தமிழகத்தில் மொத்த பள்ளிவாசல்கள், ஆலிம்கள் எண்ணிக்கை எவ்வளவு?
செய்யது அஹமது அலி. பாகவி
தமிழகத்தின் மொத்தம் எத்தனை பள்ளிவாசல்கள் இருக்கின்றன..? என்கிற ஒரு ஆலிமின் ஃபேஸ்புக் கேள்விக்கு ஓர் தப்லீக் சாத்தி எங்களிடம் சரியான கணக்கு இருக்கிறது. அந்த கணக்கின்படி சுமார் 5,000 பள்ளிவாசல்கள் என்று கூற, இந்த ஆலிமோ சுமாராக 15ஆயிரம் பள்ளிவாசல்கள் நிச்சயம் இருக்கும் என்றும் பேசிக்கொண்டார்கள்.
(தப்லீக் ஜமாஅத்தின் கணக்கெடுப்பின் படி 5,000 பள்ளிவாசல் என்பது சரிதான். காரணம் அவர்கள் மூன்று நாள், நாற்பது நாள் ஜமாத் செல்வதற்கு அவர்கள் கணக்கெடுத்து வைத்துள்ள வசதியான பள்ளிவாசல்களின் எண்ணிக்கை என்று பார்த்தால் அது ஐந்தாயிரம் மட்டும்தான் வரும்)
ஆக, அந்த நண்பரின் ஃபேஸ் புக் பதிவிற்கு நிறைய ஆலிம்கள் தங்களின் கருத்தையும், தங்களுக்கு தெரிந்த கணக்கெடுப்பையும் கூறியிருந்தார்கள்.
உண்மை நிலவரம் என்னவென்றால்…
தமிழகத்தின் சிறுபான்மை ஆணையத்தின் தலைவர் பிரகாஷ் அவர்கள் கடந்த ஜூலை மாதம் ஓர் பேட்டியில் ரமலான் கஞ்சிக்காக 4,300 டன் அரிசி தமிழகத்தின் 28,000 பள்ளிவாசலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என கூறினார்.
அப்படியானால் தமிழகத்தில் 28,000-த்தில் இருந்து கூடுதலாக ஒரு நூறோ இருநூறோ இருக்க வாய்ப்புள்ளது. (காரணம் அரிசி வாங்காத சில பள்ளிவாசல்கள் உண்டு)
ஆக அரசின் கணக்கெடுப்பின் படி தமிழகத்தின் மொத்த பள்ளிவாசல்கள் எண்ணிக்கை தோராயமாக 28,000 ஆகும்.
ஆனால் பள்ளிவாசல் 28,000 என்றால் இமாம்களின் எண்ணிக்கை, இதுபோக முதற்றிஸ், உஸ்தாதமார்களை எல்லாம் கணக்கிட்டால் தமிழக உலமாக்களின் எண்ணிக்கை 28,000 ஐ தாண்ட வேண்டும்!
ஆனால் வேதனையான செய்தி நம் ஜமாத்துல் உலமா சபையின் கணக்கெடுப்பின் படி தமிழகத்தின் மொத்த ஆலிம்களின் எண்ணிக்கை 9570 மட்டுமே!
இந்த எண்ணிக்கையே. கடந்த செப்டம்பர் 2017 திருச்சியில் நடைபெற்ற மாநில சபை தேர்தலில் போது வட்டார,மாவட்ட ரீதியாக கணக்கு எடுத்து பத்து நபருக்கு ஒரு ஒட்டு என்கிற ரீதியில் தேர்தலில் மொத்த ஆலிம் வாக்காளர் எண்ணிக்கை 957. (அதில் கலந்து கொண்டவர்கள் 868 என்பது வேறு விஷயம்)
ஆக அரசின் கணக்கெடுப்பின் படி 28,000 பள்ளிவாசல்கள்!
உலமாசபையின் கணக்கெடுப்பின் படி வெறும் 9570 உலமாக்கள்!!
பீஹார் இமாம்கள் உண்டே..? என்று வாதிட்டால் 9570 க்கும் 28,000 நிறைய தூரம் உண்டு என்பதை விளங்கவும்.
ஆக இதில் சரியான கணக்கெடுப்பின்றி கவனக்குறைவாக இருப்பது நம் சமூகமே ..
வரும் காலங்கள் மோசமானவை .. எதற்கும் சரியான கணக்கெடுப்பு தேவை ..
தன்னைப்பற்றி கூட சரியான புள்ளி விவரம் கூட தெரியாத ஓர் சமூகம் உண்டென்றால் நம் முஸ்லிம் சமூகமும் , அதற்கு தலைமை தாங்கும் நம் ஆலிம் சமூகமும் தான்…
மாநில சபை ஆய்வரங்கம் நடத்துவதில் கவனம் செலுத்துவது போல தமிழக உலமாக்களின் எண்ணிக்கை கணக்கெடுப்பில் ஓர் ஆய்வு நடத்த வேண்டியது காலத்தின் கட்டாயம் …?
– செய்யது அஹமது அலி. பாகவி