பாபரை அழித்தலும் – பாபர் உருவாக்குதலும்!
Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
மத்திய ஆசியாவான ஆப்கானிஸ்தான், ஈரான்,மெசபோடோமியா, அனடோலியா, காகசஸ் நாடுகளை ஆட்சி செய்த தைமூர் வம்சாவழி வந்த அரசரும், பர்கானா நாட்டின் அரசருமான பாபர் வட இந்தியா மீது 1526 ஆம் ஆண்டு படையெடுத்தார் என்பது அனைவருக்கும் தெரியும்.
மெஜாரிட்டி ஹிந்து மக்களைக் கொண்ட இந்தயாவில் பல மன்னர்கள் ஆண்டு, தேசம் என்ற ஒரு கட்டுக் கோப்பு இல்லாதிருந்தது. அதற்கு அடித்தளம் பாபர் படையெடுப்பு மூலம் அமையப் பட்டது என்றால் மிகையாகாது.
பாபர் அடிக்கல் நாட்டிய முகலாய ஆட்சி ஆங்கிலேயர்களால் முதலாம் சிப்பாய் கலகம் 1857 இல் ஏற்பட்டு, அந்தக் கலவரத்திற்கு முஸ்லிம்கள்தான் காரணம் என்று 1857 ஆம் ஆண்டே முகலாய சாம்ராஜ்யம் கலைக்கப் பட்டது ஒரு நீண்ட கதை தான்!
வட கிழக்கு மாநிலமான உத்தர் பிரதேசத்தில் அயோத்யா என்ற இடத்தில் 1527 பாபரால் ஜேசுக் பாரம்பரிய கட்டிட கலை நுணுக்கத்தில் உள் பகுதி வண்ணங்களால் அழங்கரிக்கப்பட்டு கட்டப்பட்ட பள்ளிவாசலே பாபரி மஸ்ஜித் ஆகும்.
அந்தப் பள்ளிவாசலுக்கு பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தில் கூட ஆபத்து வரவில்லை.
ஆனால் சுதந்திர இந்தியாவில் பாபர் கட்டிய அயோத்தி பள்ளிவாசல் மட்டும் ஹிந்து நாட்டில் முஸ்லிம்கள் முதல் முதல் ஆட்சி செய்த பாபரின் பெயரைத் தாங்கி இருந்ததால் அது அவமானச் சின்னம் என்று சொல்லி காவிக் கரசேவகர்களால் 1992 டிசெம்பர் ஆறாம் தேதி இடிக்கப்பட்டு மெஜாரிட்டி சமூகத்தினரின் சிலரால் மத ஒற்றுமை, சகிப்புத் தன்மைக்கு குந்தகம் ஏற்படுத்திய அவமானச் சின்னமாக இன்றுவரை அது கட்டப் படாமலே இருந்து வருகிறது.
ஆனால் வல்ல அல்லாஹ் செயலால் இன்று அந்த உத்திரப் பிரதேச மாநிலத்தில் மொத்த ஜனத் தொகையில் முஸ்லிம்கள் 25 சதவீதம் இருப்பதோடு மட்டுமல்லாமல், பி.ஜே.பி கட்சியினை வெக்கி தலைகுனியும் அளவிற்கு அந்த அயோத்யா உள்ளடக்கிய சட்ட மன்ற தொகுதியில் அந்தக் கட்சி தோற்கடிக்கப் பட்டதோடு, ஒட்டு மொத்த 25 சதவீத முஸ்லிம் வோட்டும், பாபரி மஸ்ஜித் இடித்த கட்சிக்கும் இல்லை, இடிப்பதினை வேடிக்கைப் பார்த்த மத்தியில் இருந்த கட்சிக்கும் இல்லை. மாறாக ஒரு நேரத்தில் கர சேவுகர்களை அயோத்தி மஸ்ஜித் பக்கமே விடாமல் துப்பாக்கிச் சூடு நடத்தி தடுத்து நிறுத்திய கட்சியான முலாயம் கட்சிக்கு ஆதரவாக இருந்துள்ளனர் என்பதினை பார்க்கும்போது இனியும் இஸ்லாமியர் சமூகம் வெறும் வோட்டு வங்கியாக மட்டுமில்லாது, ஆட்சியினை மாற்றிவிடும் கட்சியாக உருவாகுவது திண்ணமே!
பாபர் இறந்து 600 ஆண்டுகளுக்குப் பின்பு இந்திய நாட்டின் மக்களை 17 வயதில் வென்றிருக்கும் ஒரு பாபர் உண்மைக் கதையினை உங்களுக்குச் சொல்ல ஆசைப் படுகிறேன். மேற்கு வங்கம் மாநிலம் முர்ஷிதாபாத் என்ற இடத்தில் வறுமையில் பிறந்த பாபர் இன்று பி.பி.சி.யின், ‘உலகின் மிக இளைமையான தலைமை ஆசிரியர்’ விருதையும், சி,என்,என். பத்திரிக்கையின், ‘உண்மையான ஹீரோ’ என்ற விருதையும், என்.டி.ட்டிவியின், ‘இந்த வருடம் போற்றக்கூடிய இந்தியன்’ என்ற பட்டத்தையும், காட்பிரே பிலிப்ஸ், ‘இந்த வருட வீர செயல் புரிந்தவர்’ என்ற பட்டத்தையும் வழங்கி பெருமைப் பட்டுள்ளது.
நீங்கள் என்னிடம் அவர் அப்படி என்ன சாதனை புறிந்தார் என்று கேட்க ஆவலாக இருக்கும்.
பாபர் ஒன்பது வயது சிறுவனாக இருக்கும்போது பத்து கிலோமீட்டர் தொலைவிலுள்ள பள்ளிக் கூடத்திற்கு நடந்தே சென்று பாடம் படிப்பாராம். அப்படிச் செல்லும்போது கிராம சாலை இரு புறங்களிலும் சிறுவர்கள் பள்ளிக் கூடம் செல்லாது விளையாடிக் கொண்டும், வீட்டு வேலை செய்து கொண்டும், கூலிக்கு வேலை செய்வதினைப் பார்த்தும் மனம் வெம்பிப் போவாராம். மனம் வருந்துவதோடு விட்டுவிடாமல், சிறு வயதிலேயே பள்ளிக் கூடம் செல்லாத சிறுவர்களுக்கு, ‘யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகமே’ என்பதிற்கு இணங்க பாடங்கள் எடுப்பாராம். அவருக்குத் துணையாக அவருடைய சகோதரி ஆமினா, நண்பர்கள் சும்கி மற்றும் சம்சுதீன் ஆகியோர் இருந்திருக்கிறார்கள். சிறுதுளி பெரு வெள்ளம் போல இன்று அவர் ஆரம்பித்த பள்ளியில் 800 மாணவர்கள் உள்ளனராம். அவர் பள்ளியான ‘ஆனந்த சிக்ஷா நிகேதன்’ பள்ளிக்கு அங்கீகாரம் கிடைக்க கடும் முயற்சி எடுத்து வெற்றி கொண்டுள்ளார். அங்கு ஆசிரியர்கள் இல்லையாம். அனைத்து மாணவர்களுமே ஆசிரியர்களாக உள்ளார்களாம்.
ஆகவே தான் பாபருக்கு அணைத்து இந்திய ஊடகங்களும், ஆங்கிலேய ஊடகமான பி.பி.சியும் விருதுகள் வழங்கி கவுரவிக்கின்றது.
பாபர் தனது பேட்டியில், ‘இந்தியாவில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி கொடுப்பதிற்காக தன்னுடைய பள்ளியின் மாடலே சிறந்தது என்கிறார். அத்தோடு இளைஞர் உள்ளத்தில் ஒரு நம்பிக்கை ஊட்டுவதே தன்னுடைய தலையாய கடமையாகவும்’ கூறுகிறார்.
மேற்கு வங்க மாநில 17 வயதான பாபர் சாதனை மூலம் கீழ்க்கண்ட பாடங்கள் இந்தியர் ஒவ்வொருவரும் குறிப்பாக சமுதாய மக்கள் கற்றுக் கொள்வது என்னெவென்றால்:
1) இஸ்லாமியர் சமூகத்தினை இந்தியாவில் முன்னேற்றத்தான் பாடு படுகிறார்கள், ஆனால் சிலர், முஸ்லிம்கள் வேறு கண்டத்தில் இருந்து கீழே குதித்தவர் என்பது போல செயல் பட்டு பாபரி மஸ்ஜித் இடிப்பது போன்ற அழிவினை ஏற்படுத்தி வருகின்றனர்.
2) சமுதாய இளைஞர்கள் தாங்கள் படித்து நல்ல நிலையில் இருந்தால் போதும், தன் பக்கத்து வீட்டார் என்ன பாடுபட்டாலும் பரவாயில்லை என்ற பட்டும் படாத நிலையிலிருந்து மாறு பட்டு, தனது சொந்த சமுதாயம், ஊர் முன்னேற தன்னால் ஆன சிறு உதவி செய்ய வேண்டும் என்ற மன நிலை வேண்டும்.
3) கல்விக்கு முக்கியம் கொடுத்து பிள்ளைகளை, குறிப்பாக பெண்பிள்ளைகளை குறைந்தளவு உயர்நிலைப் பள்ளியிலாவது படித்து முடிக்கச் சொல்ல வேண்டும்.
4) நூலகங்கள் ஒவ்வொரு கிராமத்திலும் ஏற்படுத்தி தாங்கள் படித்தப் புத்தகம், குறைந்தளவு ஒரு பத்திரிக்கை, புத்தகத்திற்கு சந்தா கட்ட முன் வரவேண்டும்.
5) இலவச கணினி கல்வி, முதியோர் கல்வி நிலையங்கள் தோன்ற வேண்டும்.
6) இளைஞர்கள் எந்த சூழலிலும் வாழ்கையின் மீது உள்ள நம்பிக்கையினை இழக்ககூடாது. எதிர் நீச்சல் போட கற்றுக் கொள்ள வேண்டும்.
7) பாபர் செய்த சாதனைபோல சமூதாய இளைஞர்கள் செய்து, பாபரி பள்ளியினை இடித்தவர் வெட்கி தலை குனிய செய்ய வேண்டும்.
source: http://mdaliips.blogspot.in/