முத்தங்களின் முக்கியத்துவம் (16+)
(இஸ்லாமிய தாம்பத்யம்)
ரஹ்மத் ராஜகுமாரன்
[ முத்தங்களை இஸ்லாமிய தாம்பத்தியத்தில் முன் உரிமை கொடுத்து அதை தாம்பத்தியத்திற்கு “முன் விளையாட்டு” என்று கூறுகிறது.
இமாம் முனவி ரஹ்மதுல்லாஹி அலைஹி உரைக்கிறார்கள்:
“புணர்ச்சிக்குமுன் முன்விளையாட்டும் அழுத்தமான காதல் முத்தங்களும் வலியுறுத்தப்பட்ட நபிவழியாகும். (ஸுன்னா முஅக்கதா) அதற்கு மாற்றமாக நடப்பது விரும்பத்தகாததாகும் (மக்ரூஹ்)”. (ஆதாரம்: ஃபைழ் அல்-காதிர் ஷரஹ் அல்-ஜாமிஃ அல்-ஸகீர் 5:115)
முன்விளையாட்டின் துவக்கம் முத்தமாக இருக்கட்டும். ஒருவர் தம் துணைவரை முத்தமிடுவது முன்விளையாட்டின் மிகவும் அவசியமானதும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழியுமாகும்.]
முத்தங்களின் முக்கியத்துவம் (16+) (இஸ்லாமிய தாம்பத்யம்)
ரஹ்மத் ராஜகுமாரன்
“சும்பண விகல்பம்” சும்பணம் என்றால் முத்தம்! வாத்ஸாயனர் 1500 வருடங்களுக்கு முன் எழுதிய காமசூத்திரத்தில் 27 வகையான முத்தங்களைப் பற்றி விவரிக்கிறார் ரொம்ப சுவராசியமாக!
எங்கே, எப்படி முத்தமிடுவது….? முத்தமிடும் வேகம் எப்படி இருக்க வேண்டும்…? பற்களால் பெண்ணின் உதடுகளை வலிக்காமல் கடித்து முத்தமிட்டு பரவசத்தை எப்படி அடைவது? தூங்கும் பெண்ணை எப்படி எங்கு முத்தமிடுவது? விழித்திருக்கும் போது முத்தம் கொடுத்து எப்படி தாம்பத்திற்கு அழைப்பது? உறவுக்கு முன் எந்த மாதிரி முத்தமிட வேண்டும்? உறவு முடிந்து ஓய்வெடுக்கும்போது எப்படி முத்தமிடுவது?இப்படியெல்லாம் எல்லாவற்றையும் பட்டியலிட்டு அப்பப்பா…! 27 வகை முத்த மழை!
ஓர் ஆண், பெண்ணை எங்கெங்கே முத்தமிடலாம்? அங்கீரிக்கப்பட்ட உணர்ச்சிப் பிரதேசங்கள் எட்டு இடங்கள். உச்சிப் பொட்டு, நெற்றி, கண்கள், உதடு, நாக்கு, மார்பின்மையப் பகுதி, இரு மார்பங்கள் ஆக எட்டு.
இவை தவிர மூன்று இடங்களை ரகசியமாக சொல்லித் தருகிறார் வாத்ஸாயனர். அக்குள், தொடையிடுக்கு, ஜனன உறுப்பு….
இத்தனை பட்டியலிட்டு விட்டு “இங்கெல்லாம் முத்தமிட்டால் பரவச உணர்வு மேலோங்கும். ஆனால் இதில் எது தப்பு, எது சரி என்று நான் சொல்ல மாட்டேன். அவரவர் வாழும் தேசம், காலம், சூழ்நிலை, உங்கள் துணை விருப்பம் ஆகியவற்றைப் பொறுத்து அவரவருக்கு எது சரி என்று படுகிறதோ அப்படி முத்தமிடுங்கள்” என்கிறார்.
ஒவ்வொரு வகை முத்தத்துக்கும் அவர் அழகாக பெயர் சூட்டி இருக்கிறார்.
தூரத்தில் தன் துணைவன் வருவதைப் பார்த்து விட்டு துணைவி தூங்குவது மாதிரி நடிக்கிறாள். வந்தவன் இந்த இடத்தில்தான் முத்தமிடுவான் என்றெண்ணி, அவள் நினைத்த அதே இடத்தில் முத்தமிட்டால் அந்த முத்தத்திற்கு ”பிராதி போதக சும்பணம்”
வீட்டில் விசேஷம். மொத்த உறவும் வந்திருக்க, வீடு பூரா வெளிச்சம் அந்தக் கூட்டத்தில் தன் துணையை தேடி, அருகில் போய் நெருங்கி குனிந்து கை விரல்களையோ, கால் விரல்களையோ யாரும் பார்க்காத நேரத்தில் பிடித்து இழுத்து முத்தமிடுகிறான். இந்த முத்தத்திற்கு ”அங்குலி சும்பணம்” – விரல் முத்தம்!
சமையல்கட்டு வேளை தாழிக்கப் போட்டுள்ள சட்டி காய்ந்து கொண்டு இருக்க, துணைவன் முத்தம் கேட்டு அடம் பிடிக்க எந்த உணர்ச்சியும் இல்லாமல் சும்மா உதட்டால் உதடு தொடுகிறாள். இந்த முத்தத்திற்கு ”நிமிதகம் சும்பணம்” – சும்மா முத்தம்!
ஊர்ப்போன தன் துணைவி இரவில் வீடு வர விளக்கொளியில் அவளின் நிழல் சுவற்றில் விழ, அதை முத்தமிட, அந்த முத்தத்திற்கு ”சாயா சும்பணம்” – நிழல் முத்தம் ! இப்படியே 27 வகை முத்தங்கள்
உளவியல் ரீதியாக முத்தத்தின் ஆய்வு கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது
”முத்தம்” – என்ற வார்த்தையை உச்சரிக்கும் போது, நம்முடைய உதடுகள் எவ்வாறு இணைகிறதோ அதேபோன்று தான் முத்தம் கொடுத்துக் கொள்ளும் போதும் இரண்டு இதயங்களும் சங்கமித்துக் கொள்கின்றன.
தாம்பத்ய உணர்வை வெளிப்படுத்தும் இந்த முத்தத்தை சத்தமில்லாத மௌன மொழி என்று கூட சொல்லலாம். தம்பதிகளுக்குள் எழும் சின்ன சின்ன சண்டைகளுக்கும் கோபத்துக்கும் தீர்வாக இருப்பதுவும் இந்த முத்தம்தான்.
நீங்கள் கொடுக்கும் முதல் முத்தம் அவர்கள் என்றும் மறக்க முடியாததாக இருக்க வேண்டும். ஆனால் அதில் மென்மை தான் இருக்க வேண்டுமேயொழிய, வன்முறை முத்தங்கள் கூடாது.
மனைவியிடம் கொஞ்சம் ரொமான்ஸாகப் பேசிக் கொண்டே இருங்கள். அப்போது அவர்களுக்கு உங்கள் மேல் தானாகவே அதிக எதிர்பார்ப்புகளை உண்டாக்கிவிடும்.
அந்த சமயத்தில் நீங்கள் கொடுக்கும் முத்தம் அவர்களுடைய மனதில் நங்கூரம் போல் பாய்ந்துவிடும்.
முத்தம் எங்கெங்கு கொடுத்தால் என்ன அர்த்தம் என்று தெரிந்து கொண்டு, முத்தம் கொடுங்கள்.
உதட்டில் முத்தம் கொடுப்பது அதிகப்படியான காதலை வெளிப்படுத்தும் உணர்வுகள் மேலோங்கும். இதற்கு நான் உன்னை உயிரைவிடவும் மேலாக நேசிக்கிறேன் என்று அர்த்தம்.
கைகளில் கொடுக்கும் முத்தம் மரியாதை நிமித்தமாகக் கொடுப்பது. இந்த முத்தத்தை நண்பர்கள், உறவினர்கள், வயதில் மூத்தவர்கள் வயதில் சிறியவர்களுக்குக் கொடுப்பார்கள்.
கண்களைத் திறந்து கொண்டே உங்கள் காதலி முத்தம் கொடுத்தால், அவர் உங்களை இன்னும் அதிகப்படியாக சந்தோஷப்படுத்த விரும்புவதும் அதேசமயம் உங்களுடைய உணர்ச்சிகளை ரசிக்கிறார் என்று அர்த்தம்
கண்களை இருவரும் மூடிக்கொண்டு உதட்டோடு உதடு முத்தம் கொடுத்தால், இருவரும் அந்த தருணத்தை ரசித்துக் கொடுக்கிறார்கள் என்று அர்த்தம்
கன்னத்தில் கொடுக்கும் முத்தத்துக்கு நாம் இருவரும் நல்ல காதலர்கள் என்பதையும் தாண்டி, நான் உன்னோடு நல்ல நட்பில் இருக்க வேண்டுமென விரும்புவதாக அர்த்தம்.
முத்தம் அன்பை அதிகரிப்பதோடு வலியை குறைக்கும். மனஅழுத்தத்தை மாற்றும். உயர் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் கொண்டு வரும். இன்னும் பல வேடிக்கை வினோதங்களையும் செய்யும்.
அமைதி இருந்தால் ஆரோக்கியம் கிடைக்கும். ஆரோக்கியம் கிடைத்தால் ஆயுள் அதிகரிக்கும்’ ஆகையால் முத்தல் கொடுத்தால் ஆரோக்கியமும் ஆயுளும் அதிகரிக்கும் என அமெரிக்க மருத்துவர்கள் தெரிவித்தனர்.
முத்தங்களை இஸ்லாமிய தாம்பத்தியத்தில் முன் உரிமை கொடுத்து அதை தாம்பத்தியத்திற்கு “முன் விளையாட்டு” என்று கூறுகிறது.
இமாம் முனவி ரஹ்மதுல்லாஹி அலைஹி உரைக்கிறார்கள்:
“புணர்ச்சிக்குமுன் முன்விளையாட்டும் அழுத்தமான காதல் முத்தங்களும் வலியுறுத்தப்பட்ட நபிவழியாகும். (ஸுன்னா முஅக்கதா) அதற்கு மாற்றமாக நடப்பது விரும்பத்தகாததாகும் (மக்ரூஹ்)”. (ஆதாரம்: ஃபைழ் அல்-காதிர் ஷரஹ் அல்-ஜாமிஃ அல்-ஸகீர் 5:115)
முன்விளையாட்டின் துவக்கம் முத்தமாக இருக்கட்டும். ஒருவர் தம் துணைவரை முத்தமிடுவது முன்விளையாட்டின் மிகவும் அவசியமானதும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழியுமாகும்.
ஆயிரமாயிரம் தரம்
எழுதியோ – சொல்லியோ
புரிய வைக்க முடியாத அன்பை
ஒரே தரத்தில் உணர வைக்கும்
உன்னத பரிபாஷை முத்தம்!
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அறிவிக்கப்படுகிறது:
“உங்களில் எவரும் மிருகத்தைப் போன்று தன் மனைவியை அணுகக்கூடாது. அவர்களுக்கு இடையில் தூது அனுப்புதல் வேண்டும்.
“அல்லாஹ்வின் தூதரே! (இங்கே) தூது என்பது யாது?” என வினவப்பட்டதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “முத்தமும், இன்சொற்களும் (கொண்ட முன்விளையாட்டு) என பதிலளித்தார்கள்.”
(ஆதாரம்: இமாம் கஸ்ஸாலி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் இத் ஹாஃப் அல்-ஸாதாத் அல்-முத்த்கீன் பிஷரஹ் இஹ்யா உலூம் அல்-தீன் 6:175)
அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கிரார்கள்:
“அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம் மனைவியர்களில் ஒருவரை முத்தமிட்டுவிட்டு, ஒளூச்செய்யாமலே தொழச் சென்றார்கள். (ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடமிருந்து அறிவிக்கும்) உர்வா கூறுகிறார்,
“நான் ஆயிஷாவிடம் ‘அது நீங்களாகத்தான் இருக்கும்?’ என்றேன். அதற்கு அவர்கள் புன்னகைத்தார்கள்”
(ஆதாரம் ஸுனன் திர்மிதீ 86, ஸுனன் அபூதாவூத் 181, சுன்பன் அந் நஸாஈ 170)
இந்த ஹதீஸிலிருந்து, ஒருவர் தம் துணைவரை முத்தமிடுவது விரும்பத்தக்கது என விளங்குகிறது.
ர.ரா
source: https://www.facebook.com/rahmath.rajakumaran.9/posts/2231373270455349