விஞ்ஞான மனித படைப்பின் தத்துவமும்-குர்ஆனின் வாசகமும்
Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
‘களி மண்ணிலிருந்து மனிதப் படைப்பினை துவங்கினான்’ (32:7) என்றது அல்குர்ஆன்.
‘மனிதனை மண்ணிலிருந்து, பின்னர் விந்திலிருந்து படைத்தான் ஏக அல்லாஹ்’ அல் குர்ஆன் (அல்குர்ஆன் 35:11)
‘அவனை நாம் விந்திலிருந்து படைத்தோம் என்பதினை மனிதன் அறிய வேண்டாமா’ என்றும் சொல்லியுள்ளது குர்ஆனில் (36:77)
காலனி ஆதிக்க ஏகாதிபத்திய இங்கிலாந்தில் தொழில் புரட்சி காலத்தில் உதித்த விஞ்ஞானி சார்லஸ் டார்வின்( 1809-1882) மனிதப் படைப்பினைப் பற்றி தீவிரமாக ஆராய்ந்து எழுதப் பட்ட புத்தகம், ‘மனிதப் படைப்பின் ஆரம்பம்’ ( on the origin of species)
அதனில், ‘குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்’ என்று நம்பும்படி எழுதியுள்ளார்.
அதற்கு அவர் உதாரணமாக காட்டியது சிம்பனி என்ற மனிதக் குரங்கு மனிதனைப் போல நடவடிக்கைகளில் இருப்பதாலும், சில ஆப்பிரிக்க மக்கள் குரங்குகள் போன்ற முக அமைப்பினையும் கொண்டதாலும் தான். ஆனால் அவரால் ஏன் அந்த மனிதக் குரங்குகளால் பேச முடிவதில்லை என்பதையோ அல்லது இரண்டு கால்கள் கொண்டு மனிதனைப்போல நடமாட முடியவில்லை என்பதனையே விளக்க முடியவில்லை.
ஆங்கிலேய பகுத்தறிவாளி டாக்கின்ஸ் பித்திலி, ‘நாம் மனிதக் குரங்குகள் போல தோற்றம் இருந்தாலும், நாம் மனிதக் குரங்குகளின் சந்ததிகள் என்று ஒருபோதும் ஏற்றுக் கொள்வதில்லை’ என்கிறார்.
சமீபத்தில் மத்திய மந்திரி சாத்தியபால் சிங், ‘சார்லஸ் டார்வினின் கண்டு பிடிப்பு முற்றிலுமாக விஞ்ஞானத்திற்கு மாறுபட்டது’ என்று கூறியதோடு மட்டுமல்லாமல், ‘அவ்வாறு பள்ளி. கல்லூரி பாடப் புத்தகங்களில் கூறப் பட்டவைகளை நீக்க வேண்டும்’ என்றும் கூறியுள்ளார்.
ஆகவே மனிதன் எப்போதுமே மனிதனாகவே இருப்பான் என்று ஆணித்தரமாக கூறுகின்றது அல் குர்ஆன் ஒன்றே. மேலும் ஆதம் அலைஹி வஸ்ஸலாம் அவர்களை எப்படி படைத்தான் மற்றும் அவர்களிடமிருந்து எப்படி மனித சமுதாயத்தினை உருவாக்கினான் என்று மேற்கூறிய ஆயத்துகளிடமிருந்து தெள்ளத் தெளிவாக கூறப் பட்டுள்ளது.
மனிதன் குரங்கிலிருந்து வந்தவனென்றால் எங்கே அவனது குரங்கு வால்கள், எப்போது மறைந்து விட்டது, ஏன் மறைந்து விட்டது என்றாவது விஞ்ஞான ஆராய்ச்சியின் போது டார்வின் எண்ணியிருக்க வேண்டாமா? மனிதனின் முதுகு தண்டு வட கடைசிப் பகுதி வால் போல் இருந்தாலும் அது எப்போது சிறுத்து விட்டது என்று எண்ண வேண்டாமா? ஒரு மனிதன் இறந்து அவன் மண்ணோடு மண்ணாக மாக்கிப் போனாலும் அல்லது தீயிட்டுக் கொளுத்தினாலும் அழிக்க முடியாது என்பது முதுகு தண்டு வட்டத்தின் வால் போன்ற பகுதி தான். ஆகவே அது ஒரு காலும் வளர்ந்ததும் இல்லை, மனிதன் இறந்து விட்டதும் மறைந்து விட்டதுமில்லை.
குழந்தை இல்லாதவர்களுக்கு நவீன முறையில் கருத்தரிக்க முயற்சி செய்பவர்கள் கூட ஆண் விந்து மற்றும் பெண் கரு முட்டைகள் இணைத்துத் தான் கருத்தரிக்க செய்கிறார்கள். அவைகள் இல்லாமல் கருத்தரிக்க முயற்சிகள் விஞ்ஞானிகள் மேற்கொண்டு இருந்தாலும் அது ஒரு மனித அடையாளங்கள் கொண்டு அமைந்திருக்குமா(டி.என். ஏ) என்று சந்தேகமே!
சத்துக் குறைவான விந்துகள் குழந்தை தறிப்பதிற்கு தடையாக இருக்கும் என்று விஞ்ஞானப் பூர்வமாக சொல்கிறது. அதனைத் தான் குரானிலே சற்று அழுத்தமாக, ‘இன்றும் அவன் தான் மனிதனை (ஒரு துளி) நீரிலிருந்து படைத்தான் கூறுகிறது அல் குர்ஆன் (25:54).
என்னதான் விஞ்ஞான காலங்களில் வாழும் நாம் மனிதனைப் போன்று இயங்கக் கூடிய ரோபோக்கர்களை உருவாக்கினாலும், அல்லாஹ் அருளிய மனிதப் படைப்புப் போன்று அவைகளால் பகுத்தறிந்து தனியே செயலாற்ற முடியுமா என்றால் அது முடியாது. ஏனென்றால் அந்த ரோபோக்களை இயக்கக் கூடிய ஒரு சக்கி வேண்டும். மனிதப் படைப்பினுக்கே உரித்தாகுவதான அன்பு,ஆசை, பண்பு, பாசம், நேசம், பற்று போன்ற எண்ணற்ற அறிவு சான்ற செயல்களை எந்த நவீன ரோபோக்களோ, அல்லது எந்த விலங்குகளோ செயலாற்ற முடியாது என்பது தான் உண்மை.
மனிதனை தோற்றுவித்த விஞ்ஞானிகளுக்கெல்லாம் சிறந்த விஞ்ஞானியாக எல்லாம் வல்ல அல்லாஹ் நீக்கமற நிறைந்து இன்றும் என்றும் நிறைந்து நிற்பான் என்பது தான் திருக்குரானில் வேத வாக்கும், எம்பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாக்கும் ஆகும். அதனை எந்த விஞ்ஞானியும் வெல்ல முடியாது என்பது தான் உண்மை என்பதினை உறக்கச் சொல்வோமா நமது தொழுகையின் மூலம், நன்றிக் கடனாக!
– Ap. Mohamed Ali