இரு பிரிவினர்கள் பற்றி இறைவேதம்
1. நாம் நிச்சயமாக தமூது சமூகத்தாரிடம். அவர்களுடைய சகோதரர் ஸாலிஹை, “நீங்கள் அல்லாஹ்வையே வணங்குங்கள்” என (உபதேசிக்குமாறு) அனுப்பினோம். ஆனால் அவர்கள் இரு பிரிவினராகப் பிரிந்து, தம்மிடையே சச்சரவு செய்து கொள்ளலானார்கள். (அல்குர்ஆன் 27:45)
2. ஒரு கூட்டத்தாரை (அல்லாஹ்) அவன் நேர்வழியிலாக்கினான். இன்னொரு கூட்டத்தாருக்கு வழிகேடு உறுதியாகிவிட்டது ஏனெனில் அவர்கள் அல்லாஹ்வை விட்டு ஷைத்தான்களை பாதுகாவலர்களாக்கிக் கொண்டனர். எனினும் தாங்கள் நேர்வழி பெற்றவர்கள் என்று எண்ணுகிறார்கள். (அல்குர்ஆன் 7:30)
3. நம்முடைய தெளிவான வசனங்கள் அவர்கள் முன் ஓதப்பெறும்போது நம்பிக்கையாளர்களிடம், (அதனை) நிராகரிக்க முயலும் இறை மறுப்பாளர் (காஃபிர்)கள் “நம் இரு பிரிவினரில் இப்பொழுது யாருடைய வீடு மேலானதாகவும், யாருடைய சபை அழகாகவும் இருக்கிறது?” என்று (கர்வத்துடன:. இறுமாப்புடன்) கேட்கின்றனர். (அல்குர்ஆன் 19:78)
4. அவர்களிடமிருக்கும் வேதத்தை மெய்ப்பிக்கும், ஒரு நபி அல்லாஹ்விடமிருந்து அவர்களிடம் வந்தபோது, வேதம் வழங்கப்பட்டோரில் ஒரு பிரிவினர் அல்லாஹ்வின் வேதத்தைத் திடமாகத் தாங்கள் அறியாதவர்கள் போல் தங்கள் முதுகுக்குப் பின்னால் எறிந்து விட்டார்கள். (அல்குர்ஆன் 2:101)
5. இவர்களில் ஒரு சாரார் இறைவாக்கைக் கேட்டு, அதை விளங்கிக் கொண்ட பின்னர், தெரிந்துகொண்டே அதை மாற்றிவிட்டார்கள். (அல்குர்ஆன் 2:75)
6. (அல்லாஹ்) துன்பத்தை நீக்கிவிட்டால், உடனே உங்களில் ஒரு பிரிவினர் தன் ரப்பு( இரட்ஷகனு)க்கே இணை வைக்கின்றனர். (அல்குர்ஆன் 16:54, 30:33)
7. தம்மிடையே (விவகாரம் ஏற்பட்டு, அது பற்றிய) தீர்ப்புப் பெற அல்லாஹ்விடமும், அவன் தூதரிடமும்் வரும்படி அழைக்கப்பட்டால், அவர்களில் ஒரு பிரிவினர் (அவ்வழைப்பைப்) புறக்கணிக்கிறார்கள். (அல்குர்ஆன் 24:48)
8. எவர்களுக்கு நாம் வேதங்களைக் கொடுத்தோமோ அவர்கள் நம் சொந்த மக்களை அறிவதைப்போல (இதனை) அறிவார்கள். ஆனால் அவர்களில் ஒரு பிரிவினர், நிச்சயமாக அறிந்துகொண்டே உண்மையை மறைக்கின்றனர். (அல்குர்ஆன் 2:146)
9. நம்பிக்கைகொண்டோரே: வேதத்தையுடையோரில் ஒரு பிரிவினர் நீங்கள் பின்பற்றினால், அவர்கள் உங்களை, நீங்கள் இறை நம்பிக்கை(ஈமான்) கொண்டபின், இறை மறுப்பாளர் (காஃபிர்)களாகத் திருப்பி விடுவார்கள். (அல்குர்ஆன் 3:100)
10. இவ்விரு பிரிவினருக்கு உதாரணம்:
(ஒரு பிரிவினர்) குருடர், செவிடர், போலவும் (மற்றொரு பிரிவினர்) நல்ல பார்வை, கேள்வியுள்ள உடையவர் போலவும் இருக்கின்றனர்! இவ்விரு பிரிவினரும் ஒப்புவமையில் சமமாவாரா? நீங்கள் சிந்திக்க வேண்டாமா? (அல்குர்ஆன் 11:24)
11. எவர்கள் நேசத்திற்காக அல்லாஹ்வின் பக்கமும், அவன் தூதரின் பக்கமும், மூஃமின்கள் பக்கமும் திரும்புகின்றார்களோ, அவர்கள்தான் ஹிஸ்புல்லாஹ் (அல்லாஹ்வின் கூட்டத்தினர்) ஆவார்கள் நிச்சயமாக இவர்களே மிகுந்த வெற்றியுடையோர் ஆவார்கள். (அல்குர்ஆன் 5:56)
12. (நபியே!) எந்த சமூகத்திலும், அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்பும் பிரிவினரை, அல்லாஹ்வையும், அவன் தூதரையும் எதிர்ப்போரை நேசிப்பவர்களாக நீர் காண மாட்டீர்.
அப்படி எதிர்ப்பவர்கள், அவர்களுடைய தந்தையர்களாக, அல்லது அவர்களுடைய புதல்வர்களாக, அல்லது அவர்களுடைய சகோதரர்களாக, அல்லது அவர்களுடைய குடும்பத்தினராக இருப்பினும் சரியே! (ஏனெனில்) அத்தகையவர்களின் இதயங்களில், (அல்லாஹ்) ஈமானை (இறை நம்பிக்கையை எழுதி(ப் பதித்து) விட்டான். அவன் தன்னிடமிருந்து (அருள் என்னும்) ஆன்மாவைக் கொண்டு பலப்படுத்தியிருக்கிறான். சுவர்க்கச் சோலைகளில் என்றென்றும் இருக்கும்படி அவர்களைப் பிரவேசிக்கச் செய்வான். அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும். அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொண்டால் அவர்களும் அவனைப் பொருத்திக் கொண்டார்கள். அவர்கள் தாம் அல்லாஹ்வின் கூட்டத்தினர், அறிந்து கொள்க; நிச்சயமாக அல்லாஹ்வின் கூட்டத்தினர் வெற்றி பெறுவார்கள். (அல்குர்ஆன் 58:22)
13. நிச்சயமாக என்னுடைய அடியார்களில் ஒரு பிரிவினர் ” எங்கள் ரப்பே! நிச்சயமாக நாங்கள் உன் மீது (ஈமான்) கொள்கிறோம், நீ எங்கள் குற்றங்களை மன்னித்து, எங்கள்மீது கிருபை செய்வாயாக! கிருபையாளர்களிலெல்லாம் நீ மிகவும் மேலானவன்” என பிரார்த்திப்பவர்களாக இருக்கின்றனர். (அல்குர்ஆன் 23:109)
14. அவர்களை ஷைத்தான் மிகைத்து அல்லாஹ்வின் நினைப்பையும் அவர்கள் மறந்துவிடுமாறு செய்துவிட்டான். அவர்களோ ஷைத்தானின் கூட்டத்தினர்-அறிந்துகொள்க. ஷைத்தானின் கூட்டத்தினர் தான் நிச்சயமாக நஷ்டமடைந்தவர்கள். (அல்குர்ஆன் 58:19)
15. ஷைத்தான் தனது கூட்டத்தினரை கொழுந்து விட்டெரியும் (நரக) நெருப்புக்கே அழைக்கிறான். (அல்குர்ஆன் 35:6)
-A. முஹம்மது அலி, M.A., M.PHIL