துஆ என்றால் என்ன?
சையத் அப்துர் ரஹ்மான் உமரி
துஆ என்றால் என்ன? என்பதைத் தெரிந்து கொண்டால் துஆ செய்யுமாறு யாரிடமாவது கேட்கலாமா என்பது தெளிவாகிவிடும்.
துஆ என்றால் என்ன?
இறைவனிடம் கேட்கும் யாசகம்!.
என்ன கேடக வேண்டும்?
யாரிடம் கேட்கின்றோம் என்பதைப் பற்றிய தெளிவு!
அவனது ஆற்றல் மீதும் வஹ்ஹாபிய்யத், ரஹ்மானிய்யத் மீதும் ஆழமான நம்பிக்கை!
அவன் நமக்கு கொடுத்துள்ளவை கொடுத்து வருபவை குறித்த நன்றியுணர்வு!
கேட்கும் பொருள் குறித்த ஞானம்!
ஈடுபாடு, அக்கறை, பணிவு, தாழ்மை, இடைவிடாத கோரிக்கை!
கோரிக்கையை ஏறகவிடாமல் தடைசெய்யும் செயல்கள் ஏதும் உண்டா என்னும் இஹ்திஸாப் (சுய பரிசோதனை)
இவைபோன்ற இன்னும பல அமசங்கள் இருந்தால் தான் துஆ ஏறகப்படும்.
சரியா?
உங்கள் மகனுக்காக ஒரு மருந்தைக் கோரி ஒருவரிடம் போகிறீர்கள்.
எப்படியாவது அவரிடமிருந்து மருந்தை வாங்கியே ஆகவேண்டும், அப்போதுதான் உங்கள் மகன் குணமடைவான்.
நீங்கள் எப்படி கேட்பீர்கள்?
மருந்திருக்கா? தர்றீங்களா? என்று வந்துவிடுவீர்களா?
இல்லை கெஞ்சிக் கூத்தாடி அழுது புலம்பி, பணிந்து வாங்கி வருவீர்களா?
அவர் தர மறுத்தால் எல்லோருக்கும் தருகிறாரே, எனக்கு மட்டும் ஏன் மறுக்கிறார் என சிந்திப்பீர்களா இல்லையா?
உங்களுக்காக இப்படியெல்லாம் அரும்பாடுபட்டு துஆ கேட்பவர்கள் இருக்கின்றார்களா?
இருப்பார்கள் இப்படியும் சிலபேர்.
உங்கள் பசிகண்டு தங்கள் வீட்டிலிருந்து அரிசி மூட்டையைக் கொண்டு வருவார்கள்.
கடன்வாங்கி உங்கள் துயர் தீர்ப்பார்கள்.
“விலாயத்” பெற்றவர்கள் அவர்கள்.
இவர்களிடம் நமக்காக துஆ செய்யுமாறு கோரலாம்.
500 ரூபாய் உங்களுக்குத் தேவை எனத் தெரிந்தும் தர மனமில்லாதவர்கள், உங்கள் பசி ஆற்றக்கூட விரும்பாதவர்கள், உங்கள் துயர் தீர ஆறுதலாக ஒரு வாரத்தை சொல்லக்கூட எண்ணாதவர்கள் உங்களுக்காக அழுது பணிந்து துஆ கேட்பார்கள் என எதிர்பார்த்தீர்களேயானால்?