முதலாளித்துவ வன்முறை அரசியலுக்கு மாற்று தீர்வு இஸ்லாம் மட்டுமே!
Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற பெயரில் பயங்கரவாதத்தை செய்வதே இந்த ஏகாதிபத்திய நாடுகள்தான். மக்களை அச்சுறுத்தி தனது ஆட்சி பீடங்களை தக்க வைத்து கொள்ள இவர்களுக்கு பயங்கரவாதம் என்ற ஒன்று தேவைப்படுகிறது.
உலக பயங்கரவாதத்தின் தலைமை பீடங்கள் இந்த ஏகாதிபத்திய நாடுகள்தான்.
நாடுபிடிக்கு வெறியில் கடல் கடந்து கண்ணில்பட்ட தேசங்களில் ஈவு இரக்கமே இல்லாமல் இந்த வெள்ளையின மிருகங்கள் கருப்பின பூர்வகுடிகளை கொன்று குவித்து மண்ணை ஆக்கிரமித்து மக்களை அடிமையாக்கி சித்திரவதை செய்த பிரிட்டன் இன்று நாகரீகத்தை பற்றியும், மனிதஉரிமை பற்றியும் உலக மக்களுக்கு வகுப்பெடுக்கிறது!
இஸ்லாம்போபியா
Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
[ முதலாளித்துவ வன்முறை அரசியலுக்கு மாற்று தீர்வு இஸ்லாம் மட்டுமே!]
கடந்த 30 வருடங்களாக முஸ்லிம்கள் மீது மிக அதிகமாக தீவிரவாத முத்திரை குத்தப்படுகிறது!!!
மீடியாக்களில் பொய் பிரச்சாரம்?
எதற்க்காக முஸ்லிம்கள் தீவிரவாதிகளாக சித்தரிக்கப்படுகிறார்கள்?
உலகில் தீவிரவாதத்தை செய்வது யார்?
இதனால் அவர்களுக்கு என்ன லாபம்?
இதை செய்பவர்கள் உலகத்தையே கட்டுபடுத்த நினைக்கும் ஏகாதிபத்திய நாடுகள்தான். முதலாளித்துவத்தை தாங்கி பிடிக்கும் இந்த ஏகாதிபத்திய நாடுகள் தங்களின் முதலாளித்துவ சித்தாந்ததை உலகில் நிலைநாட்ட பிற சித்தாந்தங்களையும் அதனை பின்பற்றுபவர்களையும் நசுக்கி ஒடுக்கும் வேலையைதான் செய்து வருகிறது.
கொம்யூனிசம் கவிழ்ந்து போன நிலையில் முதலாளித்துவ சித்தாந்தம் இஸ்லாமிய சித்தாந்ததின் மீது போர் தொடுத்து வருகிறது முஸ்லிம் நாடுகள் மீதான போர், ஆட்சி கவிழ்ப்பு, தனது ஏஜெண்டை அதிபராக்குவது முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பது, நாட்டை நாசமாக்கி முஸ்லிம்களை கோடிகணக்கில் அகதிகளாக்குவது போன்றவற்றின் ஊடாக தனது அரசியல் ஆதாயங்களை அடைந்து கொள்கிறது.
பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற பெயரில் பயங்கரவாதத்தை செய்வதே இந்த ஏகாதிபத்திய நாடுகள்தான். மக்களை அச்சுறுத்தி தனது ஆட்சி பீடங்களை தக்க வைத்து கொள்ள இவர்களுக்கு பயங்கரவாதம் என்ற ஒன்று தேவைப்படுகிறது. உலக பயங்கரவாதத்தின் தலைமை பீடங்கள் இந்த ஏகாதிபத்திய நாடுகள்தான்.
நாடுபிடிக்கு வெறியில் கடல் கடந்து கண்ணில்பட்ட தேசங்களில் ஈவு இரக்கமே இல்லாமல் இந்த வெள்ளையின மிருகங்கள் கருப்பின பூர்வகுடிகளை கொன்று குவித்து மண்ணை ஆக்கிரமித்து மக்களை அடிமையாக்கி சித்திரவதை செய்த பிரிட்டன் இன்று நாகரீகத்தை பற்றியும், #மனிதஉரிமை பற்றியும் உலக மக்களுக்கு வகுப்பெடுக்கிறது!
வரலாறு முழுக்க போரின் மூலம் பல கோடி மக்களை ஜப்பான், ஈராக், ஆப்கானிஸ்தான், சிரியா, வியட்நாம், லிபியா போன்ற தேசங்களில் ஏகாதிபத்திய அரசியல் ஆதாயத்துக்காக குண்டு மழை பொழிந்து அழிந்து நாசம் செய்த அமெரிக்க இன்று #பயங்கரவாதத்தை பற்றியும் #தீவிரவாதத்தை பற்றியும் உலகிற்க்கு பாடம் நடத்துகிறது!
உலகிற்க்கு அமைதியை வழங்குவதாக கூறிக் கொள்ளும் இந்த ஏகாதிபத்திய நாடுகள் அழிந்தாலே ஒழியே உலகிற்க்கு அமைதி கிடையாது…..
முதலாளித்துவம் பார்வையில் அரசியல் என்பது
1. மக்களை ஒடுக்குதல்
2. ஆதாயம் அடைவது
3. சுரண்டல்
4. வர்த்தகம்
5. பயங்கரவாதம்
இஸ்லாம் பார்வையில் அரசியல் என்பது
1. மக்கள் நலன் பேணுவது
2. சமத்துவம் பேணல்
3. நீதியை நிலைநாட்டல்
4. பாதுகாப்பு
5. அமைதி
முதலாளித்துவ வன்முறை அரசியலுக்கு மாற்று தீர்வு இஸ்லாம் மட்டுமே!
AP. Mohamed Ali