தீனுல் இஸ்லாமில் முழுமையாக நுழைந்து விடுங்கள்
ததஜ சகோதரர்கள் பலர் அப்பாவித்தனமாக பிஜேவின் பேச்சில் மயங்கி தாங்கள் தான் உன்மையான மார்க்கத்தை பின்பற்றுவதாக தவறாக எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள்.
அவர்களில் பெரும்பாலோருக்கு மார்க்கத்தின் அடிப்படை அறிவு இருப்பாதாக நமக்கு தெரியவில்லை.
குர்ஆன் ஹதீஸை பின்பற்றுவது என்றால் என்ன?
தக்லீத் என்றால் என்ன?
இஸ்லாத்தில் ஸஹாபாக்கள் செய்த தியாகங்கள் என்ன?
இமாம்கள், ஹதீஸ் மேதைகள் செய்த தியாகங்கள் என்ன?
குர்ஆனும் ஹதீஸ் கிரந்தங்களும் இந்த உம்மத்தால் எப்படி பாதுகாக்கப்பட்டு வருகிறது?
இந்த உம்மத்தில் உருவான வழிகேடர்கள் யார் யார்?
அவர்களது கொள்கைகள் என்ன?
ஏன் இந்த உம்மத் அவர்களை வழிகேடர்கள் என்று அடையாளப்படுத்தியது?
என்ற எந்த உன்மையும் இவர்களுக்குத் தெரிவதில்லை. காரணம் இவர்கள் முழுக்க முழுக்க பிஜே மற்றும் ததஜ அறிஞர்களின்; பேச்சுக்ககளில் மயங்கிய ‘விசிலடிச்சான் குஞ்சுகலாகவே’ இருக்கின்றார்கள்.
‘குர்ஆன் ஹதீஸை ஆய்வு செய்துதான் பின்பற்றுகிறோம்’ என்று சொல்லக்கூடிய பெரும்பாலான ததஜவினர் ததஜ அல்லாத மற்ற அறிஞர்களுடைய கருத்துக்களையும் காதுகொடுத்து கேட்பதில்லை. அதுகுறித்து அவர்கள் சிந்திப்பதுமில்லை. காரணம் குர்ஆன் ஹதீஸ் என்றாலே அது பீஜேவுடைய ஆய்வுமட்டும் தான் என்ற குறுகிய சிந்தனை இவர்களிடத்தில் காணப்படுகின்றது.
பீஜேவும் அவரால் அடையாளம் காட்டப்படுகின்ற ததஜவினர் மட்டுமே குர்ஆன் ஹதீஸை சரியாக சொல்லக்கூடியவர்கள், மற்றவர்கள் வழிகேடர்கள் என்ற சிந்தனை இவர்களிடம் மேலோங்கி காணப்படுகின்றது.
பிஜே மற்றும் ததஜவுக்கு எதிராக யார் பேசினாலும் அவர்கள் மார்க்க விரோதிகள் என்ற சிந்தனையே அவர்களிடத்தில் நிலவுகிறது. அல்லாஹ்வாலும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களாலும் உயர்வாக சொல்லப்பட்ட ஸஹாபாக்கள் கூட தவறு செய்பவர்கள் என்று சொல்லக்கூடிய இவர்கள், ஸஹாபாக்களின் கருத்துக்களை நாம் ஏற்கவேண்டியதே இல்லை என்பவர்கள் பீஜேவின் மார்க்க விடயத்தில் அதற்கு நேர்மாறான நிலையை எடுக்கிறார்கள்.
‘அவர் சொல்லிவிட்டாலே அது சரியாகத்தான், அவரா தவறாக சொல்வார்’ இருக்கும் என்ற நிலைக்கு வந்துவிடுகின்றார்கள்.அதுபோல் ஆதாரப்பூர்வமான அறிவிப்பாளர் தொடரோடு வரக்கூடிய ஹதீஸ்களை ஏற்பதற்கு எடுக்கக்கூடிய முயற்சியைவிட அதை நிராகரிப்பதற்கே அதிக முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். அதற்காக பல காரணங்களை தேடி அலைகிறார்கள். இத்தகைய சிந்தனை அவர்களை குஃப்ரில் தள்ளிவிடும் என்று அவர்கள் சிறிதும் யோசிப்பதில்லை.
பீஜே மனிதர்தான் என்று அவர்கள் ஒருபுறம் சொன்னாலும் பல நேரங்களில் அதை செயல்படுத்த தயங்குகின்றனர். அதை ஒப்புக்கொள்ள அவர்கள் மணம் மறுப்பது நன்றாகவே தெரிகிறது.
அவர் மீது கொண்ட மோகம் அவர்களை சிந்திக்கவைக்க மறுக்கிறது.மார்க்கத்திற்கு முரணாக அவர் பேசுகிறார், செயல்படுகிறார், எதற்கும் ஒரு முறை அவரது மார்க்க ஆய்வுகளை மறுஆய்வு செய்யுங்கள், அவருடைய மார்க்க நிலைபாடுவிஷயத்தில் மற்ற அறிஞர்களின் கருத்துக்களையும் கேளுங்கள் என்று நாம் சொன்னால் அவர்கள் அதை ஏற்க தயங்குகிறார்கள்.
இப்படிப்பட்டவர்களுக்கு நாம் தொடர்ந்து சரியான மார்க்கத்தை எடுத்துரைக்கவேண்டும்.
ததஜ என்பது எவ்வளவு வழிகேடு என்பதை அவர்களுக்கு உணர்த்தவேண்டும்.
இல்லையேல் எதிர்காலத்தில் இவர்களால் ஏற்படக்கூடிய பாதிப்பு நமது தமிழ் சமூகத்திற்கு பெரும் பிரச்சினையாக இருக்கும்.
அல்லாஹ் நம் அனைவரையும் நேர்வழியில் நடத்துவானாக!
– MB தஸ்லிம்