தொழுகை – உடல் இங்கு! மனம் எங்கு?
இன்றைய முஸ்லிம்களின் தொழுகை
வெறும் உடல் அசைவுகளால் மட்டுமே நிறைவேற்றபடுகிறது.
மனம் பல இடங்களுக்கு அலைபாய்ந்து கொண்டிருக்கும்.
உலகில் மூன்றில் ஒரு பங்கு முஸ்லீம்கள் ஐந்து வேளை தொழுகையை நிறைவேற்றுகின்றனர். அதில் எத்தனைபேர் அதை பரிபூரணமாக உளமாற தொழுகிறோம் என்றால் கேள்வி குறிதான். கடமையை நிறைவேற்ற வேண்டும் என்ற சுமை போல் கடமைக்கு தொழுபவர்கள் தான் அதிகம்.
اِنَّ الصَّلٰوةَ تَنْهٰى عَنِ الْفَحْشَآءِ وَالْمُنْكَرِؕ وَلَذِكْرُ اللّٰهِ اَكْبَرُ ؕ وَاللّٰهُ يَعْلَمُ مَا تَصْنَعُوْنَ
“நிச்சயமாக தொழுகை (மனிதரை) மானக்கேடானவற்றையும் தீமையையும் விட்டு விலக்கும். நிச்சயமாக, அல்லாஹ்வின் திக்ரு (தியானம்) மிகவும் பெரிதா(ன சக்தியா)கும்; அன்றியும் அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிகிறான்.”
இந்த வசனம் தொழுகை தீமையிலிருந்து இருந்து தடுக்கும் எனவும். இறை தியானம் மிகபெரிய சக்தி எனவும் கூறபடுகிறது. உண்மையில் நம்மில் எத்தனைபேரின் தொழுகை தீய காரியங்களை விட்டும் தீய செயல்களை விட்டும் தடுக்கிறது?
உண்மையில் தொழுகையின் பரிபூரணத்தில்தான் அதன் பலன் கிடைக்கும். இவ்வசனத்தில் இறைதியானம் (திக்ரு) என்ற விடயத்தையும் கவனிக்க வேண்டும். தொழுகை Deep Meditation ஆழ்ந்த தியானம் இறைவன் முன் நிற்கிறோம் என்ற எண்ணத்தோடு ஒவ்வொரு நிலையிலும் நிலைத்து மனதை ஓர்மைபடுத்தி தொழுவதே பரிபூரண தொழுகை.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமக்கு துன்பம் ஏற்படும் போது தொழுகையில் நின்றுவிடுவார்கள் என்பதை நபிமொழி வாயிலாக அறிகிறோம். நம் மனநிலையை மாற்றும் சக்தி தொழுகைக்கு உண்டு . மாடு போல் முட்டி எழுந்து விட்டு தொழுதுவிட்டேன் என்று சொல்வதால் நமக்கு எந்த பலனும் இல்லை.
“மக்களிடத்தில் ஒரு காலம் தொழுவார்கள் ஆனால் அந்த தொழுகையில் உயிர் இருக்காது”. என்ற நபி மொழி கேட்ப சென்று கொண்டுள்ள நம் சமூகம்.
عن ابي هريرة (رضى)قال .قال رسول (صلى). الإحسان أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك (رواه البخاري ٥٠,و مسلم ٩)
அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் “இஹ்சான் என்பது இறைவன் நம்மை பார்க்கிறான் என்பது போல் வணங்குதல் நாம் அவனை பார்க்காவிட்டாலும் அவன் நம்மை பார்க்கிறான். (நூல் : புகாரி 50, முஸ்லிம் 9)
( وجعلت قرة عيني في الصلاة) صحيح الجامع3098
என்னுடைய கண்குளிர்ச்சி தொழுகையில் உள்ளது.
يأتي على الناس زمان يصلون وهم لا يصلون
மக்களிடம் ஒருகாலம் வரும் தொழுவார்கள் ஆனால் அவர்கள் தொழாதவர்கள் போல் தான்.
روي أن سيدنا طلحة الأنصاري رضي الله عنه كان يصلي في بستانه ذات يوم ورأى طيرا يخرج من بين الشجر فتعلقت عيناه بالطائر حتى نسي كم صلى, فذهب إلى الطبيب يبكي ويقول : يا رسول الله , إني انشغلت بالطائر في البستان حتى نسيت كم صليت , فإني أجعل هذا البستان صدقة في سبيل الله .. فضعه يا رسول الله حيث شئت لعل الله يغفر لي ”
அன்சாரி நபிதோழர் தன்னுடைய தோட்டத்தில் ஒரு பறவை வெளியே சென்றது. மரத்தடியில் தொழுகை நிறைவேற்று கொண்டிருக்கும் போது அந்த பறவையின் மீது கவனம் சென்றுவிட்டது எந்த அளவுகெனில் நான் எத்தனை ராகாஅத் தொழுதேன் என்பதை மறந்து விட்டேன். ஆதலால் என் தொழுகையை பாழ்படுத்திய தோட்டத்தை தர்மம் செய்து விட்டேன் யா ரசூலுல்லாஹ் என்று நபிகளாரிடம் முறையிட்டார்.
وهذا أبو هريرة رضي الله عنه يقول : إن الرجل ليصلي ستين سنة ولا تقبل منه صلاة , فقيل له : كيف ذلك؟ فقال: لا يتم ركوعها ولا سجودها ولا قيامها ولا خشوعها
அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் ஒருவர் இரண்டு வருடம் தொழுகிறார் ஆனால் அவருடைய தொழுகை ஏற்கபடவில்லை. அவரிடம் வினவபட்டது : அது எப்படி ? அவர்கள் கூறினார்கள் : ருகூவு , சுஜூத், கியாம், இறையச்சம் எதையும் முழுமையாக்கவில்லை என்றார்கள்.
தொழுகையில் எப்படி இறையச்சத்தை கொண்டுவருவது ?
وسئل حاتم الأصم رحمه الله كيف تخشع في صلاتك ؟؟؟ قال : بأن أقوم فأكبر للصلاة .. وأتخيل الكعبة أمام عيني .. والصراط تحت قدمي ,, والجنة عن يميني والنار عن شمالي ,, وملك الموت ورائي ,, وأن رسول الله يتأمل صلاتي وأظنها آخر صلاة , فأكبر الله بتعظيم وأقرأ وأتدبر وأركع بخضوع وأسجد بخضوع وأجعل في صلاتي الخوف من الله والرجاء في رحمته ثم أسلم ولا أدري أقبلت أم لا؟؟؟؟؟؟؟؟؟؟؟؟؟؟ يقول سبحانه وتعالى : (( ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله ((
ஹாதிமுல் அஸம் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களிடம் “நீங்கள் எப்படி தொழுகையில் இறையச்சத்தை கொண்டுவருகிறீர்கள்?” என்று கேட்க
அதற்கு அவர்களின் பதிலாவது ” தொழுகைகாக நான் தக்பீர் கட்டும் போது கஃபாவை என் கண்முன் இருப்பது போல கற்பனை செய்து கொள்வேன். மேலும் என் கால்களுக்கு கீழ் சிராத்துல் முஸ்தகீம் பாலம் இருப்பது போலவும்,
எனது வலப்புறம் சொர்க்கமும் , இடது புறம் நரகம் இருப்பது போல கற்பனை செய்து கொள்வேன்.
மேலும் மலக்குள் மவ்த் என்னை கண்காணிப்பதாகவும், ரசூலுல்லாஹ் எப்படி ஒவ்வொரு தொழுகையையும் தனது கடைசி தொழுகையாக எண்ணி தொழுவதார்களோ அது போல
அல்லாஹு அக்பர் என தக்பீர்கட்டி ஓத துவங்கி பேணுதலான முறையில் ருகூவு செய்வேன், பேணுதலான முறையில் சுஜூத் செய்வேன். இந்த முறையில் தான் என் தொழுகையில் இறையச்சத்தை கொண்டுவருவேன்.
மேலும் இறைவனின் கருணையை ஆதரவு வைப்பேன். பிறகு சலாம் கொடுப்பேன். அதற்கப்பால் ஒன்றுமில்லை .
என் தொழுகை ஏற்கபடுமா அல்லது இல்லையா? என்று கேட்டு இந்த வசனத்தை ஓதினார்கள்
“ஈமான் கொண்டார்களே அவர்களுக்கு, அவர்களுடைய இருதயங்கள் அல்லாஹ்வை நினைத்தால், அஞ்சி நடுங்கும் நேரம் வரவில்லையா?” (சூரா அல்ஹதீத் 57:16)
اللهم يامقلب القلوب ثبت قلووبنا على طاعتك
உள்ளங்களை திருப்ப கூடியவனே எங்கள் உள்ளங்களை உனக்கு அடிபணிவதில் உறுதிபடுத்துவாயாகஸ ஆமீன்
எழுத்து , மொழிபெயர்ப்பு
முஹமது ஜூபைர் அல்புஹாரி.