நீ ஒரு வாக்கு வங்கி மட்டுமே…!
[ மீண்டும் மீண்டும் முஸ்லிம்களை ஏமாற்றும் முயற்சி! ]
சீமானின் பேட்டியை நியூஸ் 18 தொலைக்காட்சியில் பார்த்தேன்.
தமிழகத்தை தமிழன் தான் ஆள வேண்டுமாம்.
அது அய்யா நல்லக் கண்ணுவாக இருக்கலாம்!
அது அய்யா சகாயமாக இருக்கலாம்!
அது தோழர் திருமாவாக இருக்கலாம்!
அது அன்புமனி இராமதாஸாகக் கூட இருக்கலாம்!
அது சீமானாக இருக்கலாம்!
ஆனால், அந்தச் சீமானை மேடையேற்றி கொண்டாடுகிற அமீராக இருக்கக் கூடாது!
இளையான்குடியில் மேடையேற்றிய தமீம் அன்சாரியாக இருக்கக் கூடாது!
இன்னும் பல மேடையேற்றிக் கொண்டாடுகிற இசுலாமிய அரசியல் கட்சி சார்ந்த தலைவர்களாக இருக்கக் கூடாது!
மறந்தும் கூட ஒரு முஸ்லிம் பேரையும் சொல்ல மாட்டார். ஆனால், மேடையில் மட்டும் உனது இனம் தமிழ் என்பார். உனது முப்பாட்டன் முருகன் என்பார்.
இந்த முட்டாள் முஸ்லிமும் கீழ நின்னு கை தட்டிட்டு வந்துடுவான்!
கேட்டால் நானும் இசுலாமியத் தமிழன் என்பான்!
உன்னை அவன் விடுகிற கு…..க்கு சமமாகத் தான் நினைப்பான் என்பதை மனதில் வைத்துக் கொள்!
இது தான் எதார்த்தம்…. நுட்பமா கவனிக்கனும் தமிழ் பிள்ளைகளே!
இலங்கையின் பிரபாகரன் தலைவன் ஆக முடியும்!
ஆனால், இந்த தமிழக மன்னின் மைந்தர்களான நீங்கள் இசுலாம் என்கிற மார்க்கத்தை வாழ்வியலாக ஏற்ற ஒரே காரணத்திற்காக அந்நியனாக பார்க்கப்படுகிறீர்கள்!
நீ ஒரு வாக்கு வங்கி மட்டுமே!
– முனீப் அபூ இக்ராம்