அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹில்லம் அவர்களே பொறாமைப்படும் நபர்..
மிகவும் சுமை குறைந்த முஃமின்,
தொழுகையில் பெரும் பங்கு பெற்றவர்,
தனது இரட்சகனை சிறந்த முறையில் வணங்கக்கூடியவர்,
தனிமையிலும் அல்லாஹ்வை வழிபடுபவர்,
மக்களிடம் பிரபலமில்லாமல் இருப்பவர்,
அவரை நோக்கி விரல்களால் சுட்டிக்காட்டப்படாதவர்,
போதுமான அளவே தன் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளக் கூடியவர்,
மேலும் அதன் மீது பொறுமையுடன் வாழ்க்கையைக் கழிப்பவர்.
பிறகு,
ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது கையால் விரைவாகச் செயல்படுத்த சுண்டுவதுபோல் சுண்டினார்கள்.
பிறகு,
“அவருக்கு மரணம் விரைவில் வந்துவிட, அவருக்காக அழக்கூடிய பெண்களும் மிகக்குறைவு.
அவர் விட்டுச்சென்ற வாரிசுச் சொத்தும் மிகக் குறைவு.
இப்படிப்பட்டவரே என் நண்பர்களில் நான் அதிகம் பொறாமைப்படத் தக்கவர்”
என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக
நபித்தோழர் அபூ உமாமா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்.
(நூல்: திர்மிதீ)