‘ஹராத்தில்’ மூழ்கி ‘ஹலாலை’ தேடுகிறோம்!
நாம் ஒன்றும் ‘கிங் மேக்கர்கள்’ அல்ல, ‘கிங் ஜோக்கர்கள்’!
கஸ்தூரியை சுமந்தவர்கள் குப்ரிய சாக்கடையில் சுகந்தம் தேடி புறண்டதனால் தூய இலட்சியங்கள் நாறிப்போக, இரத்தமும் சதைகளும் உணர்வுகளும் உரிமைகளும் அற்பமென்றாகி அவல ஊர்வலங்கள் இந்த உம்மாவின் வீதிகளில் வலம் வரத் தொடங்கின!
கலங்கரை விளக்குகள் குட்டிச் சுவர்களுக்குள் சுயநல வாழ்க்கை தொடரக் கற்றுக்கொண்டதால் தான் அதற்காகவே காத்திருந்த ஓநாய்கள் சாவகாசமாக முற்றுகையிட்டு எம் நிலங்களிலேயே முகாமிட்டு விஷப்பற்களை பதிக்கத் தொடங்கின!
இன்று ஜாஹிலீய சத்துருக்களின் அரசியல் சதுரங்கத்தில் நாம் ஒன்றும் ‘கிங் மேக்கர்கள்’ அல்ல, ‘கிங் ஜோக்கர்கள்’!
அல்லாஹ்வின் அமானிதத்தை அலட்சியம் செய்துவிட்டு அசத்திய ‘பொலிடிக்ஸில்’ நவீனம் காண்கிறோம்!
இது அநாகரீக மேடையில் நாகரிக நடனமாம்!
அல்லாஹ்வின் அமானிதத்தை அலட்சியம் செய்துவிட்டு அசத்திய ‘பொலிடிக்ஸில்’ நவீனம் காண்கிறோம்! ‘ஹராத்தில்’ மூழ்கி ‘ஹலாலை’ தேடுகிறோம்!
பயணங்கள் முடிவதில்லை !!
அவசியமும் அவசரமும் வேகத்தை அதிகரிக்க
ஆரம்பமானது ஓட்டம் ! சில கோஷங்களாலும் வசனங்களாலும்
கண்கள் கட்டப்பட அசையாத நம்பிக்கையில்
ஒரு பந்தயக்குதிரை போல !
கொடுத்த விலைகள் அதிகம்தான்
இன்னும் கொடுப்பேன் என் இறைவனுக்காக .
இலக்கை தெளிவாய் சொன்னார்கள் .
பாதையினை தான் அடிக்கடி மாற்றினார்கள்
நேற்று பிழை என்றது இன்று சரியாகும் !
குப்ரிய கொல்லைப்புரங்களிலும்
‘ஹிக்மத் ‘ மேச்சல்கள் !!!
பன்றிக்கு ஒட்டகத் தோல் போர்த்தி
குர்பான் கொடுத்தால் ஹலாலாம் !!!
ரகீப் ,அதீதே குழம்பி போய் விடுவார்கள்
நான் என்ன செய்ய ?! இந்த புதிய
இஜிதிஹாத் எனக்கும் புரியவில்லை !!
செக்கில் இருந்தாலும் சிலையில் இருந்தாலும்
நக்கித்தான் ஆகவேண்டுமாம் !!??
ஆர்வம் மட்டும்தான்
இலக்கை நோக்கி பாதை தெளிவற்று
‘குப்ரை ‘ குளிப்பாட்டி
சத்திய ஆடை கொடுத்து !!
அந்த சாக்கடைக்கு சந்தனம் பூசி
தொடரும் எம் இலக்கு நோக்கிய
பயணங்கள் தான் முடிவதில்லை !!
source: http://islamicuprising.blogspot.in/2014/05/blog-post_8785.html