ஹலாலான வியாபாரத்தை ஹராமாக மாற்றிக்கொள்ளும் சில வியாபாரிகள்
பேருவளையில் அதிகமானவர்கள் செய்யும் வியாபாரம் மாணிக்க வியாபாரம் இதில் சிலர் வியாபாரத்தில் எது ஹலால்? எது ஹராம்? என்ற விளக்கம் இல்லாமல் வியாபாரத்தில் ஈடுபட்டு பணம் சம்பாதிக்கிறார்கள்
இன்றைய உலகில் வியாபாரம் என்றால் என்ன இஸ்லாம் வியாபாரத்தை பற்றி என்ன கூறுகிறது என்று பார்க்காமல் இன்றை வியாபாரம் செல்கிறது.
வியாபாரத்தைப் பற்றி அல்லாஹ் தன் திருமறையில் 2:275 வசனத்தில் குறிப்பிடுகிறான்:
”அல்லாஹ் உங்களுக்கு வியாபாரத்தை அனுமதித்திருக்கிறான். ஆனால் அல்லாஹ் கூறும் வியாபாரத்தில் அளவை நிறுவையில் மோசடி, பொய்யான வாக்குறுதி, பொருள் கலப்படம், குறையுள்ள பொருள் விற்பனை, வாங்குபவரை ஏமாற்றுதல், பொருள் விற்பனைக்காக அல்லாஹ் மீது சத்தியம் செய்தல், பொருளை பதுக்குதல், கொள்ளையடித்தல், திருடுதல், அல்லாஹ் ஹராமாக்கிய பொருளை விற்பனை செய்தல் அல்லது வாங்குதல், வாங்கிய பொருள் கைக்கு வருவதற்கு முன் விற்பனை செய்தல் போன்ற எண்ணற்ற குறைபாடுகள் கிடையாது.
ஆனால் இன்றைய வியாபாரத்தில் இவையெல்லாம் வியாபார நுணுக்கங்களாக தலை தூக்கிவிட்டன. பலர் எந்த வியாபாரம் ஹலாலானது, எந்த வியாபாரம் ஹரமானது என்பதை அறியாமலேயே வியாபாரம் செய்து வருகின்றனர். இதனால்தான் வியாபாரியாக இருந்து வாழ்க்கையை நடத்தும் முஸ்லிம்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பற்கு இஸ்லாம் சில வரையறைகளை விதிக்கிறது.
நம்ம ஊரை பொறுத்தமட்டில் அதிகமானவர்கள் செய்யும் வியாபாரம் மாணிக்க வியாபாரம் அல்லாஹ் நம்மளுக்கு வழங்கிய பெரும்மொரு நிஹ்மத் என்றுதான் சொல்லவேண்டும் இந்த வியாபாரம் இது ஒரு பரக்கத்தான வியாபாரம் இதை பொய்யும் புரட்டும் நம்பிக்கை துரோகங்கள் செய்யது ஹராமாக மாற்றிக் கொள்கிறார்கள் சில வியாபாரிகள்.
இன்று இந்த வியாபாரத்தில் வேடிக்கையான விடையம் என்ன தெரியுமா இதில் பொய் பேசாவிட்டால் ஏமாற்றம் செய்யாவிட்டால் நம்பிக்கை துரோகம் செய்யாவிட்டால் அது வியாபாரமாக இருக்காது இதில் ஏதாவது ஒன்று இருந்தால்தானாம் பிழைக்கலாம் இல்லாவிட்டால் முடியாதாம் அந்த வகையில் இன்று செல்கிறது இந்த வியாபாரம்.
இன்று இந்த வியாபாரத்தில் இஸ்லாம் தடுத்த அனைத்து வழிமுறைகளும் இதில் அரங்கேறுகிறது நம்பிக்கை துரோகம் பொய் அளவு நிருவையில் மோசடி. அளவு நிருவையை பற்றி தனி தலைப்பில் பேசலாம் அவ்வளவு அறியாமை இதில் உண்டு இந்த வியாபாரத்தில் அதை வேறொரு பதிவில் பார்ப்போம்
இதில் நம்பிக்கை துரோகிகள் எப்படிதேரியுமா இருப்பார்கள் ஒரு மாணிக்கக்கல்லை கொடுத்து இதை உதாரணமாக 10000 ரூபாக்கு விலை வந்தால் விற்று விடு என்று சொல்லி கொடுத்தால் அதை வாங்கும் வியாபாரிகள் 8000 ரூபாவுக்கு கேட்டால் இந்த துரோகிகள் விற்பனை செய்ய சொல்லி கொடுத்த அந்த உரிமையாளருக்கு call செய்து சொல்லுவார் 6000 ரூபா தான் விலை வருகிறது அதற்கு அதிகமாக யாரும் கேட்க வில்லை என்பார்கள் 2000 ரூபாவை அவன் வைத்துக்கொள்வான் இந்த இரண்டாயிரம் ரூபாவும் ஹராம் எங்கிரதை அவன் உணரமாட்டான் இந்த காசை கொண்டுபோய் அவன் பிள்ளைகள் மனைவியை இப்படி அனைவருக்கும் சாப்புட கொடுப்பார்கள்
அவனிடமிருந்து இதை எப்படியாவது வாங்க வேண்டும் என்பதற்காக சில சமயங்களில் அந்த ஹரானான வியாபாரத்துக்கு ஹலளாக காசு கொடுத்து வாங்கும் வியாபாரியும் உடர்ந்தையாக இருப்பார்கள்
இவர்கள் 8000 ரூபா கேட்ட பின்னர் அந்த புளொக்கர் இடம் சொல்லுவார் நீ உருமையாலரிடம் 6000ரூபாதான் சந்தையில் விலை வந்தது என்று சொல்லு என்பார்கள் அந்த ஹராமான செயலுக்கு அவர்கள் அறியாமலே துணையாக இருப்பார்கள் ஹலாலாக காசு கொடுத்து வாங்கும் இவர்களுக்கும் அந்த பாவத்துக்கு துணை போனதற்காக பங்கு உண்டு என்பதை வாங்குபவர்களும் இன்னும் உணரவில்லை!
நாம் சர்வ சாதாரணமாக செய்யும் இந்த ஹராமான செயலின் விபரீதம்தான் என்ன?
ஒரு வியாபாரிக்கு அல்லாஹ் தடுத்த ஹராமான வியாபாரத்தினால் வரும் வருமானத்தில் இவ்வுலகிலும் அல்லாஹ்வின் மறைமுகமான அருள் (பரக்கத்) இருக்காது என்கிறதை ஏன் இன்னும் உணரப்படவில்லை மறுமையிலும் அதற்கு தண்டனையாக சொர்க்கமும் கிடைக்காது.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “ஹராமின் மூலம் வளர்ந்த சதைக்கு நரக நெருப்பே தகுதியானது” என்று கூறினார்கள். (இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு, தப்ரானீ).
உதாரணமாக ஒரு மனிதர் ஹராமான வழியில் கிடைத்த பொருளில் சாப்பிட்டு, அந்த ஹராமான உணவின் மூலம் அவரது உடல் சதையில் சுமார் 1மில்லி கிராம் எடையுள்ள சதை கூடிவிடுகிறது என்று வைத்துக்கொண்டால், இந்த 1மில்லி கிராம் எடையுள்ள சதை சொர்க்கம் போக முடியாது. இது ஹராமான உணவின் மூலம் உருவானதால் இந்த 1 மில்லி கிராம் எடையுள்ள சதை நரகம் போக வேண்டும். இந்த 1 மில்லி கிராம் எடையுள்ள சதை நரகம் போக வேண்டுமென்றால் அந்த மனிதன் நரகம் போக வேண்டும்.
அப்பொழுதுதான் அந்த 1 மில்லி கிராம் எடையுள்ள சதை நரக நெருப்பில் எரிந்து அதற்குரிய தண்டனை பெறமுடியும். ஒரு மனிதன் அனைத்திலும் வெற்றிப்பெற்று, ஆனால் அந்த 1மில்லி கிராம் எடையுள்ள சதைகாரணமாக அவனால் முன்கூட்டியே சொர்க்கம் போகமுடியவில்லை. எனவே ஹராமின் மூலம் வளர்ந்த சதைக்கு நரக நெருப்பே தகுதியானது.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மேலும் கூறினார்கள்: “ஒரு காலம் வரும். அப்போது மக்கள் தாங்கள் சம்பாதிப்பவை ஹலாலா? ஹராமா? என்பதை பொருட்படுத்தமாட்டார்கள்” என்று கூறினார்கள் (அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, புகாரி).
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய அந்த காலத்தில்தான் நாம் இன்று வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.
இன்று ஒரு மனிதன் தான் எந்த வழியில் சம்பாதிக்கிறோம் என்பதை பார்ப்பதில்லை. அவனுடைய நோக்கம் பணம் மட்டும்தான். பணமென்றால் அனைத்தையும் இழக்கத் தயாராகி விடுகிறான்.
இந்த வியாபாரத்தில் முனாஃபிக்கள் இப்படி எல்லாம் வித்த பின்னர் சிலர் சொல்லுவார்கள் காசு 1வாரத்தில் தருவேன் என்பார்கள் ஓகே அதுக்கு பரவாயில்லை என்று சொல்லியபின் ஒரு வாரத்துக்கு பின்னர் போய் அந்த காசை கேட்டால் இன்னும் இரண்டு நாட்கள் பின்னார் வாருங்கள் என்பான் இரண்டு நாட்களுக்கு பின்னர் போய் கேட்டால் அவன் சொல்லுவான் இன்னார் இன்னாரிடம் இருந்து காசு வார இருக்கிறது வந்ததும் தருவேன் என்பார்கள்.
இந்த காசை வாங்ககொள்ள ஒரு மாதங்கள் ஆகும் இவர்கள் யார் தெரியுமா? வாக்குறுதி மீறும் முனாபிக்குகள்!
‘நான்கு பண்புகள் எவனிடம் உள்ளனவோ அவன் வடிகட்டிய முனாஃபிக் ஆவான். அவற்றில் ஏதேனும் ஒன்று யாரிடமேனும் இருந்தால் அதை விட்டொழிக்கும் வரை நயவஞ்சகத்தின் ஒரு பண்பு அவனிடம் இருந்து கொண்டே இருக்கும். நம்பினால் துரோகம் செய்வான்;. பேசினால் பொய் பேசுவான்;. ஒப்பந்தம் செய்தால் அதை மீறுவான்;. விவாதம் புரிந்தால் நேர்மை தவறிப் பேசுவான்’ என்று இறைத் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி)
இந்த ஹதீஸில் உள்ள மூன்று பண்புகளை ஒரே நபரிடம் காணலாம்
அன்பிற்கினிய வியாபாரிகளே! நீங்கள் உங்கள் வியாபாரத்தில் மோசடி செய்யாதீர்கள்! எது ஹராம்? எது ஹலால் என அறிந்து வியாபாரம் செய்யுங்கள்! அல்லாஹ்வின் மீது பொய்ச் சத்தியம் செய்து பொருளை விற்பனை செய்யாதீர்கள்!
அடுத்தவரின் வியாபாரத்தில் குறுக்கீடு செய்து, பொறாமை கொள்ளாதீர்கள்!
கூட்டுத்தொழிலில் சகதோழரை ஏமாற்றாதீர்கள்!
உங்களின் வியாபாரங்களுக்கு மத்தியில் அதிகம் தர்மம் செய்யுங்கள்!
உங்களின் வியாபாரம் செழிக்க அல்லாஹ் போதுமானவன்..!
source: https://www.facebook.com/mohamed.rifkan.9615566/posts/205017673624593