மரக்கன்று நடுவதால் இவ்வளவு நன்மைகளா…?!
“எந்த ஒரு முஸ்லிம் ஒரு மரக்கன்றை நடுகின்றாரோ, அது மரமாக உருவாகி பலனைத்தருகின்றபோது,
அதன் காய் கனிகளை, இலை தழைகளை எந்தப் பிராணி புசித்தாலும், அம்மரக்கன்றை நட்டவருக்கு தர்மம் செய்த நன்மை கிடைக்கும்.
அம்மரத்தின் பொருட்களிலிருந்து ஏதாவதொன்றை எவராவது திருடிச் சென்றாலும் அம்மரத்தை நட்டவருக்கு தர்மம் செய்த நன்மை கிடைக்கும்.
அதாவது, அம்மரத்தின் மூலம் பெறப்படும் ஒவ்வொரு பலன்களுக்குப் பதிலாக அம்மரக்கன்றை நட்டவருக்கு தர்மம் செய்த நன்மை கிடைக்கும்”
என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வழிகாட்டியுள்ளார்கள். (அறிவிப்பளர்: ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்)
மற்றோர் அறிவிப்பில், ஒரு மரக்கன்றை நட்டால் உலக அழிவு நாள் வரை தர்மம் செய்த நன்மை கிடைக்கும் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றுள்ளார்கள்.
“ஒரு முஸ்லிம் ஒரு மரக்கன்றை நட்டு, அது மரமாகி பலன் தரும்போது, அம்மரம் அல்லது செடியின் மூலம் எந்த மனிதர், பிராணிகள், பறவைகள் பயனடைந்தாலும் உலக அழிவு நாள் வரை அம்மரக்கன்றை நட்டவருக்கு தர்மம் செய்த நன்மை கிடைத்துக் கொண்டே இருக்கும். (நூல்: முஸ்லிம்)
உலக அழிவு நாள் ஏற்பட்டுவிட்டாலும்….
“உலக அழிவு நாள் ஏற்பட்டுவிட்டாலும் உங்களில் ஒருவருடைய கையில் ஒரு பேரித்த மரக்கன்று இருக்குமெனில், அதனை அவரால் பூமியில் நடுவதற்கு முடியுமெனில் அதனைச் செய்து விடவும்.” (நூல்: அஹ்மது)
சகோதர, சகோதரிகளே!
இதை படிப்பதோடு நின்றுவிடாமல் இன் ஷா அல்லாஹ் ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த அளவு, இடமிருந்தால் வீட்டு வாசலிலோ, கொள்ளைபுறத்திலோ குறைந்தபட்சம் ஒரு மரமோ, செடியோ நடலாமே! கியாமநாள் வரை நன்மை கிடைப்பதை தவற விடுவானேன்!