கோளங்களை ஒப்பிட்டுப்பாருங்கள் அல்லாஹ்வின் ஆற்றல் புரியும்
இணைவைப்பின் துரும்பு கூட நம்மீது படாமல் பார்த்துக் கொள்வோம்
[ ”பிரபஞ்சத்தில் 10 ஆயிரம் கோடி நட்சத்திர மண்டலங்கள் உள்ளன. ஒவ்வொரு நட்சத்திர மண்டலத்திலும் லட்சக்கணக்கான நட்சத்திரங்கள் உள்ளன” என்கின்றனர், விஞ்ஞானிகள் .
இறைவனால் படைக்கப்பட்ட மனிதர்கள் என்னதான் முயன்றாலும் துல்லியமாக முழுமையாக எதையும் அறிய முடியாது. ஏனென்றால் மனிதன் பலகீனமானவன் என்று அல்லாஹ் கூறுகிறான்.
”மனிதன் பலஹீனமானவனாகவே படைக்கப்பட்டுள்ளான்.’‘ (அல்குர்ஆன் 4:28)
”கடைசியாக சுவனம் செல்பவனின் இருப்பிடம் இந்த (ஒரு) பூமியளவு இருக்கும்” என்று பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னதை இப்போது நினைத்துப்பார்த்தால் வியக்காமல் இருக்க முடியவில்லை.’
கடைசியாக சுவர்க்கம் செல்பவரின் இருப்பிடமே இந்த உலகமளவு எனும்போது பிரபஞ்சத்தின் பிரம்மாண்டத்தை கற்பனைகூட செய்து பார்க்கத்தான் முடியுமா? ]
கோளங்களை ஒப்பிட்டுப்பாருங்கள் அல்லாஹ்வின் ஆற்றல் புரியும்
அல்லாஹுத்தஆலா தனது பார்வையில் இந்த பூமி ஒரு கொசுவின் இறக்கைக்கு கூட சமமில்லை என்கிறான் என்பதை விஞ்ஞானப்பூர்வமாக நம்ப வேண்டுமா……! இங்கு இடம்பெற்றுள்ள கோளங்களின் ஒப்பீட்டை பார்த்தாலே புரிந்து கொள்ளலாம்.
நம் கண்பார்வைக்கு மிகப் பிரம்மாண்டமாகத் தெரியும் இப்-பூமி மற்ற கோளங்களுடன், நட்சத்திரங்களுடன் ஒப்பிடும்போது இந்த பிரபஞ்சத்தில் ஒரு சிறு புள்ளியளவுக்குக்கூட இல்லை.
இந்த சிறு புள்ளியளவுக்குக்கூட தெரியாத இந்த பூமிக்குள்தான் கோடான கோடி மக்களை, படைப்புகளை அல்லாஹ் படைத்துள்ளான். அப்படியிருக்கையில் இந்த மனிதனைப்போய் அல்லாஹ்வுக்கு இணையாக்குவதோ அவனது அதிகாரத்தில் பங்குள்ளவனாக எண்ணுவதோ, ஏன் கற்பனைகூட செய்வதோ கொஞ்சமேனும் பொருத்தமாக இருக்குமா?
தயவு செய்து சிந்தித்துப்பாருங்கள் சகோதரர்களே!
இப்படத்தில் சூரியனின் அளவே சின்னதாகத் தெரிகிறது. பூமி இருக்கும் இடமே தெரியவில்லை….
ஆனால் கண்ணுக்கே தெரியாத அந்த சின்ன பூமியில் தான் கோடான கோடி ஜீவராசிகளை அல்லாஹ் படைத்துள்ளான்.
நாம் வசிக்கும் சின்ன பூமியின் படைப்பே நம்மை வியப்பிலாழ்த்தும்போது மற்ற பிரம்மாண்டங்களில் எல்லாம் என்னென்ன வைத்துள்ளான்… நிச்சயமாக நமது அறிவுக்கு எட்ட வாய்ப்பே இல்லை.
இவையனைத்தையும் படைத்த ரப்புல் ஆலமீன் சொல்கிறான், “எதையும் நான் வீணுக்காகப்படைக்கவில்லை” என்கிறான். ஸுப்ஹானல்லாஹ்!
இந்த பிரபஞ்சத்தில் ஒரு புள்ளியளவு கூட இல்லாத பூமியைப்பார்த்தே நாம் மலைத்துப்போய் நிற்கும்போது அவன் படைத்துள்ள பிரம்மாண்டத்திற்கும் மேல் பிரம்மாண்டங்களைப்பற்றி மனித அறிவு எட்டித்தான் பார்க்க முடியுமா?
எதையும் அவன் வீணுக்காகப் படைக்கவில்லை என்பதை எண்ணும்போது… இறைவனின் ஆற்றலை எந்த மனித சக்தியாலும் சத்தியமாக முழுமையாக அறிந்து கொள்ளவே முடியாது.
இந்த பூமி எவ்வளவு அழகானது. பிரம்மாண்டமானது, சூட்சுமமானது. எவ்வளவு பொருட்கள், எவ்வளவு விஷயங்கள் நம்மைச் சுற்றி…!!!
இவ்வளவு சக்தி வாய்ந்த அந்த ஏக இறைவன் அல்லாஹ் நம்மிடம் காட்டும் அன்பையும், கருணையையும், அருளையும் நாம் எண்ணிப்பார்க்க வேண்டாமா? இப்பொழுது சொல்லுங்கள்… அந்த ஏக இறைவனுக்கு இணை வைப்பது எவ்வளவு பெரிய பாவம்!
கீழே இருக்கும் திருக்குர்ஆனின் வசனங்களை சற்று சிந்தித்துப் பாருங்கள்….
“அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்” (அல்குர்ஆன் 1:1)
உலகங்களை உருவாக்கிப் பரிபாலித்துவரும் வல்ல அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் (அல்குர்ஆன் 1:1)
நீங்கள் பார்க்கின்ற தூண்களின்றி வானங்களை அல்லாஹ்வே உயர்த்தினான். பின்னர் அர்ஷின் மீது அமர்ந்தான். சூரியனையும், சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறான். ஒவ்வொன்றும் குறிப்பிட்ட தவணை வரை ஓடுகின்றன. காரியத்தை அவனே நிர்வகிக்கிறான். உங்கள் இறைவனின் சந்திப்பை நீங்கள் உறுதியாக நம்புவதற்காக சான்றுகளை அவன் தெளிவுபடுத்துகிறான். (அல்குர்ஆன் 13:2)
”பிரபஞ்சத்தில் 10 ஆயிரம் கோடி நட்சத்திர மண்டலங்கள் உள்ளன. ஒவ்வொரு நட்சத்திர மண்டலத்திலும் லட்சக்கணக்கான நட்சத்திரங்கள் உள்ளன” என்கின்றனர், விஞ்ஞானிகள் .
இறைவனால் படைக்கப்பட்ட மனிதர்கள் என்னதான் முயன்றாலும் துல்லியமாக முழுமையாக எதையும் அறிய முடியாது. ஏனென்றால் மனிதன் பலகீனமானவன் என்று அல்லாஹ் கூறுகிறான்.
”மனிதன் பலஹீனமானவனாகவே படைக்கப்பட்டுள்ளான்.” (அல்குர்ஆன் 4:28)
”நிச்சயமாக மக்களில் பெரும்பாலோர் நம் அத்தாட்சிகளைப்பற்றி அலட்சியமாக இருக்கின்றார்கள்” (அல்குர்ஆன் 10:92)
சிந்தித்துப்பார்க்க வேண்டாமா?
“அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்கள் இருதயங்கள் மீது பூட்டுப் போடப்பட்டு விட்டனவா?” (அல்குர்ஆன் 47:24)
இணைவைப்பின் துரும்பு கூட நம்மீது படாமல் பார்த்துக் கொள்வோம்
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்,
“யஹுதிகளையும், நஸாராக்களையும் அல்லாஹ் சபித்துள்ளான். அவர்கள் தங்களது நபிமார்களுடைய கபுருகளை வணக்கஸ்தலமாக்கி விட்டனர்.” (நூல்: புகாரி)
பெரும்பாலான முஸ்லிம்கள் இதர சமுதாயத்தினரைப் போலவே தங்கள் தேவைகளை வேண்டுதல்களை அவுலியாக்களின் சமாதிகளை நாடிச் சென்று குறைபாடுகளை முறையிடுகின்றனர். இவர்களது முறையீடுகளை அந்த நல்லடியார்கள் செவியுறுகிறார்களா? என்றால்,
அல்லாஹ் கூறுகிறான்,
”(நபியே) நிச்சயமாக நீர் மரித்தோரைக் கேட்கும்படிச் செய்ய முடியாது”. (அல்குர்ஆன் 27:80)
பிரார்த்தனை அல்லது தேவைகளை முறையீடு செய்வது என்பதும் வணக்கமேயாகும். சிபாரிசு செய்யத் தகுதி பெற்றவர்கள் எனக் கருதி மறைந்த பெரியார்களின் விக்கிரங்களை அன்றைய அரபியர்கள் வணங்கியும், பிரார்த்தித்தும் வந்தார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள் “பிரார்த்தனை வணக்கத்தின் மூளை” (அனஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மிதீ)
“பிரார்த்தனை என்பதே வணக்கம்தான்” (நூமானுபின் பஷீர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: அஹ்மத், திர்மிதீ)
”மேலும் அல்லாஹ் திருமறையில் கூறுகிறான், என்னையே பிரார்த்தியுங்கள் நான் உங்களுக்கு பதிலளிக்கிறேன்.” (அல்குர்ஆன் 40:60)
“நிச்சயமாக அல்லாஹ்வையன்றி எவர்களை நீங்கள் அழைக்கிறீர்களோ, அவர்களூம் உங்களைப் போன்ற அடிமைகளே.” (அல்குர்ஆன் 7:194)
”எவர் அவனையன்றி அழைக்கிறார்களோ, அவர்கள் இவர்களுக்கு எவ்வித பதிலும் தரமாட்டார்கள்.” (அல்குர்ஆன் 13:14)
அல்லாஹ்விடம் மட்டும் தான் உதவி தேடவேண்டும், அவனிடம் மட்டும் தான் பிரார்த்தனை செய்யவேண்டும் எனவும் அல்லாஹ் திருமறையில் தெளிவுபட கூறுகிறான்.
”கடைசியாக சுவனம் செல்பவனின் இருப்பிடம் இந்த (ஒரு) பூமியளவு இருக்கும்” என்று பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னதை இப்போது நினைத்துப்பார்த்தால் வியக்காமல் இருக்க முடியவில்லை.’
கடைசியாக சுவர்க்கம் செல்பவரின் இருப்பிடமே இந்த உலகமளவு எனும்போது சுவனத்தின் பிரம்மாண்டத்தை கற்பனைகூட செய்து பார்க்கத்தான் முடியுமா?
மறுமையில், கேள்வி கணக்கு கேட்கப்படும் நாளில், அவர் சொன்னார், இவர் சொன்னார் என்று தப்பிக்க முடியாது சகோதர சகோதரிகளே! ஏனெனில் கல்வி கற்பது அனைத்து ஆண், பெண் மீதும் இஸ்லாம் கட்டாயக் கடமையாக்கி இருக்கிறது.
இணை வைப்பின் துரும்பு கூட, அதன் நிழல் கூட நம்மீதும், நம் குடும்பத்தார்கள் மீதும், உலக மக்கள் மீதும் விழாமல் பாதுகாப்பது எவ்வளவு முக்கியம் என்பதை புரிந்து கொண்டு நேர்வழியில் செல்வோமாக!
அந்த ஏகன் அல்லாஹ் அதற்கு உதவி புரிவானாக, ஆமீன்.
“ரப்பி ஸித்னீ இல்மா”
– M.A. முஹம்மது அலீ