ربنا آتنا في الدنيا حَسنة وفي الآخرة حَسنة
இம்மையின் நன்மை
அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் இவ்வுலகில் அதிகம் கேட்ட இன்னும் நம்மை கேட்க சொன்ன ஒரு துஆ தான்,
رَبَّنَآ اٰتِنَا فِى الدُّنْيَا حَسَنَةً وَّفِى الْاٰخِرَةِ
حَسَنَةً وَّ قِنَا عَذَابَ النَّارِ
எங்களுக்கு நீ இம்மையிலும் நன்மை அளிப்பாயாக! மறுமையிலும் நன்மையளிப்பாயாக! (நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் எங்களை நீ பாதுகாப்பாயாக!” எனக் கோருபவர்களும் மனிதர்களில் உண்டு. (2:201)
அல்லாஹ்விடத்தில் நாம் இரு கரங்களேந்தி, என்ன தான் ஒரு மனிதன் தீமைகள் செய்திருந்தாலும் இறைவனிடத்தில் அதற்கான பாவமன்னிப்பை தான் கேட்க வேண்டுமே தவிர அதற்கான தண்டனையை கேட்க கூடாது.
அண்ணலாரின் கண்டிப்பு :
ஒருவர் அல்லாஹ்விடத்தில் அவர் செய்த தீமைக்கான தண்டனையை இந்த உலகிலேயே கேட்ட செய்தி அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்க்ளின் திருச்சபையை ஏத்தியபோது, நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் கடிந்து கொண்டார்கள்.
حدثنا الحسن بن يحيى، قال أخبرنا عبد الرازق، قال: أخبرنا معمر، عن قتادة في قوله: ” رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الآخِرَةِ حَسَنَةً”، قال: في الدنيا عافيةً، وفي الآخرة عافية. قال قتادة: وقال رجل: ” اللهم ما كنتَ معاقبي به في الآخرة فعجِّله لي في الدنيا “، فمرض مرضًا حتى أضنى على فراشه، (113) فذكر للنبي صلى الله عليه وسلم شأنُه، فأتاه النبي عليه السلام، فقيل له: إنه دعا بكذا وكذا، فقال النبي صلى الله عليه وسلم: إنه لا طاقة لأحد بعقوبه الله، ولكن قُل: ” ربنا آتنا في الدنيا حَسنة وفي الآخرة حَسنة وقنا عَذاب النار “
பின்பு இப்படி தான் துஆ கேட்க வேண்டும் என்று இந்த துஆ வை சொல்லி கொடுத்தார்கள்.
மற்றுமொரு சம்பவம் :
حدثني المثنى، قال: حدثنا سعيد بن الحكم، قال: أخبرنا يحيى بن أيوب، قال: حدثني حميد، قال: سمعت أنس بن مالك يقول: عاد رَسول الله صلى الله عليه وسلم رجلا قد صار مثل الفرْخ المنتوف، فقال رسول الله صلى الله عليه وسلم: هل كنت تدعو الله بشيء؟- أو تسأل الله شيئًا؟ قال: قلت: ” اللهم ما كنت مُعاقبي به في الآخرة فعاقبني به في الدنيا!”. قال: سبحان الله! هل يستطيع ذلك أحد أو يطيقه؟ فهلا قلت: ” اللهم آتنا في الدنيا حَسنة وفي الآخرة حَسنةً وقنا عذاب النار؟”
பொதுவாகவே கேட்பவர் கேட்கப்படுபவரின் தரத்தை எடைபோட்டு தான் தன்னுடைய தேவையை கேட்ப்பார். இப்படி அனைத்திற்கும் அதிபதியான ஏக இறைவன் அல்லாஹ்விடத்தில் நாம் நம் தேவைகளை கேட்கும்பொழுதும், மிக சிறந்ததை தான் கேட்க வேண்டும் என்று நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் கற்றுக்கொடுத்திருக்கின்றார்கள்.
எனவே ஒரு போதும் நாம் செய்த தீமைகளுக்கு இறைவனித்தில் தண்டனையை கேட்க கூடாது, அதற்கான பாவமன்னிப்பை தான் கேட்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்,
எது இம்மையின் நன்மை ?
இம்மை வாழ்வை பொறுத்தவரை அது தான் மறுமையின் விளைநிலம். இங்கு விதைப்பதை தான் நாம் அங்கு பெற்றுக்கொள்வோம்.
அதனால் இங்கு அந்த நன்மையான காரியங்களை செய்யும் பாக்கியம் கிடைப்பது தான் இந்த இம்மையின் நன்மை.
حدثنا القاسم، قال: حدثنا الحسين، قال: حدثنا عباد، عن هشام بن حسان، عن الحسن: ” ومنهم من يقول رَبنا آتنا في الدنيا حَسنة وفي الآخرة حَسنة “، قال: الحسنة في الدنيا: العلمُ والعبادةُ،
அதனை தான் இந்த வசனத்திற்கு விளக்கமாக திருமறையின் விரிவுரையாளர்கள்,
இந்த உலகின் நன்மை என்பது, கல்வி ஞானமும், வணக்க வழிபாடும் ஆகும் என்றார்கள்.
ஹழ்ரத் சுபியானுஸ்ஸ்ஸவ்ரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள், கல்வி ஞானம் & வணக்க வழிபாடு அதனுடன், தூயமையான ரிஸ்க் என்றார்கள்.
حدثني يونس، قال: أخبرنا ابن وهب، قال: سمعت سفيان الثوري يقول[في] هذه الآية: ” ربنا آتنا في الدنيا حَسنة وفي الآخرة حَسنة “، قال: الحسنة في الدنيا: العلمُ والرزق الطيب
இன்னமும் ஒரு சிலர் இந்த உலகின் நன்மை என்பது, ஆபிய்யத் ஆன வாழ்வு என்று சொல்கின்றார்கள். இந்த ஒரே வார்த்தையில் அனைத்தும் அடங்கிவிடும். இந்த உலகின் செழிப்பான வாழ்வு எனலாம்.
ஒருவர் தன்னுடைய வாழ்வில் அல்லாஹிவிடத்தில் எப்போதும் கேட்பதற்கு ஒரு சிறந்த துஆ என்றல் இந்த துஆ தான்.
இதனை தான் ஸஹாபா பெருமக்களும் தங்களுடைய வாழ்வில் தாங்களும் கேட்டு பிறரையும் கேட்குமாறு சொல்லி கொடுத்தார்கள்.
وروى ابن أبى حاتم عن عبد السلام بن شداد قال: كنت عند أنس بن مالك فقال له ثابت: إن إخوانك يحبون أن تدعو لهم. فقال: அاللهم آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النارஞ وتحدثوا حتى إذا أرادوا القيام قال: يا أبا حمزة إن إخوانك يريدون القيام فادع الله لهم فقال: أتريدون أن أشقق لكم الأمور!! إذا آتاكم الله في الدنيا حسنة وفي الآخرة حسنة ووقاكم عذاب النار فقد آتاكم الخير كله .
அல்லாஹ் நமக்கு இம்மையின் நன்மையையும், மறுமையின் நன்மையையும் நிறைவாக அடையும் பாக்கியத்தை தருவானாக. ஆமீன்.