Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

போதையில் மூழ்கும் சமூகம்

Posted on November 16, 2017 by admin

Local police also said the March 15 incident could cause water shortages and drought as the hot season approaches. (Representational image)

போதையில் மூழ்கும் சமூகம்

     சையத் அப்துர் ரஹ்மான் உமரி        

இஸ்லாமிய இளைஞர்கள் பல ஊர்களில் புதுப்புது வகையான போதைப் பொருட்களுக்கு அடிமைகளாகி வருகிறார்கள்.

மனிதனை எத்தனை எத்தனையோ பொருட்கள் போதையில் தள்ளுகின்றன. மதுவும் சாராயமும் கஞ்சா உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் மட்டும்தான் போதையை ஊட்டுகின்றனவா?

மனிதனை எத்தனை எத்தனையோ பொருட்கள் போதையில் தள்ளுகின்றன.

போதையின் வழியாக ஷைத்தான் என்ன சாதிக்க நினைக்கிறான் என்பதை வான்மறை குர்ஆன் குறிப்பிடுகின்றது. அதைக் கொஞ்சம் ஆராய்ந்தால் வியப்பு மேலிடுகின்றது.

மதுவிலும் சூதிலும் மூழ்கவைத்து உங்களிடையே பகைமையையும் குரோதத்தையும் கிளறிவிடவும் அல்லாஹ்வை நினைவுகூருவதைவிட்டும் தொழுகையைவிட்டும் தடுக்கவும் ஷைத்தான் ஆசைப்படுகிறான். சொல்லுங்கள், நீங்கள் அவற்றை விட்டுவிடுவீர்கள் அல்லவா? (அல்குர்ஆன் 5:91)

(1) பகைமையை, குரோதத்தை கிளறுதல்

(2) இறைவனை நினைவுகூர விடாது தடுத்தல்

(3) தொழுகையை விட்டு அப்புறப்படுத்தல்

ஷைத்தானுக்கு கிடைக்கவுள்ள ‘இம்மூன்று’ பயன்களை மனதிற்கொண்டு சமூகத்தைப் பார்வையிட்டால் எத்தனை எத்தனை போதை ‘வஸ்த்து’கள் புழங்கி வருகின்றன! அடேங்கப்பா!

ஆகப்பெரிய போதையாக இந்த இஸ்லாமிய உம்மத்தில் உள்ளது பணப்போதைதான்!. அதை மிஞ்ச எதனாலும் முடியாது என்பதை கண்கூடாகக் காணுகிறோம்.

அல்லாஹ்வின் திருத்தூதர் வேறு ஆமென்கின்றார்கள்.

பணப்போதை, பதவிப்போதை, புகழ்ப்போதை, அதிகாரப்போதை, மனைப்போதை, மனைவிப்போதை, மதுப்போதை, மங்கைப்போதை, பெண்போதை, பொன்போதை, இயக்கப்போதை, முஸ்லிம் எனும் உயர்வுமனப்போதை, அறிவுப்போதை, கல்விப்போதை, செல்வப்போதை – நிற்காது தொடரும் இந்தப்போதை., போதாதபோதை… இப்போதைக்கு இவ்வளவுதான் சொல்லமுடியும்.

மேற்கண்ட யாவற்றையும் தூக்கி ‘கபளீகரம்’ பண்ணிவிடும் படுபோதை ஒன்று இருக்கின்றது.

யாராலும் உணரவோ உய்விக்கவோ மருந்துமாத்திரை கவுன்ஸிலிங் தரவோ முடியாத மகாப்போதை அது.

‘அடிமை வாழ்வில் சுகங்காணும் போதை’ – என்பதே அது.

நஊதுபில்லாஹி மின் தாலிக்க

சாக்கடையில் வாழ விதிக்கப்பட்ட உயிரினம், நாளடைவில் அதிலேயே சுகங்காண ஆரம்பிக்கின்றது.

ஒருகட்டத்தில் நறுமணம் அதற்கு ‘நாற்றமாகி’ விடுகின்றது.

அடிமைவாழ்வு விதிக்கப்பட்டவர்கள் மேற்கண்ட உயிரினத்திலும் கேவலமானவர்கள்.

கழுத்திலிருந்து நழுவிக்கீழே விழும் அடிமைத்தளையை தாமே எடுத்து கழுத்துகளில் பூட்டிக்கொள்கிறார்கள், தம்மையுமறியாமல்!

‘வாட்களுக்கும் வியூகங்களுக்கும் வேலையே இல்லை

ஓர் அடிமைச் சமூகத்திற்கு’  என்கின்றார் அல்லாமா இக்பால்   ரஹ்மதுல்லாஹி அலைஹி  .

பிறகென்ன செய்வதாம்?

‘இறைநம்பிக்கை உறுதிகொண்டால் அற்றுவீழும் தளைகளும் சங்கிலிகளும்’ என்கின்றார் இஸ்லாமியப் பெருங்கவிஞர்.

சில தினங்களுக்கு முன் உளத்தூய்மை தொடர்பான ஒரு நிகழ்விற்காக மேலப்பாளையும் போயிருந்தேன். அவ்வூர் நிலையை ஸ்கேன் செய்தபிறகு வேறொரு தலைப்பில் பேச முடிவானது.

‘இஸ்லாமிய சமூக உருவாக்கத்தில் இளைஞர் பங்கு’

படுமோசமான பண்பாட்டுச் சீரழிவிற்கு மேலப்பாளையும் இளைஞர்கள் பலியாகிக் கிடக்கிறார்கள். கோயமுத்தூரிலும் ஏறக்குறைய அதே நிலைதான்.

சிகரட், சாராயம், கஞ்சா, அபின், பவுடர் என்பனவற்றையெல்லாம் தாண்டி புதுப்பது வகையறாக்கள் தற்போது இளைஞர்களை ஈர்த்து சொர்க்கத்தை வழங்குகின்றன.

18 – 25 வயது வரையிலான இளைஞர்கள், மேனிலைப்பள்ளி மாணவர்கள், கல்லூரி காளையர்கள் இம்மோகத்திற்கு ஆட்பட்டுக் கிடக்கிறார்கள்.

போதை மருந்து வேண்டும், போதை மருந்து வாங்க பணம் வேண்டும், போதை ஏறியபின் அதனை அணுவணுவாக அனுபவிக்கவேண்டும்.

பணத்திற்கு எங்கே போவது?

கோயமுத்தூரில் ஓரளவு பணம் சம்பாதிக்கலாம் மேலப்பாளையத்தில் அதுவும் கஷ்டம். ஸோ, பலப்பல வழிகள் புதிதுபுதிதாக அன்றாடம் கண்டுபிடிக்கப் படுகின்றன. அவற்றில் சிலதைக்கூட இங்கு பதியமுடியாது.

கண்ணீர்விட்டு அழக்கூட முடியவில்லை, தாரிக் ஆகவும் காலித் ஆகவும் மாறவேண்டிய காளையர்களின் வழிமுறைகள் கண்டு!

இயக்கங்கள், அமைப்புகள், ஜமாஅத்கள் அனைத்தும் கோழைத்தனத்திற்கும் தற்புகழ்ச்சிக்கும் பலியாகி நாறிப்போய் கிடக்கின்றன கையறுநிலையில்.

போதை தலைக்கேறிய பிறகு நடப்பன இன்னும் கொடுமை.

போதை மருந்து கிடைக்காததால் சில மாதங்களுக்கு முன் கோவை இளைஞன் ஒருவன் தனது தந்தையையே கொன்றுவிட்டான். அவ்வப்போது கர்ணகொடூரமான விபத்துகள் கோவையில் நடக்கின்றன.

மருந்துதான் காரணம்.

இவர்களை நீங்கள் வாசங்கண்டு மோப்பம் பிடிக்கமுடியாது. புதிய நுகர்பொருட்கள், வாசமற்ற அல்லது நறுமணப் பொருட்கள் சந்தைப்படுத்துவோருக்கு சிறந்த ‘நெட்வொர்க்’ இருக்கின்றது.

தாகூத்திய தோழர்களின் அரவணைப்பு இருக்கின்றது.

போதைக்கு அடிமையானோர் செய்யும் விபரீதங்களை இனிமேல்தான் சமூகம் கண்டு அழுகப்போகின்றது.

உடன்பிறந்த தங்கை, தாயுடன் பிறந்தவள், சொந்த அக்காள் மகள், சிறு குழந்தை, இரண்டு இரண்டரை வயதேயாகியுள்ள பச்சிளங் குழந்தை – போதையில் மிதப்பவனுக்கு எதிரே தெரிபவர்கள் அனைவரும் பெண்கள்தான்.

தனது இச்சையைத் தீர்க்கும் ‘வழி’யொன்று இருந்தால் போதும். அவ்வழியைக் கொண்டுள்ள உடலுக்கும் தனக்கும் என்ன மஹ்ரம் என்பதையெல்லாம் போதை பார்ப்பதில்லை.

மேலப்பாளையத்தில் நிலைமையை எடுத்துரைத்த சகோதரர் மௌலவி ஸகரிய்யா காஷிஃபி கண்ணீர்விட்டு அழுதார், மைக்கில்!

வெகு சிரமப்பட்டு ஒருசில மேற்படி இளைஞர்களையும் அமர்விற்கு அழைத்துக்கொண்டு வந்திருந்தார்கள்.

அவர்களுக்கு நீங்கள் நஸீஹத் கூட செய்ய இயலாது.

சில வாரங்களுக்கு முன் சிறுபள்ளியொன்றில் கோயமுத்தூரில் சகோதரர் ஷஃபி முஸ்தஃபா கமால் அவர்கள் இதுகுறித்து ஆழ்ந்த கவலையோடு உரையாற்றினார்.

மற்றபடி வேறெந்த இஸ்லாமிய அமைப்பின் கவனத்தையும் இது இன்னமும் ஈர்க்கவில்லை.

ஆலிம்கள் இன்னமும் தங்கள் பொருளாதாரத்தைப் பற்றிய கவலையிலேயே இருக்கின்றார்கள்.

source:    https://www.facebook.com/syed.umari.7?ref=br_rs

 

 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

33 − 28 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb