Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

“ஜமாஅத் அல் முஸ்லிமீன் அல்லாத பிரிவுப் பெயர்கள் கூடாது” -கடுமையாக எச்சரிக்கும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்

Posted on July 2, 2018 by admin

“ஜமாஅத் அல் முஸ்லிமீன்” அல்லாத பிரிவுப் பெயர்கள் கூடாது என்று கடுமையாக எச்சரிக்கும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்

ஹுதைஃபத்துல் யமான் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் மக்கள் (எப்போதும்) நல்லதைப் பற்றியே கேட்பவர்களாக இருந்தனர். நானோ கெட்டது என்னை மிகைத்து விடாமல் இருக்க கெட்டது பற்றியே கேட்க்கூடியவனாக இருந்தேன்.

ஒருமுறை….

நான் : அல்லாஹ்வின் தூதர் அவர்களே! நாங்கள் அறியாமையிலும் தீமையிலும் (மூழ்கி) இருந்தபோது, அல்லாஹ் எங்களுக்கு (இஸ்லாம் என்ற) இந்த நல்லதை அருளினான். இந்த நல்லதற்குப் பின்னர் கெட்டது உண்டா?

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் : ஆம் உண்டு!

நான் : அந்த கெட்டதற்குப் பின்னர் நல்லது உண்டா?

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் : ஆம் உண்டு! ஆனால் அது தகனுன் – களங்கப்பட்டிருக்கும்.

நான் : அதனது தகனுன் – களங்கம் என்ன?

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் : ஒரு கூட்டம் எனது நேர்வழி அல்லாததைக் கொண்டு மக்களை வழி நடத்துவார்கள். நீங்கள் அவர்களை (அச் செயல்களைக்) கண்டறிந்து (அவற்றை) நிராகரித்து விடுவீர்கள்.

நான் : அந்த நல்லதற்குப் பின்னர் கெட்டது உண்டா?

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் : ஆம் உண்டு! (சிலரால்) நரகத்தின் வாயிலுக்கு அழைப்பு விடுக்கப்படும். எவர்கள் அந்த அழைப்பை ஏற்கிறார்களோ அவர்கள் அதில் (நரகத்தில்) எறியப்படுவார்கள்.

நான் : யாரஸூலல்லாஹ்! அவர்களைப் பற்றி (எனக்கு) விளக்குவீர்களாக.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் : அவர்கள் நம்மைச் சார்ந்தவர்களாகவும் நாம் பேசுவதையே பேசுபவர்களாகவும் இருப்பார்கள்.

நான் : (அவர்கள் வலையில் சிக்காமல் இருக்க) அப்போது (எப்படி நடக்கவேண்டு மென்று) எனக்கும், (என்னைப் போன்றவர்களுக்கும்) என்ன கட்டளை இடுகிறீர்கள்?

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் : (அப்போதும்) நீர் ஜமாஅத் அல் முஸ்லிமீன் ஐயும் அதன் இமாம் ஐயும் பற்றிக் கொள்வீராக.

நான் : (நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விட்டுச் சென்ற ஜமாஅத் அல் முஸ்லிமீன் என்ற) என்ற அந்த ஜமாஅத்தோ, அதனது இமாமோ இல்லை என்றால்..?

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் : எல்லாப் பிரிவுகளையும் விட்டு ஒதுங்கி வாழ்வீராக. அப்படியே உமது மரணம் வரை மரவேர்களைச் சாப்பிட்டுக் காலத்தைப் போக்கும் நிலை ஏற்பட்டாலும் சரியே!.

(புகாரி : மனாகிப் 4/803, ஃபிதன் 9/206, முஸ்லிம் : இமாரா 3/4553, 4554)

(திர்மிதி : ஃபிதன் 57, இப்னுமாஜ்ஜா : ஃபிதன் 2/3979, தயாலிஸி : 1/443)

 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

25 − 17 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb