எப்படிப்பட்ட மோசமானதொரு சமூகத்தை இஸ்லாம் நேர்வழிப்படுத்தி இருக்கிறது..!
அல்லாஹ்வின் தூதரிடம் ஒரு மனிதர் ஓடோடி வந்தார்!
தூதரே நான் அறியாமை காலத்தில் செய்த செயலால் என் மனம் வேதனை அடைகிறது.
இந்த விஷயத்தில் என் நிலை என்னா யாரசூரல்லா…!?
அறியாமை காலத்தில் பெண் குழந்தை பிறந்தால் உயிரோடு புதைத்து விடுவோம்”
எனக்கும் பெண் குழந்தை பிறந்தது நான் கொன்று விடுவேன் என்ற பயத்தில் என் மனைவி அந்த குழந்தை பிறக்கும் போது இறந்துவிட்டது என என்னிடம் பொய் சொல்லிவிட்டாள்.
சில ஆண்டு கழித்த போது நான் வாசலில் அமர்ந்து அங்கு விளையாடிக் கொண்டு இருந்த குழந்தையை ரசித்துக் கொண்டு இருந்தேன்.
அப்போது என் மனைவியை அழைத்து நம் குழந்தை உயிருடன் இருந்திருந்தால் இப்போது இது போல் விளையாடிக் கொண்டு இருப்பாள் என கூறினேன்.
அப்போது என் மனைவி நான் திருந்தி பெண் குழந்தை மீது பாசம் வந்து விட்டது என எண்ணி என் அருமை கனவரே அங்கு விளையாடுவது நம் குழந்தை தான் நான் இறந்து விட்டது என பொய் சொல்லி விட்டேன் என உண்மையை கூறினாள்.
“யாரசூரல்லாஹ்! எனக்கு எங்கிருந்து அந்த கோபம் வந்தது என தெரியாது. வீதியில் விளையாடிய அந்த பச்சிளம் மண்ணை உயிரோடு மண்ணில் புதைப்பதற்கு இழுத்துச் சென்று குழி தோண்டி புதைத்தேன். அப்போது அந்த பிஞ்சுக் குழந்தை என் மீது விழுந்த மண்ணை துடைத்து விட்டது. அப்போது கூட என் மனம் இரங்காமல் துடிக்க துடிக்க புதைத்து விட்டேன். இந்த விஷயத்தில் என் நிலை என்னா யாரசூரல்லாஹ்” என கண்ணீரோடு அந்த மனிதர் நின்றார்.
அல்லாஹ்வின் தூதர் கண்கள் குளமாக மாறிவிட்டது.
சஹாப்பாக்களிடம் சொன்னார்கள் ”அறியாமை காலம் மனித இதயத்தை எவ்வளவு கடினமாகவும் இஸ்லாம் இப்படி கண்ணீரோடு இரக்கமாகவும் மாற்றியுள்ளது என கூறிவிட்டு. தோழரே அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடுங்கள் அவன் பாவங்களை பொறுப்பவனாக உள்ளான்” என அவரிடம் கூறினார்கள்.
“இஸ்லாம் உயிரோடு புதைத்த மாக்களை மனித புனிதராக மாற்றி பெண் குழந்தை பிறப்பு சுபச் செய்தி என மாற்றி காட்டியது.
அல்லாஹ்வை விட நமக்கு சட்டங்களை சிறப்பாக வேறு யார் தான் தர முடியும்!!!
– மதீனத்துல் முனவ்வரா