தூய்மையான உள்ளம்
மனிதனுடைய உள்ளத்தில், இருக்கும் உறுப்புகளில் மிக முக்கியமானது உள்ளம் தான். ஏனெனில், அதற்கு ஏதேனும் பிரச்னை என்றால் உடலில் உள்ள எல்லா பாகங்களும் அதனை உணரும், அந்த கஷ்டத்தை அனுபவிக்கும். அது நல்ல முறையில் இருந்தால் மற்ற எல்லா பாகங்களும் நல்ல முறையில் இருக்கும்.
அந்த உள்ளம் எந்த கசடும் இல்லாமல் தூய்மையானதாக இருந்தால் தான் நம்முடைய அனைத்து உறுப்புகளும் நிம்மதியாக இருக்கும். உள்ளம் அதனுடைய தூய்மை தன்மையை இழக்கும்போது உடலும் நிம்மதியை இழக்கிறது.
அதனை தான் அல்லாஹு தஆலா தன அருள் மறையில் :
قال الله تعالى:( يوم لا ينفع مال ولا بنون* إلا من أتى الله بقلب سليم)
அந்நாளில், பொருளும் மக்களும் யாதொரு பயனுமளிக்காது. ஆயினும், பரிசுத்த உள்ளத்துடன் (தன் இறைவனாகிய) அல்லாஹ்விடம் வருபவர்தான் (பயனடைவார்).
இப்படிப்பட்ட சிறந்த பரிசுத்தமான உள்ளம் உடையவர்கள் தான் இந்த உலகின் சிறந்த மனிதர்கள்.
அவர்கள் தான் மக்களில் சிறந்தவர்கள் :
فعن عبد الله بن عمرو بن العاص رضي الله عنهما قال: قيل لرسول الله صلى الله عليه وسلم: أي الناس أفضل؟ قال:அ كل مخموم القلب، صدوق اللسانஞ. قالوا: صدوق اللسان نعرفه، فما مخموم القلب؟ قال:அ هو التقي النقي، لا إثم فيه ولا بغي، ولا غل ولا حسد
உறுதியான அமல் :
قال أحد الصحابة رضي الله عنه: ما من عملي شيء أوثق عندي من اثنتين: أما إحداهما فكنت لا أتكلم فيما لا يعنيني، وأما الأخرى فكان قلبي للمسلمين سليما
இப்படிப்பட்ட தூயமையான இதயம் நமக்கு கிடைக்க பெற்றவர்கள் தான் வெற்றியாளர்கள் என்பதாக அல்லாஹு தஆலா தன் அருள்மறையில் கூறுகின்றான் :
وَالشَّمْسِ وَضُحَاهَا (1) وَالْقَمَرِ إِذَا تَلَاهَا (2) وَالنَّهَارِ إِذَا جَلَّاهَا (3) وَاللَّيْلِ إِذَا يَغْشَاهَا (4) وَالسَّمَاءِ وَمَا بَنَاهَا (5) وَالْأَرْضِ وَمَا طَحَاهَا (6) وَنَفْسٍ وَمَا سَوَّاهَا (7) فَأَلْهَمَهَا فُجُورَهَا وَتَقْوَاهَا (8) قَدْ أَفْلَحَ مَن زَكَّاهَا
சூரியன் மீதும், அதன் பிரகாசத்தின் மீதும், (அது அஸ்தமித்ததற்குப்) பின் உதயமாகும் சந்திரன் மீதும், (சூரியன்) பிரகாசிக்கும் பகலின் மீதும், (அதனை) மறைத்துக்கொள்ளும் இரவின் மீதும், வானத்தின் மீதும், அதை அமைத்தவன் மீதும், பூமியின் மீதும், அதை விரித்தவன் மீதும், ஆத்மாவின் மீதும், அதனை (மனிதனாக) உருவாக்கியவன் மீதும், அதன் நன்மை தீமைகளை அதற்கறிவித்தவன் மீதும் சத்தியமாக! எவன் (பாவங்களை விட்டும் தன் ஆத்மாவைப்) பரிசுத்த மாக்கிக் கொண்டானோ அவன், நிச்சயமாக வெற்றியடைந்து விட்டான். எவன் அதனைப் (பாவத்தில்) புதைத்து விட்டானோ அவன், நிச்சயமாக நஷ்டமடைந்துவிட்டான். (91: 1-10)
இப்படி, உள்ளத்தின் தூயமையை இதனை வலியுறுத்தி, வேறெந்த செய்திகளையும் இத்தனை சாத்தியங்களை கொண்டு சொல்லாத அளவுக்கு, பத்து சாத்தியங்கள் செய்து அல்லாஹு தஆலா வலியுறுத்தி கூறுகின்றான்.
இந்த தூய்மை நமக்கு எங்கிருந்து கிடைக்கும் ?
சோதனைகளை தரும் அவனே அதிலிருந்து மீண்டு வருவதற்கான வலிகளையும் காட்டுகின்றான். நோயை தரும் அவனே, அதற்கான நிவாரணங்களையும் தருகின்றான்.
கட்டளைகளை இடும் அவனே தான் அதனை நிறைவேற்றும் வழிமுறைகளையும் சொல்லி தருகின்றான்.
يٰۤاَيُّهَا النَّاسُ قَدْ جَآءَتْكُمْ مَّوْعِظَةٌ مِّنْ رَّبِّكُمْ وَشِفَآءٌ لِّمَا فِى الصُّدُوْرِۙ وَهُدًى وَّرَحْمَةٌ لِّـلْمُؤْمِنِيْنَ
மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து நிச்சயமாக ஒரு நல்லுபதேசம் வந்திருக்கிறது. உங்கள் உள்ளங்களிலுள்ள நோய்களை குணப்படுத்தக் கூடியதுமாகும். (அது) நம்பிக்கைக் கொண்டவர்களுக்கு நேர்வழி காட்டியாகவும், ஓர் அருளாகவும் இருக்கிறது. (10:57)
இப்படி தான் எந்த அருள்மறை குர்ஆனில் உள்ளங்களை தூய்மையாக வைத்திருக்குமாறு கூறுகின்றானோ, அதே திருமறையில் தான் அதற்கான மருந்தையும் வைத்திருக்கின்றான்.
அதற்கான மருந்து :
وقال سبحانه:( اِنَّمَا الْمُؤْمِنُوْنَ الَّذِيْنَ اِذَا ذُكِرَ اللّٰهُ وَجِلَتْ قُلُوْبُهُمْ وَاِذَا تُلِيَتْ عَلَيْهِمْ اٰيٰتُهٗ زَادَتْهُمْ اِيْمَانًا وَّعَلٰى رَبِّهِمْ يَتَوَكَّلُوْنَ)
உண்மையான நம்பிக்கையாளர்கள் யாரென்றால், அல்லாஹ்வை (அவர்கள் முன்) நினைவு கூறப்பட்டால் அவர்களுடைய உள்ளங்கள் பயந்து நடுங்கிவிடும்; அல்லாஹ்வுடைய வசனங்கள் அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கப் பட்டால் அவர்களுடைய நம்பிக்கை (மென்மேலும்) அதிகரிக்கும். அவர்கள் தங்கள் இறைவனையே முற்றிலும் நம்பியிருப்பார்கள். (8:2)
قال الله تعالى:( الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب)
மெய்யாகவே நம்பிக்கை கொண்டிருப்பவர்கள் அவர்கள்தாம்; (அவர்கள் முன்) அல்லாஹ்வின் திருப்பெயர் துதி செய்யப்பட்டால், அவர்களுடைய உள்ளங்கள் நிம்மதியடைந்து விடுகின்றன. (ஏனென்றால்,) அல்லாஹ்வின் திருப்பெயரை துதி செய்வதனால் (உண்மை நம்பிக்கையாளர்களின்) உள்ளங்கள் நிச்சயமாகத் நிம்மதி அடையும் என்பதை (நபியே! நீங்கள்) அறிந்துகொள்ளுங்கள். (13:28)
இப்படி அடுக்கடுக்காக அல்லாஹுத்தஆலா நம்முடைய சிந்தனைகளை குறிப்பிட்டே நிம்மதியை கூறுகின்றான். நம்முடைய சிந்தனை எப்போது அல்லாஹ்வை பற்றியும் அவனது இரசூலை பற்றியும் இருந்து, சதா பொழுதும் அவனுடைய நினைவிலேயே இருக்கின்றோமோ, அப்போது தான் நம்முடைய அந்த உள்ளத்திற்கு நிம்மதி கிடைக்கின்றது என்பதாக அல்லாஹ் சுட்டி காட்டுகின்றான்.
அப்படி அல்லாஹ்வுடைய நினைவை இழந்து வாழ்பவர்கள், மரணித்தவர்களை போன்றவர்கள் என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் கூறி காட்டுகின்றார்கள் :
قال النبي صلى الله عليه وسلم : . مثل الذي يذكر ربه والذي لا يذكر مثل الحي والميت –
நல்லோர்களுடன் இருப்பதும் அதற்கான மாமருந்து :
அதனால் தான் அண்ணல் எம்பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள், நல்லோர்களின் நட்பில் இருப்பதை வலியுறுத்தினார்கள்.
ஏனெனில் அவர்கள் தான் அல்லாஹ்வையும் அவனது இரசூலையும் பின்பற்றி பணிந்து நடப்பதில் உதவி புரிவார்கள், இன்னும் நன்னடத்தையுடன் இருப்பதில் வழிகாட்டுவார்கள்.
அதனால் தான் அல்லாஹு தஆலா அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களுக்கு இப்படி கட்டளை இடுகிறான்.
وَاصْبِرْ نَفْسَكَ مَعَ الَّذِينَ يَدْعُونَ رَبَّهُم بِالْغَدَاةِ وَالْعَشِيِّ يُرِيدُونَ وَجْهَهُ ۖ وَلَا تَعْدُ عَيْنَاكَ عَنْهُمْ تُرِيدُ زِينَةَ الْحَيَاةِ الدُّنْيَا ۖ وَلَا تُطِعْ مَنْ أَغْفَلْنَا قَلْبَهُ عَن ذِكْرِنَا وَاتَّبَعَ هَوَاهُ وَكَانَ أَمْرُهُ فُرُطًا
(நபியே!) எவர்கள் கஷ்டங்களைச் சகித்துத் தங்கள் இறைவனின் திருமுகத்தையே நாடி அவனையே காலையிலும், மாலையிலும் (பிரார்த்தனை செய்து) அழைத்துக் கொண்டிருக் கிறார்களோ அவர்களுடன் உங்களையும் நீங்கள் ஆக்கிக் கொள்ளுங்கள். இவ்வுலக அலங்காரத்தை நீங்கள் விரும்பி அத்தகைய (நல்ல)வர்களை விட்டு உங்கள் கண்களைத் திருப்பி விடாதீர்கள். அன்றி, தன் சரீர இச்சையைப் பின்பற்றியதன் காரணமாக எவனுடைய உள்ளத்தை நம்மைத் தியானிப்பதிலிருந்து நாம் திருப்பி விட்டோமோ அவனுக்கும் நீங்கள் கட்டுப்படாதீர்கள். அவனுடைய காரியம் எல்லை கடந்துவிட்டது. (18:28)
அதே போன்று தான் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் இந்த துஆவையும் நமக்கு கற்று கொடுத்தார்கள் :
قال صلى الله عليه وسلم :அ لقلب ابن آدم أسرع تقلبا من القدر إذا استجمعت غلياناஞ. ولذلك كان رسول الله صلى الله عليه وسلم يكثر أن يقول:அ يا مقلب القلوب ثبت قلبي على دينكஞ. فقال أنس رضي الله عنه: يا رسول الله آمنا بك وبما جئت به، فهل تخاف علينا؟ قال:அ نعم، إن القلوب بين أصبعين من أصابع الله يقلبها كيف يشاء
இப்படி அல்லாஹு தஆலா நம்முடைய உள்ளங்களை தூயமையான உள்ளங்களாக, அவனுக்கும் அவனது தூதர் அண்ணல் நபி ஸல்லள்ளாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களுக்கும் பொருத்தமிக்கவர்களாக நம்மை ஆக்கியருள் புரிவானாக.