“பில்கிஸ் பானுவுக்கு இழப்பீடாக குஜராத் அரசு ரூ. 50 லட்சம் வழங்க வேண்டும்” சுப்ரீம் கோர்ட் உத்தரவு!
யார் இந்த பில்கீஸ் பானு..?
முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட மிக பெரிய அநியாயங்களில் இதுவும் ஒன்று.
பில்கிஸ் பானு மீது நடத்தப்பட்ட கூட்டு வன்புணர்விற்கு இழப்பீடாக குஜராத் அரசு ரூ. 50 லட்சம் வழங்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
அத்துடன் தனது விருப்பத்தின் பேரில் வேலை மற்றும் இட வசதி வழங்குவதற்கும் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2002 ஆம் ஆண்டு குஜராத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இனவெறித் தாக்குதலில் குழந்தைகள் சிறுவர்கள் உட்பட 2000த்திற்கும் அதிகமான முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.
பெண்கள் கற்பழிக்கப்பட்டும் முஸ்லிம்களின் உடைமைகள் சேதப்படுத்தப்பட்டும் அவர்கள் தங்களின் வீடுகளில் இருந்து விரட்டியும் அடிக்கப்பட்டனர்.
பில்கிஸ் பானுவின் குழந்தையை பாறையில் தூக்கி எரிந்து கொலை செய்த அந்த கும்பல் அவரையும் கூட்டாக கற்பழித்தது. மேலும் அவரது 2 வயது குழந்தை உட்பட அவரது குடும்ப உறுப்பினர்கள் 14 பேர் கொல்லப்பட்டனர்.
“முஸ்லிம்கள் இங்கிருக்கிறார்கள், அவர்களை கொல்லுங்கள், அவர்களை கொல்லுங்கள்” என்ற கொலைவெறியூட்டும் வார்த்தை இன்னமும் நம் காதில் ஒலித்து கொண்டிருக்கிறது.
இந்த வன்புணர்வு தொடர்பாக விசாரிக்க குஜராத் போலீஸ் மறுத்துவிட்ட நிலையில் இவ்வழக்கை
“(காவல்துறையினர்) பில்கிஸ் பானுவின் வாயை அடைத்து அவரது நீதிக்கான அழுகுரலை யார் காதிலும் விழாமல் பார்த்துக் கொண்டுள்ளனர்” என்று நீதிமன்றம் கூறியது.
பில்கீஸ் பானு மனித உரிமைகள் ஆணையத்தை அணுகினார். இதனை அடுத்து இவ்வழக்கில் 6 போலீஸ் உட்பட 19 பேர் மீது வழக்கு தொடுக்கப் பட்டது. அதில் 11 பேருக்கு ஆயுள் தண்டனை கிடைத்தது.
இந்நிலையில் பில்கீஸ் பானுவின் இழப்பீடு தொடர்பான மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் குஜராத் அரசு நான்கு வாரங்களுக்குள் பல்கீஸ் பானு வழக்கு தொடர்பான விவரங்களை அளிக்க உத்தரவிட்டது.
இழப்பீடு வழங்க உத்தரவு :
2002 ம் ஆண்டு குஜராத் கலவரத்தின்போது பாலியல் பலாத்கார கொடுமைக்குள்ளாக்கப்பட்ட பில்கிஸ் பானுவிற்கு குஜராத் அரசு 50 லட்சம் இழப்பீடு, வேலை வாய்ப்பு, விடுதி ஆகியவற்றை வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் கூறுகையில், உங்கள் அரசாங்கத்திற்கு எதிராக எதையும் நாங்கள் கவனிக்கவில்லை என்பது உங்கள் அதிர்ஷ்டமென்று நினைக்கிறேன் என மாநில அரசு ஆலோசகர் ஹெமடிகா வஹீவிடம் கூறினார்.
2002 கலவரத்தில் பில்கிஸ் பானுவை 11 பேர் கொண்ட குழு கூட்டு பலாத்காரம் செய்தது. அன்றைய தினத்தில் 19 வயதான பல்கிஸ் ஒரு கர்ப்பிணியாக இருந்தார். அஹமதாபாத் அருகில் 14 கொலை செய்யப்பட்டனர். கடந்த மாதம், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பாம்பே உயர் நீதிமன்றம் காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க குஜராத் அரசு உத்தரவிட்டது.
ஏற்கனவே குஜராத் அரசு வழங்கிய 5 லட்ச ரூபாய் இழப்பீட்டை ஏற்க மறுத்துவிட்டார். ஏப்ரல் 23 ம் தேதி பில்கிஸ் பானுவின் இழப்பீட்டுத் தொகைக்கான வேண்டுகோளை கேட்கும் என அந்த அமர்வு கூறியது.
2017,ஜூலை மாதம் உயர்நீதிமன்றம் தீர்ப்பிற்கு எதிராக இரண்டு மருத்துவர்கள் மற்றும் நான்கு போலீசார் முறையிட்டதை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. “உங்களுக்கு எதிரான தெளிவான சான்றுகள் இருந்தபோதிலும் நீங்கள் எல்லோரும் நியாயமற்ற முறையில் விடுதலை செய்யப்பட்டுள்ளீர்கள் என்று உச்ச நீதிமன்றம் குற்றவாளிகளிடம் கூறியது.
குழந்தைகள் , முதியவர்கள் என்று பாராமல் அப்பாவி சிறுபான்மை மக்களை கொத்துகொத்தாக கொலை செய்து, கூட்டு கற்பழிப்பு செய்து அவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி இரத்த வெள்ளத்தில் மிதக்க விட்ட இதுபோன்ற வெறிபிடித்த சங்பரிவார அரக்கர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு கொடுத்தால் இறந்துபோனவர்கள் திரும்ப வந்து விடுவார்களா..? மக்களுக்கு முன் பொதுவாக அவர்களை தண்டிக்க வேண்டும். அது இனி தவறு செய்ய நினைக்கும் ஒவ்வொருவரையும் அந்த தண்டனையின் வலி திருந்த வழிவகை செய்யும்.
– Mohamed Siddik
ஆங்கிலத்தில்….
https://thenewleam.com/2019/04/supreme-court-announces-rs-50-lakh-compensation-for-bilkis-banu/