பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்குச் செய்ய வேண்டிய கடமைகளில் சில!
S.A.மன்சூர் அலீ, நீடூர்
1. உங்கள் குழந்தைகளுக்கு நல்லதொரு பெயரை சூட்டுங்கள் (நபிமொழி)
2. உங்கள் குழந்தைகளை கண்ணியப்படுத்துங்கள் (dignity and respect) (நபி மொழி – இப்னு மாஜா)
3. உங்கள் குழந்தைகளுக்கு ஒழுக்கம் (discipline) கற்பியுங்கள் (நபி மொழி – இப்னு மாஜா)
4. குழந்தைகளுக்கு உணவளிக்க வேண்டியது (food) பெற்றோர் கடமை.
5. குழந்தைகளுக்கு உடையளிக்க வேண்டியதும் (clothing) பெற்றோர் கடமையே.
6. குழந்தைகளின் மருத்துவ செலவும் பெற்றோர் கடமையே.
7. அவர்கள் ஏழு வயதை அடைந்ததும் தொழுகையை ஏவுவதும் பெற்றோர் கடமை. (நபிமொழி)
8. அவர்களுக்கு கல்வியறிவு ஊட்ட வேண்டியதும் பெற்றோர் கடமை. வீட்டிலேயே ஒரு கல்விச் சூழலை வழங்குவதும் இதில் அடங்கும்.
9. அவர்களை ஊக்குவித்திட (motivation) வேண்டியதும் பெற்றோர் கடமை.
10. அவர்கள் மீது இரக்கத்துடன் (compassion) நடந்து கொள்ள வேண்டியதும் பெற்றோர் கடமை.
11. குழந்தைகளுக்கு மத்தியில் வேறுபாடு காட்டாமல் (partiality) நடுநிலையுடன் நடந்து கொள்ள வேண்டியதும் பெற்றோர் கடமை.
12. குழந்தைகளுக்கு முன்னால் அழகியதொரு முன்மாதிரியாக (role model) விளங்க வேண்டியதும் பெற்றோர் கடமை.
13. குழந்தைகளைப் பொறுப்புள்ளவர்களாக (responsible) வளர்த்திட வேண்டியதும் பெற்றோர் கடமை.
14. குழந்தைகள் கவலையுற்றிருக்கும்போது அவர்களுக்கு ஆறுதல் (emotional support) அளிப்பதும் பெற்றோர் கடமை.
15. அவர்கள் பருவம் அடைந்த பின் அவர்களுக்குத் திருமணம் செய்து வைப்பதும் பெற்றோர் கடமையே.
16. அவர்களுடைய பிரச்னைகளுக்கு நல்ல ஆலோசனை (counselling) சொல்லி வழிகாட்ட வேண்டியதும் பெற்றோர் கடமை.
இவை மட்டுமல்ல இன்னும்… இன்னும்..