முஸ்லிம்கள் பொங்கல் கொண்டாடலாமா? வினை-எதிர்வினை!
வினை :
பூஜை செய்து விட்டு அவர்கள் விவசாயம் செய்வதால் அவர்கள் உற்பத்தி செய்து விற்பனை செய்யும் அரிசி, கோதுமை, இன்னபிற விளை பொருட்களை நாம் உண்ணலாமா?
அவர்கள் பூஜை செய்துவிட்டு கட்டிய கட்ட்டங்களை விலைக்கு வாங்கலாமா? அல்லது வாடகை கொடுத்து அதில் குடியிருக்கலாமா?
கடையைத் துவக்கும் நாளிலிலும் அன்றாடம் கடைகளைத் திறக்கும் போதும் பூஜை செய்துவிட்டுத் தான் ஆரம்பிப்பார்கள்.
எனவே அவர்களின் கடைகளில் பொருட்களை வாங்கலாமா? என்றெல்லாம் கூட சந்தேகம் வரும்.
மேலோட்டமாகப் பார்க்கும் போது இந்த சந்தேகம் சரியானது போல் தோன்றினாலும் சிந்தித்துப் பார்க்கும் போது இந்த சந்தேகத்துக்கு அவசியம் இல்லை என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.
ஒரு பொருளையே சிலைகளுக்குப் படைப்பதும் அந்தப் பொருளின் நன்மைக்காக சிலைகளிடம் வேண்டுவதும் வெவ்வேறானவை.
குறிப்பிட்ட் ஒரு உணவை கடவுளுக்கு படைக்கிறோம் என்று சொல்லி பூஜை போடுபவர்கள் அந்தப் பொருளில் தங்களுக்கு உள்ள உரிமையை விட்டு விடுவார்கள். அதை பிரசாதமாக வழங்கி விடுவார்கள்.
ஆனால் ஒரு வயலில் பூஜை போடுபவ்ர்கள் அந்த வயலைக் கடவுளுக்குப் படைப்பதில்லை. பூஜை செய்த பின்னர் அந்த வயலில் தங்கள் உரிமையை விட்டு விடுவதில்லை. பூஜைக்குப் பின் அந்த வயலை பலருக்கும் பங்கு போட்டுக் கொடுப்பதில்லை. எனவே அவர்கள் வயலை கடவுளுக்குப் படைக்கவில்லை என்று இதன் மூலம் தெரிகிறது. வயலில் விளைச்சல் கிடைப்பதற்காக அவர்கள் வேண்டுதல் தான் செய்கிறார்கள்.
ஒரு ஆட்டைக் கடவுளுக்குப் படைப்பதாகச் சொல்பவர்கள் அதன் பின்னர் அந்த ஆட்டில் தங்களுக்கான உரிமையைக் கோர மாட்டார்கள். அதை வெட்டி பங்கிட்டு விடுவார்கள். இது போன்றவை தான் நமக்கு ஹராமாகும்.
வயலை கட்ட்ட்த்தை அவர்கள் கடவுளுக்காக ஆக்குவதில்லை. தமக்குரியதாகவே வைத்துக் கொள்வதால் அது படையலில் சேராது.
பூஜை செய்து விட்டு உற்பத்தி செய்த விளைபொருட்களை இலவசமாகவோ விலைகொடுத்தோ வாங்கி பயனபடுத்தலாம். பூஜைகள் செய்து கட்டப்பட்ட கட்டட்த்தில் குடியிருக்கலாம். விலைக்கு வாங்கலாம்.
ஆனால் கடவுளுக்குப் படைக்கும் நம்பிக்கையில் படைக்கப்ட்ட பொருளாக இருந்தால் அதை இலவசமாகவோ விலை கொடுத்தோ வாங்கியோ பயன்படுத்துவது கூடாது.
இந்த நுணுக்கமான வேறுபாட்டைப் புரிந்து கொள்ளுங்கள் – ஷேக் மைதீன்
எதிர்வினை :
பகுத்தறிவு பேசக்கூடிய பகுத்தறிவுக்கு சம்பந்தம் இல்லாத உங்களைப்போல் ஆட்களுக்கு இஸ்லாமியர்களை மாட்டையும் மரத்தையும், சூரியனையும் வணங்கவைக்க ஏன் இவ்வளவு ஆர்வம். – ஹக்கீம் இப்னு தர்வேஷ்
முஸ்லிம்களும் பொங்கலும் – ”இஸ்லாம் கல்வி” இணையத்திலிருந்து…
கடவுள் இல்லை என்று சொல்லும் நாத்திகர்களும் பொங்கலைக் கொண்டாடுகின்றனர். நடைமுறையில் பொங்கல் தினம் என்பது சூரிய வழிபாடு, பசு வழிபாடு என இந்து மதம் சார்ந்த தமிழர்கள் பண்டிகையாகவே கொண்டாடப்படுகிறது. எனவே,பொங்கல் என்பது முஸ்லிம்களும் கொண்டாடும் பொதுவான திருநாள் அல்ல. படைப்புகளுக்கு வணங்குவதைவிட படைத்தவனை வணங்குவதே பகுத்தறிவு!
பொங்கல் குறித்த முஸ்லிம்களின் கண்ணோட்டம் தெளிவாக உள்ளது.இறைவனைக்கு நன்றி செலுத்துவதையும் படைப்புகளுக்கு நன்றி செலுத்துவதையும் இஸ்லாம் தெளிவாகச் சொல்லியுள்ளது:
* வணங்குவதற்குரியவன் படைத்த இறைவனேயன்றி படைப்புகள் அல்ல.
* மனிதர்களுக்கு நன்றி செலுத்தாதவன்,இறைவனுக்கு நன்றி செலுத்தியன் ஆக மாட்டான்.
* உழைப்பவரின் வியர்வை நிலத்தில் விழும் முன் உழைப்பிற்கான கூலியைக் கொடுத்து விடச்சொல்லி உடல் உழைப்புக்கு உண்மையான மரியாதை கொடுப்பது இஸ்லாம்.
முஸ்லிம்களின் கட்டாயக் கடமைகளில் ஒன்றான ஜகாத் பொருளில் கஷ்டப்பட்டு நீர் பாய்ச்சி, உழுது விளைந்த விளைபொருளுக்கு 5% சதவீதமும், இயற்கையாக விளைந்த பொருள்களுக்கு 10% சதவீதமும் ஜகாத் என உடலுழைப்பைக் போற்றுகிறது இஸ்லாம்.
ஒருபக்கம் நன்றி செலுத்துகிறோம் என்று சொல்லிக் கொண்டு இன்னொரு பக்கம் அதே நாளில், ஜல்லிக்கட்டு என்ற பெயரில் மாடுகளைக் கொடுமைப் படுத்துகிறோம் இதை வீரம் என்றும் சொல்கிறோம்! மாடுகளால் மனிதன் அடையும் கொடுமையை ‘விழுப்புண்’ என்று ஏமாற்றுகிறோம். நாளெல்லாம் நமக்காக உழைத்த தொழிலாளியை விலங்குகளுடன் மோத விட்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கிறோம். இதுவா உழைப்பவருக்கும் அதற்கு உதவிய விலங்குகளுக்கும் செய்யும் நன்றி? இஸ்லாம் இவ்விசயத்திலும் தெளிவாக இருக்கிறது . விலங்குகளைக் கொடுமை படுத்துவதை இஸ்லாம் தடுத்துள்ளது.
ஒரு சந்தர்ப்பத்தில் முஹம்மது நபி தன் தோழர்களுடன் வந்து கொண்டிருந்தார்கள். நபிகளார் வரும் பாதையில் இருந்த புற்றிலிருந்து எறும்புகள் ஊர்ந்து செல்வதைக் கண்டு , அவ்வெறும்புகளால் நபிகளாருக்கு சிரமம் ஏற்பட்டு விடும் என்று கருதி, ஒரு தோழர் எறும்பு புற்றுக்கு தீ வைத்தார் . இதனைக் கண்ட முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உயிர்களை தீயிட்டு எரிப்பதைக் வன்மையாகக் கண்டித்தார்கள்.
அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: “தாகித்திருந்த ஒரு நாயின் தாகத்தை தீர்ப்பதற்காக கிணற்றில் இறங்கி நீர் கொண்டுவந்து நாயின் தாகத்தைத் தீர்த்த மனிதனின் செயலை அல்லாஹ் நன்றியுடன் பொருந்திக் கொண்டு அவனின் பாவங்களை மன்னித்து விட்டான் ” என்று பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னபோது, “இறைத்தூதரே, விலங்குகளுக்கு உதவினாலும் அல்லாஹ்விடத்தில் வெகுமதி கிடைக்குமா?” என்று வினவியபோது, “ஆம்! விலங்குகளுக்கு உதவி செய்தாலும் வெகுமதியுண்டு” என்றார்கள். இன்னொரு சந்தர்ப்பத்தில் ஒரு பூனையை வீட்டிலடைத்து உணவு கொடுக்காமல் பட்டினி போட்டுக் கொன்ற பெண் நரகில் வேதனை செய்யப்படுவதாகச் சொன்னார்கள் (புகாரி).
உழைப்பவரின் உழைப்புக்கு உண்மையான மரியாதை கொடுப்பது, வெறும் வாய் வார்த்தைகளால் அல்ல.