அரசியல் ஒரு சாக்கடை என்று ஒதுங்கிவிடாதீர்கள்!
அந்த ஒரு சாக்கடையில் தான் உங்கள் உரிமைகளும் அதிகாரங்களும் மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது!
அந்த ஒரு சாக்கடையில் தான் உங்களுடைய நீதியும் சுதந்திரமும் ஒளித்து வைக்கப்பட்டுருக்கிறது!
அந்த ஒரு சாக்கடையில் தான் உங்களுடைய பதவியும் பாதுகாப்பும் பதுக்கி வைக்கப்பட்டிருக்கிறது!
ஏனென்றால் யாரும் அந்த சாக்கடையை சகித்துக்கொள்ள மாட்டார்கள் என்பதால்! நீதியை நிலைநாட்ட இம்மண்ணில் படைக்கப்பட்ட சமுதாயமே…. சகித்துக் கொள்வோம் அரசியல் எனும் சாக்கடையை!
மூழ்கி எடுப்போம், மறுக்கப்பட்ட நம் உரிமைகளை! நமக்காக அல்ல! நம் வாரிசுகளாவது வாழ்ந்துவிட்டு போகட்டும்!
உன்னத அரசியலை உலகம் வியந்து பார்கட்டும்! மறைக்கப்பட்ட வரலாறு, இனி நமக்காக திரும்பட்டும்! ஒதுக்கிவிடாதீர்கள் ஓரங்கட்டப்பட்டு விடுவீர்கள்! வெறுத்துவிடாதீர்கள் வாழ்வுரிமையையே இழந்து விடுவீர்கள்!
உரிமை மீட்பு என்பது அரசியல் எழுச்சியே! மூன்றாம் தார குடிமக்களாய் நசுங்கியது போதும்! இனி படமெடுத்து ஆடும் மோடிகளுக்கு பாடம் புகட்டுவோம்!
நாளைய இந்தியாவின் தலைவர்களாய் உன் வாரிசுகளை அமர்த்துவோம்! ஆம்.. அரசியலில் முஸ்லீம்கள் தனித்துவ அதிகாரம் அடைந்தே தீர வேண்டுமென்பது காலத்தின் கட்டாயம். -அப்துர் ரஹ்மான்