Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் விதவைகள் அதிகம் – ஐ.நா. அறிக்கை

Posted on March 26, 2018 by admin

படம்

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் விதவைகள் அதிகம் – ஐ.நா. அறிக்கை

       ப. திருமலை       

[   உலகம் முழுவதும் விதவைகள் எண்ணிக்கையும் அவர்கள் மீதான வன்முறையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. உலகம் முழுக்க சுமார் 24.5 கோடி விதவைகள் இருக்கிறார்கள். இவர்களில் கிட்டத்தட்ட.. நம்நாட்டில் விதவைகள் எண்ணிக்கை 4.8 கோடி பேர்.

ஆணின் இயற்கை மரணத்தைத் தவிர்த்து பெண்களை விதவையாக்குவதில் குடியும், இயற்கைச் சீற்றமும் முக்கிய காரணிகளாகின்றன. அதிலும் தமிழகத்தில் குடி மிக முக்கிய காரணம், இன்றைக்கு கல்லூரி மாணவர்களிடையே மது பழக்கம் அதிகரித்து விட்டது. இது குறித்துப் பெற்றோர்களிடம் புகார் சொன்னாலும் அவர்கள் கண்டு கொள்வதில்லை என்பது இன்னும் வேதனையானது. இன்று தமிழகத்திலுள்ள குடிகாரர்கள் சராசரி வயது 13.7.

தமிழகத்தில் ஏற்பட்ட சுனாமியால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் மீனவர்கள்தான். சுனாமியால் நாகை மாவட்டத்தில் மட்டும் 3,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நாகை மாவட்டத்திலுள்ள மீனவ கிராமங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மனைவியரை இழந்த ஆண்களில் பெரும்பாலானவர்கள் 20 வயதுக்குட்பட்ட பெண்களைத்தான் திருமணம் செய்துள்ளனர். அதேசமயம், கணவர்களை இழந்த பெண்களுக்கு இந்த உரிமை பல இடங்களில் மறுக்கப்பட்டுள்ளது அல்லது அதற்குரிய வாய்ப்புகள் ஏற்படுத்தப்படாமலேயே உள்ளன. கணவர்களை இழந்த பெண்கள் மறுமணம் செய்ய எந்த ஆதரவும் கிடைக்கவில்லை.

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் விதவைகள் அதிகம் என்கிறது ஐ.நா. அறிக்கை ஒன்று. அது போல குடிப்பவர்களும் இங்குதான் அதிகம்.

தமிழகத்தில் எட்டு பெண்களில் ஒருவர் விதவை. நான்கு வீடுகளுக்கு ஒரு வீட்டில் விதவை ஒருவர் இருக்கிறார்.

தமிழகத்திலுள்ள விதவைகளில் ஐம்பது விழுக்காட்டினர் 35 வயதுக்கு கீழ் உள்ளவர்கள். விதவைகள் நிலை வேதனைக்குரியது. பொருளாதார, கலாசாரரீதியாக கேவலப்படுத்தப்படுகிறார்கள். அந்த நிலையை மாற்றவேண்டும். அவர்கள் காக்கப்படவேண்டும். மாநில அளவில் விதவைகள் மற்றும் கணவனால் வஞ்சிக்கப்பட்ட பெண்களின் வாழ்வுரிமை மீட்டெடுக்கப்பட வேண்டும்.]

black, outline, drawing, flower, white, flowers, freeஇந்தியாவிலேயே தமிழகத்தில்தான் விதவைகள் அதிகம் – ஐ.நா. அறிக்கை

பெண்ணைப் போற்றும் இந்த நாட்டில் விதவைப் பெண்களின் வேதனைகளை நாம் அறிந்திருக்கிறோமா?

கடந்த ஆண்டு நம் காதுகளில் அக்னியாய் இறங்கிய அந்த தகவல்.. “இந்துக்கள் புனிதமான நகரமாகக் கருதப்படும் உத்தரபிரதேசம், மதுரா மாவட்டத்தில் ஆதரவற்ற ‘விதவை’ப் பெண்களுக்கான மறுவாழ்வு இல்லம் உள்ளது. 2006 ஆம் ஆண்டு உ.பி. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தால் துவங்கப்பட்டது. விருந்தாவன் ‘அகில பாரதிய மாசாரதா சமாஜ் கல்யாண் சமிதி’ என்ற அரசு சாராத அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.

இந்தக் காப்பகத்தில் மரணமடையும் விதவையின் சடலத்தை அடக்கம் செய்ய அந்த அரசு சாரா அமைப்பு மறுத்துவிட்டது. அதனால் குப்பை எடுப்பவர்களிடம் சடலம் அளிக்கப்பட்டது. அவர்களோ சடலத்தை துண்டு துண்டுகளாக வெட்டி, சணல் சாக்குகளில் திணித்து தூக்கி எறிந்தார்கள். அதுவும் சாக்கில் உள்ள இந்தப் பெண்களின் உடல்களை பணம் தந்தால் மட்டுமே அங்கிருந்து அகற்றப்படும் என்கிற நிலை நிலவியது.

மாவட்ட சட்ட சேவை ஆணையகம் நேரில் ஆய்வு நடத்தியபோது இந்த அதிர்ச்சியான உண்மைகள் வெளி வந்தன. ஆங்கில நாளேடு ஒன்று இந்தச் செய்தியை வெளிக்கொண்டு வந்தது. சட்டசேவை மையம் உச்சநீதிமன்றத்தின் கவனத்துக்கு இதனைக் கொண்டு சென்றது. இது பற்றி விசாரித்து அறிக்கை அளிக்க குழு ஒன்றை உச்சநீதிமன்றம் நியமித்தது. கேட்கவே கொடூரமான நிகழ்வு இது.

“பச்சைக்கீரை உண்ணல்” (புறம். 246), “பாயின்றி வதிதல்” (புறம். 246) என்பது போன்று விதவைகள் செய்யவேண்டியவனவாக புறநானூறில் பல்வேறு பாடல்கள் சொல்லும் தகவல்கள் வேதனையை அளிக்கின்றன.

சங்ககாலத்தில் மட்டுமில்லாமல் கடந்த நூற்றாண்டிலும் விதவைப் பெண்கள் நிலை மிக மோசமாகவே இருந்தது. காதரைன்மேயோ என்ற அமெரிக்கப் பெண் 1928ல் எழுதிய ‘இந்திய மாதா’ என்ற நூலில் இந்திய விதவைகள் பற்றி சொல்லும் போது..

“விதவையாயிருந்து வீட்டிலுள்ள அனைவரும் துன்பப்படுத்துவதைச் சகித்துக் கொண்டிருப்பதை விட இறந்து விடுவதே மேலென எண்ணுகிறாள்” – என்று குறிப்பிட்டிருந்தார் மேயோ. இது அப்போது காந்திஜியால் எதிர்க்கப்பட்டாலும் இந்தியாவிலுள்ள விதவைகளின் உண்மை நிலையை உலகிற்கு உணர்த்துவதாயிருந்தது.

black, outline, drawing, flower, white, flowers, freeஆங்கிலேயர் ஆட்சியில், ‘இந்து விதவைகள் மறுமணம்’ சட்டம் இயற்றப்பட்டது. 1871 இல் ‘விதவைகள் மறுமணச் சங்கம்’ அமைக்கப்பட்டது. 1856 டிசம்பர் 7-இல் வங்காளத்தில் முதன்முதலாக விதவை மறுமணம் நடந்தது.

சென்னை மாகாண அரசு 1903-ல் இந்து மற்றும் முஸ்லீம் விதவைகளுக்குக் கல்வி வழங்கும் நோக்கத்துடன் நிதி உதவி வழங்கும் திட்டம் ஒன்றை அறிவித்தது. சென்னை மாகாணத்தில் வீரேசலிங்கம் முயற்சியால் முதல் விதவை மறுமணம் பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் காவல்துறை பாதுகாப்புடனும் நடத்தப்பட்டது. சுயமரியாதை இயக்கம் தோன்றிய பிறகு, விதவை மறுமணத்துக்கான கருத்துகள் வீரியத்துடன் மக்கள் மன்றத்தில் கொண்டு சேர்க்கப்பட்டது. பெரியார் தனது சொந்த குடும்பத்திலேயே விதவை மறுமணத்தை நடத்தி வைத்தார்.

இன்றைக்கும் விதவைகள் நிலைமை மாறவில்லை. உலகம் முழுவதும் விதவைகள் எண்ணிக்கையும் அவர்கள் மீதான வன்முறையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. உலகம் முழுக்க சுமார் 24.5 கோடி விதவைகள் இருக்கிறார்கள். இவர்களில் கிட்டத்தட்ட..

நம்நாட்டில் விதவைகள் எண்ணிக்கை 4.8 கோடி பேர்

இது பெண்கள் மக்கள் தொகையில் 8%

60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 64%

70 வயதுக்கு மேற்பட்டவர்கள் 80%

எழுதப்படிக்கத் தெரியாதவர்கள்.

கிராமங்களில் 93%

நகர்புறங்களில் 68%

வேலைக்குச் செல்பவர்கள் 25%

நல்ல வேலையில் 1%

கிளார்க் வேலை 5%

கூலிவேலை & வீட்டுவேலை 12%

தனியாக வசிப்பவர்கள் 7%

11..5 கோடி பேர் மிகவும் ஏழ்மையில் வசித்து வருகிறார்கள்.

“நம்நாட்டில் விதவைகள் எண்ணிக்கை 40 மில்லியன். நாட்டின் பெண்கள் மக்கள் தொகையில் 8 விழுக்காடு பெண்கள் விதவைகள்.

இதில் 64 சதவீதம் பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள்.

இதில் 80 விழுக்காடு பேர் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள். கைம்பெண்களில் கிராமங்களில் வசிக்கும் 93 விழுக்காடு பேரும் நகர்புறங்களில் வசிக்கும் 68 விழுக்காட்டினரும் எழுதப்படிக்கத் தெரியாதவர்கள்.

25 விழுக்காடு கைம்பெண்கள் வேலைக்குச் செல்கிறார்கள். இதில் 1 விழுக்காடு பேர் தான் நல்ல வேலையில் இருக்கிறார்கள்.

5 விழுக்காடு பேருக்கு கிளார்க் வேலை. மீதமுள்ளவர்கள் கூலிவேலைக்கும் வீட்டுவேலைக்குச் செல்கிறார்கள்.

7 விழுக்காடு கைம்பெண்கள் தனியாகத் தான் வசிக்கிறார்கள். இது இந்தியாவின் நிலை.

தமிழகத்தைப் பொறுத்தவரை விதவைகளின் எண்ணிக்கை சுமார் 40 லட்சம். இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் விதவைகள் அதிகம் என்கிறது ஐ.நா. அறிக்கை. இது இன்னும் பதற்றமடைய வைக்கும் விஷயம்.

black, outline, drawing, flower, white, flowers, freeஆணின் இயற்கை மரணத்தைத் தவிர்த்து பெண்களை விதவையாக்குவதில் குடியும், இயற்கைச் சீற்றமும் முக்கிய காரணிகளாகின்றன. அதிலும் தமிழகத்தில் குடி மிக முக்கிய காரணம், இது குறித்து தொடர்ந்து ஆய்வும் மாணவர்களுக்கு கவுன்சிலிங்கும் அளித்து வருகிறார் கல்வியாளர் முனைவர் அருணகிரி. மதுரையின் புகழ்பெற்ற கல்லூரியின் முதல்வராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற பின்னரும் கிராமப்புறத்தைச் சார்ந்த கல்லூரி ஒன்றில் முதல்வராக பணி செய்கிறார். அவரிடம் பேசினோம்..

“இன்றைக்கு கல்லூரி மாணவர்களிடையே மது பழக்கம் அதிகரித்து விட்டது. இது குறித்துப் பெற்றோர்களிடம் புகார் சொன்னாலும் அவர்கள் கண்டு கொள்வதில்லை என்பது இன்னும் வேதனையானது. இன்று தமிழகத்திலுள்ள குடிகாரர்கள் சராசரி வயது 13.7. தமிழகத்தில் குடிகாரர்களின் எண்ணிக்கை ஒரு கோடி. அவர்களில் 20 விழுக்காட்டினர் குடியைவிட்டு மீளமுடியாத அளவுக்கு அடிமைகள்.

தமிழகத்தில் அன்றாடம் மது அருந்துபவர்களில் 49 இலட்சம் பேர் 13 முதல் 28 வயதை சேர்ந்தவர்கள். மிக அதிகமான சாலை விபத்துக்களைக் கொண்ட மாநிலம் என்ற ‘பெருமை’ தமிழகத்தையே சேரும். ஓராண்டில் நடக்கும் 60,000 சாலை விபத்துகளுக்குப் பல்வேறு காரணங்கள் மற்றும் சூழ்நிலைகள் இருக்கலாம். ஆனால் 60 விழுக்காடு சாலை இறப்புகளுக்குக் குடித்துவிட்டு ஓட்டுவதே காரணம்.

மதுபான விற்பனையால், ஆண்டுதோறும் தமிழக அரசுக்கு கிடைக்கும் வருவாயானது அரசின் மொத்த வருவாயில், கிட்டத்தட்ட 30 விழுக்காடாகும். கிராமப்புறங்களில் உள்ளவர்கள் தங்கள் வருமானத்தில் 24 விழுக்காட்டையும், நகர்ப்புறங்களில் உள்ளவர்கள் 32 விழுக்காட்டையும் மதுபானத்துக்காக செலவிடுகிறார்கள். குடியால் கணவனை இழந்து மனைவி விதவையாவது ஒருபுறம் இருந்தாலும் குடிகாரக் கணவனால் பெண் சித்திரவதைக்கு உள்ளாவதும் அதைத் தாங்கமுடியாத குடிகாரக்கணவனை கொலை செய்யும் மனைவியரும் அதிகரிக்கின்றனர். அனைத்து வளர்ச்சிகளுக்கும் குடி தடையாக இருக்கிறது” என வேதனையோடு சொன்னார் பேராசிரியர் அருணகிரி.

தமிழகத்தில் ஏற்பட்ட சுனாமியால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் மீனவர்கள்தான். சுனாமியால் நாகை மாவட்டத்தில் மட்டும் 3,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

நாகை மாவட்டத்திலுள்ள, கீச்சாங்குப்பம், தரங்கம்பாடி, அக்கரைப் பேட்டை போன்ற மீனவ கிராமங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மனைவியரை இழந்த ஆண்களில் பெரும்பாலானவர்கள் 20 வயதுக்குட்பட்ட பெண்களைத்தான் திருமணம் செய்துள்ளனர்.

அதேசமயம், கணவர்களை இழந்த பெண்களுக்கு இந்த உரிமை பல இடங்களில் மறுக்கப்பட்டுள்ளது அல்லது அதற்குரிய வாய்ப்புகள் ஏற்படுத்தப்படாமலேயே உள்ளன. கணவர்களை இழந்த பெண்கள் மறுமணம் செய்ய எந்த ஆதரவும் கிடைக்கவில்லை.

சுனாமியால் பாதிக்கப்பட்ட விதவைகள், தங்களது குழந்தைகளை மட்டுமல்லாது, சுனாமியால் சகோதர, சகோதரிகள் யாராவது இறந்திருந்தால் அவர்களது குழந்தைகளையும் பார்த்துக் கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப் பட்டுள்ளனர் என்பது கூடுதல் சோகம்.

பொருளாதார ரீதியில் கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்டவர்கள் வலிமையாக இல்லை என்றாலும், அவர்கள் மனரீதியாக வலிமையானவர்களாக இருக்கிறார்கள். தற்கொலை செய்து கொள்வது, குடும்பப் பெண்களை விட விதவை பெண்கள் மத்தியில் குறைவாக இருக்கிறது. இதைக் காலம் கொடுத்த வல்லமையாகக் கருதவேண்டும்.

‘கலங்கரை’ இயக்கத்தின் இயக்குநர் அருட்திரு பால் மைக்கிடம் பேசினோம்.

“இந்தியாவில் நான்கு கோடியே எண்பது லட்சம் விதவைகள் இருக்கிறார்கள்.. அதில் தமிழகத்தில் 37 லட்சம்

black, outline, drawing, flower, white, flowers, freeகணவனை இழந்து ‘கலங்கரை’ என்னும் அமைப்பால் கரைசேர்ந்துள்ள பெண்கள் சிலரிடம் பேசியபோது…

திருமணம் 1991-ல் நடந்தது. கையில் பத்து நாள் குழந்தை இருந்தபோது கணவர் போயிட்டாரு. இனி என்ன நடக்கப்போறதோ என நினைச்சிட்டு இருக்கிறேன். அப்போ எங்க மாமனார் கூப்பிட்டார். நீ வயசு பொண்ணு. உன்னைப் பாதுகாக்க என்னால் முடியாது. அதனால நீ வேற இடம் பார்த்துக்கோ என்றார். கஷ்டப்பட்டு உழைத்து பசுமாடு வாங்கினேன். “பாரு.. எவனையோ கையில போட்டுட்டு மாடு வாங்கியிருக்கா..”ன்னு பேசினாங்க. இதுமாதிரி ஏராளமான நக்கல் பேச்சுக்கள் கேட்டுக் கேட்டு மனதும் உடம்பும் துவண்டு போச்சு…

“கணவர் இறந்தவுடனேயே பிறந்த வீட்டாலும் புகுந்த வீட்டாலும் நானும் என் மூணு குழந்தைகளும் வெறுக்கப்பட்டோம். அவரை பறிகொடுத்து ஒரு வாரம் கூட ஆகல்ல, எங்கிடடு வந்து உன் புருஷனை அடக்கம் பண்ணுனதற்கான செலவைத் தா..ன்னு கேட்டாங்க. காதில் கிடந்த கம்மலை கழற்றி கொடுத்தேன். பிறகு நான் வேலைக்குப் போனேன்.. வேலைக்குப் போகும்போது சின்னப் பிள்ளைகளை வீட்டில் கட்டிப்போட்டுட்டுப் போவேன்.. விதவைகள் நிலையை விவரிக்க முடியாது.. அது கொடூரமான அனுபவம்..” என்றார் கோமதி.

“22 வருடத்துக்கு முன்னாடி என் கணவர் இறந்து போயிட்டார்..” என பேசத்துவங்கினார் பூபதி “ கணவர் இறந்ததும் குழந்தைகளைக் காப்பாற்ற வழிதெரியல்ல. யாரோடு பேசினாலும் கள்ள உறவுன்னு சொன்னாங்க. புருசனோடு வாழ்றவளுக சிலர் தவறு செய்யறாங்க. ஆனால் அது வெளியே பேசப்படுவதில்லை. ஆனால் விதவைப் பெண் தவறே செய்யல்லேன்னாலும் அசிங்கமாக பேசப்படுறா.. ஒரு விதவைப் பெண் தனித்து வாழ்வது அவ்வளவு சுலபமில்லீங்கஸ என்றார் பூபதி.

“ஏழு வருடம் தான் கணவரோடு வாழ்ந்தேன். இறந்துட்டார். ராசியில்லாதவள்னு பிறந்தவீட்டிலேயும் புகுந்த வீட்டிலேயும் விரட்டி விட்டாங்க. ஒதுங்க கூட இடமில்லாமல் பத்து நாட்கள் அலைஞ்சேன். குழந்தை மட்டும் இல்லேன்னா செத்துப்போயிருப்பேன். குடும்பச் சொத்தில் எனக்கு பங்கு கேட்கப் போனேன். மறுத்துட்டாங்க, திரும்புன பக்கமெல்லாம் வசைதான். சின்னச் சின்ன வேலை பார்த்து குழந்தையை பிளஸ் டூ வரை படிக்க வைச்சிருக்கேன். கணவனை இழந்தது நாங்களாக தேடிகிட்டதா? அப்படியிருக்கையில் எங்களை ஏன் இப்படி வார்த்தைகளால கொல்லறாங்க..?” கேள்வி எழுப்பினார் ஜோதி.

“குடிப்பழக்கத்தால் என் கணவர் இறந்து போயிட்டாரு.. பள்ளிக்கூடத்திலே படிக்கிற குழந்தைகள். கஷ்டப்பட்டு பாடுபட்டேன். சொந்தக்காரங்களே அசிங்கமாகப் பேசினாங்க. முதலில் அதையெல்லாம் கேட்டபோது செத்துப் போயிடலாம்னு தோணிச்சு. பிறகு பிள்ளைகளை நினைச்சு பார்த்தேன். பிள்ளைகளை படிக்கவைச்சேன். இன்றைக்கு என் மகள் எம்.சி.ஏ. படிச்சிருக்கிறாள். மகன் பி.எஸ்சி. படிக்கிறான். நான் கூலி வேலை பார்க்கிறேன். நான் இந்த சமுதாயத்திடம் கேட்டுக்கிறதெல்லாம், நீங்க எங்களுக்கு உதவி கூட செய்யவேண்டாம். தவறாகப் பேசாதீங்க.. உங்க சகோதரிக்கு இப்படி ஒரு நிலை ஏற்பட்டால்.. எப்படி பார்ப்பீங்களோ அதுபோல பாருங்க” என கண்ணீர் விட்டார் புஷ்பா.

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் விதவைகள் அதிகம் என்கிறது ஐ.நா. அறிக்கை ஒன்று. அது போல குடிப்பவர்களும் இங்குதான் அதிகம்.

தமிழகத்தில் எட்டு பெண்களில் ஒருவர் விதவை. நான்கு வீடுகளுக்கு ஒரு வீட்டில் விதவை ஒருவர் இருக்கிறார்.

தமிழகத்திலுள்ள விதவைகளில் ஐம்பது விழுக்காட்டினர் 35 வயதுக்கு கீழ் உள்ளவர்கள்.

விதவைகள் நிலை வேதனைக்குரியது. பொருளாதார, கலாசாரரீதியாக கேவலப்படுத்தப்படுகிறார்கள். அந்த நிலையை மாற்றவேண்டும்.

அவர்கள் காக்கப்படவேண்டும். மாநில அளவில் விதவைகள் மற்றும் கணவனால் வஞ்சிக்கப்பட்ட பெண்களின் வாழ்வுரிமை மீட்டெடுக்கப்பட வேண்டும்.    

முடங்கிக்கிடக்கும் நம் சகோதரிகளை இயங்கவைப்பதில் இந்த சமுதாயத்தின் பங்கு பெரிதானது.

– ப. திருமலை

source:   https://pmptn.wordpress.com/2013/06/05/

 

 

 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

− 2 = 1

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb