Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

இறையில்லத்தின் கண்ணியத்தை சீர்குலைக்கும் ”நவீன நாற்காலி தொழுகை” கலாச்சாரம்!

Posted on November 6, 2017 by admin

இறையில்லத்தின் கண்ணியத்தை சீர்குலைக்கும் ”நவீன நாற்காலி தொழுகை” கலாச்சாரம்!

நின்று தொழ முடியாவிட்டால் உட்கார்ந்து தொழலாம் என்பதை தவறுதலாக புரிந்து கொண்டதின் விளைவு… நாளுக்கு நாள் அதிகரிக்கும் நாற்காலி தொழுகை கலாச்சாரம்…!

கடந்த 5 வருடங்கள் அல்லது அதற்கு சற்று கால முன்பாகத்தான் இந்த நாற்காலி தொழுகை கலாச்சாரம் நமது தமிழகத்தில் காலூன்றியது… இப்பொழுது நல்ல விளைச்சலில் நாற்காலி தொழுகை அமோகமாய் பெருகிக் கொண்டிருக்கின்றது.

இந்த ஜமாத் பள்ளிவாசல், அந்த ஜமாத் பள்ளிவாசல் என்று எல்லா ஜமாத் பள்ளிவாசல்களிலும் இந்த கலாச்சாரம் அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்து காணப்படுகின்றது.

”ஜமாஅத்துல் உலமா”விலிருந்து ஃபத்வா கொடுத்தும் கண்டு கொள்ளாத உலமா பெருமக்கள்!

Image result for Zeroநாற்காலி கலாச்சாரம் திடீரென உருவாகியது எப்படி…?

கண்மணி நாயகம் உத்தம திருநபிகளார் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நபியாக அறிவிக்கப்பட்ட காலத்திலிருந்து கடந்த 20 ஆம் நூற்றாண்டின் இறுதிவரை பள்ளிவாசல் களுக்குள் நுழையாத நாற்காலி கலாச்சாரம் திடீரென உருவாகியது எப்படி…?

மரத்திலான நாற்காலிகள் பழங்காலத்திலிருந்து இருந்தும் ஏன் கடந்த கி.பி. 2000 மாவது ஆண்டு வரை பள்ளிவாசல் களுக்குள் அனுமதிக்கப் படவில்லை…?

ஊனமுற்றோர், உடல் பெருத்தோர், முதுகில், முழங்காலில் அறுவை சிகிச்சை செய்தோர், தடுமாறும் முதியோர் ஆகியோர் ஹஜ் பயணம் மேற்கொள்ள கஃபத்துல்லா வரும்பொழுது வீல்ச்சேர் என்ற சக்கர நாற்காலிகளில் உட்கார வைக்கப்பட்டு அதன் மூலம் தவாஃப் செய்தல் மற்றும் அதில் உட்கார்ந்து கொண்டே தொழுதல் போன்றவற்றை பார்த்த சில முஸ்லீம்கள், அடுத்த கட்டமாக இலகுவாக மடித்துக்கொள்ளும் வகையிலான ஷேர்களை கொண்டுவந்து கஃபத்துல்லாவில் தொழ, இதை கண்ட பல்வேறு நாட்டு முஸ்லீம்கள் காஃபத்துல்லாவிலேயே நாற்காலி போட்டு தொழும் பொழுது நாம் ஏன் நமதூர் பள்ளிவாசல்களில் இப்படி நாற்காலி போட்டு தொழக்கூடாது என்று அறிவிலித்தனமாக சிந்தித்ததன் விளைவு இன்று பல்கி பெருகி தமிழகத்தின் அனைத்து பள்ளிவாசல்களிலும் பிளாஸ்டிக் ஷேர்கள் கம்பல்சரி என்று ஆகிவிட்டது.

வீட்டிலிருந்து நன்றாக நடந்து பள்ளிவாசல் வருவார்கள். பள்ளிவாசலில் எத்தனை உயரமான படிக்கட்டுகள் இருந்தாலும் ஏறி உள்ளே வருவார்கள். வீட்டில் சம்மணம் போட்டு சாப்பாடு சாப்பிடுவார்கள். தரையில் தாம் விரும்பியது போல் உட்கார்வார்கள்.

இலவச மிக்ஸி, கிரைண்டர், ஃபேன் வாங்க மணிக்கணக்கில் வரிசையில் நிற்பார்கள், ஆதார் கார்டு எடுக்க, வாக்காளர் அடையாள அட்டை எடுக்க, இன்னும் ரேஷன் கடையில் ரேஷன் பொருட்கள் வாங்க வரிசையில் மணிக்கணக்கில் நிற்பார்கள், கீழே எது விழுந்தாலும் குனிந்து எடுப்பார்கள். விரும்பியது போல் உடலை அங்குமிங்கும் திருப்பி திருப்பி படுப்பார்கள்.

இன்னும் சிலர், டூ வீலரை மிதித்துக்கொண்டும், ஓட்டிக்கொண்டும் கூட வருவார்கள்.   ஆனால் பள்ளிவாசலில் தொழ வந்தால் மட்டும் நாற்காலி போட்டு தான் தொழுவார்கள்…???

இவர்கள் யார்…???

Image result for Zeroஉண்மையிலேயே அவர்களால் நடப்பது சிரமம், குனிவது சிரமம், தரையில் உட்காருவது சிரமம் என்றால் அவர்கள் பள்ளி வாசலுக்கு வருவதே சிரமம். அப்படியே அவர்கள் அங்கு வந்தால் அவர்கள் நாற்காலிகளில் தொழ வேண்டி கட்டாயம் ஏற்பாட்டால் அதை அவர்கள் வீட்டிலிருந்தே கொண்டு வந்து தொழ வேண்டும். அதுவும் நின்று தொழுபவர்களுக்கு இடையூறு இல்லாமல் எங்காவது ஒரு ஓரத்தில் இருந்து கொண்டு தொழ வேண்டும். இப்படி தொழக்கூட பள்ளிவாசலில் அனுமதியில்லை என்று ஒரு சில மார்க்க அறிஞர்கள் கூறியுள்ளார்கள். பள்ளிவாசலில் நாற்காலி என்ற பேச்சுக்கே இடமில்லை.

ஆனால் பிறரின் துணையின்றி உயரமான பள்ளிவாசலில் படிக்கட்டுகள் ஏறி நடந்து தொழக்கூடிய இடத்திற்கு தன்னால் வரமுடியும் என்றால் அவருக்கு நாற்காலியில் தொழ அனுமதியில்லை.

இது ஒரு பிரபல மதரஸாவின் ஃபத்வா…!

நாற்காலியில் உட்கார்ந்து தொழுபவர்கள் ஏன் தரையில் உட்கார்ந்து தொழ மறுக்கிறார்கள்? ஏனென்றால் அது ப்ரெஸ்டிஜ் ப்ராப்ளம்…! அல்லாஹ்வின் இல்லத்தில் ப்ரெஸ்டிஜ் பார்க்கிறார்கள்…?

நான் சொல்கிறேன்.. ஒவ்வொரு ஊர் பள்ளிவாசல்களிலும் நாற்காலியில் உட்கார்ந்து தொழுபவர்களால் தரையில் அமர்ந்து தொழ முடியாது என்று சொல்லச் சொல்லுங்கள் பார்ப்போம்…?

முடியும்.. ஆனால் அவர்கள் தங்களின் வெட்டிக் கௌரவத்தை விட்டுக் கொடுக்கத் தயாரில்லை.

இமாம் இதை தப்பென்று சொல்லவில்லை. அந்தந்த ஊர் ஜமாத் தலைகளுக்கு இதைபற்றி விளக்கமே கொஞ்சமேனும் தெரியவில்லை. தெரிய விரும்பவுமில்லை.

Image result for Zeroவரிசைகளின் ஒழுங்கமைப்பை சீர்குலைக்கும் நாற்காலிகள் :

அல்லாஹ்வின் இறையில்லத்தில் அல்லாஹ்விற்கு அஞ்சி ஒடுங்கி இறையச்சத்தோடு நின்று குனிந்து தொழக்கூடிய அல்லாஹ்வின் அடியார்களுக்கு இடையூறாக ஒவ்வொரு வரிசைகளிலும் ஆங்காங்கே நாற்காலிகளை போட்டு வரிசைகளின் ஒழுங்கமைப்பை கெடுத்து நாற்காலில் உட்கார்ந்து கால்களை ஆட்டிக்கொண்டு ஆணவத்தோடு இருப்பவர்களே நிச்சயம் நீங்கள் அல்லாஹ்வால் அதிகம் விசாரிக்கப்படுவீர்கள்.

இன்றைய சிலர் செய்யும் தவறுகள் இன்றைய இளம் தலைமுறைகளை தொற்றிக் கொண்டு அடுத்த தலைமுறையும் இதை தவறு என்று உணராமல் தைரியமாக செய்யும் சூழல் ஏற்படும். அப்பொழுது பள்ளிவாசல்கள் இன்றைய கிறிஸ்துவ தேவாலயங்கள் போல் காட்சியளிக்கும்.

அப்பொழுது கைசேதப்பட்டவர் களாக நமது தலைமுறைகள் வாழ நேர்ந்தால் அதற்கு அடித்தளமிட்ட இன்றைய பெருசுகளை எல்லாம் வல்ல அல்லாஹ்   பார்த்துக்கொண்டு தான் இருக்கிறான்.   

அல்லாஹ்வின் இல்லத்தை கேலிக் கூத்தாக்கி கொண்டிருக்கிறீர்களா?

சஹாபாக்களுக்கு மத்தியில் தரையில் அமந்து உரையாற்றிக் கொண்டிருந்த நமது திருநபிகளாரை எங்கே ரஸூலுல்லாஹ் என்று ஒரு வெளியூர்க்காரர் கேட்ட சரித்திரம் அறிந்தவர்களே., நமது ரஸூலுல்லாஹ் எப்படி வாழ்ந்தார்கள். நாம் எப்படி இருக்கின்றோம். சிந்திக்க வேண்டாமா?

Image result for Zeroஅன்பிற்கினிய சகோதரர்களே! இன்றைய நாற்காலி மனிதர்களை போல் நீங்கள் ஒருபோதும். ஆகிவிட வேண்டாம். இது எனது அன்பான வேண்டுகோள். நிச்சயம் அல்லாஹ்விற்கு பயந்து கொள்ளுங்கள்.

இன்ஷா அல்லாஹ். நான் எங்காவது ஒரு இடத்தில் ஒரு பள்ளிவாசல் கட்டினால் “இப்பள்ளிவாசலில் நாற்காலிக்கு அனுமதியில்லை” என்ற அறிவிப்பு அங்கே ஒட்டப்பட்டிருக்கும் என்பதை மன உறுதியோடு தெரிவித்துக் கொள்கின்றேன்.

பள்ளிவாசலில் இமாம் மெம்பர் படியேறி குத்பா பேருரை நிகழ்த்தும் பொழுது, முதல் உரைக்கும், இரண்டாம் உரைக்கும் இடையே சற்று அமர்ந்து கொள்வதற்கு மட்டுமே மெம்பர் படிக்கட்டுகள் பயன்படுமே தவிர வேறெதற்காகவும் அல்ல.

தவிர்ப்போம் நாற்காலி தொழுகைகளை…!

மாற்றுவோம் மதிமயங்கியவர்களின் புத்தியை…!

பேணுவோம் அல்லாஹ்வின் கட்டளைகளை…!

மதிப்போம் நபிகளாரின் வழிமுறைகளை…!

PB : 25.10.2017
அட்மின் : பனைக்குளம் பிரதர்ஸ்

source:  https://www.facebook.com/smrafi.mohamed.7/posts/2001682826733240

 

தரையில் உட்கார்ந்து தொழ முடியவில்லையா, செய்கையால் தொழுங்கள் – இதுதான் நபி வழி.

ஸஹாபி ஒருவர் தலையணையின்மீது சுஜூது செய்வதைப் பார்த்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதணை எடுத்து வீசி எறிகிறார்கள். அவரோ மறுபடியும் ஒரு குச்சியை எடுத்து அதில் சுஜூது செய்கிறார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதையும் எடுத்து வீசி எறிகிறார்கள். “தரையில் சுஜூது செய்யுங்கள் இல்லையென்றால் செய்கையால் செய்யுங்கள்” என்று அறிவுருத்துகிறார்கள். 

தரையில் உட்கார்ந்து தொழ முடியவில்லையா, செய்கையால் தொழுங்கள் – இதுதான் நபி வழி.

நாற்காலியில் உட்கார்ந்து தொழுவதைவிட செய்கையால் தொழுவது எளிது. இருந்தும் இஸ்லாம் முடியாத நிலையில் அதை (செய்கையால் தொழுவதை) அனுமதிக்கிறது என்றால் நாற்காலியில் இறைவணக்கம் புரிவது யூத நஸாராக்களின் பழக்கம். அதற்கு மாற்றம் செய்ய வேண்டியது முஸ்லிம்களுக்கு இடப்பட்டுள்ள கட்டளை. ஏளிதான வழியை இஸ்லாம் அனுமதிக்கும்போது மாற்றாரின் கலாச்சாரம் தேவையா? இது ஷைத்தானின் சூழ்ச்சியே அன்றி வேரில்லை.   -adm. n.i.

 

 

 

 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

9 + 1 =

Categories

Archives

Recent Posts

  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
  • ஆணுருப்பின் அதிசயம்
©2022 | Built using WordPress and Responsive Blogily theme by Superb