வக்கிரத்துக்கு வக்காலத்து!
[ இயற்கைக்கு எதிரான எந்தவித செயலாக இருந்தாலும், அது வளர்ச்சி என்கிற பெயரிலான சுற்றுச்சூழல் பாதிப்பானாலும், தனிமனித சுதந்திரம் என்கிற பெயரிலான வக்கிரங்களானாலும், அது அழிவுக்கு வழிகோலும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.
வக்கிரங்களுக்கு தனிமனித சுதந்திரம் என்கிற போர்வையில் சட்டபூர்வமான பாதுகாப்பு அளிப்பது ஆபத்து. சிறார்மீதான பாலியல் வன்முறைதான், தன்பாலின உறவு உணர்வின் தொடக்கம். ]
உச்சநீதிமன்றம் சமீபத்தில் வழங்கி இருக்கும் ஒரு தீர்ப்பு பரவலான கண்டனத்திற்கும், எதிர்ப்புக்கும் உள்ளாகி இருக்கிறது. இந்தத் தீர்ப்பு ஒரு குடிமகனின் ஜீவாதார உரிமைக்கு எதிரான ஒன்று என ஊடகங்களும் சித்திரிக்க முற்பட்டிருக்கின்றன.
பிரச்னையின் பின்னணி இதுதான். கடந்த 2009ஆம் ஆண்டு தில்லி உயர்நீதிமன்றம், 1860ஆம் ஆண்டிலிருந்து பிரிட்டிஷ் காலனிய ஆட்சியாளர்களால் கொண்டு வரப்பட்ட இந்திய தண்டனைச் சட்டத்தின் 14ஆவது அத்தியாயத்திலுள்ள 377ஆவது பிரிவை, அரசியல் சட்டத்திற்கு எதிரானது என்று ரத்து செய்து தீர்ப்பு வழங்கியது. (இந்த சட்டம் நேற்றைய முன்தினம் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.)
“நான் ஓரினச் சேர்க்கையாளன். மனம் விரும்பி ஓரினச் சேர்க்கையில் ஈடுபடும்போது அதை சட்டம் போட்டுத் தடுப்பது, எங்கள் சுதந்திரத்தில் அரசு தலையிடுவதாக இருக்கும். பதினெட்டு வயதானவர்களுக்கு வாக்குரிமை அளிக்கப்படலாமானால், நாங்கள் எப்படிப்பட்ட உறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை அரசு கட்டாயப்படுத்த வேண்டிய அவசியம் என்ன?” அந்தச் சட்டப் பிரிவு அகற்றப்பட வேண்டும்” என்பதுதான் தன்பாலின உறவாளர்களின் வாதம்.
உச்சநீதிமன்றத் தீர்ப்பு வேதனையளிப்பதாகவும், தீர்ப்பால் பாதிக்கப்பட்டவர்களின் அடிப்படை உரிமையை நிலைநாட்ட நாடாளுமன்றம் தயங்கக்கூடாது என்றும் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி கருத்துத் தெரிவித்திருக்கிறார்.
இந்தத் தீர்ப்பை எதிர்ப்பதன்மூலம் நகர்ப்புற இளைஞர்களின் ஆதரவு கிடைக்கும், தன்பாலின உறவு வைத்துக் கொண்டிருப்பவர்களின் வாக்கு வங்கி மக்களவைத் தேர்தலில் உதவக்கூடும் என்கிற காங்கிரஸ் தலைமையின் அரசியல் வக்கிரத்தின் வெளிப்பாடு இது. தன்பாலினச் சேர்க்கையாளர்களும், இயற்கைக்கு எதிரான வக்கிரங்களை ஆதரிப்பவர்களும் கணிசமான வாக்கு வங்கிகளாக மாறி இருக்கும் நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டிருக்கிறது என்பதே அதிர்ச்சி தருவதாக இருக்கிறது.
வக்கிரங்களுக்கு தனிமனித சுதந்திரம் என்கிற போர்வையில் சட்டபூர்வமான பாதுகாப்பு அளிப்பது ஆபத்து. சிறார்மீதான பாலியல் வன்முறைதான், தன்பாலின உறவு உணர்வின் தொடக்கம். இதுபோன்ற வக்கிரங்களுக்கு சட்டரீதியான பாதுகாப்பு அளித்தால், பாலியல் வன்முறையும்கூட ஒரு வக்கிரம்தானே, அதற்கு மரண தண்டனை கோருவது எப்படி நியாயமாகும்?
இயற்கைக்கு எதிரான எந்தவித செயலாக இருந்தாலும், அது வளர்ச்சி என்கிற பெயரிலான சுற்றுச்சூழல் பாதிப்பானாலும், தனிமனித சுதந்திரம் என்கிற பெயரிலான வக்கிரங்களானாலும், அது அழிவுக்கு வழிகோலும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.
அளவுக்கு அதிகமான தனிமனித சுதந்திரம், மேலைநாடுகளை இதுபோன்ற வக்கிரங்களை அனுமதிக்க வைத்திருக்கிறது. தன்பாலின உறவாளராக இருப்பதில் என்ன தவறு என்று தெருவில் இறங்கி கோஷமிடவும், உரிமை பேசவும் வைத்திருக்கிறது. தன்பாலின உறவுகளே போதுமென்றால் ஆண், பெண் என்கிற இனப்பாகுபாடே அவசியமற்றதே? பிழை படைப்பிலல்ல, இவர்களது மன ஓட்டத்தில்!ர்
சட்டம் போட்டு குற்றங்களைத் தடுத்துவிட முடியாது என்றாலும், நிச்சயமாகக் குறைக்க முடியும். சமுதாயத்தில் வக்கிரங்கள் இருக்கத்தான் செய்யும். வக்கிரங்களை தெரிந்தும் தெரியாமல் இருந்துவிடுவதுதான் நல்லது. அதற்கு அங்கீகாரம் அளிப்பதும் தவறு. பெரிதுபடுத்தி விமர்சிப்பதும் தவறு!’ (நன்றி: தினமணி தலையங்கம்)
‘Homosexual Homosexual is by birth not by choice” என்கிற பதாகையை தாங்கியிருக்கும் இவர்கள் ஓரினசேர்க்கையானது இவர்கள் தேர்வு அல்ல பிறப்பால் ஏற்படுவது என்பதை அறிவியல் பூர்வமாக நிரூபிக்க முடியுமா?
இன்று அரசு, தனிமனித சுதந்திரம் என்கிற பெயரில் இதை ஆதரித்தால் நாளை ஒருவன் தன செல்லப் பிராணிகளுடன் உறவு வைத்துக்கொள்வதும் அன்பின் வெளிப்பாடே என்றும் இது அவன் சுதந்திரம் என்றும் கூறுவான். தன் பால் ஈர்ப்பு என்பது உளவியல் ரீதியான பிரச்சனை. இதை சம்பந்தப்பட்டவர்கள் தான் உளவியல் நிபுணர்களை அணுகி தீர்த்துக்கொள்ள முயல வேண்டும். மேலும் இதை வளர்த்துக்கொள்ள முயலக்கூடாது.
சமுதாயத்தில் இவர்கள் தங்களைத்தாமே தனிமைப் படுத்திக்கொண்டு இத்தகைய உறவுக்கு ஆளாகின்றனர். இத்தனை காலம் வெளியே கூற வெட்கப்பட்டவர்கள் இன்ற சுதந்திரம் என்று பேசுவது நகைப்புக்குரியது.
ஓரினச்சேர்க்கையை ஆதரிப்போர் ஒன்றை மறந்து விட்டார்கள். நாம் மனிதர்களா? அல்லது மனித உருவிலிருக்கும் வேறா? இயந்திர வடிவமைப்புகளுக்கு திட்டமிடப்பட்ட விதிகளையும்,சட்டங்களையும் ஒப்புவோர்… மனிதனுக்கு கூடாது என்றால் அது என்ன?வரை முறைகளற்ற வாழ்வும் வழியும் வளம் அல்ல.அழிவு…சாதாரண அழிவல்ல ஊழி அழிவு.
நாய், பன்றி கூட ஓர் இன சேர்கை பண்றது இல்லையே! அருவருக்கத்தக்க இச்செயலை ஆதரிப்பவர்களின் எண்ணமும் அருவருக்கத்தக்கதே!
அல்-குர்ஆனில் இறைவன் ஓரினச்சேர்க்கை செய்துகொண்டிருந்த லூத் நபி அலைஹிஸ்ஸலாம் அவர்களுடய சமுதாயம் எவ்வாறு அழிக்கப்பட்டது என்பதினை குறிப்பிடுகின்றான் மேலும் லூத்தை (அவர் சமூகத்தாரிடையே நபியாக அனுப்பினோம்;) அவர் தம் சமூகத்தாரிடம் கூறினார்; உலகத்தில் எவருமே உங்களுக்கு முன் செய்திராத மானக்கேடான ஒரு செயலைச் செய்யவோ முனைந்தீர்கள்?” அலகுர்ஆன்:7:80
இன்னும், லூத்தையும் (நபியாக்கி) – நாம் அவருக்கு ஞானத்தையும், கல்வியையும் கொடுத்தோம்; அறுவறுப்பான செயல்களைச் செய்து கொண்டிருந்(தவர்களின்) ஊரை விட்டும் அவரை நாம் காப்பாற்றினோம்; நிச்சயமாக அவர்கள் மிகவும் கெட்ட சமூகத்தினராகவும், பெரும் பாவிகளாகவும் இருந்தனர். அல்குர்ஆன் 21:74 லூத்துடைய குடும்பத்தாரைத் தவிர, மற்றவர்கள் மீது, நாம் நிச்சயமாக கல்மாரியை அனுப்பினோம், விடியற்காலையில் நாம் அவர் குடும்பத்தார்களை பாதுகாத்துக் கொண்டோம். (அல்-குர்ஆன் 54:34)