இஸ்லாமிய மார்க்கத்தில் உள்ள பிரிவுகளில் எது சரியானது?
இதுபோன்ற கேள்விகளை சந்திக்காதவர்கள் யாரேனும் உண்டா?
ஏன் இந்த இழிநிலை! இது குறித்து இஸ்லாம் கூறுவது என்ன?
اِنَّ الَّذِيْنَ فَرَّقُوْا دِيْنَهُمْ وَكَانُوْا شِيَـعًا لَّسْتَ مِنْهُمْ فِىْ شَىْءٍ اِنَّمَاۤ اَمْرُهُمْ اِلَى اللّٰهِ ثُمَّ يُنَـبِّـئُـهُمْ بِمَا كَانُوْا يَفْعَلُوْنَ
”நிச்சயமாக எவர்கள் தங்களுடைய மார்க்கத்தை (தம் விருப்பப்படி பலவாறாகப்) பிரித்து, பல பிரிவினர்களாகப் பிரிந்து விட்டனரோ அவர்களுடன் (நபியே!) உமக்கு எவ்வித சம்பந்தமுமில்லை; அவர்களுடைய விஷயமெல்லாம் அல்லாஹ்விடமே உள்ளது – அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றைப் பற்றி முடிவில் அவனே அவர்களுக்கு அறிவிப்பான்.” (அல்குர்ஆன் : 6:159)
பிரிவினையை ஏற்படுத்துபவர்களுக்கும் இந்த மார்க்கத்துக்கும் எவ்வித சம்மந்தமுமில்லை
பிரிவினைகளை நியாயப்படுத்த ஒவ்வொருவரும் தங்களிடம் தான் சத்தியம் உள்ளது மற்றவர்கள் வழிகேட்டில் உள்ளனர் என்பர்
அன்பிற்குரியவர்களே இந்த வார்த்தைகள் யார் நாவிலிருந்து உதிக்கும் தெரியுமா ⁉
وَقَالُوْا کُوْنُوْا هُوْدًا اَوْ نَصٰرٰى تَهْتَدُوْا قُلْ بَلْ مِلَّةَ اِبْرٰهٖمَ حَنِيْفًا وَمَا كَانَ مِنَ الْمُشْرِكِيْنَ
“நீங்கள் யூதர்களாக அல்லது கிறிஸ்தவர்களாக மாறிவிடுங்கள் – நீங்கள் நேர்வழியை அடைவீர்கள்” என்று அவர்கள் கூறுகிறார்கள். “அப்படியல்ல! (நேரான வழியைச் சார்ந்த) இப்ராஹீமின் மார்க்கத்தையே பின்பற்றுவோம், (இணை வைக்கும்) முஷ்ரிக்குகளில் நின்றும் அவரில்லை” என்று (நபியே!) நீர் கூறுவீராக! (அல்குர்ஆன் : 2:135)
யூத கிறித்தவர்களுக்கு ஒப்பாக அல்லவா இந்த வாதம் உள்ளது
இன்னும் இதுபோன்ற கருத்துடையோர் அறியாமையினில் தான் உள்ளனர் என அல்லாஹ் தன் திருமறையில் 23:54ல் கூறுகிறான்
யாவரும் சிந்திக்க வேண்டாமா?
இன்னும் அல்லாஹ்வும் அவன் தூதரும் அழைத்ததன் பக்கம் வாருங்கள் என அழைத்தால் எங்கள் முன்னோர்களை பின்பற்றுகிறோம் தலைமையை பின்பற்றுகிறோம் என்பவர்களே
மறுமையில் உங்கள் பதில் என்னவாக இருக்கும் தெரியுமா ?
وَقَالُوْا رَبَّنَاۤ اِنَّاۤ اَطَعْنَا سَادَتَنَا وَكُبَرَآءَنَا فَاَضَلُّوْنَا السَّبِيْلَا
“எங்கள் இறைவா! நிச்சயமாக நாங்கள் எங்கள் தலைவர்களுக்கும், எங்கள் பெரியவர்களுக்கும் வழிப்பட்டோம்; அவர்கள் எங்களை வழி கெடுத்துவிட்டார்கள்” என்றும் அவர்கள் கூறுவார்கள். (அல்குர்ஆன் : 33:67)
முழுமையாக்கப்பட்ட மார்க்கமான இஸ்லாத்தினில் இதுபோன்ற குழப்பத்திற்கு தீர்வு என்ன?
مِنَ الَّذِيْنَ فَرَّقُوْا دِيْنَهُمْ وَكَانُوْا شِيَعًا كُلُّ حِزْبٍ بِمَا لَدَيْهِمْ فَرِحُوْنَ
எவர்கள் தங்கள் மார்க்கத்தில் பிரிவினைகளை உண்டாக்கி (பல) பிரிவுகளாகப் பிரிந்து விட்டனரோ; (அவர்களில் ஆகி விட வேண்டாம். அவ்வாறு பிரிந்த) ஒவ்வொரு கூட்டத்தாரும் தங்களிடமிருப்பதைக் கொண்டே மகிழ்வடைகிறார்கள். (அல்குர்ஆன் : 30:32)
பிரிவுகளில் எதிலும் இனைந்துவிடாதீர்கள்
இன்னும் அனைவரும் எளிதாக விளங்க ஒரு ஹதீஸை பதிவிடுகிறேன்..!
7084. ஹுதைஃபா இப்னு அல்யமான் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார்.
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் மக்கள் நன்மையைப் பற்றிக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். நான் நபியவர்களிடம் தீமையைப் பற்றிக் கேட்டுக் கொண்டிருந்தேன். அது என்னைத் தீண்டிவிடுமோ என்று அஞ்சியமே காரணம்.
நான், “இறைத்தூதர் அவர்களே! நாங்கள் அறியாமைக் கால மாச்சரியத்திலும் தீமையிலும் மூழ்கிக் கிடந்தோம். அப்போது அல்லாஹ் (இஸ்லாம் எனும்) இந்த நன்மையை எங்களிடம் கொண்டுவந்தான். இந்த நன்மைக்குப் பிறகு ஒரு தீமை (குழப்பம்) இருக்கின்றதா?“ என்று கேட்டேன்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “ஆம் (இருக்கின்றது)“ என்று பதிலளித்தார்கள்.
நான், “அந்தத் தீமைக்குப் பிறகு நன்மை ஏதும் இருக்கின்றதா?“ என்று கேட்டேன்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “ஆம். ஆனால், அதில் சற்று கலங்கலான நிலை (குழப்பம்) இருக்கும்“ என்று பதிலளிக்க
நான், “அந்தக் கலங்கலான நிலை என்ன?“ என்று கேட்டேன். அதற்கு
அவர்கள், “ஒரு கூட்டத்தார் என்னுடைய நேர்வழியில்லாத ஒன்றைக் கொண்டு பிறருக்கு வழிகாட்டுவார்கள். அவர்களில் •நன்மையையும் நீ காண்பாய்; •தீமையையும் நீ காண்பாய்“ என்று பதிலளித்தார்கள்.
நான், “அந்த நன்மைக்குப் பிறகு ஒரு தீமை உண்டா?“ என்று கேட்டேன்.
அதற்கு அவர்கள், “ஆம்; நரகத்தின் வாசல்களுக்கு (வருமாறு) அழைப்பவர்கள் சிலர் தோன்றுவார்கள். அவர்களின் அழைப்பை ஏற்பவனை நரகத்தில் அவர்கள் எறிந்துவிடுவார்கள்“ என்று பதிலளித்தார்கள்.
நான், “இறைத்தூதர் அவர்களே! அவர்களின் அடையாளங்க)ளை எங்களுக்குத் தெரிவியுங்கள்“ என்று கேட்க,
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்,
“அவர்கள் நம் இனத்தைச் சேர்ந்தவர்களாகவே இருப்பார்கள்; நம் மொழிகளையே பேசுவார்கள்“ என்று பதிலளித்தார்கள்.
நான், “இந்த (மனிதர்களைச் சந்திக்கும்) நிலையை அடைந்தால் என்ன (செய்ய வேண்டுமென்று) எனக்குக் கட்டளையிடுகின்றீர்கள்?“ என்று கேட்டேன்.
அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “நீ முஸ்லிம்களின் ஜமாஅத்தை (கூட்டமைப்பை)யும் அவர்களின் தலைவரையும் (இறுகப்) பற்றிக் கொள்“ என்று பதிலளித்தார்கள். அதற்கு
நான், “அவர்களுக்கு ஒரு கூட்டமைப்போ ஒரு தலைவரோ இல்லை (பல பிரிவுகளாகப் பிரிந்து கிடக்கிறார்கள்) என்றால் (என்ன செய்வது)?“ என்று கேட்டேன்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “அந்தப் பிரிவுகள் அனைத்தையும்விட்டு (விலகி) ஒதுங்கிவிடு; ஒரு மரத்தின் வேர் பாகத்தை பற்களால் நீ கவ்விப் பிடித்திருக்க நேர்ந்து, அதே நிலையில் மரணம் உன்னைத் தழுவிக் கொண்டாலும் சரி (எந்தப் பிரிவினரோடும் சேர்ந்துவிடாதே)“ என்று பதிலளித்தார்கள்.22
ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 92. குழப்பங்கள் (சோதனைகள்)
நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்
رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِن لَّدُنكَ رَحْمَةً إِنَّكَ أَنتَ الْوَهَّابُ
“எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு நேர் வழியைக் காட்டியபின் எங்கள் இதயங்களை (அதிலிருந்து) தவறுமாறு செய்து விடாதே! இன்னும் நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு (ரஹ்மத் என்னும்) நல்லருளை அளிப்பாயாக! நிச்சயமாக நீயே பெருங் கொடையாளியாவாய்!” 3:8
– Sanofer Ali