‘காஷ்மீர் தாக்குதல்’ தேர்தலுக்காக அனுமதிக்கப்பட்ட தாக்குதலா?
கை.அறிவழகன்
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் பாகிஸ்தானுடன் ஒரு போர் நடக்குமோ என்ற எண்ணம் கடந்த பல மாதங்களாக இருந்து வந்த நிலையில், காஷ்மீர், ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனங்களுக்கு மத்தியில் வெடிகுண்டு நிரப்பப்பட்ட வாகனத்தை மோதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் உயிரிழந்திருப்பதாக கூறப்படுகிறது.
ஏன்? எப்படி இந்த தாக்குதல் சாத்தியம் என்ற எண்ணம் இந்தியா முழுக்க பரவலாக மக்களிடமே உருவாகி இருந்தாலும், தேசிய ஊடகங்கள் எனப்படும் பாஜக ஊடகங்கள் போர் வெறியை உருவாக்கி வருகிறது.
o மோடி பதவியேற்ற இந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவில் பிரமாண்டமான இந்த தாக்குதல் நாடாளுமன்ற தேர்தல் நடக்கும் நேரத்தில் எப்படி சாத்தியம்?
o இந்தியாவிலேயே உச்ச பாதுகாப்பு பகுதி காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலை. எச்சரிக்கை நிறைந்த பகுதி. இந்த பகுதிக்குள் வெடிகுண்டுகள் நிரம்பிய SCORPIO வாகனத்தை எல்லா ராணுவ CHECKPOST களையும் தாண்டி ஒருவர் உள்ளே கொண்டு வந்து மோதுகிறார் என்றால் இராணுவத்தினர் தரப்பில் இருந்து உதவி இல்லாமல் ஒரு தாக்குதலை தீவிரவாதிகளால் நடத்த முடியுமா?
o இதை செய்தவர்கள் வெளியாட்களாக இருக்க வாய்ப்பில்லை. இந்த நேரத்தில் CRPF அங்கே வருகிறார்கள் என்ற தகவலை Scorpio ஓட்டியவனுக்கு சொன்னது யார்?
o 78 CRPF வாகனங்கள் வரும் சாலையில் எந்த சோதனையும் இல்லாமல், ஒரு CAR செல்ல அனுமதித்த காவல்துறை, உளவுத்துறை, ராணுவத்தில் உள்ள CULPRITS யார் யார்?
ரோந்து செல்லும் போது அல்ல… ராணுவ அணிவகுப்பில் புகுந்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது நம்பும்படியாகவா இருக்கிறது?
o அணிவகுப்பில் புகுந்து தாக்கும் அளவுக்கா இந்திய இராணுவம் இருக்கிறது?
o சுமார் 300 கிலோ வெடிகுண்டுகளுடன் ஒருவன் காரில், தேசிய நெடுஞ்சாலைக்குள் நுழைந்து தாக்குகிறான் என்றால் நமது பாதுகாப்புத்துறை எப்படி மக்களை பாதுகாக்க முடியும்?
o ராணுவ வீரர்கள் பல வாகனங்களில் வரும் போது மிகச்சரியாக உட்புகுந்து தாக்குதல் நடந்திருக்கிறது. அப்படி என்றால் அந்த வாகனம் அதுவரை காத்திருந்ததா?
o இதற்கு பாகிஸ்தான் மீது பழி போட்டு தப்பிக்க பார்க்கிறது பாஜக. காஷ்மீர் மாநில உளவுத்துறை இப்படி ஒரு தாக்குதலுக்கான திட்டம் இருப்பதாக முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்ததாகவும், ஆனால், அந்த எச்சரிக்கையை மத்திய உள்துறையும் , உளவுத்துறையும் பொருட்படுத்தவில்லை என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது. பிரச்சனை பாகிஸ்தான் பக்கம் இல்லை. பிரச்சனை இந்திய பாதுகாப்புத்துறையில் உள்ளது…
o வெடிகுண்டுகள் நிரம்பிய வாகனத்தை ஓட்டியவர் அடில் அகமது. அவர் புல்வாமா மாவட்டம் காம்க்கிபோராவை சேர்ந்தவர் என்றும், தாக்குதல் நடந்த சில மணி நேரங்களியே செய்திகள் வெளியானது எப்படி?
o இத்தனை ஆண்டுகள் வெடிக்காத குண்டுகள், தேர்தல் நேரத்தில் மட்டும் சரியாக வெடிப்பது ஏன்?
நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வுக்கு முதன்மை பிரச்சாரம் இது தான்…?!
o இங்கு சரக்கு அடித்து போரவனை 40முறை ஊதசொல்லுற காஷ்மீர் பதட்டம் நிறைந்த இடம் 400 கிலோ, 300 கிலோ வெடிமருந்து எப்படி கிடைத்தது திருடன்யார்?
o பத்து நாட்களுக்கு முன்பே உளவுதுறை எச்சரித்தும் இராணுவ மந்திரி நிர்மலா ஊறுகாய் போட்டு கொண்டு இருந்தாரா?
o எச்சரிக்கை விடுத்தும் அலட்சியமாக இருந்து கோட்டைவிட்ட ராணுவ மந்திரியே வடை சுட்டாயா? ஊறுகாய் போட்டாயா ஒரு வாரமாக?
o BJPக்கு எப்போதெல்லாம் கஷ்டகாலம் வருமோ, அப்போதெல்லாம் நாட்டில் குண்டு வெடிக்கும்.
o இந்த தடவை அது இரானுவ வீரர்களின் அணிவகுப்பில்
o பாஜக காரனுங்க ஆட்சியில் அனைத்து துறைகளில் தோல்வி அதை மறைந்து வெற்றிபெற எந்த தேச துரோக செயலையும் செய்வானுங்க.
o காஷ்மீர் தாக்குதல் தேர்தலுக்காக அனுமதிக்கப்பட்ட தாக்குதலா?
இந்த தாக்குதல், நாடாளுமன்ற தேர்தலுக்காக அனுமதிக்கப்பட்ட தாக்குதலா என்ற ஐயம் மக்களிடம் எழுந்திருக்கிறது.
பதிவு : பத்திரிகையாளர், அருள் எழிலன்
PART 2
கேள்வி 1
350 கிலோ வெடிபொருள் உயர் பாதுகாப்பு தேசிய நெடுஞ்சாலைக்கு எப்படி வந்தது?
கேள்வி 2
2500 படைவீரர்களை ஒரே நேரத்தில் நேற்று அதிகாலை நகர்த்த உத்தரவிட்டது யார்?
கேள்வி 3
பக்சி ஸ்டேடியம் Transit Camp க்கு 30 கிமீ அருகில் 2 நாட்கள் பாதுகாப்பு நடவடிக்கை ஏதும் இல்லையா?
கேள்வி 4
போக்குவரத்து தடை செய்யப்பட்டு தீவிர சோதனைகள் கடந்த ஒரு வாரமாக நடைபெற்றும் எப்படி தாக்குதல் துல்லியமாக நடத்தப்பட்டது?
கேள்வி 5
பல இடங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளில் தொய்வு ஏற்பட்டிருக்கிறது என்று CRPF செய்தித் தொடர்பாளர் ஆஷிஸ் ஜா கூறுவதன் பொருள் என்ன?
கேள்வி 6
எந்தப் புலனாய்வுகளும் நடத்தாமல் 6 மணி நேரத்துக்குள் வீடியோ வெளியிடப்பட்டு *லக்சர் இ மொகம்மத்* அமைப்புதான் செய்தது என்று தீவிரவாதியின் பெயரோடு தொலைக்காட்சிகளுக்கு யார் தகவல் கொடுத்தது?
கேள்வி 7
பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் உளவுத்துறை அறிக்கைகளைப் படிக்காமல் ஊறுகாய் அல்லது வடகம் பிழிந்து கொண்டிருந்தாரா?
கேள்வி 8
மோடியால் ஒரு நாள் கூட பொதுநிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் ஒத்தி வைக்க முடியாதா? இதுதான் படைவீரர்களுக்கு செய்கிற அஞ்சலியா?
கேள்வி 9
பாதுகாப்புப் படை வீரர்களுக்கு வழக்கமாக வழங்கப்படும் குண்டு துளைக்காத வாகனங்கள் இந்த முறை எங்கே போயின?
கேள்வி 10
பாரதீய ஜனதாவின் ஆட்சியில் தேர்தலின் போதெல்லாம் குண்டு வெடிப்புகளும், தற்கொலைப்படைத் தாக்குதல்களும் நிகழ்ந்து இந்தியர்கள் தேசபக்தியில் புல்லரித்து “பாரத் மாதாகீ..” என்று ஊளையிடுவது தற்செயலா? காவிகளின் திட்டமிட்ட சதியா?
பதிவு : பத்திரிகையாளர், அருள் எழிலன்