திருமணம் முடித்த பெண்ணின் வாலிபத்தை வீணாக்கி, வாழாத வாழ்க்கையை கடந்து செல்வது சரிதானா?
மணமுடித்தபின் மணமகளுடன் சேர்ந்து வாழவேண்டிய காலத்தில் வெளிநாடு சென்று பல ஆண்டுகள் வாலிப வயதை இழந்துவிட்டு, ஊரில் திருமணம் முடித்த பெண்ணின் வாலிபத்தையும் வீணாக்கி, வாழாத வாழ்க்கையை கடந்து செல்வது சரிதானா? இதற்கான தீர்வு தான் என்ன?
இதோ மணமுடித்த சில பெண்களின் புலம்பலைக் கேளுங்கள்…
1) 31 வயதுடைய ஒரு பெண்ணின் குரல்; திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகி விட்டன, ஆனால் நான் என் கணவருடன் 5 மாதம் மட்டுமே வாழ்ந்துள்ளேன்.
2) இன்னொரு பெண் சொல்கிறார்; என் தந்தை, என் சகோதரன், என் கணவர் என அனைவரும் வெளிநாட்டில் உள்ளனர், தீடிரென மருத்துவம் தொடர்பான பிரச்சினை மற்றும் நல்லது கெட்டது என்றால் தனியாக இருப்பதால் எனக்கு என்ன செய்வது என்று தெரியாமல் தற்கொலை செய்வதற்கும் மனம் துணிந்து விடுமோ என அஞ்சுகிறேன்.
3) அடுத்து இன்னொரு பெண்; இதற்கு என் பெற்றோர் திருமணம் செய்து வைக்காமலேயே இருந்திருக்கலாம் என பெற்றோர் மீதும், கணவர் மீதும் வெறுப்பு.
4) அடுத்த பெண்; என் கணவர் வெளிநாட்டில் இருப்பதால் பிறந்த வீட்டிலும், புகுந்த வீட்டிலும் என்னை வேலைக்காரியாக பயன்படுத்தி கொள்கிறார்கள்.
5) இன்னொரு பெண்; என் கணவர் வெளிநாட்டில் இருந்தும் அவருடைய மாத வருமானம் 20,000 மட்டுமே கையில் மிஞ்சுவது 3000 மட்டுமே
6) மற்றோர் பெண்; நான் நரகத்தில் இருக்கிறது போல் இருக்கிறது. (இதைவிட கொடுமையான வார்த்தை இருக்கமுடியுமா எனத் தெரியவில்லை)
7) இன்னொரு பெண்; என் கணவர் ஊரில் இருந்து 8000 ரூபாய் சம்பாதித்தாலே நான் மிகவும் சந்தோஷாமாக இருப்பேன். ஆனால் என் கணவர் வெளிநாட்டில் இருப்பது ஒவ்வொரு நொடியும் மிகுந்த தீராத மனவேதனையை ஏற்படுத்திக்கொண்டே இருக்கிறது,
8) இது என்னுடைய கேள்வி: மனைவியை விட்டுவிட்டு 3 மாதம் ஜமாத் செல்கிறார் என்று தப்லீக் சகோதரர்களை பார்த்து சொன்ன நாம் 2 ஆண்டுகளுக்கு மேலாக வெளிநாட்டில் பணத்திற்காக செல்கிறோம் என்று சிந்திக்காதது ஏன்? (ஆனால் இறைவனின் அன்பிற்காக சென்றவர்களை பற்றி அவதூறாக பேசினோம்)
சமூகத்தின் பார்வைக்கு சில தீர்வுகள் :
வெளிநாட்டு மாப்பிள்ளைக்கு பெண் கொடுக்க சில நிபந்தனைகள் :
1) திருமணம் ஆனதற்கு பின் வெளிநாடு செல்ல கூடாது.
2) திருமணத்திற்கு பின் ஊரில் தொழில்(business) செய்வதற்கு ஏற்ப தங்களுடைய அறிவுத்திறனையும், பண வளத்தையும் சேமித்து கொள்ள வேண்டும்.
3) மாப்பிள்ளையின் நிலை மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் இருந்தால் திருமணத்திற்கு பின் ஒரு ஆண்டு மட்டுமே வெளிநாட்டில் பணிபுரிய அனுமதி வழங்கப்படும்.
ஆண்களுக்கு ஆலோசனைகள் :
படிக்காத சகோதரர்களுக்கு :
1) படித்தால் மட்டும்தான் ஊரில் செட்டில் ஆக முடியும் என்ற அவநம்பிக்கையை கைவிட வேண்டும்.படிக்காதவர்களே நல்ல நிலைமையில் உள்ளார்கள் என்பதற்கு சான்று பாளையங்கோட்டை சகோதரர்கள்.
2) நம் தாய்மண்ணோடு(சொந்த ஊரிலேயே) தினமும் குட்டிகரணம் போட்டு, உரண்டு பிரண்டு சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையை ஏற்படுத்தி கொள்ள வேண்டும்.
3) எந்த வேலை செய்வதற்கும் கூச்சம் கொள்ள கூடாது.உதாரணத்திற்கு விடியகாலையில் பேப்பர் போடுவது,பால் பாக்கெட் போடுவது,காலை முதல் மாலை வரை கம்பெனியில் வேலை செய்வது, இரவு ஹோட்டலில் வேலை செய்வது என பலதொழில்களை செய்ய வேண்டும்.ஞாயிற்று கிழமையை குடும்பத்திற்காக ஒதுக்க வேண்டும். (பிச்சை எடுப்பதும்,பிறரை ஏமாற்றி பிழைப்பதும்தான் தவறு)
4) சொந்த தொழிலை செய்வதுடன் பல சைடு(side) பிசினஸூம் செய்ய வேண்டும்
5) இறைவன் கொடுத்ததை பொருந்தி வாழும் குணத்தை தனக்கும், தன் குடும்பத்தினருக்கும் ஏற்படுத்த வேண்டும்.
படித்தவர்களுக்கு :
1) அரசு வேலையை அடைய முயலுங்கள். (இறைவன் கொடுத்த மூளையை பயன்படுத்தியே ஆக வேண்டும்)
திருமணத்திற்கு முன் வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு :
1) குடும்பத்திற்கு அதிக பணத்தை அனுப்பி பண ஆசையை காட்டாதீர்கள்.
2) நிச்சயம் செய்த பெண்ணுக்கு அதை அனுப்புகிறேன் இதை அனுப்புகிறேன் என்று அதிக பொருளாதாரத்தை செலவு செய்து ஆரம்பத்திலேயே பண ஆசையை காட்டாதீர்கள்.
இஸ்லாம் கூறுவது..
1) உங்கள் மனைவியரை உங்கள் விலா எலும்பிலிருந்தே படைத்தோம்.(இறைவன் ஆண் மற்றும் பெண் என இரு பாலினமாக படைத்தது இருவரும் இணைந்து வாழ தான் தனித்தனியே பிரிந்து வாழ எதற்கு இரு பாலினம்? )
2) நீங்கள் உங்கள் மனைவிக்கு ஒரு பிடி உணவை ஊட்டினால் அதில் இறைவனின் பொறுத்தத்தை பெற்றுக்கொள்ளலாம்.
3) இம்மையிலும்,மறுமையிலும் நல்ல வாழ்க்கையை கொடு என்று துஆ கேட்க சொல்லும் மார்க்கத்தில் இருந்துவிட்டு வெளிநாட்டில் நமது அனைத்து நேரத்தையும் அடிமையாக தொலைத்துவிட்டு மறுமைக்காகவும் நேரம் ஒதுக்காமல், இவ்வுலகிலும் மனைவி, பிள்ளைகளுடன் வாழாமல் நாசமாகி கொண்டிருக்கிறோம்.
பொதுவாக,
1) வெளிநாட்டிற்கு சென்று வாழ்க்கையையும் தொலைத்து,நோயுடன் வீடு திரும்பி எவ்வளவு பணம் சம்பாதித்தோமோ அதற்கு பல மடங்கு செலவு செய்து முதலில் இருந்த நிலையை விட மேலான வறுமை நிலையையே அடைந்து கொண்டிருக்கிறோம்
2) வாழதான் பிறந்தோம்,பணத்தில் மூழ்க அல்ல.அதிக பணம் வேண்டும்,பணம் இருந்தால்தான் எல்லாம் செய்யமுடியும் என்பதை மாற்ற வேண்டும். நிம்மதியாக வாழ்வதற்கு எவ்வளவு வேண்டுமோ அதை நமதூரிலேயே சம்பாதிக்கலாம்.
குறிப்பு :
1) பெண்கள் மதிக்கப்பட வேண்டும்.பெண் குழந்தே பிறந்தால் நற்செய்தி என்று கூறும் ஒரே வேதம் திருக்குர்ஆன் தான்.வரதட்சனை ஒழிக்கப்பட வேண்டும்.
2) மிகவும் குறிப்பாக பெற்றோர்கள் தமது பெண்களை கணவருடன் சேர்ந்து வாழும்படியாக திருமணம் செய்து கொடுக்கவும், மாப்பிள்ளையை பிரிந்து வாழும் இழிவான வாழ்க்கையை அவர்களுக்கு ஏற்படுத்தி கொடுக்க வேண்டாம்.
3) இந்த பதிவு வெளிநாட்டுவாழ் சகோதரர்களுக்கு எதிரானது அல்ல, அவர்களும் தங்கள் மனைவி,பிள்ளைகளுடன் சேர்ந்து வழ வேண்டும் என்ற எண்ணத்தில் பதிவு செய்தது.
4) காலத்தை மாற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்
5) அனைத்து மார்க்க அறிஞர்களும் தனது ஜூம்ஆ உரைகளில் திருமணத்திற்கு பின் வெளிநாட்டு வாழ்க்கை வேண்டாம் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்
6) பிரிந்து வாழ்வதே ஒரு சில தவறான பாதைக்கு வழி வகுக்கும்,அவ்வாறு தவறான வழியில் செல்லாமல் இருக்கவே திருமணம் என்னும் ஹலாலான முறை.ஆனால் திருமணத்திற்கு பின்னும் பிரிவு?
7) நம் குழந்தைகளை சின்ன ஸ்கூலில் படிக்க வைத்தாலும் அவர்களுக்கு அறிவை நாம் ஊட்டி ஊட்டி வளர்த்தால் மிகப்பெரிய விஞ்ஞானியாக மாற்றலாம் ஆனால் நாம் அதற்கு மாற்றமாக வெளிநாட்டுக்கு போனால் குழந்தைகளை பெரிய ஸ்கூலில் படிக்க வைக்கலாம்( கல்வியை பணம் கொடுத்து வாங்கி விடலாம்) என்று நினைத்ததன் விளைவுதான் இன்று நம் அனைத்து பிள்ளைகளையும் படிக்க வைத்துவிட்டோம் ஆனால் அவர்கள் வேலை இல்லாமல் நடுரோட்டில் நிற்கிறார்கள்,காரணம் அவர்களுக்கு அறிவு ஊட்டப்படவில்லை.
அன்பு என்பது எப்படி தாயால் காட்டப்படுவதோ அதுபோலதான் அறிவு என்பது தந்தையால் மட்டுமே ஊட்டப்படகூடியது (மாறாக பள்ளிகளோ,கல்லூரிகளோ அல்ல)*
இறுதியாக:
ஒரு சமூகம் தன்னை தானே மாற்றி கொள்ளாதவரை, இறைவன் அவர்களை மாற்ற மாட்டான். (அல்குர்ஆன்)
இப்படிக்கு
S.சிக்கந்தர் பாதுஷா
*MPM Welfare Organisation*
source: https://www.facebook.com/profile.php?id=100000123744866