பெண்கள் விடுதலையும் அமெரிக்க குழந்தைகளின் எதிர்காலமும்
அமெரிக்காவில் பெண்கள் பெண் விடுதலை பெண் முன்னேற்றம் என்ற பெயரில் அவர்கள் தங்களது குழந்தைகளை விட்டு வெகுதூரம் சென்றுவிட்டனர்.
வேலைக்கு செல்லும் அமெரிக்க சமூகத்தை நோக்கினால் குடும்பங்கள் சிதறிக்கிடக்கின்றன. குழந்தைகள் கவனிப்பாரற்றுக் கிடக்கிறார்கள். இதனால் அந்நாடு பெரும் அபாயத்தில் சிக்கி கிடக்கிறது .
பெருகிவரும் வறுமையால் குழந்தைகளின் உந்துதல்கள் தொலைந்துவிட்டன. கவனிப்பாரின்மையால் குழந்தைகளின் ஆரோக்கியம் தொலைந்துவிட்டது .விவாகரத்து மற்றும் கணவன் மனைவி சண்டைகளால் குழந்தைகளின் இதயங்கள் தொலைந்துவிட்டன.
சொந்த பெற்றோரின் வளர்ப்பு முறை இல்லாததால் குழந்தைகளின் எதிர்காலமும் தொலைந்துவிட்டது. வன்முறைகளாலும் தகாத பழக்கவழக்கங்களாலும் குழந்தைகளின் வாழ்கை தொலைந்துவிட்டது. இப்படி குழந்தைகளை அத்தனையிலும் தோற்றுவிட்டதால் மொத்த சமுதாயமே தொலைந்துவிட்டது.
தற்கொலைகளாலும் ,கொலைகளாலும் அமெரிக்காவில் ஒவ்வொரு வருடமும் அமெரிக்காவில் 7000 குழந்தைகள் கொல்லபடுகிறார்கள். 4 குழந்தைகளில் ஒரு குழந்தை திருமணமாகாத தாய்க்கு பிறக்கிறது. அந்த தாய்களில் பெரும்பாலோர் சிறுமிகளாகவே உள்ளனர்.
1,35,000 குழந்தைகள் பள்ளிக்கு துப்பாக்கி கொண்டு செல்கிறார்கள். ஒவ்வொரு சமூகத்தரத்திலுள்ள குழந்தையும் தகாத பழக்கவழக்கங்களாலும், அலட்சியத்தாலும் பாதிக்கபடுகின்றனர் .
இதுதான் மகளிர் விடுதலையின் மறுபக்கம்!.
இன்று அமெரிக்காவில் பெண்கள் சுதந்திர பறவைகள். வீட்டின் பாதுகாப்பிலிருந்து சுதந்திரம். கணவனின் பிடியிலிருந்து சுதந்திரம். எனவே பெண்கள் அவர்களின் வழியில் செல்வார்கள் .
அதேபோல் குழந்தைகளும் வீட்டின் பிடியிலிருந்த சுதந்திரம் பெற்றுவிட்டார்கள். பெற்றோர்கள் அவர்களுக்கு இல்லை. அவர்களை கண்டிக்கவும் புத்திமதி சொல்லவும் யாரும் இருக்கமாட்டார்கள். எனவே குழந்தைகளும் அவர்களின் வழியில் செல்கிறார்கள்
பெற்றோர்கள் வேலைக்கு செல்ல குழந்தைகள் மழலையர் காப்பகங்களுக்கு அனுப்பபடுகிறார்கள். அதனை அவர்கள் குழந்தைகள் நல காப்பகங்கள் என்று அன்போடு அழைக்கிறார்கள்.
நிலைமை எந்த அளவுக்கு மோசமாகிவிட்டதேன்றால் இனி இந்த மேரிக்க சமூகம் திருந்தி இந்த கேட்டிலிருந்து விலகும் என்ற நம்பிக்கையே தொலைந்துவிட்டது.
இந்த கேடுகெட்ட விடுதலையை(?) நோக்கிதான் ஐ.நா. சபை முஸ்லிம் நட்டுகளை கேட்டுக்கொண்டுள்ளது. முஸ்லிம் நாடுகளிலுள்ள பெண்கள் வயுட்தலை அடையவேண்டுமாம் அதற்கு அவர்கள் அமெரிக்க பெண்களைப்போல் வேலைக்கு சென்று சம்பாதிக்கவேண்டுமாம். இதன்மூலம் அவர்கள் அமெரிக்க பெண்கள் அனுபவிக்கும் “ஆனந்த சுதந்திரத்தை” அடைய முடியுமாம்!!!
அமெரிக்காவிலும் இன்னும் பிற மேலை நாடுகளிலும் குடும்ப அமைப்பு அழிந்து, அழுகி நாறுவது திட்டமிட்ட ஒன்றல்ல. அது தானாகவே ஏற்பட்டது. செல்வத்திலும் சதா இன்பத்திலும் நாட்டமுள்ள, இறையச்சமற்ற ஒரு சமுதாயத்தில் தானாகவே ஏற்பட்டது.
ஆனால் அமெரிக்கா உள்ளிட்ட மேலைநாடுகள் இந்த அழிவுப்பாதயைதான் உலகம் பின்பற்ற வேண்டும் என விரும்புகிறது. இது வாலறுந்த நரிகதையைதான் நினைவூட்டுகிறது.
இஸ்லாம்
யதார்த்தத்தில் இஸ்லாம் பெண்களை குடும்பத்திற்கு சம்பாதித்து கொடுக்கவேண்டிய மிகப்பெரிய பொறுப்பிலிருந்து, சுமையிலிருந்து விடுவிக்கிறது. அது முழுமையாக கணவனுக்குரியது என்கிறது.
மனைவி வீட்டை நிர்வகிக்கும் நிர்வாகி என்கிறது இஸ்லாம் .வீட்டை பராமரிப்பது குழந்தைகளை கவனிப்பதுதான் அவளது பொறுப்பு. இது எதோ சாதாரன் பொறுப்பல்ல என்பதை இக்கட்டுரையின் ஆரம்ப பத்திகளை படித்தாலே புரிந்துவிடும்.
திருக்குர்ஆன் கூறுகிறது :
“(நபியுடைய மனைவிகளே!) நீங்கள் உங்கள் (வீடுகளிருந்து வெளிச்சென்று திரியாது) வீடுகளுக்குள்ளாகவே தங்கி இருங்கள்” (அல் அஹ்ஸாப் 33:33)
இறுதித்தூதர் முகம்மது சல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்கள் கூறினார்கள் : “தனது கணவனை வீட்டை கவனித்து கொள்வது ஒரு மனைவியின் பொறுப்பாகும் .அவளுக்கு கொடுக்கப்பட்ட இந்த பொறுப்பு பற்றி அவள் கேள்வி கேட்கபடுவாள் ” (புகாரி, முஸ்லிம்)
இன்னொரு நபிமொழியின் கருத்தாவது : கற்பத்தின் பொழுதும் குழந்தைக்கு பாலூட்டும் காலத்திலும், ஒரு பெண் களத்தில் தீவிரமாக போராடும் ஒரு படை வீரனை போலாவாள், அவள் அக்காலத்தில் இறந்தால், அவளுக்கு ஓர் இறைப்போரில் இன்னுயிர் நீத்த ஷஹீதுடைய கூலி கிடைக்கும் .
ஆக, இஸ்லாம் ஆணைகளுக்கு பெண்களுக்கும் பிரித்துகொடுக்கப்பட்டுள்ள பொறுப்புகளை தெளிவாக கூறி இருக்கிறது .
ஆண்கள் வீட்டுக்கு வெளியே நடக்கும் விஷன்யங்களுக்கு பொறுப்பாவார்கள் . பெண்கள் வீட்டு விவகாரங்களுக்கு பொறுப்பாவார்கள்.
இந்த பொறுப்பு மிச்ச சொச்சமல்ல.
இதுதான் ஒரு ஆரோக்கியமான சமூகத்தை கட்டி எழுப்புவதற்கு அடிப்படை அம்சம். இந்த அடிப்படையில்தான் நல்ல சமுதாயத்தை உருவாக்கிட முடியும்.
இந்த இயற்கையான ஏற்பாட்டை மாற்ற முனைந்த நாடுகள், சமுதாயங்கள் சாதித்தவை துக்கத்தையும், தூற்றலையும்தான். அவர்களின் முயற்ச்சிகளுக்கு கிடைத்த பலன்கள் பரிசுகள் அதுதான்.
அவர்கள் அந்த சற்று சகதியிலிருந்த வெளிவர, அவர்கள் ஏற்படுத்தி வைத்திருக்கும் இந்த பயங்கர பாதிப்பிலிருந்து பாதுகாப்பு பெற, அவர்கள் இருட்டில் தடவிகொண்டிருக்கிரார்கள்.
வெளிச்சத்தில் நல்லது இருக்க, இருட்டில் வேறு வழியை தேடுகிறார்கள்.
இந்த வெளிச்சத்தை கையில் வைத்திருப்பவர்கள், இருட்டில் இறுமாந்து தடவிக்கொண்டிருக்கும் தரிக்கேட்டவர்களின் பின்னால் செல்ல வேண்டுமா? இதனை முஸ்லிம்கள் சிந்தித்து பார்க்கவேண்டும் .
-Adirai Iqbal
source: http://samuthayaarangam.blogspot.com/2012/07/blog-post_22.html