துயரத்தை அழித்தொழிக்கும் தொழுகை
மனதில் கவலை ஏற்படும் போது
நண்பணிடம் புலம்புவதை விட
பேஸ்புக்கில் ஸ்டேடஸ் போட்டு
புலம்புவதை விட
தனிமையில் புழுங்குவதை விட
ஒளு செய்து இரண்டு ரக்அத் தொழுது
இறைவனிடம் கையேந்தி குறைகளை சொல்லி
நிறைகளை தரச் சொல்லிக் கேட்டு
துஆ செய்ய்யும் போது மனது இலேசாகி விடுமே!
உண்மையிலேயே குறைகளை களைபவனும்
நிறைகளை தருபவனும் அவன் தான்
தொழுகை! தொழுகை!
அச்சம் உன்னைச் சூழ்ந்தால்.
கவலை உன்னை வாட்டினால்.
துன்பம் உன்னை துரத்தினால்.
விரைந்து இறைவனை தொழு.
உனது ஆன்மா புத்துணர்வு பெறும்.
மனம் அமைதி பெறும்
உனது துக்கத்தை
துயரத்தை அழித்தொழிக்கும்
கவலையை வடு தெரியாமல் விரட்டும்.
– வலையுகம் ஹைதர் அலி