இஸ்லாமிய மார்க்கம் மத துவேசத்தை தூண்டியதா?
Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
2019 செப்டம்பர் கடைசி வாரத்தில் தமிழ் பத்திரிக்கைகளில் பரபரப்பாக பேசப் பட்ட செய்தி என்னவென்றால் திண்டுக்கல் கோட்டையில், ‘சுல்தான்’ படப்பிடிப்பு நடந்தபோது அங்குள்ள இந்து முன்னெனி அமைப்பினர் அந்தப் படப்பிடிப்பு மைசூர் மன்னன் திப்பு சுல்தானைப் புகழ்ந்து எடுக்கப்படும் படமென்று முற்றுகையிட்டு படப் பிடிப்பும் பாதியில் நின்றுவிட்டதாம். அதற்கு இந்து முன்னெனி அமைப்புனர் சொல்லும் காரணம் ‘திப்பு சுல்தான் ஒரு பயங்கர வாதியாம், அவன் தான் அபிராமி சிலையினை மலையின் உச்சியில் உள்ள கோவிலிருந்து கீழே கொண்டு வந்தவனாம்’…
வரலாறு படித்தவர்களுக்கு தெரியும் ஆங்கிலேய கும்பனி அரசுக்கு எதிராக நவீன ஆயுதமான ராக்கெட்டை பயன்படுத்தி வீரமரணமடைந்த சிறந்த தளபதி என்று. இதனை நான் சொல்லவில்லை அவர்களால் பாராட்டப் படும் முன்னாள் ஜனாதிபதி அபுல் கலாம் அவர்களே பல தடவை சொல்லியுள்ளார்.
இந்தியாவில் 80 சதவீதம் இந்து மக்களைக் கொண்டு உள்ளது. அதனை முஸ்லிம் அரசர்கள் கிட்டத்தட்ட 800 ஆண்டுகள் படையெடுப்புகள் நடத்தியும், ஆட்சியையும் செய்துள்ளனர். ஆனால் இந்திய மண்ணின் மைந்தர்கள் வழிபடும் வணக்கஸ்தலங்களுக்கு தீங்கு செய்ததில்லை என்பதும், இந்திய செல்வங்களை, புராதான கலைப் பொருட்களை ஆங்கிலேயர் போன்று கொள்ளையடிக்கவில்லை என்பதும் நடுநிலை ஆசிரியர்கள் கூறுவார்.
ஏன் இப்போதுகூட இந்திய சிலைகள், அற்புதமான பொருட்கள் ஐரோப்பிய, ஆஸ்திரேலிய, அமெரிக்கா நாடுகளிலிருந்து தானே மீட்கப் படுகின்றது, ஆங்கிலேய ராணியின் மகுடத்தில் அலங்கரிக்கும் கோகினூர் வைரம் இந்திய மண்ணைச் சார்ந்தது தானே. திப்பு சுல்தான் மத துவேசம் கொண்டிருந்தால் அபிராமி சிலையினை உடைத்தாரா என்று ஏன் அவர்களால் சிந்திக்க முடியவில்லை. படப் பிடிப்புக்கு குழுவினர் சுல்தான் என்ற படம் திப்பு சுல்தானைப் பற்றி இல்லை என்று விளக்கம் சொன்ன பின்பும் ஏன் வீணான சர்ச்சைகள்.
இஸ்லாமிய மார்க்கம் துவேஷ நடவடிக்கைகளை மேற்கொண்டு தான் வளரவேண்டும் என்று எல்லாம் வல்ல அல்லாஹ்வோ அல்லது அவனது இறுதித்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோ கற்றுக் கொடுக்கவில்லை.
இஸ்லாம் மக்களை புனிதப்படுத்தும் ஒரு தூய்மையான, அமைதியான மார்க்கமென்றால் மிகையில்லை. அதன் பயனாகத் தான் இஸ்லாமிய மார்க்கம் பத்து ஆண்டுகளில் 235 சதவீதம் உயர்ந்துள்ளது. ஆனால் வல்லமைப் படைத்த கிருத்துவ நாடுகளின் மதம் 46 சதவீதம் தான் என்று ‘அல்மனாக் புக் ஆப் பாக்ட்ஸ்’ சொல்லியுள்ளது. இந்த பரிணாம வளர்ச்சி நவீன காலத்தில் முஸ்லிம்களின் வன்முறையால் பரப்பப்பட்டதா என்று சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?
இஸ்லாமிய அரசு இல்லாத நாடுகளில் பிற மதத்தினர் எதற்காக இஸ்லாமிய மார்க்கத்தினை ஏற்றுக் கொள்கிறார்கள் என்று சமீப காலங்களில் உள்ள சில உதாரணங்கள் மூலம் விளக்கெல்லாம் என நினைக்கின்றேன்.
1) சில நாட்களுக்கு முன்பு பிரசித்திபெற்ற அமெரிக்க நுண்பொறியாளர்கள் இருவர் வெளிநாடு பயணமாக ஐரோப்பிய நாடு ஒன்றிற்கு அலுவல் சம்பந்தமாக பயணித்தார்கள். அதில் ஒருவர் முஸ்லிம், மற்றொருவர் கிருத்துவர். ஐரோப்பிய விமான நிலையத்தில் கிருத்துவ நண்பர் அங்குள்ள கழிப்பறைக்கு முஸ்லிம் நண்பர் பையிலிருக்கு ஒரு குவளையினை எடுத்து சென்றாராம்.
அவர் காலைக் கடனை முடித்து விட்டு வெளியே வந்தாராம். அப்போது கிருத்துவ நண்பர் அவரைப் பார்த்து கேட்டாராம் ‘ஏன் குவளையை எடுத்துச் சென்ரீர்கள் அங்கு தான் துடைத்துக் கொள்வதற்கு காகிதம் இருக்கின்றதே என்று கேட்டாராம். அதற்கு முஸ்லிம் நண்பர் குவளையில் தண்ணீர் பிடித்து சுத்தம் செய்தால் தான் எனது மார்க்கத்தில் தொழுவதிற்கும் மனதிற்கும் திருப்தியாக இருக்கும் என்றாராம்.
உடனே அந்த கிருத்துவ நண்பர் அந்தக் குவளையினை வாங்கி கொண்டு கழிவறைக்கு சென்றுவிட்டு முஸ்லிம் நண்பர் சொன்னதுபோல செய்துவிட்டு வெளியே வந்து மிகவும் மன திருப்தியாக இருப்பதாக சொல்லி இஸ்லாமிய மார்க்கத்தினையும் ஏற்றுக் கொண்டதாக செய்திகள் வந்தன. தண்ணீரை ஏன் வீணாக்கக் கூடாது என்று மார்க்க சம்பந்தமான ஒரு உதாரணம் என்னெவென்றால் ஒழு செய்யும்போது முகத்தினை மூன்று முறை நீரால் சுத்தம் செய்து விட்டு நான்காவது முறை செய்தால் அது மக்ரு (தடை செய்யப் பட்டுள்ளது) என்று பலருக்கு தெரிந்து இருக்கும்.
ஒரு தடவை ஹாலிவுட் நடிகை , ‘லின்சேய் லோகன்’ தனது முஸ்லிம் தோழியுடன் பேசிக்கொண்டு இருந்தார். தொழுகை நேரம் வந்ததும் முஸ்லிம் தோழி தான் பள்ளியில் சென்று தொழ நேரமாகிவிட்டது என்று கிளம்பினார். அப்போது நடிகை நானும் கூட வரவா என்றாராம். சரி என்று சொல்லி அவரை அழைத்துச் சென்றாராம் முஸ்லிம் தோழி. அங்கு ஒழு செய்துவிட்டு அவர் செல்லும்போது நடிகையும் கால்களை கழுவி விட்டு பள்ளிக்குள் சென்றாராம். தோழி பள்ளியில் நுழைந்து தொழ ஆராம்பித்தாராம்.
அவர் நினைத்தார் நடிகை வேடிக்கை பார்த்துக் கொண்டு பின்னால் நிற்பார் என்று. ஆனால் நடிகையும் தோழியுடன் கூடவே அவர் செய்தது போல ஸஜ்தா செய்தாராம். அப்போது நடிகையின் நெற்றி தரையில் பட்டதும் சிறிது நேரம் எழுந்திரிக்க வில்லையாம். தோழி தொழுகை முடித்த பின்பு தான் தரையிலிருந்து நெற்றியினை எடுத்தாராம்.
அதன் பின்பு பள்ளியினை விட்டு வெளியே வந்ததும் நடிகை, ‘நான் மனிதர்களுக்கு தலை வாங்கியுள்ளேன் அது எனது காசுக்காகவும், புகழுக்காகவும் தலை வணங்கி மரியாதை செய்துள்ளேன். அனால் என்னிடம் ஒரு அமைதி ஏற்பட்டதில்லை. இப்போது என்னை படைத்த இறைவனுக்கு ஸஜ்தா செய்த பின்பு மனதில் ஒரு அமைதியினை காண்கின்றேன் என்று இஸ்லாத்தினை ஏற்றுக் கொண்டதாக ஹாலிவுட் செய்திகள் கூறுகின்றன. அப்படி அமைதியினை போதிக்கும் மார்க்கம் இஸ்லாம் அல்லவா?
அதேபோன்று தான் அமெரிக்காவின் பாப் இசையில் கொடிகட்டிப் பரந்த ‘மைக்கேல் ஜாக்சனும் அவருடைய சகோதரியான ஜென்னெட் ஜாக்சனும்’ ஆடல், பாடலுடன் கூடிய இரைச்சல் மிகு இசையில் 2013 ம் ஆண்டு இஸ்லாத்தில் அமைதி பெற இணைந்தனர் என்பதும் வரலாறு. ஆனால் இங்கே திருவிழா என்று காதைப் பிளக்கும் ஒலி பெருக்கினை வைத்து, ‘ஆடுங்கடா, பாட்டுப் பாடுங்கடா, சாமி வருதது பாருங்கட, பாட்டுப் பாடுங்கடா’ என்று அமைதி கெடும் அளவிற்கு தெருவில் வழிபாடுகள் நடப்பதினை பார்க்கவில்லையா, அதனால் மனிதனுக்கு எந்த அமைதியும் உண்டா என்று யோசிக்க உங்களுக்கே விட்டு விடுகிறேன்.
அதேபோன்று தான் தன்பாடல் ஆடல் மூலம் பலர் மனதை ஆர்பாட்டத்துடன் கூடிய பாப் இசை மூலம் கவர்ந்த பிரான்ஸ் பாடகி ‘டும்ஸ்’ பல கிருத்துவ ஆலயங்களுக்கு சென்று வந்த பின்னரும் ஒரு தடவை ஒரு முஸ்லிம்கள் தொழுகை நடத்தும் பள்ளி வாசல் பக்கம் சென்றாராம். அங்கே எந்த ஆரவாரமில்லாமல் தொழுகை அமைதியாக நடந்து கொண்டு இருந்ததாம். அதனைப் பார்த்த பின்னர் இனிமேல் இந்த காதை செவிடாக்கும் பாப் இசையே வேண்டாம் என்று முழுக்குப் போட்டு விட்டு இஸ்லாமிய மார்க்கத்தினை தழுவி லட்சக் கணக்கான மக்கள் பங்கேற்ற ஹஜ்ஜுக்கு சென்று திரும்பி உள்ளாராம்.
மூன்று முறை உலக குத்துச் சண்டை போட்டியில் தனது 20 வயதிலேயே களம் இறங்கி வென்றாலும், ‘காசிஸ் கிலே’ அமெரிக்க கருப்பு இனமக்கள் சமத்துவ, சகோதரத்துடன் வாழ அனுமதிக்கப் படவில்லை என்று மனம் வெந்து கருப்பு இனமக்களுக்காக போராடும் மால்கம் எக்ஸ் என்ற தலைவர் உருவாக்கிய, ‘நேசன் ஆப் இஸ்லாம்’ என்ற இயக்கத்தில் சேர்ந்து முகமது அலி என்று தன்னுடைய பெயரினை மாற்றி மார்க்கத்தினை போதிக்கும் ஒரு அம்பாஸடராக இருந்தார் என்று உங்களுக்குத் தெரியும்
அதேபோன்று தான் தான் உலக குத்துச் சண்டைப் போட்டியில் பட்டம் வென்றுவிட்டோம் என்ற மமதையில் தன்னுடைய ரசிகையினை கற்பழித்துவிட்டு தனது பட்டத்தினையும் இழந்து, 1992 முதல் 1995 வரை சிறையில் வாடிய பின்பு தான் செய்தது மிகப் பெரிய தவறு என்று எப்போது இசுலாத்திற்கு மாறினாரோ அப்போது தான் உணர்ந்தாராம். ஏனென்றால் பெண் சிசு கொலையினை தடுத்து நிறுத்தியது மட்டுமல்லாமல் பெண்ணுக்கு மதிப்பும், மரியாதையும் அளித்து சொத்தில் பங்கையும் கொடுத்தது இஸ்லாம் தானே!
இஸ்லாம் அடிமைகளை விடுதலை செய்யும் மார்க்கம், ஆனால் அமெரிக்கா கறுப்பின மக்களை அடிமைகளாக நடத்திய நாடு. அமெரிக்கா பிரசித்தி பெற்ற கூடைப் பந்து வீரர் ‘பெர்டினாந்து’ தன்னுடைய முன்னோர் அமெரிக்கர்களால் அடிமையாக நடத்தப் பட்டனர் என்று அறிந்து 1968 ம் ஆண்டு இஸ்லாத்திற்கு மாறி ‘அப்துல் கரீம்’ என்று பெயரினைத் தழுவியுள்ளார்.
காமடி நிகழ்ச்சியில் தொலைக் காட்சி நிகழ்ச்சியில் கோடிகளை சுருட்டிய ‘டேவிட் சாப்ளின்’ பிறரை மனம் புண்படி கேளிக்கை நிகழ்ச்சி செய்வது தவறு என்று இஸ்லாத்தில் சொல்லியிருப்பது அறிந்து வருமானம் தரும் தொலைக்காட்சி நிகழ்ச்சியினையே நிறுத்தி 1998 ம் ஆண்டு இஸ்லாத்திற்கு மாறிவிட்டாராம்.
பல பிரபலங்கள் மாறியதினை பட்டியலிட்டே போய்க்கொண்டிருக்கலாம். பெரும்பாலோனோர் இஸ்லாத்திற்கு வந்தது கீழ்க்கண்ட காரணங்களுக்காகத்தான்:
1) இஸ்லாமிய மார்க்கம் ஏன், எதற்கு, எப்போது, யார் என்று கேள்வி கேட்கச் சொல்லும் விஞ்ஞானப் பூர்வமான அறிவு சார்ந்த மார்க்கம்.
2) இஸ்லாமிய மார்க்கம் வரலாறு சார்ந்த கருத்துக்களை எடுத்து இயம்பும் மார்க்கம்.
3) சமுதாயத்தில் ஒற்றுமை, இனம், மொழி, நாடு, நிறம், ஜாதி போன்றவற்றில் உள்ள வேற்றுமையினை வெறுக்கும் மார்க்கம். இந்திய அரசியல் சட்டம் 1950 ல் தாழ்த்தப் பட்ட மற்றும் பழங்குடியினர் ஆகியோருக்கு தீங்கிழைக்கும் நோக்கம் சம்பந்தமாக செயல் படும் நபர்களை கிரிமினல் நடவடிக்கைக்குட்பட வைக்கும் செட்டப் பிரிவுகளுக்கு பாதகமான சில தீர்ப்புகளை இந்த வருடம் (2019) மார்ச் மாதத்தில் உச்ச நீதிமன்றம் வழங்கி அதன் மூலம் நாட்டிலுள்ள அதனைச் சார்ந்த மக்கள் கொதித்தெழுந்து ஆர்ப்பாட்டம் செய்ததில் சுமார் பத்து பேர் இறந்தது உங்களுக்குத் தெரியும்.
அதன் பிறகு மத்திய அரசு சுதாரித்துக் கொண்டு உச்ச நீதிமன்றத்தில் ஒரு மறு சீராய்வு மனு கொண்டு வந்தது. அதில் இன்று (1.0.2019) உச்ச நீதிமன்றம் தன்னுடைய மார்ச் தீர்ப்பினை திரும்பப்பெறும்போது மாண்புமிகு நீதிபதிகள், ‘நாடு சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆகியும் தாழ்த்தப் பட்டோர், பழங்குடியினர் சமத்துவமாக நடத்தப் படவில்லை.
இன்னும் அவர்கள் தீண்டாமையும், சமூக நீதி நீதியில் புறக்கணிப்பையும், அவமானங்களையும், சந்தித்து வருகிறார்கள்’ என்று சொல்லி வேதனைப்பட்டுள்ளனர். திப்பு சுல்தான் இந்துக்களுக்கு அநீதி இழைத்தான் என்று கூச்சலிடும் சங்கிகள் ஏன் தாழ்த்தப் பட்டோர், பழங்குடியினருக்கு சமயுரிமை கொடுக்கவில்லை என்று சிந்தித்து அதற்கு பரிகாரம் தேட வேண்டியது தானே!
4) அடிமைத் தனத்திற்கும், பெண் குழந்தை உயிருடன் புதைக்கும் பழக்கத்திற்கு சாவு மணியடித்த மார்க்கம்.
5) உலகைப் படைத்து அதில் மனிதனை புனிதனாக வளம் வரச் செய்ய அருளப்பட்ட அல் குரானையும், வரலாறு சொல்லும் இறுதி நபியையும் மனித குலத்திற்கு அர்ப்பணித்த மார்க்கம்.
6) வழிபாட்டில் அமைதியினை வலியுறுத்தும் மார்க்கம்.
7) முஸ்லிம் மன்னர்கள், தளபதிகள் போரில் வெற்றியடைந்தால் தோல்வியுற்ற மன்னர்கள், மக்களை கண்ணியத்துடனும், பிராணிகள்,பொருள்கள், நீர் நிலைகள், தானிய பயிர்கள் நாசம் செய்யாமலும், வயதான பெண்டிர், சிறுவருக்கு துன்பம் வராமலும் காக்க வேண்டும் என்று கட்டளையிட்டு, அடுத்தவர் மதத்திற்கு பங்கம் வராமலும், வழிபாட்டு தளங்களை நாசம் செய்யாமலும் இருக்க அறிவுறுத்திய மார்க்கம் இஸ்லாம் என்று வரலாற்று பேராசிரியர்கள் சொல்ல நாம் அறியவில்லையா?
8) கற்பொழுக்கம், கண்ணியம் காப்பதும் மிகவும் முக்கியமாக கருதிய மார்க்கம் தானே இஸ்லாம்.
9) சகாத், ஸதகா என்று மனிதரை ஈகைக் குணம் சுரக்கச் செய்தது இஸ்லாம் தானே.
10) மன்னர்கள் வெற்றி பெற்று அங்குள்ள மக்களை பாதுகாக்கவும் கடமையான ஜெசியா வரியினை நிறைவேற்றியதும் இஸ்லாமிய மார்க்கம் தானே.
ஆகவே சுல்தான் என்று பெயர் வைத்ததும் பொங்கி எழும் சங்கிகள் இஸ்லாமிய வரலாற்றினை திருப்பிப் பார்க்கவேண்டும். தங்களுடைய ஆர்ப்பாட்டம் மூலம் இஸ்லாமிய வரலாற்றியனை யாரும் மறைக்க முடியாது அதன் வளர்ச்சியையும் எப்படி சூரியனை இரு கைகளால் மறைக்கமுடியாதோ அதேபோன்று யாரும் தடுத்துவிட தரணியில் முடியாது. இதனை உரக்க சொல்லவேண்டுவோமா?
– Dr.A.P.முஹம்மது அலி