Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

வர்ணாச்சிரமக் கொள்கையின் மறு வடிவமே ‘வஹ்தத்துல் உஜூத்’ என்ற வழிகேட்டுக் கொள்கை!

Posted on December 16, 2018 by admin

வர்ணாச்சிரமக் கொள்கையின் மறு வடிவமே ‘வஹ்தத்துல் உஜூத்’ என்ற வழிகேட்டுக் கொள்கை!

சூஃபித்துவம் என்பது மாற்று மதத்தவர்களின் மதங்களின் கலவையே என்பதையும் அவர்களின் சித்தாத்தங்களைக் காப்பியடித்து உருவாக்கப்பட்டதே சூஃபித்துவ சித்தாங்கள் என்பதையும் இவற்றுக்கும் இஸ்லாத்திற்கும் எள் முனையளவும் சம்மந்தமேயில்லை.

வழிகேட்டு கொள்கையான வஹ்தத்துல் உஜூத் பிற மதக் கொள்கைகளிலிருந்து எப்படி காப்பியடிக்கப் பட்டிருக்கின்றது என்பதைப் பற்றி சுருக்கமாகப் பார்ப்போம்!

‘எல்லாம் அவனே’ என்ற வழிகேட்டுக் கொள்கையுடையவர்களால் அடிக்கடிப் பாடக் கூடிய பாடல் தான் பின்வருபவை:

மண்ணில் நின்று வந்ததெல்லாமே

மண்ணென்றால் அது பொய்யில்லை!

பொண்ணில் நின்று வந்ததெல்லாமே

பொண் என்றால் அது பொய்யில்லை!

ஒன்னில் நின்று வந்ததெல்லாமே

ஒன்றே தான் இரண்டில்லை!

ஹக்கில் நின்று வந்ததெல்லாம்

ஹக்கே தான் வேறில்லை!

அதாவது ‘ஹக்கிலிந்து (இறைவனிடமிருந்து) வந்தவைகள் தான் அனைத்தும் ஆகையால் அனைத்தும் இறைவன்’ என்பதே இவர்களின் இந்த கேடுகெட்ட சித்தாந்தம்!

‘படைப்பாளன் வேறு! அவனது படைப்பினங்கள் வேறு’ என இஸ்லாம் கூறிக்கொண்டிருக்க,

‘படைப்பாளனையும் படைபபினங்களையும் ஒன்றாக்கும்’ இந்த கேடுகெட்ட சித்தாந்தத்தை இவர்கள் எங்கிருந்து பெற்றார்கள் என்பதை இப்போது பார்ப்போம்!

பிற மதத்தவர்களின் வர்ணாச்சிரமக் கொள்கையின்படி,

மனிதன் கடவுளிலிந்தே பிறக்கின்றான். கடவுள் சிலரைத் தனது நெற்றியிலிருந்தும், சிலரைத் தன் நெஞ்சுப் பகுதியிலிருந்தும், வேறு சிலரைத் தன் வயிற்றுப் பகுதியிலிருந்தும் மற்றும் சிலரைத் தனது கால்ப் பகுதியிலிருந்தும் படைத்திருப்பதாகவும்

கடவுளின் தலையிலிருந்து படைக்கப்பட்டவர்கள் உயர்ந்தவர்களென்றும்,

காலிலிந்து பிறந்தவர்கள் தீண்டத்தகாதவர்கள் என்றும்

பிற மத வேத நூல்களில் காண முடிகின்றது. இது அந்த மதத்தவர்களின் நம்பிக்கை!

சுருங்கச் சொல்வதெனில் அவர்களின் கடவுளின் ஒவ்வொரு பாகத்திலிந்தே மனிதன் தோன்றுகின்றான்!

வருனாசிரமத்தின் இந்தக் கொள்கையைப் பிரதிபலிக்கும் விதத்தில் தான் வழிகேடான வஹ்தத்துல் உஜூத் கொள்கையைப் பின்பற்றுபவர்கள் இப்பிரபஞ்சத்திலுள்ளவைகள் அல்லாஹ்விடமிருந்தே வந்தததால் அனைத்தும் அல்லாஹ் என்பதாக பிதற்றித் திரிகின்றனர்.

இந்துக்களின் வேத நூலான பகவக் கீதையை அனைத்து இந்துக்களும் தமது வேத நூலாக ஏற்றுக் கொண்டிருக்கின்றார்கள் அதே போல் ஆதி பராசக்தி எனும் நித்திய ஜீவ ஆத்மா இருப்பதாகவும் நம்புகின்றனர். சிலர் வேறு பெயர் கூறியும் இதை அழைப்பதுண்டு.

இது அவர்களின் நம்பிக்கை! அதை நாம் விமர்சிக்க விரும்பவில்லை! அது நமது நோக்கமும் அல்ல!

ஆனால் அந்தக் கொள்கையை இஸ்லாத்திற்குள் நுழைப்பதைத் தான் நாம் கடுமையாக விமர்சிக்கின்றோம்!

இந்துக்களிடத்தில் ஆயிரக் கணக்கான கடவுள்கள் இருக்கின்றன. எனினும் பிரதானமான கடவுள்கள் மூன்று என அனைவரும் நம்புகின்றனர் .

அவைகளாவனஸ

1- பிரம்மன் – படைப்பதற்கு,

2- விஷ்னு – காப்பதற்கு.

3- யமன் – அழிப்பதற்கு.

பகவக் கீதையில் வருவதாவது…

‘காக்கும் கடவுளான விஷ்னு ஒரு முறை மனித உருவெடுத்து கிருஷ்னனின் வடிவில் அருச்சுனன் எனும் தேவரிடத்தில் வந்தார்.

அருச்சுனன்: எனக்கு ஒரு புதிருக்கு விடை தெரிய வேண்டும். நீ எனக்குக் தந்த ஆத்மாவின் ரகசியம் என்ன? அதனாலேயே நான் அழியாமல் நிலை பெற்றிருக்கின்றேன். நான் உனது திரு வடிவத்தைக் காண விரும்புகின்றேன். உன்னைக் காணக்கூடிய சக்தி எனக்கிருப்பதாக நீ நம்பினால் உனது அழிவற்ற ஆத்மாவை வெளிப்படுத்துவாயாக.

கடவுள்: அருச்சுனாஸ என் வடிவங்களைப் பார்ஸ அவை நூற்றுக் கணக்கில் ஆயிரக்கணக்கில் இருக்கின்றன. அவற்றுக்குப் பல நிறங்களும் வடிவங்களும் இருக்கின்றன. இப்பிரபஞ்சத்தைப் பார். அதில் நீ பார்க்கும் அனைத்தும் என் உடலிலேயே இணைந்து கலந்திருக்கின்றன. எனினும் உன் மனிதக் கண்களால் என்னைக் காண முடியாது. இருப்பினும்; இயற்கையை வென்ற தெய்வீகக்கண்களை உனக்குத் தருகின்றேன் அப்போது உன்னால் என்னைக் காண முடியும்.

பின்னர் அருச்சுணனுக்கு தெய்வீகக் கண்கள் கொடுக்கப்பட்டதன் பின் பார்த்த போது கடவுளின் உடலிலேயே பல்வேறு வடிவங்களில் முழுப் பிரபஞ்சத்தையும் அவர் கண்டார்.

(மேற்கோள்: அல் பிக்ர் அல் பல்ஸபிய்யா அல் ஹின்திய்யா ப :204)

மனிதன் பண்பட்டு பிரம்மனுடன் இரண்டறக் கலந்து விடும் போது அவனும் பிரம்மனாகி விடுவான். அவனது உயிர் அமைதி பெற்று விடும். அவன் எதற்கும் ஆசைப்படவோ எதற்காகவும் கவலைப்படவோ மாட்டான். தான் யார் என்பதையும் தன் நிலை யாது என்பதையும் அறிந்து கொள்ளும் போது அவன் என்னுள் சங்கமித்து குடி கொண்டு விடுகின்றான். (அதே நூல் ப: 234)

இவர்களின் இந்த சித்தாந்தையே கஸ்ஸாலி இவ்வாறு சொல்கின்றார்..

“மெஞ்ஞானிகள் (ரகசியம்) ஹகிக்கத் எனும் வானில் உயர்ந்து அங்கே சஞ்சரிக்கும் போது உலகிலே அவர்கள் ஒரே (அல்லாஹ்வான) ஒருவனைத் தவிர வேறு எதையுமே காணவில்லையென ஏகோபித்து ஒருமித்துத் கூறுகின்றனர்.

எனினும் சிலருக்கு இந்நிலை தெட்டத் தெளிவாக அறிவியல் ரீதியாகப் புலப்படும். (அவர்கள் இந்த ரகசியத்தால் குழம்பிப் போக மாட்டார்கள்) இன்னும் சிலருக்கோ அவர்கள் இதன் உச்ச இன்பத்தையே சுவைத்து விடுவார்கள். அப்படியானவர்கள், எல்லாம் ஒன்றே எனும் ஓர்மையில் மூழ்கித் திளைத்து ஒன்றுக்குள் ஒன்றாகக் கலந்து) غيرية ) வேறொன்று என்ற வார்த்தை – பன்மை என்பதே அவர்களிடமிருந்து அடியோடு நீங்கி விடும்.

அவர்களின் விழிகளுக்கு அல்லாஹ்வைத் தவிர வேறு எதுவும் புலப்படாது. அனைத்துமே அல்லாஹ்வாகவே தென்படும்.

இதனால் ஏற்பட்ட அதிர்ச்சியால் ஒருவகை போதையேற்பட்டதன் காரணத்தினாலேயே அவர்களில் சிலர் “நான் தான் அல்லாஹ்’ என்றும், வேறு சிலரோ ‘நானே அல்லாஹ் நான் தூய்மை மிக்கவன், வல்லமை மிக்கவன்’ என்றும், வேறு சிலர் ‘எனது ஜூப்பாவிலும் அல்லாஹ்வையன்றி வேறு யாருமில்லை’ என்றும் கூறியிருக்கின்றார்கள்.

(மிஸ்காதுல் அன்வார். ப:122)

இப்போது புரிகின்றதா? அனைத்தும் அல்லாஹ் என்ற வழிகெட்ட கொள்கை எங்கிருந்து வந்ததென்றுஸ

எனவே அனைத்தும் கடவுளே எனும் அத்வைதக் கொள்கையும், ஜத்ப் எனப்படும் தன்னிலை மறக்கும் நிலையும், அதன் பின் ஏற்படும் ஏனைய ஷைத்தானியத் தொடர்புகளால் உண்டாகும் வழக்கத்ததுக்கு மாறான சில அதிசயங்களும் பிற மதத்தினத்தினரிடமும் இருந்திருப்பதை நாம் அறிய முடிகின்றது. எனவே இதையெல்லாம் கராமத் என்றும் இவர்களையெல்லாம் அவ்லியாக்கள் – இறை நேசச் செல்வர்கள் என்றும் சொல்ல முடியுமா? சிந்திப்போமாக ..

இதே சித்தாந்தத்தை வழிகேடுகளின் தலைவராக விளங்கிய இப்னு அரபி இவ்வாறு கூறுகின்றார்…

“ஆரிப் என்பவர் எல்லா வஸ்த்துக்களிலும் அல்லாஹ்வையே காண்பார். ஒவ்வொரு பொருளுமே அவருக்கு அல்லாஹ் வாகத்தான் தென்படும்.

முழுமை பெற்ற ஒரு ஆரிபுக்கு (ஞானிக்கு) பிற மத மக்கள் வணக்கம் செலுத்தும் ஏனைய சிலைகள், விக்ரகங்கள் அனைத்துமே அல்லாஹ்வின் தஜல்லி – வெளிப்பாடாகவே தெரியும்.

இதனாலேயே அவர்கள் பிற மதத்தவர்களால் வணங்கப்படும் அனைத்து மதத்து சிலைகளையும் இலாஹ் – அல்லாஹ் என்றே அழைத்தார்கள்.

அந்த ஒவ்வொரு சிலைக்கும் கற்சிலை, பொற்சிலை, வெங்கலச் சிலை என தனிப்பட்ட பெயர்கள் இருப்பினும் கடவுள் – அல்லாஹ் எனும் பொதுப் பெயர் கூறியே அவர்கள் அவற்றை அழைத்தார்கள்.”

(புஸூஸூல் ஹிகம் – இப்னு அரபி ப: 192)

இதுதான் இந்த சூஃபிகள் சொல்லும் ரகசியம்.?? இது வழிகேட்டின் உச்சம், இதற்கும் இஸ்லாத்திற்கும் எள் முனையளவும் சம்பந்தமில்லை.

மாறாக இதை அழித்தொழிக்கவேதான் அல்லாஹ் நபிமார்களை அனுப்பினான் என்பதைப் பாமர மகன் கூட எடுத்துக்கூறாமலேயே அறிந்து கொள்வான்.

இவற்றை வழிகேடுகள் என்பதைச் சாதாரணவன் கூடச் சொல்வான். அல்-குர்ஆனின் அனைத்து வசனங்களிலும் இக்கொள்கை குப்ர், கலப்பற்ற ஷிர்க் என்று விவரிக்கப்பட்டிருப்பதை அனைவருமே படித்தால் அறிந்து கொள்ள முடியும்.

source: http://suvanathendral.com/portal/?p=5297

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

92 − 88 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb