2018-2022 வரையிலான ஹஜ் வரைவு திட்டங்கள்
நாளது 07-10-2017 மாலை மும்பை இந்திய ஹஜ் குழுவின் கட்டிட வளாகத்தில் 2018-2022 வரையிலான ஹஜ் வரைவு திட்டங்கள் குறித்து நடைபெற்ற கூட்டத்தில் அறிவிக்கப்பட்ட கருத்துகளில் சிலவற்றை இங்கே தரப்பட்டுள்ளது.
1. இந்திய ஹஜ் கோட்டாவில் (170000) இந்திய ஹஜ் குழுவிற்கு 70 சதமும் (119000) தனியார் நிறுவனத்திற்கு 30 சதமும் (51000) கோட்டா தரப்பட்டுள்ளது.
2. ரிசர்வு பிரிவு A (70+) மற்றும் ரிசர்வு பிரிவு B (4வது வருட விண்ணப்பங்கள்) இரண்டையும் நீக்கம் செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
3. ஹஜ் பயணிகளுக்கு வழங்கும் மானியத் தொகையை படிப்படியாக ரத்து செய்ய பரிந்துரை தரப்பட்டுள்ளது.
குறிப்பு: விமான சேவை கட்டணத்தில் மட்டுமே மானியத் தொகை வழங்கப்படுகிறது என்பதாக அறிகிறோம்.
உதாரணம்: சென்னை விமான நிலையத்தில் இருந்து விமான கட்டணம் ( chartered flight only ) 79,000 என்று விமான நிறுவனங்கள் நிர்ணயம் செய்த கட்டணத்தை 60,000 மாக குறைத்து மீதம் 19,000ஐ மானியமாக சொல்லப்படுகிறது.
4. இந்தியாவிலிருந்து ஹாஜிகள் செல்ல நடைமுறையில் இருந்த 21 விமான புறப்பாடு தளங்கள் 9 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
டில்லி, மும்பை, அகமதாபாத், லக்னோ, கொல்கத்தா, சென்னை, ஐதராபாத், பெங்களூரு, கொச்சின் ஆகியவையாகும்.
5. தங்குமிட கட்டட தேர்வில் பழைய கட்டட்டங்களையும், இந்த வருடம் புகார்களுக்கான கட்டடங்களையும், ஏஜண்டுகளின் நியமனங்களை தவிர்க்கவும், CGI & ஹஜ் குழுவின் நேரடி பார்வையில் மட்டுமே கட்டடங்களை தேர்வு செய்யவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அதிக அளவில் பயணிகள் தங்கும் வகையிலான கட்டிடங்கள் நிறைந்த பகுதியில் தேர்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
6. விரைவில் கப்பல் பயணத்திற்கான திட்டமும் வகுக்கப்பட்டுள்ளது.
ஹாஜி ஹாலிது மரைக்கார்
ஜாமிஅத்துல் ஹுஜ்ஜாஜ்
காரைக்கால்