மனிதன்
அல்லாஹு தஆலா நமக்கு செய்த மிகப்பெரிய கிருபை நம்மை மனித குலத்திலே பிறக்க செய்து, அதிலும் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அன்னவர்களின் சிறப்பு மிக்க உம்மத்திலே நம்மை கொண்டு வந்தான்.
அல்லாஹ் தன் அருள்மறையில் :
ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا
ஆதமுடைய சந்ததியை நிச்சயமாக நாம் கண்ணியப்படுத்தினோம். கரையில் (வாகனங்கள் மீதும்) கடலில் (கப்பல்கள் மீதும்) நாம்தான் அவர்களைச் சுமந்து செல்(லும்படிச் செய்)கிறோம். நல்ல உணவுகளையும் நாமே அவர்களுக்கு அளிக்கிறோம். நாம் படைத்த (மற்ற உயிரினங்களில்) பலவற்றின் மீது (பொதுவாக) நாம் அவர்களை மிக மிக மேன்மையாக்கி வைத்திருக்கிறோம். (17:70)
இப்படி அல்லாஹ் நம்மை சிறந்த முறையில் சங்கை படுத்தியுள்ளான். எல்லா வகையிலும் நமக்கு வேண்டியவற்றையு தாராளமாக அவனது கிருபையை கொண்டு பகிர்ந்தளித்துள்ளான்.
இன்னும் இந்த மனித படைப்பை படைத்து மலக்குமார்களையும் ஸஜ்தா செய்ய வைத்து சங்கை படுத்தினான்.
إذ قال ربك للملائكة إني خالق بشرا من طين* فإذا سويته ونفخت فيه من روحي فقعوا له ساجدين * فَسَجَدَ الْمَلٰٓٮِٕكَةُ كُلُّهُمْ اَجْمَعُوْنَۙ
உங்களது இறைவன் மலக்குகளை நோக்கி, “நான் மனிதனைக் களிமண்ணால் படைக்கப் போகிறேன்” என்று கூறிய சமயத்தில், நான் அவரைச் செப்பனிட்டு, அவருக்குள் (நாம் படைத்த) நம்முடைய உயிரையும் புகுத்தினால் அவருக்கு நீங்கள் சிரம் பணிந்து வழிபடுங்கள் என்றும் கூறினான்.” (அச்சமயம்) மலக்குகள் அனைவருமே சிரம் பணிந்தார்கள். (38: 71,72,73)
மனிதனை பல்வேறு வகைகளில் பிற படைப்பினங்களை காட்டிலும் சங்கை படுத்தியுள்ளான்.
இன்னும் நமக்கு புரிந்த அருள்களை அல்லாஹ் :
أَلَمْ نَجْعَل لَّهُ عَيْنَيْنِ (8) وَلِسَانًا وَشَفَتَيْنِ (9) وَهَدَيْنَاهُ النَّجْدَيْنِ
(பார்க்கக்கூடிய) இரு கண்களையும், நாம் அவனுக்குக் கொடுக்கவில்லையா?அவ்வாறிருந்தும் உண்மையை அவன் கண்டுகொள்ள வில்லை.) (பேசக்கூடிய) ஒரு நாவையும், இரு உதடுகளையும் (நாம் அவனுக்குக் கொடுக்கவில்லையா? அதனைத் தானாகவே அவன் அடைந்துவிட்டானா?) அன்றி, (நன்மை தீமையின்) இரு வழிகளையும் நாம் அவனுக்குப் பிரித்தறிவித்தோம்; (90: 8,9,10)
ما أريد منهم من رزق وما أريد أن يطعمون* إن الله هو الرزاق ذو القوة المتين
அவர்களிடத்தில் நான் யாதொரு பொருளையும் கேட்கவில்லை. அன்றி, எனக்கு உணவு கொடுத்துக் கொண்டிருக்குமாறும் கோரவில்லை. (ஆகவே,) (நபியே! நீங்கள் கூறுங்கள்:) நிச்சயமாக அல்லாஹ்தான் அனைவருக்கும் உணவளிப்பவனும், அசைக்கமுடியாத பலசாலியுமாவான். (51: 57,58)
இத்தனை அருட்களை நமக்கு வாரி வழங்கிய நம் இறைவனுக்கு நாம் நன்றியுள்ளவனாக இருக்கின்றோமா ? அவன் சொன்னவற்றை நாம் செய்கின்றோமா? என்று நம்மில் எதனை பேர் சிந்திப்பதுண்டு ?
நாம் என்ன செய்ய வேண்டும்?
அல்லாஹு தஆலா கூறும்பொழுது :
وما خلقت الجن والإنس إلا ليعبدون
”ஜின்களையும், மனிதர்களையும் (எனக்கு வழிப்பட்டு) என்னை வணங்குவதற்கன்றி (வேறெதற்காகவும்) நான் படைக்க வில்லை.” (51:56)
அவனை அறிந்து வணங்க சொல்கின்றான். அவனை சிந்துது விளங்க சொல்கின்றான். நம்முடைய உள்ளத்தில் அவனை நினைக்க சொல்கின்றான். நான் எதை செய்கின்றோம்?
وَهُوَ الَّذِي سَخَّرَ الْبَحْرَ لِتَأْكُلُواْ مِنْهُ لَحْمًا طَرِيًّا وَتَسْتَخْرِجُواْ مِنْهُ حِلْيَةً تَلْبَسُونَهَا وَتَرَى الْفُلْكَ مَوَاخِرَ فِيهِ وَلِتَبْتَغُواْ مِن فَضْلِهِ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ * وَأَلْقَى فِي الأَرْضِ رَوَاسِيَ أَن تَمِيدَ بِكُمْ وَأَنْهَارًا وَسُبُلاً لَّعَلَّكُمْ تَهْتَدُونَ * وَعَلامَاتٍ وَبِالنَّجْمِ هُمْ يَهْتَدُونَ * أَفَمَن يَخْلُقُ كَمَن لاَّ يَخْلُقُ أَفَلا تَذَكَّرُونَ
”அவன்தான் நீங்கள் மீன்களைப் (பிடித்துச் சமைத்துப்) புசிக்கவும், நீங்கள் ஆபரணமாக அணியக்கூடிய பொருள்களை எடுத்துக்கொள்ளவும் கடலை (உங்களுக்கு) வசதியாக்கித் தந்தான். (பல இடங்களுக்கும் சென்று வர்த்தகத்தின் மூலம்) இறைவனின் அருளை நீங்கள் தேடிக்கொள்ளும் பொருட்டு (கடலில் பயணம் செய்யும்பொழுது) கப்பல் கடலைப் பிளந்துகொண்டு செல்வதை நீங்கள் காண்கிறீர்கள். (இதற்காக இறைவனுக்கு) நீங்கள் நன்றி செலுத்திக் கொண்டிருப்பீர்களாக!
உங்களைச் சுமந்திருக்கும் பூமி அசையாதிருப்பதற்காகப் (பெரிய) பெரிய மலைகளை அதன் மீது வைத்தான். நீங்கள் (உங்கள் போக்குவரத்துக்கு) ஆறுகளையும் நேரான வழிகளையும் அறிவதற்காகப் பல பாதைகளை அமைத்தான்.
(பகலில் திசைகளை அறிவிக்கக்கூடிய மலைகள் போன்ற) அடையாளங்களைக் கொண்டும் (இரவில்) நட்சத்திரங்களைக் கொண்டும் (பயணிகள்) தங்கள் வழியை அறிந்து கொள்கின்றனர்.
(இணைவைத்து வணங்குபவர்களே! இவை அனைத்தையும்) படைத்த வல்லவன் (நீங்கள் வணங்கும்) ஒன்றையுமே படைக்க முடியாதவைகளைப் போலாவானா! இவ்வளவு கூட நீங்கள் கவனிக்க வேண்டாமா?” (16: 14,15,16)
எப்படி வாழ வேண்டும்?
அவனுக்கு ப்ரியமானவர்களாக வாழ வேண்டும். நம்முடைய செயல்களை அவனுக்கு ப்ரியமுடையதாக அமைத்து கொள்ள வேண்டும்.
அவனை வணங்குவது மட்டும் தான் அவனுக்கு பிரியமானது என்பதல்ல. அவற்றையெல்லாம் தாண்டி பல செய்திகளை கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் சொல்லித்தருகின்றார்கள்.
. أحب الناس إلى الله تعالى أنفعهم للناس قال رسول الله صلى الله عليه وسلم
“மக்களில் அல்லாஹ்வுக்கு பிடித்தமானவர் பிற மக்களுக்கு பயனுள்ளவராக வாழ்பவரே” என்று சொன்னார்கள் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள்.
மனிதனாக வாழ்கின்றோமா?
ஆனால், நாம் வாழும் இந்த வாழ்க்கையில் ஓர் சாதாரண மனிதனாக வாழ்கின்றோமா என்பதே கேள்விக்குறி தான் என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை.
பிற நம்மை சாராத மக்களுக்கு நாம் பயனுள்ளவராக வாழ்வது ஒரு புறம் இருக்கட்டும். இன்று நம்மை சுற்றியுள்ள தாய் தந்தை, குடும்பத்தினர், சொந்த பந்தங்களுக்கு பயனுள்ளவராக இருக்கின்றோமா ?
وَوَصَّيْنَا الْاِنْسَانَ بِوَالِدَيْهِ اِحْسَانًا ؕ
மனிதன் தன்னுடைய தாய் தந்தைக்கு நன்றி செலுத்தும்படி நாம் அவனுக்கு நல்லுபதேசம் செய்தோம்.
واتقوا الله الذي تساءلون به والأرحام
இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்தக் கலப்பு உறவினர் களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்.
قال رسول الله صلى الله عليه وسلم :அ إن الله أوحى إلي: أن تواضعوا حتى لا يفخر أحد على أحد، ولا يبغي أحد على أحد .
நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் சொன்னார்கள் : அல்லாஹ் எனக்கு ஒருவருக்கொருவர், பெருமையடித்து கொள்ளாமல் விருப்புவெறுப்பின்றி பணிவுடன் இருக்குமாறு எனக்கு வஹி அறிவித்தான்.
என்பதாக சொன்னார்கள். ஏனென்றால், நாம் மனிதர்கள் என்ற வகையில் அனைவரும் சமமானவர்களே. நாம் அனைவரும் ஒரே விதத்திலிருந்து தான் வந்தோம். நம் அனைவருக்கும் ஒரே தந்தை தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.