முஸ்லிம்களுக்கு எதிராக உருவாக்கப்படும் ஓர் சித்தாந்தம்
யாசிர்
ஈரோடு, ஆதிச்சநல்லூர், கீழடி உள்ளிட்ட எந்த அகழாய்விலும் மத ரீதியான பொருட்கள் கிடைக்கவில்லை. தமிழன் சிலை வணக்க வழிபாடு செய்யவில்லை என்பதே இது தரும் சான்று.
இந்த அகழாய்வுப் பணிகள் மக்களுக்கு தெரியாமல் மூடப்படுவதற்கு காரணம் என்ன என்பது ஊரறிந்த விஷயம் (உண்மை வெளி வந்தால் நாட்டின் தலையெழுத்தே மாறும்) ஆனால் தற்போது மக்கள் தங்களின் வரலாற்று அடையாளத்தையும், தமிழின் பெருமையையும் அறிந்து கொள்ள ஆர்வத்துடன் முற்படுகின்றனர். இந்த ஆர்வம் அரசிற்கு அழுத்தமாக மாறுகிறது.
எனவே எதிர்காலத்தில் பல அகழாய்வு மேற்கொள்ளப்படும். அப்படி வரும் போது, சிலை வணக்கம் என்பதே இல்லை என மக்களின் மனதில் பசுமரத்தாணி போல பதியும். இதற்காகத்தான் தமிழன் இயற்கையை வணங்கினான் என்ற சித்தாந்தம் பரப்பப்படுகிறது.
இந்து என்பது தற்காலத்தில் உருவானது தமிழன் தான் நம் அடையாளம் என்றது அச்சித்தாந்தம். பின்பு இயற்கைக்கு புது விளக்கத்தைக் கொடுத்தது அது. நம் முன்னோர்கள் தான் இயற்கை என்றது. எனவே முன்னோர்கள் தான் நம் கடவுள் என்றார்கள். மனிதனாக வாழ்ந்தவர்களை கடவுளாக நினைத்து வழிப்பட்டதற்கும் அகழாய்வில் எவ்வித ஆதாரமும் கிடைக்கவில்லை. ஆனால் சிலைக்கு இது கொஞ்சம் பலனளிக்கும் என்பதற்காக பரப்புரை செய்கிறார்கள். சரி யார் முன்னோர்கள் என்றதற்கு முருகன் என்றார்கள்.
நன்றாக சிந்தித்துப் பாருங்கள், முருகன் சிலைக் கடவுளாக ஏற்கனவே ஏற்றுக்கொள்ளப்பட்டவர். எனவே பழைய சித்தாந்தம் மக்களிடம் போய் விடக் கூடாது என்பதற்காகவே இயற்கை எனப் பேசி பாட்டனே முருகன் என காவடி தூக்கி மீண்டும் பழைய புள்ளியிலேயே மக்களை நிறுத்தியுள்ளார்கள்.
நான் முஸ்லிம் சமுதாயத்திடம் எச்சரிக்கையோடு அணுகுமாறு கூறி வருவது ஏன் எனப் புரியும் என நினைக்கிறேன். உன் எதிரி யார் என்று சொல் உன்னைப் பற்றி சொல்கிறேன் என்பது சமீபத்திய சினிமா வசனம். மாட்டு மூத்திரம் குடிப்பவர்கள் உங்கள் எதிரி அல்ல. இவர்கள் வெறும் அம்புகள். இது போன்ற அம்புகள் ஒவ்வொரு நாட்டிலும் உண்டு. அம்பை எய்பவன் யார்? முஸ்லிம்களுக்கு எதிரி யார் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிச் சென்றுள்ளார்கள். உன் எதிரி யூதன் எனத் தெரியும் போது தான் உன்னால் சூழ்ச்சிகளின் ரூபங்களைத் தெரிந்து கொள்ள முடியும்.
சரி, இதற்கும் தமிழனின் வரலாற்றிற்கும் என்ன சம்பந்தம் என என்னிடம் கேட்கலாம். நான் செய்த ஆய்வுகளை வெளியிட்டால் சர்ச்சையாகும். ஆனால் சில கேள்விகளை என்னால் முன்வைக்க முடியும். தமிழரின் பொதுமறையான திருக்குறள் எப்போது எழுதப்பட்டது? யாரால் எழுதப்பட்டது? திருவள்ளுவரின் இயற்பெயர் என்ன? என்ற கேள்விக்கு யாராவது பதில் சொல்ல முடியுமா?
திருக்குறள் என்ற பெயர் எப்படி வந்தது? வெண்பா வில் எழுதப்பட்ட ஒரே நூல் என்பதால் குறள் எனப்பட்டது. அதற்கு மரியாதைக்காக திரு எனச் சேர்க்கப்பட்டது. இப்படியே திருக்குறள் எனப் பெயர் பெற்றதாக வரலாறு சொல்கிறது. திருக்குறளில் கூட சிலை வணக்கம் பற்றி கூறவில்லை. ஒரே இறைவன், உருவமில்லா இறைவன் என்றே திருக்குறள் பேசுகிறது. இதன் மூலம் முப்பாட்டன் கதையெல்லாம் பொய் என்பதை நாம் அறிந்து கொள்ள முடியும்.
கி.மு 500 க்கும் முன்பு இருந்த தமிழனின் வரலாறு வேறு. ஆரிய வருகைக்கு பின்பு வரலாறு முழுவதும் மாற்றப்பட்டுள்ளது. ஆரிய வருகைக்கு (சிரியா யூதர்கள்) முன்னால் இருந்த சான்றுகளுக்கு உறுதியாக கூற முடியாததற்கு காரணம், இவர்களின் சிலை வணக்க புது சிந்தாந்த முறைக்காக பல ஆதாரங்களை அழித்தும், மறக்கடித்தும் விட்டார்கள்.
சரி அப்போ சான்றுகளே கிடைக்காதா? இருக்கிறது. திருக்குர்ஆனில் இருக்கிறது. அதை படியுங்கள், அப்போது புரியும் முஸ்லிமுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் உள்ளது என்று. நான் படித்து விட்டேன். விபரமாக புத்தகமும் எழுத ஆவலும் கொள்கிறேன்.
நான் மீண்டும் சொல்கிறேன். தமிழன் இயற்கையை வணங்கினான் என்பது பொய். உங்களுக்கு எதிராக புதிதாக உருவாக்கப்படும் சித்தாந்தத்தையும், அந்த நபர்களையும் நீங்கள் ஆதரிக்க வேண்டாம். வெளிநாடு வாழ் முஸ்லிம்கள் தான் காசை வாரி இரைப்பதாக கேள்விப்பட்டேன். காசை கரியாக்காதீர்கள். நீங்கள் தொடர்ச்சியாக ஆதரித்தால் இலங்கையில் முஸ்லிம்களுக்கு என்ன நிகழ்ந்ததோ அதுவே நடக்கும்.
இந்த பூமியில் பல அத்தாட்சிகளை நாம் விட்டு வைத்துள்ளோம் என குர்ஆனில் இறைவன் கூறுகிறான். அந்த அத்தாட்சிகள் இயற்கை என மாற்றப்பட்டு மீண்டும் முப்பாட்டனாக ஆரம்பித்த புள்ளியில் நிறுத்தும் சித்தாந்தம் ஆபத்தானது எனப் புரியவில்லையா? இதற்கு மேலும் என்னால் எச்சரிக்கை தான் செய்ய முடியுமா?
நான் புத்தகம் எழுத முனைகிறேன். ஆனால் வேலைப் பளு தடுக்கிறது. எனவே நான் புத்தகம் எழுதிட துவாச் செய்யுங்கள். புத்தகம் எழுதுவது ஈசி கிடையாது. பல்வேறு புத்தகம் எழுதியவர்களை நான் மதிக்கிறேன்.
எழுத்து – யாசிர்