இரக்கம்
எந்த ஒரு நபருடைய வாழ்வும் இந்த ஒன்று இல்லாமல் கடந்துவிட முடியாது. எந்த ஒரு சாதாரண மனிதனும், என்ன தான் கல் நெஞ்சம் கொண்டவனாக இருந்தாலும் ஏதேனும் ஒரு சூழ்நிலையில், வாழ்வின் ஏதேனும் ஒரு பகுதியில் இதன் மீதேனும் அல்லது யார் மீதேனும் இரக்கம் கொண்டிருப்பான்.
மனிதர்கள் கஞ்சத்தனம் உடையவர்கள் தான். ஆனால் வல்ல ரஹ்மான் அல்லாஹு தஆலா
يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اتَّقُوا اللّٰهَ وَاٰمِنُوْا بِرَسُوْلِهٖ يُؤْتِكُمْ كِفْلَيْنِ مِنْ رَّحْمَتِهٖ وَيَجْعَلْ لَّـكُمْ نُوْرًا تَمْشُوْنَ بِهٖ وَيَغْفِرْ لَـكُمْؕ وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِيْمٌ
ஆகவே, நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து, அவனுடைய இத்தூதரை (முஹம்மதை)யும் நம்பிக்கைக் கொள்ளுங்கள். உங்களுக்கு அவனுடைய அருளிலிருந்து இரண்டு பங்கு கூலி கொடுப்பான். உங்களுக்கு (நேரான வழியை அறிவிக்கக்கூடிய இந்தக் குர்ஆன் என்னும்) ஒளியையும் கொடுப்பான். அதன் பிரகாசத்தைக் கொண்டு நீங்கள் (நேரான வழியில்) செல்லலாம். (உங்களுடைய) குற்றங்களையும் உங்களுக்கு மன்னித்து விடுவான். அல்லாஹ் மிக மன்னிப்பவனும், மிக கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.
ۚ وَرَحْمَتِىْ وَسِعَتْ كُلَّ شَىْءٍ
என்னுடைய அருட்கொடை அனைத்தையும் விட மிக விரிவானது.
كَتَبَ رَبُّكُمْ عَلٰى نَفْسِهِ الرَّحْمَةَ
இறைவன் (உங்களுக்கு) அருள் புரிவதைத் தன்மீது கடமையாக்கிக் கொண்டான்.
நமக்கு மத்தியில் இருக்கும் இரக்கம் என்பது இது தான் :
قال النبي صلى الله عليه وسلم :அ إن لله مائة رحمة، أنزل منها رحمة واحدة بين الجن والإنس والبهائم والهوام، فبها يتعاطفون، وبها يتراحمون، وبها تعطف الوحش على ولدها، وأخر الله تسعا وتسعين رحمة، يرحم بها عباده يوم القيامةஞ.
இப்படி நமக்கு மத்தியில் உள்ளதை மட்டுமே நாம் பார்த்துவிட்டு ஏக இறைவனின் ரஹ்மத்தை நம்மால் நினைத்து கூட பார்க்க முடியாது அல்லவே …
இறைவனிடத்தில் ரஹ்மத்தை கேட்கவேண்டும் :
இருப்பவனிடத்தில் தானே கேட்டு பெற்றுக்கொள்ள முடியும்….
ஆம் ! நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் சொற்படி, 99 ரஹ்மத்தை தன்னிடமே வைத்துள்ளான், எனவே அவனை விட கிருபை உடையோர் வேறு யாருண்டு ?
அதனால் நபிமார்கள் இரசூல்மார்கள், இறைநேசர்கள், நல்லடியார்களெல்லாம், அதனையே நாம் கேட்கும் படி, தங்களுடைய வாழ்வில், இறைவனின் ரஹ்மத்தையே நாடி வாழ்ந்துள்ளார்கள்.
நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் :
قَالَ رَبِّ اغْفِرْ لِىْ وَلِاَخِىْ وَ اَدْخِلْنَا فِىْ رَحْمَتِكَ ۖ وَاَنْتَ اَرْحَمُ الرّٰحِمِيْنَ
(பிறகு மூஸா இறைவனை நோக்கி) “என் இறைவனே! எனக்கும் என் சகோதரருக்கும் நீ பிழை பொருத்தருள்வாயாக! உன்னுடைய அன்பிலும் எங்களை சேர்த்துக் கொள்வாயாக! நீ கிருபை செய்பவர்களிலெல்லாம் மிக்க கிருபையாளன்” என்று (பிரார்த்தனை செய்து) கூறினார்.
கஹ்ப் வாசிகள் :
اِذْ اَوَى الْفِتْيَةُ اِلَى الْـكَهْفِ فَقَالُوْا رَبَّنَاۤ اٰتِنَا مِنْ لَّدُنْكَ رَحْمَةً وَّهَيِّئْ لَـنَا مِنْ اَمْرِنَا رَشَدًا
(அவர்கள்) ஒரு சில வாலிபர்கள் அவர்கள் குகையினுள் சென்றபொழுது “எங்கள் இறைவனே! உன் அருளை எங்களுக்கு அளிப்பாயாக! நீ எங்களுக்கு நேரான வழியையும் சுலபமாக்கி விடுவாயாக!” என்று பிரார்த்தனை செய்தார்கள்.
முஃமின்கள் :
( ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب)
(அன்றி அவர்கள்) “எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு நேரான வழியை அறிவித்ததன் பின்னர் எங்களுடைய உள்ளங்கள் (அதில் இருந்து) தவறிவிடுமாறு செய்யாதே. உன் (அன்பான) அருளையும் எங்களுக்கு அளிப்பாயாக! நிச்சயமாக நீயே பெரும் கொடையாளி!”
நம் உயிரினும் மேலான கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் இந்த நபியை தான் அல்லாஹ் இந்த அகிலத்திர்க்கே ரஹ்மத்தாக அனுப்பி இருக்கின்றான்.
قال تعالى:( وما أرسلناك إلا رحمة للعالمين).
وقال صلى الله عليه وسلم :அ إنما بعثت رحمةஞ. وقال صلى الله عليه وسلم :அ إنما أنا رحمة مهداةஞ
قال عز وجل:( يا أيها الناس قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين).
وقال تعالى:( أولم يكفهم أنا أنزلنا عليك الكتاب يتلى عليهم إن في ذلك لرحمة وذكرى لقوم يؤمنون).
இதையே நமக்கும் கற்று தந்தார்கள் :
وعلمنا رسول الله صلى الله عليه وسلم أن نسأل الله تعالى رحمته؛ فقال:அ إذا دخل أحدكم المسجد فليقل: اللهم افتح لي أبواب رحمتكஞ.
وقال صلى الله عليه وسلم :அدعوات المكروب: اللهم رحمتك أرجو، فلا تكلني إلى نفسي طرفة عين، وأصلح لي شأني كله، لا إله إلا أنتஞ
وقال صلى الله عليه وسلم :அدعوات المكروب: اللهم رحمتك أرجو، فلا تكلني إلى نفسي طرفة عين، وأصلح لي شأني كله، لا إله إلا أنتஞ
நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் நம்மை அதனை வலியுறுத்தி கேட்க சொன்ன அந்த ரஹ்மத்தை நாம் அடைய வேண்டும். அதற்கான ஒரே வழி அந்த ரஹ்மத்துடைய நபியை நாம் அடைவது தான்.
அல்லாஹ் நம் அனைவருக்கும் அந்த சிறந்த பாக்கியத்தை கொடுத்து, மறுமையில் அவனுடைய ரஹ்மத்துடைய நபியுடன் இருக்கும் பாக்கியத்தை தந்தருள்வானாக ! ஆமீன் !