முதன்முதலாக அரசியலில் ஒரு பாகவி
திருக்குர்ஆனை முதன் முதலாகச் செந்தமிழ் மொழியில் தந்தவர் ஆ.கா. அப்துல் ஹமீது பாகவி.
திருக்குர்ஆனுக்கு முதன்முதலாக முழுமையாகத் தமிழில் விரிவுரை எழுதியவர் எஸ்.எஸ். முஹம்மது அப்துல் காதிர் பாகவி (உத்தமபாளையம்).
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் பா வடிவில் முதன் முதலாகத் தந்தவர் சிராஜுத்தீன் பாகவி.
உலகப் புகழ் வாய்ந்த திருக்குர்ஆன் விரிவுரையான தஃப்சீர் இப்னு கஸீர்-ஐச் செந்தமிழில் முதன் முதலாக வெளிக்கொணர்ந்தவர் அ. முஹம்மது கான் பாகவி (குழுவினர்).
கடல் கடந்தும், முதன் முதலாகத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தைக் குவைத்தில் அமைத்து, ஆயிரக்கணக்கான தமிழர்கள் பயன்பெறத்தக்க வகையில் சேவையாற்றுபவர் அ.பா. கலீல் அஹ்மது பாகவி (பரங்கிப்பேட்டை).
இப்படி, ‘முதன் முதலாக’ எனும் வரிசையில் எண்ணற்ற பாகவிகள் தன்னலம் கருதாமல் சேவையாற்றியோரும், சேவையாற்றுவோரும் உண்டு என்பதைச் சமுதாய மக்கள் அறிவர்.
அந்த வரிசையில் முதன் முதலாக, நாடாளுமன்றத் தேர்தலில் அல்லாஹ்வின் அருளால் வெற்றிபெற்று, ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களுக்காக ஓங்கிக் குரல்கொடுக்க, ஓய்வறியா உழைப்பாளி, சமுதாயப் போராளி இதோ வருகிறார் சேக் முஹம்மது தெஹ்லான் பாகவி.
– முனைவர் நூ. அப்துல் ஹாதி பாகவி, மணலி, சென்னை-68
தஹ்லான் பாகவி அவர்கள் பற்றி மார்க்கப் பேரறிஞர், முஹம்மது கான் பாகவி அவர்கள்…
நாங்கள் வசிப்பது மத்திய சென்னை தொகுதியில். அங்கு வேட்பாளராக நிற்பவர் என் மாணவர் மெளலவி தஹ்லான் பாகவி அவர்கள்.
o நான் அறிய அவர் தங்கமான பிள்ளை. திறமையான மார்க்க அறிஞர்.
o சமூக முன்னேற்றத்தில் அக்கறை கொண்டவர்.
o தம் வாழ்வை சமுதாயத்திற்காக அர்ப்பணித்துக்கொண்ட எளிய மனிதர்.
o எங்களுக்கெல்லாம் தாய்க்கல்லூரியாக விளங்கும் பாகியாத்தின் செல்வர்.
o ஆரம்பத்திலேயே என் இல்லம் வந்து வெற்றிக்காக துஆ செய்யுமாறு அன்புடன் வேண்டிக்கொண்டவர்.
o அரசியல்வாதிகளிடம் அதிகமாகக் காணப்படும் கறை படியாதவர்.
நன்றி: முனைவர் நூ. அப்துல் ஹாதி பாகவி, மணலி, சென்னை-68