பயணிகளுக்கு ‘ஜும்ஆ’ கடமையா?
ஜும்ஆத் தொழுகை அனைவரின் மீதும் கடமையாக்கப்பட்டுள்ளது.
901 حَدَّثَنَا عَبَّاسُ بْنُ عَبْدِ الْعَظِيمِ حَدَّثَنِي إِسْحَقُ بْنُ مَنْصُورٍ حَدَّثَنَا هُرَيْمٌ عَنْ إِبْرَاهِيمَ بْنِ مُحَمَّدِ بْنِ الْمُنْتَشِرِ عَنْ قَيْسِ بْنِ مُسْلِمٍ عَنْ طَارِقِ بْنِ شِهَابٍ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الْجُمُعَةُ حَقٌّ وَاجِبٌ عَلَى كُلِّ مُسْلِمٍ فِي جَمَاعَةٍ إِلَّا أَرْبَعَةً عَبْدٌ مَمْلُوكٌ أَوْ امْرَأَةٌ أَوْ صَبِيٌّ أَوْ مَرِيضٌ قَالَ أَبُو دَاوُد طَارِقُ بْنُ شِهَابٍ قَدْ رَأَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلَمْ يَسْمَعْ مِنْهُ شَيْئًا رواه أبو داود
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : அடிமை, பெண், சிறுவன் அல்லது நோயாளி ஆகிய நான்கு பேரைத் தவிர ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் ஜமாஅத்துடன் ஜும்ஆ தொழுவது கட்டாய கடமையாகும். (அறிவிப்பவர் : தாரிக் பின் ஷிஹாப் ரளியல்லாஹு அன்ஹு, நூல் : அபூதாவூத் 901)
ஜும்ஆ நடைபெறும் நேரத்தில் வியாபாரம் செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது. இந்நேரத்தில் நமது பணிகளை விட்டுவிட்டு ஜும்ஆவிற்கு விரைய வேண்டும் என்று குர்ஆன் கூறுகின்றது.
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا نُودِي لِلصَّلَاةِ مِنْ يَوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا إِلَى ذِكْرِ اللَّهِ وَذَرُوا الْبَيْعَ ذَلِكُمْ خَيْرٌ لَكُمْ إِنْ كُنتُمْ تَعْلَمُونَ(9)62
நம்பிக்கை கொண்டோரே! வெள்ளிக் கிழமையில் தொழுகைக்காக அழைக்கப்பட்டால் அல்லாஹ்வை நினைப்பதற்கு விரையுங்கள்! வியாபாரத்தை விட்டு விடுங்கள்! நீங்கள் அறிந்தால் இதுவே உங்களுக்கு நல்லது. தொழுகை முடிக்கப்பட்டதும் பூமியில் அலைந்து அல்லாஹ்வின் அருளைத் தேடுங்கள்! அல்லாஹ்வை அதிகம் நினையுங்கள்! நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.
”(முஹம்மதே) அவர்கள் வியாபாரத்தையோ, வீணானதையோ கண்டால் நின்ற நிலையில் உம்மை விட்டு விட்டு அதை நோக்கிச் சென்று விடுகின்றனர். அல்லாஹ்விடம் இருப்பது வீணானதையும், வியாபாரத்தையும் விட சிறந்தது அல்லாஹ் உணவளிப்போரில் சிறந்தவன்” என கூறுவீராக! (திருக்குர்ஆன் 62 : 9)
ஜும்ஆத் தொழுகையை நிறைவேற்றுவதற்காக வியாபாரத்தை விட வேண்டும் என்றும், ஜும்ஆ முடிந்த பிறகு வியாபாரம் செய்யலாம் என்றும் இவ்வசனம் கூறுகிறது. எனவே நமது வேலையைக் காரணம் காட்டி ஜும்ஆத் தொழுகையை விட முடியாது.
ஜும்ஆவை விடக் கூடாது என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கடுமையாக எச்சரித்துள்ளார்கள்.
1432و حَدَّثَنِي الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْحُلْوَانِيُّ حَدَّثَنَا أَبُو تَوْبَةَ حَدَّثَنَا مُعَاوِيَةُ وَهُوَ ابْنُ سَلَّامٍ عَنْ زَيْدٍ يَعْنِي أَخَاهُ أَنَّهُ سَمِعَ أَبَا سَلَّامٍ قَالَ حَدَّثَنِي الْحَكَمُ بْنُ مِينَاءَ أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ وَأَبَا هُرَيْرَةَ حَدَّثَاهُ أَنَّهُمَا سَمِعَا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ عَلَى أَعْوَادِ مِنْبَرِهِ لَيَنْتَهِيَنَّ أَقْوَامٌ عَنْ وَدْعِهِمْ الْجُمُعَاتِ أَوْ لَيَخْتِمَنَّ اللَّهُ عَلَى قُلُوبِهِمْ ثُمَّ لَيَكُونُنَّ مِنْ الْغَافِلِينَ رواه مسلم
அப்துல்லாஹ் பின் உமர் ரளியல்லாஹு அன்ஹு மற்றும் அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு ஆகியோர் கூறினார்கள் :
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொற்பொழிவு மேடையின் படிகள்மீது நின்றபடி “மக்கள் ஜுமுஆக்களைக் கைவிடுவதிலிருந்து விலகியிருக்கட்டும்! அல்லது அவர்களின் உள்ளங்கள்மீது அல்லாஹ் முத்திரை பதித்துவிடுவான்; பிறகு அவர்கள் அலட்சியவாதிகளில் சேர்ந்துவிடுவர்” என்று கூறியதை நாங்கள் கேட்டோம். (நூல் : முஸ்லிம் 1570)
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹஜ் பயணத்தில் இருந்த போது ஜும்ஆவுடைய நாள் வந்தது. அப்போது அவர்கள் ஜும்ஆ நடத்தவில்லை. மாறாக அன்றைய தினம் லுஹரையும் அஸரையும் சேர்த்துத் தொழுதார்கள்.
45 حَدَّثَنَا الْحَسَنُ بْنُ الصَّبَّاحِ سَمِعَ جَعْفَرَ بْنَ عَوْنٍ حَدَّثَنَا أَبُو الْعُمَيْسِ أَخْبَرَنَا قَيْسُ بْنُ مُسْلِمٍ عَنْ طَارِقِ بْنِ شِهَابٍ عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ أَنَّ رَجُلًا مِنْ الْيَهُودِ قَالَ لَهُ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ آيَةٌ فِي كِتَابِكُمْ تَقْرَءُونَهَا لَوْ عَلَيْنَا مَعْشَرَ الْيَهُودِ نَزَلَتْ لَاتَّخَذْنَا ذَلِكَ الْيَوْمَ عِيدًا قَالَ أَيُّ آيَةٍ قَالَ الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمْ الْإِسْلَامَ دِينًا قَالَ عُمَرُ قَدْ عَرَفْنَا ذَلِكَ الْيَوْمَ وَالْمَكَانَ الَّذِي نَزَلَتْ فِيهِ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ قَائِمٌ بِعَرَفَةَ يَوْمَ جُمُعَةٍ رواه البخاري
தாரிக் பின் ஷிஹாப் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறினார்கள் :
யூதர்களில் ஒருவர் உமர் பின் அல்கத்தாப் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் ”இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! நீங்கள் ஓதிக்கொண்டிருக்கும் உங்கள் வேதத்திலுள்ள ஒரு வசனம் யூதர்களாகிய எங்கள் மீது அருளப்பெற்றிருக்குமானால், அந்நாளை நாங்கள் ஒரு பண்டிகை நாளாக்கிக் கொண்டிருப்போம்” என்றார். அதற்கு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ”அது எந்த வசனம்?” எனக் கேட்டார்கள்.
அதற்கு அந்த யூதர், ”இன்றைய தினம் உங்களின் மார்க்கத்தை உங்களுக்கு நிறைவுபடுத்தி விட்டேன். உங்கள் மீது எனது அருட்கொடையை முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாமையே உங்களுக்கான மார்க்கமாகத் திருப்தி(யுடன் அங்கீகரித்துக்)கொண்டேன்” (5:3) (என்பதே அந்த வசனமாகும்)” என்றார்.
அதற்கு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ”இந்த வசனம் எந்த நாளில் எந்த இடத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அருளப்பெற்றது என்பதை நாங்கள் அறிந்துள்ளோம். ஒரு வெள்ளிக் கிழமை தினத்தில் அரஃபாப் பெருவெளியில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்கியிருந்த போதுதான் (இவ்வசனம் அருளப்பெற்றது” என்றார்கள். (நூல் : புகாரி 45)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹஜ் செய்வதற்காகப் புறப்பட்ட போது வெள்ளிக்கிழமையன்று அரஃபா நாள் வந்தது என இந்தச் செய்தி கூறுகின்றது.
1634 حَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَنْبَلٍ حَدَّثَنَا يَعْقُوبُ حَدَّثَنَا أَبِي عَنْ ابْنِ إِسْحَقَ حَدَّثَنِي نَافِعٌ عَنْ ابْنِ عُمَرَ قَالَ غَدَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ مِنًى حِينَ صَلَّى الصُّبْحَ صَبِيحَةَ يَوْمِ عَرَفَةَ حَتَّى أَتَى عَرَفَةَ فَنَزَلَ بِنَمِرَةَ وَهِيَ مَنْزِلُ الْإِمَامِ الَّذِي يَنْزِلُ بِهِ بِعَرَفَةَ حَتَّى إِذَا كَانَ عِنْدَ صَلَاةِ الظُّهْرِ رَاحَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُهَجِّرًا فَجَمَعَ بَيْنَ الظُّهْرِ وَالْعَصْرِ ثُمَّ خَطَبَ النَّاسَ ثُمَّ رَاحَ فَوَقَفَ عَلَى الْمَوْقِفِ مِنْ عَرَفَةَ رواه أبو داود
இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள் :
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அரஃபா நாளின் அதிகாலைப் பொழுதில் ஸுப்ஹு தொழுதுவிட்டு மினாவிலிருந்து புறப்பட்டார்கள். அரஃபா வந்தவுடன் நமிரா எனுமிடத்தில் தங்கினார்கள். நமிரா என்பது அரஃபாவில் தலைவர்(கள்) தங்கும் இடமாகும். லுஹர் தொழுகையின் நேரம் வந்தவுடன் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (அங்கிருந்து) பகற்பொழுதிலேயே புறப்ப(ட தயாராகிவி)ட்டார்கள். எனவே லுஹர், அஸர் தொழுகைகளைச் சேர்த்துத் தொழுதார்கள். பிறகு மக்களுக்கு உரையாற்றினார்கள். பிறகு பகற்பொழுதில் (அங்கிருந்து) புறப்பட்டுச் சென்று அரஃபாவின் தங்குமிடங்களில் தங்கி ஓய்வெடுத்தார்கள். (நூல் : அபூதாவூத் 1634)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அரஃபா நாளன்று லுஹரையும், அஸரையும் சேர்த்துத் தொழுததாக இந்தச் செய்தி கூறுகின்றது.
எனவே ஹஜ் பயணத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வெள்ளிக்கிழமையன்று ஜும்ஆத் தொழாமல் லுஹரைத் தொழுதுள்ளார்கள். லுஹரையும் அஸரையும் சேர்த்துத் தொழுதுள்ளார்கள். ஆகையால் பயணிகளுக்கு ஜும்ஆ கடமையில்லை என்பது இதன் மூலம் தெரிகின்றது.
– மதீனத்துல் முனவ்வரா
பல வருடங்களுக்கு முன் பெங்களூர் ஷபீலுர் ரஷாத் மதரஸாவில் ஓதிய உறவினர் (தற்போது பிரான்ஸில் இருக்கும் லால்பேட்டையைச் சேர்ந்த மவ்லவி N.முஹம்மது இஸ்மாயீல் மன்பஈ) ஒரு சம்பவத்தை சொன்னார். அது…
ஒருமுறை மதரஸா மாணவர்கள் மதரஸா முதல்வர் அல்லாமா அபுஸ் ஸஊத் ஹஜ்ரத் அவர்களுடன் வெளியூருக்குச் சென்றிருந்தோம். அன்று ஜும்ஆ நாள். மாணவர்கள் அனைவரும் பள்ளியில் ஜும்ஆவை தொழுவிட்டு தங்கும் இடத்திற்கு வந்து பார்த்தால் நாஜிர் ஹஜ்ரத் அவர்கள் தங்கியிருந்த இடத்திலேயே (ளுஹர்) தொழுகையை முடித்துவிட்டிருந்தார்கள்.
மாணவர்களுக்கோ ஆச்சரியம், ஹஜ்ரத் அவர்கள் ஜும்ஆவுக்கு வராத காரணத்தை கேட்டபோது அவர்கள் அளித்த பதில்…
“பயணாளிகளுக்கு ஜும்ஆ கடமையல்ல.
அது அல்லாஹ் பயணாளிகளுக்கு அளித்துள்ள சலுகை.
இறைவன் ஒரு சலுகையை நமக்கு அளித்திருக்கும்போது அதனை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
அதன் காரணமாகவே நான் ஜும்ஆவில் கலந்து கொள்ளவில்லை” என்றார்களாம்.
What is the ruling on Jumu’ah for the traveller?
Praise be to Allaah.
Salaat al-Jumu’ah (Friday prayer) is not obligatory on the traveller. This is the opinion of the majority of scholars, including the followers of the four schools of Abu Haneefah, Maalik, al-Shaafa’i and Ahmad… Shaykh al-Islam Ibn Taymiyah (may Allaah have mercy on him) said in al-Fataawa (24/178):
“The correct opinion, without a doubt… is that this (Jumu’ah and Eid prayers) are not obligatory for the traveller.
The Messenger of Allaah (peace and blessings of Allaah be upon him) used to travel frequently: he performed ‘Umrah three times, besides the ‘Umrah he performed along with Hajj. He performed his Farewell Pilgrimage accompanied by thousands upon thousands of people, and he went on more than twenty military campaigns, but there are no reports at all that say he prayed Jumu’ah or Eid prayers when travelling; he just prayed two rak’ahs [i.e., shortened prayers] as on all the other days.
There are also no reports that say he preached a khutbah on a Friday when he was travelling, neither standing on his own two feet or from atop his camel, as he used to do on Eid, or from a minbar, as he used to do on Fridays. He occasionally used to deliver an address to the people when he was travelling, and this was narrated by them… but no-one reported that he delivered a khutbah to them before prayer on a Friday whilst travelling, and no-one reported that he recited Qur’aan aloud on a Friday (i.e., during Salat al-Zuhr, on a journey).
Of course, if he had done something out of the ordinary and recited aloud or delivered a khutbah, they would have reported it. On the Day of ‘Arafaah, he delivered a khutbah, then he came down and led them in a two-rak’ah prayer, but no one reported that he recited aloud in that prayer. That khutbah was not for Jumu’ah – because if it had been for Jumu’ah, he would have done the same (delivered a khutbah) on every other Friday (when he was travelling); that khutbah was given because it was part of the rituals (of Hajj). Hence all the Muslim scholars said that he would have given a khutbah at ‘Arafaah even if it had not been a Friday.
This mutawaatir report proves that it was a khutbah for the Day of ‘Arafaah, not for Friday.”
From the above we know that Jumu’ah is not obligatory for the traveller, all that he has to do is to pray Zuhr.
However, if he prays Jumu’ah with the people of the place he is visiting, this is OK.
It says in al-Sharh al-Kabeer (2/154): “Whoever of these people – travellers, slaves and women – attends Jumu’ah, does not have to pray Zuhr, and we know of no dispute on this point. Their exemption from having to attend Jumu’ah is to make things easy for them, but if they attend, it is OK, as is the case with the sick person.
It is preferable for the traveller to attend Jumu’ah, because this is better, and is on the safe side (because some scholars think that Jumu’ah is obligatory for the traveller who is staying in a particular place, but not for the traveller who is on the road), as he comes under the general meaning of the aayah (interpretation of the meaning): “O you who believe! When the call is proclaimed for the Salaah on the Day of Friday (Jumu’ah prayer), come to the remembrance of Allaah, and leave off business (and every other thing), that is better for you, if you did but know!” [al-Jumu’ah 62:9].
We have already stated that the majority of scholars say that generally speaking it is not obligatory. And Allaah knows best.
– Sheikh Muhammed Salih Al-Munajjid, Islam Q&A.
source: https://islamqa.info/en/2905