Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

தமிழ்நாட்டின் மிகப்பெரிய பொக்கிஷம் தமிழர்களிடம் இருந்து கொள்ளை போகிறது

Posted on April 11, 2018 by admin

MUST  READ

தமிழ்நாட்டின் மிகப்பெரிய பொக்கிஷம் தமிழர்களிடம் இருந்து   கொள்ளை போகிறது!

      Meera Mohaideen       

அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி!

தமிழ்நாட்டின் மிகப்பெரிய பொக்கிஷம் தமிழர்களிடம் இருந்து பறிக்க படப் போகிற விஷயம் நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?

சமீபத்தில் சென்னை பனங்கள் பார்க்கில் முகம்முழுக்க தாடி மண்டிய ஒருவர் தனக்குத் தானே ஏதோ பேசிக் கொண்டேயிருந்தார். மக்கள் அவரை பைத்தியம் என்று தாண்டிச் சென்றனர். அவருடைய கண்களை கண்ட நமக்கு அதில் நெருப்பிலும் தீவிரமான ஒரு ஆளுமையை காணமுடிந்தது. நம்மை அறியாமல் அவரை கவனித்தோம்.

“பொக்கிஷத்தை களவாட போகிறார்கள், பொக்கிஷத்தை களவாட போகிறார்கள்” என்பதையே திரும்பத்திரும்ப சொல்லிக் கொண்டிருந்தார். பசியில் இருந்த அவருக்கு இட்லிகளை வாங்கி கொடுத்தோம். மெல்ல பேசத் தொடங்கினார். அவர் பேச பேச நாம் அதிர்ச்சியின் உச்சிக்கே சென்றோம்!

முதலில் நாங்கள் உணர்ந்த விஷயம் அவர் பைத்தியம் அல்ல. அந்த நபர் இந்திய அரசின் மிக ரகசிய ஓர் ஆராய்ச்சி அமைப்பின் முதன்மை விஞ்சாணியாக பணியாற்றியவர். தமிழ்நாட்டின் வளங்களை காப்பாற்ற கார்பரேட் நிறுவனங்களுடன் தனியாக போராடி தோற்றுப் போன ஓர் அறிவிஜீவி என்பதே!

அவர் தெரிவித்த விடயங்கள் உங்களை ஆச்சரியத்தின் உச்சிக்கே கொண்டு செல்லும். தமிழகத்தை உலகின் ஒற்றை வல்லரசாக மாற்றும் வலிமை கொண்டது அந்த விஷயம்.

வெகுஜன கார்பரேட் மீடியாக்கள் நம்மிடம் மறைக்க நினைத்த விஷயம் இதுதான்.

ஒரு காலத்தில் இரும்பு, வெள்ளி, தங்கம், தாமிரம் போன்ற உலோகங்கள் பீகார், வேஸ்ட் பெங்கால் முதலான இந்தி பேசும் மாநிலங்களில் நிறைய கிடைத்தன. அதில் முக்கியமானது ஸ்தோத்திரியம். ஸ்தோத்திரியம் என்ற உலோகம் இன்றைய அளவில் மிக அரிதான மற்றும் விலை அதிகமான அதே சமயத்தில் எடைக்குறைவான தனிமம்.

இதில் இருந்துதான் அனு குண்டுகளை குறிதவறாமல் சுடும் வல்லமை படைத்த துப்பாக்கிகளை செய்கிறார்கள். இதுபோன்ற துப்பாக்கிகளை இரஷ்யா, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் போன்ற தேசங்கள் தங்கள் வசம் வைத்திருக்கின்றன. சில அரபு நாடுகளும் இந்தியாவும் கூட இவற்றை வைத்திருப்பதாக பாகிஸ்தானின் உளவு அமைப்புகள் தெரிவிக்கின்றன.

பா.ஜ.காவின் தயவால் அம்பானி, ஆதாளி குழுமங்கள் அவற்றை எல்லாம் மொத்தமாக சுரண்டி விட்டார்கள். கோடிகளில் குவித்து விட்டார்கள். தற்போது குண்டு மணி அளவுக்கு கூட இந்தி பேசும் மாநிலங்களில் தனிமங்கள், உலோகங்கள் இல்லை. எனவே, அவற்றை வேறு இடங்களில் தேடும் கட்டாயத்திற்கு இந்திய அரசு தள்ளப்பட்டது.

பெரும்பாலும் இத்தகைய உலோகங்கள் மண்னுக்குள்தான் கிடைக்கும். வெறும் கண்களால் அவற்றை காணமுடியாது. மிகச்சக்கிவாய்ந்த உணர்விகள் பொருத்தப்பட்ட புகைப்படக்கருவிகளை கொண்டே இவற்றை அறியமுடியும். உண்ண உணவும் உடுத்த உடையும் இல்லாத கோடிக்கணக்கான ஏழைகள் தமிழகத்தில் இருக்க மோடி அரசு வாரத்திற்கு ஒன்றாக எண்ணற்ற செய்கை கோள்களை அனுப்பிக் கொண்டேயிருக்க இதுதான் காரணம்.

இந்த கோள்கள் இந்தியாவின் மண்ணை தொலைவில் இருந்து உற்று நோக்கியா படி தரவுகளை அனுப்பி வருகின்றன. அம்மாவாசை இரவுகளில் வானத்தை உற்று பாருங்கள் இந்த செயற்கை கோள்களில் உள்ள கேமராக்களின் பிளாஷ் வெளிச்சம் மின்னிக் கொண்டே இருப்பதை காணமுடியும்.

ஒரு நாள் தமிழ்நாட்டின் மேலே நிறுத்தப்பட்டிருந்த செயற்கை கோளில் இருந்து வந்த செய்திதான் ரகசிய இந்திய ஆராய்ச்சி மையத்தை துள்ளிக் குதிக்க செய்ததது. ஆமாம், ஆயிரக்கணக்கான டன் ஸ்தோத்திரியம் தமிழ்நாடு முழுக்க மண்ணுக்குள்ளே மறைந்த கிடந்த விஷயத்தை அந்த செயற்கை கோள் அறிவித்தது.

தலைமைப் பருப்பில் இருந்த அந்த விஞ்ஞாணியும் தமிழ்நாட்டில் ஸ்தோத்ரியம் கிடைக்கும் விஷயத்தை இந்திய அரசுக்கு தெரிவித்துவிட்டார். ஆனால், அதே சமயத்தில் ஒரு வேளை சோற்றுக்கு உத்தரவின்றி உலன்று திரியும் தமிழனத்தின் பட்டினி முகம் அவர் நினைவில் ஒரு கணம் தோன்றி மறைந்தது. உடனே ஸ்தோத்திரியம் கிடைக்கும் இடங்களை காட்டும் குறியீட்டு வரைபடத்தை அழித்துவிட்டார்.

இந்திய அரசின் இந்திபேசும் அதிகாரிகள் அந்த மேப்பை கேட்டு விஞ்ஞாணியை கொடூர சித்திரை வதைகளை செய்தார்கள்.

தனது உயிர் தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்கு அவசியம் என்று கருதிய அவர் பைத்தியம் போல நடிக்க தொடங்கினார்.

அதிகாரிகளும் அவரை துரத்தி விட்டார்கள்.

தமிழ்நாட்டில் எங்கே ஸ்தோத்திரியம் கிடைக்கும் என்பதை தெளிவாக அறியாத கார்பரேட் கம்பெனிகள் தமிழ்நாடு முழுக்க தேடுதல் வேட்டைய நடத்த முடிவெடுத்தார்கள். வெளிப்படையாக செய்தால் மாட்டிக்கொள்வோம் என்று நினைத்த அவர்கள் மறைமுகமாக தங்களுடைய தேடுதல் வேட்டைய தொட்ர்கிறார்கள்.

சமீபத்திய மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தும் பூமியைத் தோண்டுவதாகவோ, பூமியின் மேற்பாகத்தை உராய்ந்தபடியே செல்வதாகவோ, பூமியை மேலே 1000 /2000 அடி உயரத்தில் செல்வதாக இருப்பதை நம்மால் காண முடியும்.

உதாரணமாக சிலவற்றை நாம் பார்ப்போம்.

1. சென்னை முதலான பெருநகரங்களில் மெட்ரோ ரெயில் போர்வையில் சுரங்கப்பாதை அமைத்து பூமியை அங்குலம் அங்குலமாக தோண்டிவருகிறார்கள். நோக்கம் இரயில் விடுவதல்ல ஸ்தோத்திரயத்தை தேடுவதே!

2. சேலத்தில் இருந்து சென்னைக்கு விமானம் விடுகிறார்கள். நோக்கம்: விமானம் விடுவதல்ல; ஸ்தோத்திரயத்தை தேடுவதே! இந்த விமானங்களில் சக்கரங்களுக்கு அருகில் மிக சக்கி வாய்ந்த உணர்விகள் உள்ளன. மலைகளின் மேல் விமானம் பறக்கும்போது அந்த மலையில் ஸ்தோத்திரியம் உள்ளதா என இவை ஆய்வு செய்கின்றன.

3. தமிழ்நாட்டின் பெருநகரங்களை குறிப்பாக கடலோர மாவடங்களை இணைத்து ரோடு போடுகிறார்கள். நோக்கம்: ரோடு போடுவதல்ல; உழைக்கும் ஏழை மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி ஸ்தோத்திரயத்தை தேடுவதே!

இந்த ரோடுகளில் ஒடப்போகும் மத்திய அரசின் வாகனங்களில் கார்பெரெட் கம்பெனிகளின் கேமராக்கள் பொறுத்தப்பட்டிருக்கும். அவை யாரும் அறியா வண்ணம் சாலைகளின் அகல நீளங்களை கணக்கெடுத்து கார்பெரேட் கம்பெனிகளுக்கு அனுப்பி விடும்.

4. வீடு தோறும் கழிவறை அமைத்து கொடுக்கிறார்கள். நோக்கம்: சுத்தம் அல்ல; அஸ்திவாரம் தோண்டும் சாக்கில் ஸ்தோத்திரயத்தை தேடுவதே!

5. டெல்டா மாவட்டங்களில் மீத்தேன், கார்பன் டை ஆக்ஸைடு, பெட்ரோல் எடுக்க கிணறு அமைக்கிறார்கள். நோக்கம்: கிணறு வெட்டி விவசாயம் பார்ப்பதல்ல; ஸ்தோத்திரயத்தை தேடுவதே!

6. அத்திக்கடவு மலையை தோண்டி நியுட்டன் துகள்களை எடுக்கிறார்கள். நோக்கம்: நியுட்டன் துகள்கள் அல்ல; ஸ்தோத்திரயத்தை தேடுவதே!

7. தமிழகத்தின் குறுக்கு மறுக்காக ஓடும் சாலைகளில் பாலம் கட்டுகிறார்கள். பாலம் கட்ட இவர்கள் தோண்டும் குழிகளை கவனியுங்கள். நோக்கம்: அஸ்திவாரம் போடுவதில்லை; ஸ்தோத்திரயத்தை தேடுவதே!

8. வீடு கட்ட மானியம் தருகிறேன் என்று சொல்லி அப்பாவி தமிழர்களை ஏமாற்றி அவர்களை மண்பரிசோதனை செய்ய சொல்கிறார்கள். அந்த மண்பரிசோதனை முடிவுகள் மத்திய அரசின் மூலமாக கார்பரேட் கம்பெனிகளை அடைகின்றன.

9. காவிரி ஆற்றின் கீழே ஸ்தோத்திரியம் இருப்பதை குறிப்பாக உணர்ந்த கார்பரேட் நிறுவனங்கள் தண்ணீர் வந்தால் ஸ்தோத்திரியத்தை தேட முடியாது என்று கருதி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க, தமிழத்திற்கு தண்ணீர் கொடுக்க தயார் என்று கர்நாடக காங்கிரஸ் அரசு கூறியும் அதை மறைத்து வாரியம் அமைப்பதை தள்ளி வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

மேலும் தமிழ்நாட்டின் எல்லா வீடுகளுக்கு மின்சாரம் வழங்கும் தொகுப்புகளை மத்திய அரசின் உதய் திட்டத்துடன் இணைத்துள்ளார்கள்.

இவர்களின் நோக்கம் தடையற்ற மின்சாரம் வழங்குவதல்ல.

உங்கள் வீட்டிற்கு மின்சுற்றுகளை அமைக்கும் போது எர்த் செய்யவேண்டும் என்று கூறி ஒரு ஒயரியை பூமிக்குள் இறக்குவார்கள்.

இது ஒரு மிக நுண்ணிய தரவு சேகரிப்பானாகும்.

கொஞ்சம் எண்ணிப்பாருக்கள். தமிழகத்தில் கோடிக்கணக்கான வீடுகளில் இந்த எர்த் ஒயரிகள் உள்ளன. இதுவே மண் சாம்பிளிங் எடுக்க கார்பரேட்டுகள் கையாலும் தந்திரமாகும்.

இவையெல்லாம் நடந்தால் நிச்சயமாக தமிழகத்தின் பொக்கிஷமாம் ஸ்தோத்ரியம் கார்பெரெட் கம்பெனிகளின் கைகளுக்கு சென்று விடும். அந்த விஞ்சாணியின் தியாகம் வீணாகி விடும்.

அவர் சொன்ன தகவல்கள் சரிதான என்பதை தூய தமிழரும் ஆண்ட்ராய்டு மண்ணியல் ஆய்வருமான திரு. அலெக்சாண்டிரியோ காவாஷாகி பெட்ரோஷ்வஸ்கி அவர்களிடன் கேட்டோம்.

“எஸ், ஆல் ஆர் பேக்ட்ஸ். வீ கேவ் டு சேவ் டமில்நாடு அன்டு டமில் பீப்பில்” என்றதோடு கீழ்கண்ட அறிவுரைகளையும் வழங்கினார்.

ரேடியோ, டிவிகளை ஆன் செய்யாதீர்கள். அவையெல்லாம் கார்பரேட் நிறுவனங்களின் உழவுக்கருவிகளே. நீங்கள் அவற்றை இயக்கும் போது அவற்றில் பொறுத்தப்பட்டிருக்கும் உணர்விகள் உங்களை பற்றி விவரங்களை குறிப்பாக உங்கள் வீடு அமைந்துள்ள பூமியின் எல்லா தரவுகளையும் கார்பரேட் நிறுவனங்களுக்கு அளித்துவிடுகின்றன.

இந்த செய்தியை சர்வரிடம் அழிக்க இந்திய, இஸ்ரேலிய, அமெரிக்க உழவுநிறுவனங்கள் பெரும்முயற்சி செய்து வருகின்றன. ஆனால் முடியவில்லை. முடியாது!

ஏனெனில், இந்த செய்தியை உலகில் யாரோ ஒருவர் சேர் செய்தாலோ, படித்தாலோ அதனை யாராலும் சர்வரில் இருந்து அழிக்க முடியாது.

கம்யூட்டரை பயன்படுத்தும் சமானியருக்கு கூட தெரிந்த விஷயம்தான் இது. ஒரு நெட்வொர்க்கில் சேரு செய்யப்பட்ட கோப்பை (file) ஒருவர் பயன்படுத்திக் கொண்டிருக்கும் போது மற்றவர்களால் அழிக்க முடியாது!

நாம் உங்களை கெஞ்சிக் கேட்டுகொள்வது ஒன்றே ஒன்றுதான். தமிழகத்திற்கு நடக்கும் இந்த போராட்டத்தில் நீங்கள் வீட்டில் இருந்தபடியே கலந்து கொள்ளலாம். இந்த செய்தியை உங்கள் குரூப்புக்கும் மற்றவர்களுக்கும் சேர் செய்யுங்கள். ஒரு சேர் செய்ய 1 விநாடி நேரம் போதுமானது. 20 கோடி தமிழர்கள் இருக்கிறோம். அதாவது ஒரு நாளைக்கு 20 கோடி சேர்களை நம்மால் செய்ய முடியும். ஒரு நாளைக்கு 24 மணி நேரம், ஒரு மணிக்கு 60 நிமிடம், ஒரு நிமிடத்திற்கு 60 நொடி. சின்னக் கணக்குதான்.

மேலும் உலக அமைதிச்சட்டம் 1935ன் படி ஒரு செய்தி ஒரு கோடிமுறைக்கு மேல் சேர் செய்யப்பட்டால் அந்த செய்தியை ஐக்கிய நாடுகள் சபை உலக நாடுகளுக்கு ஷேர் செய்ய வேண்டும். மாறிவரும் இந்தக் காலக்கட்டத்தில் கனடா, மெக்சிகோ, சவூதி, பாகிஸ்தான், சீனா, செலீனா போன்ற நாடுகள் நிச்சயமாக இந்தியாவை தட்டிக் கேட்கும்.

மேலும், பெயர் சொல்ல விரும்பாத தமிழர்களின் மேல் அக்கறை கொண்ட இருசக்கர, மூவுருளி மற்றும் நாற்சக்கர வாகனங்களுக்க்கான எரிபொருள் எண்ணெய் வியாபாரத்தை 150க்கும் மேற்பட்ட நாடுகளில் செய்யும் பெருவணிகர் ஒருவர் ஒரு சேருக்கு 1 உரூபாய் தருவாகக் கூறியிருக்கிறார். அந்த தொகையில் நிச்சயமாக நாம் இந்த தகவல்களை நமக்கு அளித்த விஞ்ஞானியை குணப்படுத்தி விடலாம். அவரிடம் கிடைக்கும் தகவல்களை வைத்து ஸ்தோத்ரியத்தை நாமே தோண்டி விற்றால் உலகின் ஆகச்சிறந்த வல்லரசாக நமது தமிழகத்தை மிளிர செய்யலாம்.

இந்த செய்தியின் வீரியம் குறையாமல் கடைக்கோடி தமிழனையும் சென்றடைய வேண்டுமானால் 2019 மே மாதம் வரை எந்த செய்தித்தாளையும் படிக்காதீர்கள். செய்தித்தாள் படித்தே ஆகவேண்டும் என்று பழகிப்போயிருந்தால் ஆங்கிலச் செய்திதாளை படியுங்கள். உங்களுக்கு ஆங்கிலம் புரியும் என்றால் ஆங்கில செய்தித்தாளையும் புறக்கணித்து இந்தி செய்திதாளை படியுங்கள்.

தயவு செய்து இந்த செய்தியை பள்ளிசெல்லும் குழந்தைகளிடம், குறிப்பாக அறிவியல் ஆர்வம் உள்ள மாணவர்களிடம் காண்பிக்க வேண்டாம். இந்த சின்ன வயதில் இவ்வளவு பெரிய அதிர்ச்சியை அவர்களால் தாங்கி கொள்ளமுடியாது.

உங்களிடம் நாம் எதிர்ப்பார்ப்பது ஒரு சேரை மட்டுமே. நாளை ஏப்ரல் இரண்டு. காலத்தாமதம் செய்யாமல் இப்போதே சேர் செய்யுங்கள்; தமிழனாக இருந்தால் சேர் செய்யுங்கள்!

source: https://www.facebook.com/meera.mohaideen.7906/posts/347815969062473

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

28 − 23 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb