இஸ்லாமிய இயக்கங்கள் ஒன்றினைந்து தேர்தலை சந்திக்க வேண்டும்
அல்லாஹ்வின்மீது “தவக்கல்” வைத்து SDPI, த.மு.மு.க., ம.ஜ.க., தங்களுக்குள் கூட்டணி அமைத்து 40 தொகுதிகளிலும் போட்டியிடலாமே!
மாஷா அல்லாஹ், SDPI, த.மு.மு.க., ம.ஜ.க. மூன்றுமே காசு கொடுத்து கூட்டம் சேர்க்க வேண்டிய அவசியமில்லாத அர்ப்பணிப்புடன் செயலாற்றக்கூடிய வலுவான தொண்டர் பலம் உள்ள கட்சிகள்.
மூன்று கட்சிகளுக்கிடையே பெரிய அளவில் கசப்புணர்ச்சியும் இல்லை.
ஊடகங்களில் வரும் பொய்யான செய்திகளை புறம் தள்ளிவிட்டுப் பார்த்தால் மூன்றுமே தமிழ மக்களிடம் நற்பெயர் எடுத்துள்ள கட்சிகளே. சமூக சேவையில் மற்றவர்களுக்கு சளைத்தவர்களும் அல்ல.
அப்படி இருக்கையில் வழிநடத்த வேண்டியவர்கள் இன்னும் எத்தனைக் காலத்துக்கு தடுமாறிக் கொண்டே இருக்கப்போகிறார்கள் என்பது ஒட்டுமொத்த உம்மாவின் கவலை.
சில தினங்களுக்கு முன் முகநூலில் நான் பதிவிட்ட “அல்லாஹ்வின்மீது “தவக்கல்” வைத்து SDPI த.மு.மு.க., ம.ஜ.க., தங்களுக்குள் கூட்டணி அமைத்து 40 தொகுதிகளிலும் போட்டியிடலாமே!” எனும் செய்தியை அதற்குள் 570 பேருக்குமேல் ஷேர் செய்துள்ளனர் என்பதிலிருந்தே சமுதாய மக்களின் உணர்வை இம்மூன்று கட்சிகளும் எண்ணிப்பார்க்க வேண்டும்.
தயக்கமே வேண்டாம், அல்லாஹ் நம்மோடு இருக்கிறான் (ஒன்று படும் பட்சத்தில்) என்பதை நம்புங்கள்.
முஸ்லிம்களைவிட எண்ணிக்கையில் குறைவாக உள்ள கட்சிகளெல்லாம் அதிக இடங்களில் போட்டியிட்டு வெற்றிபெறும்போது முஸ்லிகள் மட்டும் ஒதுக்கப்படுவது, அலட்சியப்படுத்தப்படுவது ஏன் என்பதையாவது சிந்திக்க வேண்டாமா?
பெரும்பாலான தொகுதிகளில் முஸ்லிம் வாக்காளர்களின் எண்ணிக்கை தேர்தல் முடிவை நிர்ணயிக்கக்கூடிய வகையில் வலுவாக இருக்கும்போது முஸ்லிம்கள் அரசியல் களத்தில் சோபிக்காமல் போனது ஏன் என்பதை யோசித்துப் பார்க்கலாமே!
மற்ற எந்த கட்சியிடமும் காத்திருந்து சீட்டுப்பிச்சை கேட்கவேண்டிய அவசியமே இல்லை. இம்மூன்று கட்சிகளும் இணைந்து தேர்தலை சந்திக்கப்போகிறது எனும் செய்தியே பெரிய கட்சிகளின் வயிற்றில் கூட புளியை கறைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
எலிகளுக்குக்கூட தனது பலம் என்னவென்று தெரிந்திருக்கும்போது யானைக்கு தனது பலம் தெரியாமல் போனது வினோதமே!
அனைத்து இஸ்லாமிய கட்சிகளும் ஒன்றினைந்து, ஒன்றினைத்து தேர்தலில் போட்டியிட அனைத்து “ஊர் ஜமாஅத்”தார்களும் வலியுறுத்த வேண்டும்.
ஒவ்வொரு ஊர் மஹல்லாவின் முக்கியஸ்தர்களுடன் களநிலவரம் பற்றி கலந்தாலோசனை மிக அவசியம்.
இம்மூன்று கட்சிகளும் இந்த தேர்தலுக்காகவாவது ஒன்றிணைந்து தமிழகத்திலுள்ள அத்தனை முஸ்லிம் ஜமாஅத்தார்களுடனும் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு சுன்னத்தான முறையில் மஷூரா செய்து இந்த ஒருமுறையாவது செயலில் இறங்கிப் பார்க்கலாமே!
இப்போது நடக்க இருக்கும் பாராளுமன்ற தேர்தலை ஒரு பரீட்ச்சைக்களமாக எடுத்துக்கொண்டு முயற்சி எடுக்கும் பட்சத்தில் இதன் முடிவு எப்படி இருந்தாலும் அடுத்துவரும் சட்டமன்ற தேர்தலில் முஸ்லிம்களை எவரும் அலட்சியம் செய்ய முடியாத சூழல் உருவாகும் என்பதை மறந்திட வேண்டாம்.
இவை அனைத்தையும் விட மிக முக்கியமான விஷயம், அல்லாஹ்விடம் முழுமையான தவக்கல் வைப்பது. இதுதான் அனைத்திலும் மிகப்பெரிய பலம் மட்டுமல்ல, வெற்றிக்கனி கையில் வந்து விழுவதற்கு மிக மிக முக்கிய காரணம் என்பதை அனைத்து சகோதரர்களும் மனதில் அழுத்தமாக பதிய வைத்துக்கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு ஊர் ஜமாஅத் நிர்வாகமும் முஸ்லிம்கள் அனைவரும் தங்களது வாக்குரிமையை மறக்காமல் பயன்படுத்த வேண்டும் எனும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
ஒவ்வொருவரும் அல்லாஹ்வின் உதவியை கேட்டு துஆச் செய்வது மிக மிக முக்கியம்.
இதுவரையான தோல்விக்கு முக்கிய காரணம், அல்லாஹ்வின் மீதுள்ள தவக்கலைவிட, தங்களது செல்வாக்க்கையும், நட்பையும் (நட்பு கட்சிகள்) மட்டும் நம்பியதாலேயே!
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள், “ஒரு முஃமின் ஒரே பொந்தில் இருமுறை கொத்தப்படமாட்டான்” என்று. ஆனால் நாமோ நூறு முறை கொத்தப்பட்டாலும் (ஏமாற்றப்பட்டாலும், துரோகமிழைக்கப்பட்டாலும்) தன்னம்பிக்கையற்ற கோழையாகவே மாறிவிட்டோம்.
அதன் காரணமாகவே வலுவிருந்தும், வாய்ப்பிருந்தும் எடுப்பார் கைப்பிள்ளையாக சீட்டுப்பிச்சைக்காக சமுதாயத்தை அடகு வைப்பதையே வாடிக்கையாக்கிக்கொண்டு விட்டோம். இந்த தலைமுறையாவது அதிலிருந்து விடுபடட்டும்.
அல்லாஹ்வின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைப்போம், பத்ருப்போரின் வெற்றி எப்படி சாத்தியமானது என்பதை சமுதாயம் சிந்திக்க வேண்டும்.
இதோ அல்லாஹ்வின் வாக்குறுதியை பாருங்கள், இதைவிட வேறென்ன துணையும் வழிகாட்டுதலும் வேண்டும் நமக்கு?
”முஃமின்களே! பொறுமையுடன் இருங்கள்
(இன்னல்களை) சகித்துக் கொள்ளுங்கள்;
(ஒருவரை ஒருவர்)
பலப்படுத்திக் கொள்ளுங்கள்;
பலப்படுத்திக் கொள்ளுங்கள்;
பலப்படுத்திக் கொள்ளுங்கள்;
பலப்படுத்திக் கொள்ளுங்கள்;
பலப்படுத்திக் கொள்ளுங்கள்;
அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; (இம்மையிலும், மறுமையிலும்) நீங்கள் வெற்றியடைவீர்கள்! (திருக்குர்ஆன் 3:200)
எனவே நீங்கள் தைரியத்தை இழக்காதீர்கள்;.
கவலையும் கொள்ளாதீர்கள்;
நீங்கள் முஃமின்களாக இருந்தால் நீங்கள் தாம் உன்னதமானவர்களாக இருப்பீர்கள். (திருக்குர்ஆன் 3:139)
இன் ஷா அல்லாஹ், நமது வெற்றியை எவர்தான் தடுக்க முடியும்?
“தவக்கல் து அலல்லாஹ்”
– M.A.Mohamed Ali