Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

உஸ்மானிய கிலாஃபத்தின் வீழ்ச்சி..!

Posted on September 1, 2018 by admin

உஸ்மானிய கிலாபஃத்தின் வீழ்ச்சி..!

1881-ம் ஆண்டில் இருந்து தூனிஸியாவை பிரான்சும் எகிப்தை பிரித்தானியாவும் இந்தோனேசியாவை நெதர்லாந்தும் கைப்பற்றியது. இஸ்லாமிய கிலாபத்தைப் பாதுகாக்க இந்தியா, இந்தோனேசியா போன்ற நாடுகளின் ஆதரவை ll’ம் ஹமீத் திரட்டினார்.

பிரித்தானியாவிடம் இருந்து இஸ்லாமிய அரசைப் பாதுகாக்க சுல்தான் ஜேர்மனியுடன் கூட்டுச் சேர்ந்தார். ஆனால் உஸ்மானியக் கிலாபத்தை துண்டாடுவதே ஜேர்மனியின் நோக்கமாக இருந்தது என்பதை அறிந்த அவர் தன் மேல் ஒரு கட்டடத்தின் சுவர் விழுந்ததைப் போன்று இருந்ததாக தனது சொந்த நாட்குறிப்பேட்டில் எழுதி வைத்துள்ளார்.

1901-ம் ஆண்டு யூதர்களை பலஸ்தீனில் குடியமர்த்துவதற்காக அனுமதி கோரி சியோனிஸ அமைப்பின் தலைவர் தியேட்டர் ஹேர்ஸில் சுல்தானை சந்திக்க துருக்கி சென்று பலஸ்தீனில் யூதர்களை குடியமர்த்த 150 மில்லியன் பவுண்ட்களை சுல்தானுக்கு பரிசாகத் தருவதாகக் கூறினார். ஆனால் ஹேர்ஸிலை சந்திக்க சுல்தான் மறுப்புத் தெரிவித்தார். மறுநாள் அமைச்சரவை கூட்டி சுல்தான் பின்வருமாறு உரையாற்றினார்.

“பலஸ்தீனை பணம் கொடுத்து வாங்குவதற்கான முயற்சிகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டாம். பலஸ்தீனின் ஒரு பிடி மண்ணை கொடுக்கவும் நான் அனுமதிக்க மாட்டேன். முஸ்லிம் உம்மத் தனது இரத்தத்தை தண்ணீராக புனித புமியில் தியாகம் செய்திருக்கிறது. யூதர்களின் பணத்தை அவர்களே வைத்துக்கொள்ளட்டும். இஸ்லாமிய கிலாபத் ஒழிக்கப்படும் நாளில் பணம் கொடுக்காமலேயே அவர்கள் பலஸ்தீனை பெற்றுக்கொள்ளட்டும். நான் உயிரோடு இருக்கும் போது பலஸ்தீன் துண்டாடப்படுவதை விட எனது உடல் வாளால் வெட்டப்படுவதையே விரும்புகிறேன்.”

ll’அப்துல் ஹமிதை பதவி கவிழ்க்க பிரான்ஸ், பிரித்தானியா, ரஷ்யா போன்ற நாடுகள் மும்முரமான முயற்சிகளை மேற்கொண்டன. சிறுபான்மை கிறிஸ்தவர்களை பாதுகாக்கும் போர்வையில் Armenian Revolutionary Federation ஐ இந்த நாடுகள் இஸ்லாமிய அரசுக்கு எதிராக தூண்டிவிட்டு வேடிக்கை பார்த்தனர் இறுதியாக இவர்களை வைத்து சுல்தானை கொலை செய்ய திட்டங்கள் வகுக்கப்பட்டன.

ll’ம் அப்துல் ஹமீத் தெழுகைக்கு சொல்லும் யில்திஸ் பள்ளிவாசல் முதல் சுல்தான் பள்ளி வாசல் வரை குண்டுகளை வெடிக்கச் செய்து கொலை முயற்சியில் ஈடுபட்டனர் அனைத்து முயற்சிகளும் தோல்வியை தழுவியது.இத் தாக்குதல் பற்றி ஆஸ்ட்ரிய நாட்டின் எழுத்தாளர் Erich Feigl தனது A Myth of terror: Armenian Extremism, Its Causes and Its Historical Context என்ற புத்தகத்தில் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.

மேற்கு நாடுகளில் கல்வி கற்ற தேசிய இளம் துருக்கியர்களை வைத்து ll’அப்துல் ஹமீதை பதவி கவிழ்பதற்கான முயற்சிகள் தீவரமாக மேற்கொள்ளப்பட்டன. சுல்தானை பதவி நீக்குமாறு முஸ்தபா கமால் அத்தா துர்க் தலைமையில் தேசிய இளம் துருக்கியர்கள் பாராளுமன்றத்தில் தொடர்ந்து அழுத்தம் கொடுத்தனர்.

1909-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27ம் திகதி துருக்கி சட்டமன்ற செனட் சபையின் 240 உறுப்பினர்களும் சுல்தான் பதவி விலக வேண்டும் என்று சட்டமூலத்தை நிறைவேற்றினார்கள். அன்றைய ஷெய்குல் இஸ்லாம் முஹம்மத் தியாஅத்தீன் எபந்தி சுல்தான் பதவி நீக்கபட்டமைக்கான பத்வாவை வாசித்தார்.

பதவி விலகப்பட்டதை அறிவிப்பதற்கான சுல்தானிடம் 4 பேர் அடங்கிய பிரதிநிதிகள் சென்றனர். இதில் இமானுவேல் க்ரஷோவ் என்ற யூதனும் அடங்கியிருந்தான். நாட்டு மக்கள் உங்களைப் பதவியில் இருந்து அகற்றியுள்ளார்கள் என கூறிய போது சுல்தான் மக்கள் என்னை பதவியில் இருந்து அகற்றினார்கள் என்றால் அதனை ஏற்றுக்கொள்ளலாம் ஆனால் ஒரு கலீபாவை பதவி விலக்க ஏன் ஓரு யூதனை அழைத்து வந்திருக்கிறீர்கள் என இமானுவேல் கிரஷோவை சுட்டிக் காட்டி சுல்தான் கேட்டார்.

ll’அப்துல் ஹமீதுக்கு பின்னர் ஆட்சி செய்த 3 கலீபாக்களும் தேசிய இளம் துருக்கியரின் கைபொம்மையாகவே செயற்பட்டனர். 33 வருட ஆட்சியிக்கு பின்னர் சுல்தான் ll’ம் அப்துல் ஹமீத் 1918ம் ஆண்டு பிப்ரவரி மாதம்10 தோதி இவ்வுலகை விட்டு பிரிந்தார்.

1924ம் ஆண்டு நவீன துருக்கியின் தந்தை என்று அழைக்கப்படும் முஸ்தபா கமால் அத்தா துர்க்கினால் கிலாபத் ரத்து செய்யப்பட்டது 1300 ஆன்டுகள் நீடித்த இஸ்லாமிய (ஆட்சி)சூரியன் மறைந்தது இன்ஷா அல்லாஹ் மீண்டும் உதயமாகும்…

source:   https://www.facebook.com/fayas.ahamed.5454/posts/2131465220456477?__tn__=K-R

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

− 9 = 1

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb