உலகம் மறந்த இஸ்லாமிய விஞ்ஞானிகள்
[ ஒவ்வொரு சமூகத்திற்கும் அந்த சமூகத்தின் இறைதூதர் அவர்களின் சொல்லும் செயல்களும் தான் முன்மாதிரி.
அந்த வகையில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மண்ணிலிருந்தௌ பறந்து விண்ணிற்கு சென்று வந்தார்களோ அப்போதே மனித சமூகம் வானில் பறப்பதற்கான சாத்தியக் கூறுகளை இறைவன் திறந்து விட்டான் என்றே தோன்றுகிறது.
நபிகளாரின் மிஹ்ராஜ் பயணம் நவீன விஞ்ஞானத்தை விட மேம்பட்ட பல சம்பவங்களை உள்ளடக்கியது. – அஷ்ரஃப் இஸ்லாம்]
தொடர் – 1 அப்பாஸ் இப்னு ஃபிர்னாஸ்
மனிதன் நடக்கக் கற்றுக் கொண்ட போதே வானத்தை அன்னாந்து பார்த்து பறக்க வேண்டும் என்று கனவு கண்டான் என்று கூறுவார்கள்.
வரலாற்றில் இதற்கு பல ஆதாரங்கள் இருக்கிறது. பல அறிஞர்கள் வானில் பறவைகளை போல பறக்க ஆசைப்பட்டு அது தோல்வியில் முடிந்த கதை நாம் அறிந்ததே.
ஆனால் மனிதனின் இந்த நீண்ட நாள் கனவை நிறைவேற்றினார்கள் இரண்டு வாலிபர்கள். 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அவர்கள் கண்டுபிடித்த அற்புதம் தான் விமானம். இன்று அதன் பலனை உலகமே வியந்து கொண்டாடுகிறது.
ஆனால் ரைட் சகோதரர்கள் 19 ஆம் நூற்றாண்டில் விமானத்தை கண்டுபிடிப்பதற்கு ஆயிரம் வருடங்களுக்கு முன்பே ஒரு மனிதர் விமானத்தை வடிவமைத்து அதில் வெற்றிகரமாக பறக்கவும் செய்துள்ளார். அவர் தான் அப்பாஸ் இப்னு ஃபிர்னாஸ்.
இப்னு ஃபிர்னாஸ் கி.பி 810 ஆம் ஆண்டு ஸ்பெயினில் பிறந்துள்ளார்.
சிறு வயதிலேயே விஞ்ஞானத் துறையில் ஆர்வமுடன் செயல்பட்ட இப்னு ஃபிர்னாஸ் தனது 42 ஆவது வயதில் உலகின் முதல் விமானத்தை வடிவமைத்து முடித்தார்.
பின்னர் கர்போடா என்ற நகரில் உள்ள ஒரு பெரிய மசூதியின் உச்சியில் இருந்து விமானத்தோடு குதித்து பறக்க முயற்சித்துள்ளார்.
ஆனால் அவரின் இந்த முதல் முயற்ச்சி தோல்வியில் முடிந்தது. அந்த விமானம் பறப்பதற்கு ஏதுவாக இல்லாததால் விமானத்தோடு இப்னு ஃபிர்னாஸ் கீழே விழுந்து சில காயங்களோடு உயிர் தப்பினார்.
ஆனாலும் தனது முயற்ச்சியை இடைவிடாது தொடர்ந்துள்ளார் இப்னு ஃபிர்னாஸ்.
முதல் விமானம் தோல்வியடைந்ததற்கான காரணத்தை கண்டுபிடித்தார்.
பின்னர் அக்காரணங்களையெல்லாம் சரி செய்து தனது இரண்டாவது விமானத்த தயார் செய்ய ஆறம்பித்தார்.
இந்த முறை மரக்கட்டைகளுடன் “சில்க்” துணியையும், கழுகின் “இறகுகளையும்” இணைத்து விமானத்தை வடிவமைத்து முடித்தார்.
கி.பி. 875 ஆம் ஆண்டு. ஜபல் – ல் – அருஸ் மலை மேல் ஏறி தனது விமானத்தோடு நின்றார். அவரது இந்த முயற்ச்சயை கான மிகப்பெரிய மக்கள் கூட்டம் குழுமியிருந்தது. காரணம் அன்றைய தினம் ஒருவர் வானில் பறப்பதை அனைவரும் அதிசயமாக காண வந்தனர்.
இப்னு ஃபிர்னாஸ் தனது விமானத்தோடு பறப்பதற்கு தயாரானார்.
“எல்லாம் நலமாகவே உள்ளது. நான் எனது விமானத்தின் இறக்கைகளை பறவைகளைப் போலவே மேலும் கீழுமாக அடிக்கிறேன். நான் இப்போது என்னை ஒரு பறவையாகவே உணருகிறேன். வானில் பறந்து விட்டு பத்திரமாக உங்களிடம் திரும்ப வருகிறேன்” என்று கூறிவிட்டு தனது விமானத்தோடு மலையில் இருந்து கீழே குதித்தார்.
வெற்றிகரமாக பறக்க ஆறம்பித்தார். அவர் வானில் பறந்ததை கண்ட அந்த மக்கள் வியப்பில் ஆழ்ந்தனர்.
நீண்ட நேரம் பறந்து தனது கனவை நிறைவேற்றிக் கொண்ட இப்னு ஃபிர்னாஸ் தரையிறங்க முயற்சிக்கும் போது அவரது விமானம் விபத்துக்குள்ளானது. வேகமாக வந்து தரையில் மோதியதால் அவரது முதுகுத்தண்டு உடைந்தது.
முதுகு தண்டு உடைந்ததால் இனி அவரால் வானில் பறக்க முடியாத ஒரு சுழல் உருவாகியது. ஆனால் அவர் சோர்ந்து விடவில்லை.
வெற்றிகரமாக பறந்து விட்டு தரையில் இறங்கும் போது விபத்து ஏற்படுவதை தவிற்க்க என்ன வழி என்று சிந்தித்தார்.
“பறவைகள் வானத்தில் பறக்கும் போதும், தரையிறங்கும் போதும் தனது வால் பகுதியைக் கொண்டு தன்னை கட்டுப்படுத்தி கொள்வதை கண்டு பிடித்தார்.”
ஆதலால் விமானத்திற்கு வால் பகுதி அவசியமான ஒன்று. அதை கொண்டே விமானத்தின் இயங்குதல் தீர்மானிக்க படுகிறது என்பதை கூறி அதை ஒரு புத்தகமாகவும் எழுதி எதிர் காலத் தலைமுறையினருக்கு விட்டுச் சென்றுள்ளார்.
விமான வடிவமைப்பிற்கான அவரின் அந்த புத்தகம் பின் வந்த பல விஞ்ஞானிகளுக்கு வழிகாட்டியாக திகழ்ந்தது. டா வின்சிக்கு உட்பட.
விமானத்தின் முதல் வடிவமைப்பாளரான இப்னு ஃபிர்னாஸ் தனது 77 ஆவது வயதில் கி.பி. 887 ஆம் ஆண்டு இறைவனடி சேர்ந்தார்.
அப்பாஸ் இப்னு ஃபிர்னாஸ் விமான வடிவமைப்பில் மட்டுமில்லாத பவேறு துறைகளில் பல ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார்.
மருத்துவத்துறை, தற்காப்பு, எழுத்தாற்றல் என பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியுள்ளார். அப்பாஸ் இப்னு ஃபிர்னாஸ்.
– அஷ்ரஃப் இஸ்லாம்
source: https://www.facebook.com/dheva.islam/posts/1986391914943560