முஸ்லிம்களைக் கொலை செய்யும் பௌவுத்த பெண்கள்
மியான்மர் (எ) பர்மாவில் நிலவும் அரசியல் சூழ்நிலைகளைப் பற்றி வைகறை வெளிச்சம் வாசகர்களுக்கு நிரம்பவே சொல்லி இருக்கின்றோம். மியான்மரின் மொத்த வரலாற்றையும் வைகறை வெளிச்சம் முந்தைய இதழில் தந்திருக் கின்றோம்.
இப்போது இங்கே தேவையான ஒரு விஷயத்தை மட்டுமே உங்களுக்குச் சொல்லுகின்றோம்.
அது, மியான்மர் என்ற பர்மா, இராணுவ ஆட்சியிலிருந்து ஜனநாயக முறைக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றது. அதன் ஒரு பகுதியாக 2015-இல் நடந்த தேர்தலில் தான், இப்போது ஆட்சியில் அமர்ந்திருக்கும் ஆங் சான் சுஹி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் இராணுவம் இவரிடம் முழுமையாக எல்லா அதிகாரத்தையும் ஒப்படைக்கவில்லை. உள் நாட்டுப் பாதுகாப்பு போன்ற முக்கிய பதவிகளை இராணுவமே கையில் வைத்திருக்கின்றது.
நிவாரணம் வழங்கும், நிவாரணங்களை நம்பியே ஆட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆங் சான் சுஹி-ஐ பிரதமர் என்றோ, குடியரசுதலைவர் என்றோ அழைப்பதில்லை. மாறாக ஆட்சியில் பங்காளி என பொருள்படும் (கவுன்ஸ்டலர்) என்றே அழைக்கின்றார்கள்.
பௌவுத்த தேசியம்
இந்நிலையில் பௌவுத்த தேசியம் என்றொன்றை பவுத்தர்கள் வளர்த்து வருகின்றார்கள். முழுமையாக இராணுவ ஆட்சி அகற்றப்படும்போது, ஆட்சி தங்கள் கைகளில் இருந்திட வேண்டும் என விரும்புகின்றார்கள். இதற்கு பௌவுத்த தேசிய இயக்கம் என்று பெயர், “Bhuddist National Movement”.
இந்த இயக்கத்தில் பெண்கள் அதிகமாக ஆர்வம் காட்டி வருகின்றார்கள்.
இந்த இயக்கத்தின் வளர்சிக்கு முஸ்லிம்களையே எதிரிகளாகக் காட்டி வருகின்றார்கள்.
இந்த இயக்கம், நம் நாட்டிலுள்ள ஆர். எஸ்.எஸ். மற்றும் சங்கப்பரிவார அமைப்புகள் இவற்றிற்கு சற்றும் குறைந்ததல்ல.
இந்த அமைப்பைச் சார்ந்த பெண்களின் செயல்பாடுகளைப் பொறுத்தவரை, அவை நம் நாட்டிலுள்ள துர்கா வாகினி போன்ற அமைப்புகளை விடக் கொடுமையானது.
ரைக்கைன் பகுதியில் வாழும் முஸ்லிம்கள் மீது நடக்கும் தாக்குதல்கள் இந்த அமைப்புகளால் நன்கு திட்டமிடப்பட்டு இராணுவத்தின் உதவியுடன் நடத்தப்படுவதாகும்.
இந்தத் தாக்குதல்கள் நீண்ட நாட்களாகவே நடந்து வருகின்றன. ஒரு கட்டத்தில் (2012 ஆம் ஆண்டில்) ரோகிங்யா முஸ்லிம்கள் 1,29,000 ஒரு லட்சத்து இருபத்து ஒன்பதாயிரம் பேர், மியான்மரின் மேற்கு பகுதியில் அகதிகள் முகாமிலிருந்தார்கள்.
அதாவது தங்கள் சொந்த நாட்டிலேயே அகதிகள் முகாமிலிருந்தார்கள். அவர்கள் அகதிகள் முகாமிலிருந்தார்கள் என்பதை விட சிறையிலிருந்தார்கள் என்பதே உண்மை. சிறை வைத்திருத்தவர்கள் பௌவுத்த மத தீவிரவாதிகள்.
அவர்கள் வெளியே சென்று வேலை செய்ய அனுமதிக்கப்படவில்லை. அவர்கள் இயல்பாகவே கடினமாக உழைப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அகதிகள் முகாமிலிருந்த அவர்களுக்கு உணவு மியான்மரில் இருந்த அரசு தரவில்லை. மாறாக, உலகிலுள்ள நிவாரணம் வழங்கும் நிவாரணங்களை நம்பியே வாழ்ந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் தங்கள் சொந்த நாட்டி லேயே, அகதிகள் முகாமிலிருந்து வெளியே செல்ல வேண்டும் என்றால் அனுமதி சீட்டைப் பெற்றே செல்ல வேண்டும்.
இந்த அனுமதிச் சீட்டு நோய்வாய்ப்பட்டு மருத்துவமனைக்குச் செல்லும்போது மட்டுமே வழங்கப்பட்டது. அதுவும் நோய்வாய்ப்பட்டவர் ரொம்பவும் முடியாமல் சீரியஸாக இருந்தால் மட்டுமே வழங்கப்பட்டது. இப்படி அந்த முஸ்லிம்கள், அகதிகள் முகாம்களிலிருந்து செல்ல முடியாமல் ஆக்கியது பௌவுத்த தேசிய இயக்கத்தைச் சார்ந்த பெண்கள் தொடர்ந்து நடத்திய ஆர்ப்பாட்டங்கள்.
அதேபோல் வெளிநாட்டிலிருந்து வந்த நிவாரணப் பொருள்கள் அகதிகள் முகாம்களைச் சென்றடைந்துவிடாமல் தொடர்ந்து சாலை மறியல், ஆர்ப்பாட்டங்கள் இவற்றை நடத்தியதும், பௌவுத்த இயக்கத்தைச் சார்ந்த பெண்கள். (Source India, Bhuddist National Movement Publishde on 1st Feb 2018)
கர்ப்பிணிப் பெண்களுக்கும் தடை
ரோகிங்யா கர்ப்பிணி பெண்கள் மருத்துவமனைக்குச் சென்றிட தடையாக இருந்தவர்களும் இந்த பௌவுத்த தேசிய இயக்கத்தைச் சார்ந்த பெண்களே!
ஐக்கிய நாடுகளின் நிவாரணக் குழுவைச் சார்ந்த ஒரு நிவாரண பணியாள் இந்தக் கள ஆய்வார்களிடம் இப்படிச் சொன்னார்.
“நான் உலகின் மிகவும் சிக்கலான பல பகுதிகளில் பணியாற்றி இருக்கின்றேன். ஆனால், மியான்மர்-இல் இருப்பதைப் போன்ற தொரு கீழான சூழ்நிலையைச் சந்தித்ததே இல்லை” (Sabrang India, 1st January 2018)
ARAKAN WOMEN’S NET WORK : அராக்கன் பெண்களின் இணையம்
அகதிகள் முகாம்களில் அல்லலுறும் மக்களுக்கு – அதாவது ரக்கைன் பகுதியில் வாழ்ந்த ரோகிங்யா – முஸ்லிம்களுக்குக் கல்வியும், சுகாதார வசதிகள், சுத்தமாக அவர்களின் முகாம்களை வைத்துக் கொள்வதற்கான வசதிகள், இவற்றையெல்லாம் ரோகிங்காய முஸ்லிம்களுக்குத் தந்து விடாமல் தடுத்துக் கொண்டிருப்பது பௌவுத்த பெண்களின் அமைப்பு. அதன் பெயர் அராக்கன் பெண்களின் இணையம்.
இந்த இணையம் – அமைப்பு, அகதிகள் முகாம்களில் செய்து தரப்படும் அடிப்படை வசதிகளைக் கூட தடுத்து பல போராட்டங்களை நடத்தியுள்ளது.
பல நேரங்களில், மியான்மர் முழுவதும் சாலை மறியல், போராட்டங்களை நடத்தி நாட்டையே ஸ்தம்பித்துப் போகச் செய்துள்ளது இந்தப் பெண்கள் அமைப்பு.
இப்படி அவர்கள் முகாம்களில் கூட அந்த மக்களை வாழ்ந்திட விடவில்லை. இந்தப் பெண்கள் அமைப்புகள். அவர்கள் ரோகிங்யா முஸ்லிம்களைப் பற்றிய கள ஆய்வு ஒன்றை நடத்திக் கொண்டிருந்த சர்வதேச பெண்கள் குழு ஒன்று ஏன் இப்படிச் செய்கின்றீர்கள் எனக் கேட்டபோது, “இந்த முஸ்லிம்களுக்குச் செய்யப்படும் எந்த உதவியும் பொறுத்துக் கொள்ள இயலாது அவ்வளவுதான்” எனத் திமிராகப் பதில் சொல்லி இருக்கின்றார்கள். (Source : Buddist National Movement, Sabrang, India)
இதே அமைப்பைச் சார்ந்த இன்னொரு பெண் இப்படிப் பதில் சொல்லி இருக்கின்றார்கள்.
“They have food, they have Shelter to live… We can’t accept these kinds of excess things for them.”
அதாவது, அவர்களுக்கு உணவு கிடைக்கின்றது. தங்குவதற்கு தலைக்கு மேலே ஒரு கூரைக் கிடைக்கின்றது. அங்கே அவர்களுக்கு உயிருட னிருக்கும் அவகாசம் கிடைக்கின்றது. இது போன்ற அதிக வசதிகளை எங்களால் ஒத்துக் கொள்ள இயலாது. (ஆதாரம்: Sabrang India) : Buddist Nationalist Movement)
இதில் மிகப்பெரிய ஆபத்து என்னவெனில் இந்த புதிய பத்மிய புத்த தேசியத் (தீவிரவாத இயக்கம், மியான்மரில் பரவலாக எங்கும் பரவி வருகின்றது.)
முஸ்லிம்களை வெறுக்க வளர்த்த சித்தாந்தங்கள்
இந்த பர்மிய தேசிய (தீவிரவாத) இயக்கம், மக்களிடையே ஒரு சித்தாந்தத்தைப் பரப்பி வருகின்றது. அது “முஸ்லிம்களால் ஏற்படும் உள்நாட்டு, வெளிநாட்டுப் ஆபத்துகள்” என்பதை மையமாகக் கொண்டது.
முஸ்லிம்களுக்கெதிராக மக்களிடையே பீதியைக் கிளப்பிட இந்த பர்மிய புத்த தேசிய (தீவிரவாத) இயக்கத்தினர் (At the gross Roots) இன்னொரு இமாலயப் பொய்யையும் பரப்பி வருகின்றார்கள்.
அது, “புத்தர்களின் கடைசிப் புகலிடமாகப் பர்மாதான் இருந்து வருகின்றது. அதையும் முஸ்லிம்கள் தட்டிச் சென்று விடுவார்கள் போலிருக்கின்றது. ஆகவே முஸ்லிம்களைக் கொன்றொழித்தால்தான், பௌவுத்தத்தையும், பர்மாவையும் காப்பாற்றிட முடியும்“ என்பதே அந்த இமாலயப் பொய்.
இதனை இமாலயப் பொய் என ஏன் சொல்லுகின்றோம் என்றால் மியான்மரின் மொத்த தொகை ஐந்து கோடியே நாற்பது லட்சம். இதில் 5 சதவிகிதம் மட்டுமே முஸ்லிம்கள். அதாவது 27 லட்சம் பேர் முஸ்லிம்கள்தாம் வாழுகின்றார்கள். இந்த ஐந்து சதவிகித்தனர் மீதமுள்ள 95 சதவிகிதத்தினரை விழுங்கி விடுவார்கள் என்பது ஓர் இமாலயப் பொய் என்பதுதான் உண்மை.
ஆனால் இவர்களின் இடைவிடாப்பிரச்சாரம் மக்களைப் பெருவாரியாக நம்பிடச் செய்துள்ளன.
தங்களது பொய்களை மக்கள் நம்பிடச் செய்திட, இவர்கள் இன்னொரு தந்திரத்தைக் கையாண்டு வருகின்றார்கள். அது மியான்மரின் பக்கத்து பங்களாதேஷிலிருந்து இஸ்லாம் வந்து புகுந்து விடும் என்பது தான். இதனால் “ரக்கைன்” மாநிலத்தை அதாவது ரோகிங்யா முஸ்லிம்கள் அதிகமாக வாழும் ரைக்கையின் மாநிலத்தை இஸ்லாத்தின் மேற்கு வாயில் என அழைக்கின்றார்கள்.
தொடக்கக் காலத்தில் பங்களாதேஷ் நாடு அகதிகளாக வந்த ரோகிங்யா முஸ்லிம்களை ஏற்றுக் கொள்ளவில்லை. இப்போது ஆகஸ்ட்- 25, 2017-இல் நடந்த சுத்திகரிப்பின்போது துருக்கியின் குடியரசு தலைவர் எர்துக்கான் அவர்கள் தலையிட்ட பின்னரே ரோகிங்யா முஸ்லிம்களை அகதிகள் முகாம்களில் அனுமதிக்கின்றார்கள்.
ஆக, பங்களாதேஷிலிருந்து இஸ்லாம், இங்கே வந்து பௌத்ததத்தை அழித்துவிடும் என்பது பொய்யே!
ஆனால் புத்தமத போதகர்கள் தொடர்ந்து ஒரு பெரும்போரை நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். அதில் “போர் காலங்களில் பௌவுத்தர்கள் அல்லாதவர்கள் கொலை செய்வது அனுமதிக்கப்பட்டதே எனச் சொல்லி முஸ்லிம்களைக் கொலை செய்து கொண்டிருக்கின்றார்கள். காரணம், பௌவுத்தர்கள் அல்லாதவர்கள் முழுமையான மனிதப் பிறவிகள் அல்ல எனப் பிரச்சாரம் செய்கின்றார்கள்” (Source@cjwerlaman-Nov-2, 2017)
Ma Ba Tha மா.பா.தா என்ற குழுமம்
இந்த அமைப்பை ஆங்கிலத்தில் இனம், மதம் இவற்றை பாதுகாப்பதற்கான குழுமம் (The Association for The protection of Race and Religion) இந்தக் குழுமம் 2013 ஆம் ஆண்டு முறையாக அமைக்கப்பட்டது.
இந்த அமைப்பு பல்வேறு சமுதாயப் பணிகளின் வழி மக்களைச் சென்றடைகின்றன. அந்த மக்களிடம் முஸ்லிம்களை அழிப்பதன் அவசியத்தைப் பிரச்சாரம் செய்கின்றன.
இந்த அமைப்பில் பெண்கள் தங்களை அதிகமாக இணைத்துக்கொண்டு அதீதமான ஈடுபாடுகளுடன் பணியாற்றி வருகின்றார்கள்.
இவர்கள் மியான்மர் அரசுக்குத் தந்த அழுத்தங்களின் அடிப்படையில், “ Race and Relegious Law” என்றொரு சட்டத்தை இயற்றியுள்ளது. 2015 ஆம் ஆண்டில் இயற்றப் பெற்ற இந்தச் சட்டம், முஸ்லிம் பெண்களை மையமாகக் கொண்டது. இந்தச் சட்டம் முஸ்லிம் பெண்களின் திருமண வயது, குழந்தைகளைப் பெறுவது அனைத்தும் அரசின் அனுமதியோடு தான் நடக்க வேண்டும் என்கிறது.
அரசிடமிருந்து திருமணத் தகுதி சான்றிதழ் ஒன்றை பெற்ற பிறகே அவர்கள் திருமணம், செய்து கொள்ள முடியும்.
அதேபோல் பௌவுத்தர்கள் அல்லாதவர்களை பௌவுத்தப் பெண்கள், திருமணம் செய்து கொள்வதாக இருந்தால் அதற்கான அனுமதியை அரசிடம் பெற்ற பின்பே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்கின்றது.
அந்த ஆண்மகனை புத்தமதத்திற்கு மாற்றிய பின்பே திருமணம், செய்துகொள்ள முடியும் என இந்தச் சட்டம் கூறுகின்றது.
இந்த மா.பெ.தாஸ் குழுமத்திலுள்ள பெண்கள் தங்கள் ஓய்வு நேரத்தை முதியோர் கல்வி பாலர் பாடம் எனச் செலவிடுகின்றனர். இங்கெல்லாம் முஸ்லிம்களை வெறுக்கக் கற்றுக் கொடுக்கின்றார்கள்.
மியான்மரில் பல நூறு கிராமங்களில் இந்த அமைப்பினர் நடத்தும் கல்விக் கூடங்களே கல்வி பெற இருக்கும் ஒரே வாய்ப்பு. இந்தக் கல்வி கூடங்களையும் பெண்களே நடத்துகின்றார்கள்.
இந்த அமைப்பை ஆய்வு செய்தவர்கள் இது ஐரோப்பாவிலுள்ள White Supremacist என்ற வெள்ளையர்களே உயர்ந்தவர் என்ற அமைப்பையும் இந்தியாவிலிருக்கும் “Hindu Nationalist” இந்து தேசிய அமைப்பையும் போன்ற கொலைக்கார அமைப்பு என்கின்றார்கள்.
Source : Sabarang India, Feb, 2018
மு. குலாம் முஹம்மது
(ஆசிரியர் வைகறை வெளிச்சம்
நிறுவனர் விடியல் வெள்ளி)
source: https://mgmjournalismtn.blogspot.com/2018/09/blog-post_2.html