பாலைவனச் சிங்கம் சத்தாம் ஹுஸைன்
பாலைவனச் சிங்கம் சத்தாம் ஹுஸைன் தூக்கிலிடப்பட்டு பல வருடங்கள் உருண்டோடிவிட்டன. கலிமா ஷ ஹாதாவான “லா இலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரஸுலுல்லாஹ்” வை தனது இறுதி வார்த்தையாக மொழிந்து உயிர் விட்ட அந்த மகத்தான மாவீரனை எண்ணிப்பார்க்கும்போது சில விஷயங்கள் வியப்பாகவே உள்ளது.
ஆம்! தூக்கிலிடப்படுவதற்கு சில தினங்களுக்கு முன்னர் கூட அமெரிக்க உயர் அதிகாரிகள் அவரிடம் அமெரிக்காவுக்கு சாதகமான நிலையை அவர் தெரிவித்தால் அவரை தகுந்த மரியாதையோடு அவர் விரும்பும் வாழ்க்கையை அமைத்துத்தருவதாக வாக்குறுதி அளிக்க முன் வந்த போதும் அதை துச்சமென தூக்கியெரிந்து தூக்குமேடையை முத்த்மிட்ட அந்த வீர்ச் செயல் உலக வரலாறு வியப்புடன் பதிவு செய்துள்ளதை எவர்தான் மறக்க முடியும்!
ஜனநாயகப் போர்வையில் சர்வாதிகாரம் செலுத்தும் அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும், அதற்கு அடிமைப்பட்டுக்கிடக்கும் நாடுகளும் வரலாறு காணாத பெரும் படையுடன் முற்றுகையிட்டு மிரட்டியபோதும் கொஞ்சமும் அஞ்சாமல் எதிர்த்து நின்ற துனிவு அவரைத்தவிர இந்நூற்றாண்டில் எவருக்குமிருந்ததாகத் தெரியவில்லை.
போரில் வெற்றி தோல்வி என்பது சகஜம்! கைதான பின்பும் அவரது வீரம் சற்றும் குறையவில்லை. அதற்கு சான்று… நீதிமன்றத்தில் அவரது அனல் தெரிக்கும் வாதங்கள் உலகை அதிசயிக்க வைத்தன என்பதே உண்மை.
யூத நஸாராக்களின் சூழ்ச்சிக்கு கடைசீ வரை தலை சாய்க்காத கம்பீர மனிதராக சம காலத்தில் வாழ்ந்து மறைந்த ஒரு நாட்டின் அதிபர் என்றால் அது சந்தேகமில்லாமல் சத்தாம் ஹுஸைன் ஒருவர் மட்டுமே என்று சொன்னால் மிகையல்ல.
அவரது கடைசீ மூச்சாக அவரது உள்ளத்தில் உருவாகி, உதட்டில் வெளிப்பட்ட அந்த ஏகத்துவ மந்திரச்சொல் கலிமாவாம் “லா இலாஹ இல்லல்லாஹ், முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்” வை உலக ஊடகங்கள் விரும்பியோ விரும்பாமலோ ஒளி – ஒலி பரப்பச்செய்து அதற்கு இந்த ஒட்டுமொத்த உலகையே சாட்சியாக்கினானே ரப்புல் ஆலமீன் அல்லாஹ்! சத்தாம் ஹுசைனின் புகழை அல்லாஹ்வே உயர்த்திவிட்டாதற்கான சாட்சியல்லவா அது.
“எவர் ”லா இலாஹ இல்லல்லாஹ்” எனும் கலிமாவுடன் தனது கடைசீ வார்த்தையை முடித்துக்கொண்டாரோ அவர் சுவனவாசி” எனும் நபிமொழிக்கொப்ப சத்தாம் ஹுஸைன் சுவனவாசி என்பதை அல்லாஹ்வே இவ்வுலக மக்களுக்கு பரைசாற்றிவிட்டான் என்று கருத்துக் கொள்ளலாம் தானே!
– எம்.ஏ.முஹம்மது அலீ