Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

மரணமடைந்தவர்களை ஏன் வஸீலாவாய்க் கொள்வது கூடாது?

Posted on July 31, 2018 by admin

Red not allowed sign in white background Stock Photo - 22498630

மரணமடைந்தவர்களை ஏன் வஸீலாவாய்க் கொள்வது கூடாது?

ஒருவர் மரணமடைந்திருக்கும் போதும் அல்லது அவர் கண்ணுக்குப் புலப்படாமலிருக்கும் போதும் அன்னாரை வஸீலாவாகக் கொண்டு எந்த வேண்டுகோள்களையும் செய்வது கூடாது, என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் திருவுளமாகியுள்ளார்கள்.

மேலும், சஹாபாக்களும், தாபியீன்களும், தபஃதாபியீன்களும், இல்லை, சலஃப்சாலிஹீன்களான முன்னோர்களும் இவ் வண்ணமாய்க் கப்ருகளின் சமீபம்சென்று தங்கள் தொழுகைகளை நிறைவேற்றுகின்றவர்களாகவோ, அல்லது இந்தச் சமாதியுடைய நபி, அல்லது வலீ முதலிய பெரியார்களிடம் தங்கள் வேண்டுகோள்களைக் கோருகின்றவர்களாகவோ, அல்லது தங்கள் கண்ணுக்கு மறைவாயிருக்கும் ஒரு பெரியாரை வஸீலாவாய்க் கொண்டு ஆண்டவனிடம் துஆ கேட்கின்றவர்களாகவோ, அல்லது கப்ரினருகே சென்று முஜாவிர்களென்றும் முஃதகிப்களென்றும் சொல்லிக் கொண்டு நடந்தவர்களாகவோ காணப்படவில்லை.

எனவே, உண்மையிலேயே ஒருவன் மரணமடைந்த பெரியாரிடமோ, அல்லது கண்ணுக்குத் தெரியாத ஒரு மகானிடமோ வேண்டுதல் செய்ய எண்ணங்கொண்டு, “யாசெய்யிதி! என்னுடைய வேண்டுகோள்களைக் கவனித்து எனக்கு உதவி செய்வீர்களாக!” என்று கூறித் தனக்கு வேண்டிய நன்மையையும் உதவியையும் அன்னவரிடமே கேட்பானாயின், இது  இறைவனுக்கு ஷிர்க் செய்யும் காரியமென்பதில் ஒரு சிறிதும் சந்தேகமில்லை.

நசாராக்களான கிறிஸ்தவர்கள் ஹஜரத் மஸீஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள்மீதும் மரியம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மீதும் தங்கள் ஆலிம்களான அஹ்பார்களின் மீதும் நன்னம்பிக்கை கொண்டு எல்லையை விட்டுக் கடந்து தாங்கள் கோரும் கோரிக்கைகளையெல்லாம் அன்னவர்களே நிறைவேற்றி வைத்துவிடுவார்கள் என்றென்ணி, அவர்களிடமே தங்கள் கோரிக்கைகளனைத்தையும் கேட்க ஆரம்பித்தார்கள்.

இஃது ஒரு பக்கமிருக்க, உண்மையைக் கவனிக்கும்போது, சஹாபாக்கள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மறைவாயிருக்கும்போதும் மரணமடைந்ததன் பிறகும் தங்கள் கோரிக்கைகளை எம்பிரான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமோ அவர்களின் வாயிலாகவோ வேண்டிக் கொண்டிருந்ததாய் ஒன்றும் காணப்படவில்லை.

 

source: http://darulislamfamily.com/book-depot-t/books/116-ziayarathul-quboor/861-ziarat-al-kuboor-11.html

 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

1 + 7 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb