்த சமயத்தினருக்கு மட்டும் தான் மறுமையில் அல்லது மரணத்திற்குப் பிறகு (according to their belief) அவர்கள் நம்பிக்கைப்படி பலன் தருவார். உலக வாழ்வில் அல்ல.
ஆனால் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மட்டுமே மறுமையிலும் இம்மையிலும் பலன் அளிக்கக் கூடியவர்கள். முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல; அனைவருக்கும், அவர் இறை மறுப்பாளராக இருப்பினும் சரியே.